ரம்ஜான் பிரியாணி வாசனை கூட விலகாத நிலையில்... திருவண்ணாமலை பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள அந்த மசூதி முன் 23, 15 வயது பிள்ளைகள் கும்பல் கும்பலாய் நின்று எதை யோ பார்த்துக் கொண் டிருந்தார்கள். வண்டி யை நிறுத்தி "என்ன பண்றீங்க?' என அவர் களை நெருங்கியபோது மொபைலில் ஓடிக் கொண்டிருந்த வீடியோ வை முதலில் இருந்து ஓட்டிக் காட்டினார்கள். ஒரு குட்டி சாத்தான் போன்ற உருவம் "ஆ ஊ' என்ற பேக்கிரவுண்ட் வாய்ஸ்சோடு கைகளை வீசிக் கொண்டிருந்தது மிரட்டலாய்.
""பெங்களூர்ல பைசல்ங்கற 13 வயசு பையன் தொழுகைக்கு போகாம வீட்ல உட் கார்ந்து டி.வி. பாத் துக்கிட்டிருந்திருக்கான். அவுங்க அம்மா குரான் புத்தகத்த கைல தந்து தொழுகைக்கு போக சொல்லியிருக்காங்க. இந்த பையன் குரான் புத்தகத்த தள்ளிவிட் டுட்டு போகமாட்டன்னு அடம் புடிச்சிருக்கான். குரான் புத்தகத்த தள்ளி விட்ட கொஞ்ச நேரத் தில இந்த மாதிரி பேயா மாறிப் போயிருக்கான். அந்த வீடியோதான்ணே யிது'' என்றார்கள் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு. அந்த வீடியோவை முழுவதுமாக உண்மையென நம்பி திகிலடித்துப் போய் நின்றிருந்தார்கள். அப்போது பள்ளிவாசலுக்குள்ளிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த முகமது உசேனிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது ""இந்த வீடியோ கடந்த ஒரு வாரமா எங்க மதத்தைச் சேர்ந்தவங்க மொபைலுக்கு எம்.எம்.எஸ்.ஸா வருது. பசங்க இதப்பாத்துட்டு நைட்ல தூக்கத்துலயிருந்து எழுந்து அலறுதுங்க. சின்ன வயது பசங்க மனதில் ஆழமா பாதிப்ப உண்டாக்கியிருக்கு. இது கிராபிக்ஸ்ன்னு சொன்னாக்கூட நம்ப மாட்டேன்கிறாங்க. ஸ்கூல்ல கூட இதே பேச்சுதான்னு பசங்க சொல்லும்போதுதான் இதோட தாக்கம் புரிந்தது'' என்றார் கவலையாக.
ஆட்டோ டிரைவர் ஷான் பாஷாவோ, ""பசங்க வயது ஆக ஆக தானா மதத்தின் மீதான பற்று அதிகமாகி கடவுளுக்கு செய்ய வேண்டியத செய்வாங்க. ஆனா அத புரிஞ்சிக்காம சில பேர் இப்படி ஒரு வீடியோவ உருவாக்கி, பொய்யா அதற்கு ஒரு கதைய தயார் பண்ணி உலாவவிட்டு பயமுறுத்தி மதத்தின் பேர்ல நம்பிக்கைய வரவழைக்கப் பார்க்கறாங்க. இது எந்த விதத்தில் நியாயம்னு தெரியல'' என்றார் எரிச்சலாய்.
இதுபற்றி இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் முனீரிடம் கேட்டபோது, ""10 வய துக்கு குறைவானவர்களை தொழுகை செய் யும்படி கட்டாயப்படுத்துவது தவறு. அதோட இளம் பருவத்தினருக்கு தொழுகையின் நன் மைகளை எடுத்துச் சொல்ல வேண்டுமே தவிர பயமுறுத்தி கடவுள் நம்பிக்கையை கொண்டு வரக்கூடாது. இப்படி மிரட்டி வரவைப்பது இஸ்லாத்துக்கு எதிரானது. இந்த மாதிரி வேண்டுமென்றே கிராபிக்ஸ் மூலம் வீடியோக்களை உருவாக்கி பயமுறுத்துவதால் மதமும் வளராது. தொழுகையும் வளராது. கட்டாயப்படுத்தி செய்தால் மதத்தின் பெயர் கெட்டுப் போய் விடும். இதை இப்படி செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார் அழுத்தமாய்.
"வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை, வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே' என்ற பட்டுக்கோட்டையாரின் பாட்டுவரி எங்கிருந்தோ நம் காதில் வந்து விழத்தொடங்கியது.
|
No comments:
Post a Comment