சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த ஷீலா சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறி இருப்பதாவது:-
மனசு என்ற படத்தை நாங்கள் தயாரித்தோம். இந்த படத்தின் திருட்டு சி.டி. படம் ரிலீசாவதற்கு முன்பே வெளியானதால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் நிறுவனத்திடம் ரூ.92 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் ரூ.70 லட்சம் நஷடஈடு கொடுக்கும்படி ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நஷ்டஈடு கொடுக்கவில்லை.
இந்தநிலையில், தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தை ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த படத்தை முடக்க உத்தரவிடவேண்டும். மேலும், நஷ்டஈட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டின், மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி அருள் விசாரித்து வருகிற 14-ந்தேதிக்குள் மயக்கம் என்ன திரைப்படத்தை முடக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் சிவராமன் ஆஜரானார்.
|
No comments:
Post a Comment