Sunday, December 11, 2011

ஒரு மொட்டைக் கடிதம்


ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்து அனுப்பப்பட்ட கடிதங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கடிதங்கள் கொடுத்த அ.தி.மு.க. இப்போது பிரதமரிடமே புகார் கொடுத்திருக்கிறது. தம்பிதுரை, மைத்ரேயன் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் 15 எம்.பி.க்களும் பிரதமரை நேரில் சந்தித்து 3 பக்க புகார் மனுவையும் கொடுத்திருக்கிறார்கள். 

புகார் கொடுத்துவிட்டு வந்த தம்பிதுரை, ""பிரதமர் எங்கள் புகாரைப் பற்றி முழுவதுமாக கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு கொடுப்பது எங்கள் கடமை. அவருக் கான பாதுகாப்பு குறித்து தமிழக அரசுடன் கலந்து பேசுகிறோம் என்று உறுதியாக கூறியிருக் கிறார்''’என்றார்.

இந்த நிலையில் தமிழக அரசும் முன்னாள் முதல்வரான ஜெய லலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து விளக்கங்களை கொடுத் துள்ளது. திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வரும், 2001-ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கப் பட்டதோ அதே பாது காப்பு தொடர்கிறது என்று கூறியிருக்கிறார். 
ஆனாலும் அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயனோ, ""எங்கள் தலைவிக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் பற்றி நாங்கள் உள்துறை செய லாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட தமிழக உயர் அதிகாரி களிடம் புகார் கடிதங்கள் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை'' என்கிறார் நம் மிடம். 

ஜெ.வுக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காவல்துறை வட் டாரத்தில் விசாரித்தோம்.

""முதல் கடிதம் மதுரை மாவட்டம் கள்ளந்திரி முகவரியிட்டு அனுப்பப்பட்டி ருக்கிறது. இரண்டாவது கடிதம் வடகரை முகவரியிட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. இரண்டு கடிதங்களின் முகவரிகளுமே போலியானவை. வடகரையில் வைகைப்புயல் பாலு என்கிற கேரக்டரே இல்லை. இரண்டு கடிதங்களுமே அனுப்புனர் முகவரிக்கு சம் பந்தம் இல்லாத இடத்தில் இருந்துதான் போஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன. கள்ளந்திரி முகவரியிட்ட கடிதம் தஞ்சாவூர் போஸ்ட் ஆபீசில் இருந்து அனுப் பப்பட்டிருக்கிறது. 

வடகரை முகவரி யிட்ட கடிதம் சென்னை தி.நகர் போஸ்ட் ஆபீசிலிருந்து அனுப்பப்பட்டி ருக்கிறது. இரண்டு கடி தங்களின் கையெழுத்தும் வேண்டுமென்றே மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்துவதற்காக இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவே எங்களின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் சீரியசாக இந்த புகார்களை விசாரித்து வருகிறோம். விரைவில் உண்மை குற்றவாளிகள் பிடிபடுவார்கள்''’ என்கிறார்கள். 

ஜெ.வுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு குறித்து செக்யூரிட்டி பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ""ஜெ. முதல் முறை முதல்வராக இருந்தபோது விஜயகுமார் ஐ.பி.எஸ். தலைமையி லான எஸ்.பி.ஜி.தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது. இரண்டாவதாக 2001-ல் முதல்வராக அவர் பொறுப்பேற்ற போது தமிழ் தீவிரவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகள் அமைப்பினாலும் அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முடிவு செய்த செக்யூரிட்டி ரெவ்யூ கமிட்டி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தியது. 2001 ஜூன் 1-ம் தேதி இந்த முடிவு எடுக்கப்பட்டு ஜூலை 5-ம் தேதி முதல் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது'' என்றவர்கள் தற்போது ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு பற்றியும் விளக்கினார்கள். 

""இசட் பிளஸ் பாதுகாப்பில் இன்ஸ் பெக்டர் கேடரில் ஒரு பர்சனல் செக்யூரிட்டி ஆபீசர்தான் நியமிக்கப்படுவார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு அவரிடம் ஏற்கனவே பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த டி.எஸ். பி.க்கள் திருப்பதி சாமி, பெருமாள் சாமி இரண்டு பேர் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். 3 இன்ஸ் பெக்டர்கள், 12 எஸ்.ஐ.க்கள் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். இவர் களோடு 58 காவ லர்களும் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்கள். புல்லட் புரூஃப் கார் ஒன்றும் வழங் கப்படுகிறது. 

தானியங்கி துப்பாக்கிகளோடு இந்த செக்யூரிட்டி அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். 

மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய் யும்போது லோக்கல் போலீஸ் பாதுகாப் போடு 20 கமாண்டோ படை யினரும் கூடு தலாக செக்யூரிட்டி பிராஞ்ச் போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 

இது மட்டும் இல்லாமல் ஒரு இன்ஸ் பெக்டர் தலைமையிலான 12 பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படை வீரர்களும் (கறுப்பு பூனை படையினர்) பாதுகாக்கிறார்கள்'' என்று பாதுகாப்பு படையினர் விவரங்களை கூறினார்கள். மொட்டைக் கடிதங்களை வைத்து சீரியஸான பாதுகாப்பு விஷயத்தில் "ஜெ' அரசியல் செய்வதாகவே மத்திய உளவுப் பிரிவினரே கருதுகின்றார்கள்.

-சகா

நான்கு வகை!



எக்ஸ், ஒய், இசட், இசட் பிளஸ் என்று நான்கு வகையான பாதுகாப்பினை அளித்து வருகிறது செக்யூரிட்டி பிராஞ்ச். சாதாரண மிரட்டல் இருப்பவர்களுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பும், அமைச்சர்கள், நீதிபதிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பும், ஆபத்தின் தன்மை கொஞ்சம் அதிகமாக இருக்கிறவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இசட் பிரிவு பாதுகாப்பில் துணை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் படைத்தளபதி பத்மநாபன், சுப்ரமணியசாமி மூன்று பேரும் இருக்கிறார்களாம். எக்ஸ் மற்றும் ஒய் பிரிவு இரண்டிலுமாக சேர்த்து 230 பேருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது செக்யூரிட்டி பிராஞ்ச்.

No comments:

Post a Comment