Tuesday, March 29, 2011

இணையம் வழி உரையாடலுக்கு

 இணையம் வழி உரையாடலில் ஸ்கைப் குறுகிய காலத்தில் பிரபல்யம் பெற்று ஒரு புரட்சியை ஏற்படுத்தியது நீங்கள் அறிந்ததே.

அதேபோன்று இணையம் வழி உரையாடலில் மற்றுமொரு பரிணாம வளர்ச்சியே ooVoo ஊவு என்பது விண்டோஸ் மற்றும் மேக் இயங்கு தளங்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஸ்கைப் போன்ற நிகழ் நேர இணையம் வழி உரையாடல் சேவையாகும்.

நேருக்கு நேர் முகம் பார்த்து நண்பர்கள். உறவினர்களோடு வீடியோ உரையாடலை மேற்கொள்ளக் கூடிய வசதியை இது வழங்குகின்றது.

இதன் மூலம் ஒரு கணனியிலிருந்து கணனிக்கும், கணினியிலிருந்து தொலை பேசிக்கும் தொடர்பை ஏற்படுத்தலாம்.

ஒரே நேரத்தில் ஒருவரோடு மாத்திரமின்றி ஆறு பேருடன் வீடியோ உரையாடலில் ஈடுபடக் கூடியதாயிருப்பதோடு, அதனை உரையாடலை ஒளிப்பதிவு செய்யக் கூடியதாயுமிருப்பது ஊவுவின் சிறப்பம்சமாகும். அத்தோடு ஊவுவில் வீடியோ மற்றும் ஓடியோவின் தரமும் சிறப்பாக உள்ளது.


ஊவு முதன் முதலில் 2007ஆம் ஆண்டு அறிமுகமானது. தற்போது உலகெங்கும் 14 மில்லியன் பேர் ஊவுவைப் பயன்படுத்துகிறார்கள். அத்தோடு பத்து ஸ்கைப் பயனர்களில் 8 பேர் ஊவுவை விரும்புவதாகவும் ஊவு நிறுவன இணைய தளம் சொல்கிறது.

ஊவு கணக்கைப் உருவாக்கிக் கொள்ளும் பயனர்களுக்கு இலவசமாக செய்திப் பரிமாறல், குரல் வழி மற்றும் வீடியோ உரையாடல் போன்றன கிடைக்கின்றன.

ஊவூவின் செயற்திறன் மற்றும் பயன்பாடு பற்றிய பயனர் கருத்துக்களை ஊவு நிறுவனத்தினருக்கு நிகழ் நேரத்திலேயே தெரிவிக்கவும் முடிகிறது.

ஊவு தரும் வசதிகள்

* Video Calling : வீடியோ அழைப்புகள் - ஆறு பேர் கொண்ட குழுவினரிடையே ஒரே நேரத்தில் வீடியோ உரையாடலை மேற்கொள்ளலாம்.

* Web Video Chatting : பிரவுஸரை அடிப்படையாகக் கொண்ட வீடியோ செட்டிங் செய்யும் வசதி.

இதன் மூலம் ஊவு பயன்படுத்தாதவர்களையும் மின்னஞ்சல் மூலமாகவோ பேஸ் புக் போன்ற சமூக வலைத் தளங்கள் மூலமாகவோ அழைப்பு விடுத்து ஊவு மென்பொருளை நிறுவாமலே வெப் பிரவுசரிலேயே வீடியோ உரையாடலை மேற்கொள்ளலாம்.

* Video messaging : ஐந்து நிமிட நேர நீளம் கொண்ட வீடியோ செய்தியினைப் பதிவு செய்து மின்னஞ்சலில் அனுப்பவோ அல்லது யூடியுப் தளத்தில் பதிப்பிக்கவோ முடியும்.

* Instant messaging : ஒன்றுக்கு மேற்பட்டோருடன் டெக்ஸ்ட் செட்டிங் எனும் தட்டச்சு செய்வதன் மூலம் உரையாட முடியும். வீடியோ உரையாடலில் இருக்கும் போதே டெக்ஸ்ட் செட் செய்யலாம் என்பது மற்றுமொரு சிறப்பம்சம்.

* Phone calls : உலகின் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணனியிலிருந்து தரைவழி தொலைபேசிக்கு இலவசமாக அழைப்புக்களை எடுக்க முடிவதோடு, ஒரு சிறிய கட்டணம் செலுத்துவதன் மூலம் செல்லிடத் தொலைபேசிகளுக்கும் அழைப்புகள் எடுக்கலாம்.

* Desktop sharing : வீடியோ அழைப்பில் இருக்கும் போதே பிற ஊவு பயனர்களுடன் உங்கள் கணனியின் டெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள முடியும். அதன் மூலம் கணனியில் உங்கள் செயற்பாடுகளை உங்கள் நண்பரால் பார்வையிட முடியும்.

* File sharing : 25 MB அளவிலான பைல் ஒன்றை பிற ஊவு பயனர்களுக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பலாம்.

* Video call recording : வீடியோ உரையாடலைப் பதிவு செய்து பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

ஊவு சாதாரண கணனிப் பயனர்களுக்கு மட்டுமன்றி வணிக நிறுவனங்களுக்கும் உபயோகமான ஒரு சேவையாகும்.

வணிக நிறுவனங்களில் விற்பனை, விற்பனைக்குப் பிந்திய சேவைகள், பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவைகளுக்கு ஊவு வழங்கும் உடனடி செய்திப் பரிமாறல், டெஸ்க்டொப்பைப் பகிர்ந்துகொள்ளுதல், வீடியோ உரையாடலைப் பதிவு செய்தல், பைல்களைப் பரிமாறிக் கொள்ளல் போன்ற பல விதமான சேவைகளைப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் வணிக நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவினங்களைக் குறைக்க முடிவதோடு, நேரத்தையும் மீதப்படுத்தலாம்.

ஊவு மென்பொருளை http://www.oovoo.com/ எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்துகொள்ள முடியும். இணையம் வழி உரையாடலுக்கு உரு சாதாரண கணனி, வெப் கேமரா மற்றும் மைக் ஸ்பீகர் ஒன்றிணைந்த ஹெட் செட் என்பவற்றுடன் அதி வேக இணைய இணைப்பு என்பன அவசியம் என்பது ஏற்கனவே நீங்கள் அறிந்த விடயம்தான்.

வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி


சேலம், அம்மாபேட்டை வித்யா நகரைச் சேர்ந்தவர் ஷாஜஹான்(41). வக்கீல் தொழில் செய்யும் அவர், கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். 2004 லோக்சபா தேர்தலில், 8,466 ஓட்டுக்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில், சேலம் வடக்கு, தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது தேர்தல் அறிக்கையை, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாளன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது போல், அன்றாட கூலி தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அந்த பணத்தில், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும். உரல் கல் மற்றும் அம்மி குழவி கல் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். சேலம் மாநகரில் ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். ரவுடியிசத்தை ஒழித்து, சட்டம் ஒழுங்கு காக்கப்படும் என்பது உள்ளிட்ட, 22 அம்சங்களை, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"சிடி' யில் டேட்டா பதித்தல்


"சிடி ரைட்டர்கள் எது வாங்கினாலும் அத்துடன் சிடியில் டேட்டா எழுதுவதற்கான புரோகிராம் ஒன்று இணைத்துத் தரப்படுகிறது. இந்த புரோகிராம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு மாதிரியாக இருப்பதால் இங்கு சிடியில் எழுதுவதற்கான சில அடிப்படை விஷயங்கள் தரப்படுகின்றன.
1. முதலில் நீங்கள் அந்த புரோகிராம் தரும் விஸார்ட் (டயலாக் பாக்ஸ் மாதிரி) மூலம் இயக்கப் போகிறீர்களா? அல்லது நீங்களே எழுதும் வகை பிரிவினை தேர்ந்தெடுத்து அமைக்கப்போகிறீர்களா என்று சாய்ஸ் கேட்கப்படும். விஸார்ட் மூலம் எழுதப் போகிறேன் என்பதனை செலக்ட் செய்திடவும். இதில் பல வசதிகள் தரப்படும்.
2. அடுத்து பெரும்பாலும் என்ன வகை சிடியில் எழுதப்போகிறீர்கள் என்று கேட்கப்படும். அதாவது ஆடியோவா? அல்லது வீடியோ சிடியா? என்று கேட்கப்படும். தகவல்களைப் பதிந்து வைக்க விரும்பினால் data என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உங்களி டம் உள்ள மற்ற ஆடியோ சிடிக்களைப் பயன்படுத்தி புதிய ஆடியோ சிடி ஒன்று தயாரிப்பதாக இருந்தால் music என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மியூசிக் சிடி மற்றும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய பைல்கள் என்றால் உங்களுக்கு CDR வகை சிடிக்கள் தான் சரியான தேர்வாக இருக்கும். உங்களிடம் CDRW வகை சிடி இருந்தால் அதனை டேட்டா எழுதப் பயன்படுத்தவும். இதற்குக் காரணம் சில மியூசிக் பிளேயர்கள் CDRW வகை சிடிக்களை ஏற்றுக் கொள்ளாது என்பதே.

3. அடுத்த வேலை பைல்களைத் தேர்ந்தெடுப்பதுதான். பெரும்பாலான இவ்வகை புரோகிராம்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் வகையிலான விண்டோக் களைத் தரும். எனவே பைல்களைத் தேர்ந்தெடுத்து அமைப்பது எளிதான வேலையாக அமையும். இதை ட்ராக் அண்ட் ட்ராப் முறையிலும் மேற்கொள்ளலாம். 
4. பைல்களைத் தேர்ந்தெடுத்தவுடன் இனி சிடியில் எழுதுவதற்கான ஆப்ஷன்ஸ் கிடைக்கும். பெரும்பாலான புரோகிராம்களில் டேட்டா எழுதுவதற்கு டெஸ்ட் வகை ஒன்றினைத் தரும். அதாவது நேரடியாக எழுதத் தொடங்கி பின் எழுதுவதில் பிரச்னை ஏற்பட்டு சிடி வீணாகிவிடாமலும் அனாவசியமாக நேரம் செலவழியாமலும் இருக்க இந்த ஏற்பாடு. இந்த சோதனை முறையை முதல் முதலில் அந்த சிடி டிரைவில் எழுதுகையில் மேற்கொள்ளலாம். பின் அதில் எதுவும் பிரச்னை இல்லை என்று தெரிந்து கொண்டால் நேரடியாக எழுதத் தொடங்கலாம். 
5. அடுத்ததாக சிடி எந்த வேகத்தில் எழுத வேண்டும் என்பதனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக் கவில்லை என்றால் சிடி டிரைவரே குறிப்பிட்ட வேகத்தைத் தேர்ந்தெடுக்கும். அல்லது அதற்கு முந்தைய முறையில் எழுதிய வேகத்தையே எடுத்துக் கொள்ளும். 
6. சிடியில் எழுதி முடித்தவுடன் டேட்டா சரியாகப் பதியப்பட்டுள்ளதா என்று சோதனை செய்வதற்கான ஆப்ஷனையும் இங்கு தேர்ந்தெடுக்கலாம். இதற்கான நேரம் மிகவும் குறைவு என்பதால் இதனை எப்போதும் மேற்கொள்வது நல்லது. 
7. இனி சிடியில் டேட்டா எழுதப்படும் நேரம். இந்நேரத்தில் மற்ற எந்த செயலையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்வது நல்லதல்ல. சிடி டிரைவ் செயல்பட டேட்டாவைத் தக்க வைத்து அனுப்ப அதிகமான ராம் மெமரி தேவைப்படும். இல்லை என்றால் buffer underrun error என்னும் பிழைச் செய்தி வரும். சிடியில் எழுதப்படுகையில் டேட்டா தொடர்ந்து சிடி டிரைவிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எழுதப்படும் டேட்டாவிற்கு இணையாக டேட்டா செல்ல வேண்டும். ஆனால் இவ்வாறு கிடைக்காத நிலையில் சிடியில் எழுதப்படும் செயல் பாதிக்காத வகையில் புரோகிராம் அமைக்கப்படும். இதனால் எழுதி முடித்தபின்னர் எத்தனை முறை இந்த நிகழ்வு ஏற்பட்டது; ஆனால் சமாளிக்கப்பட்டது என்ற செய்தி கிடைக்கும். எனவே தான் சிடியில் எழுதுகையில் வேறு எந்த செயல்பாட்டையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடாது. 
8. சிடியில் எழுத டிரைவுடன் வரும் (பெரும்பாலும் நீரோ புரோகிராம்) புரோகிராமைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. விண்டோஸ் எக்ஸ் பி புரோகிராமில் இதற்கான புரோகிராம் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் உங்கள் சிடி டிரைவ் டைரக்டரியைத் திறக்கவும். ட்ராப் அண்ட் ட்ராக் மூலம் பைல்களை இழுத்து வந்து டைரக்டரியில் போடவும். “Files ready to be written to the CD” என்ற செய்தி கிடைக்கும். சிடியில் எழுத நீங்கள் தயாராக இருந்தால் உடனே “Write these files to the CD” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான்; பைல்கள் எழுதப்பட்டுவிடும். இன்னொரு முறையிலும் பைல்களை எழுதலாம். பைலின் பெயர் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Send To பயன்படுத்தி பைல்களை அனுப்பவும். பின் மேற்கண்ட முறையில் மெனு கிடைக்கும். அதன்படி பைல்களை எழுதலாம். 


கேள்வி பதில்


கேள்வி: வேர்டில் பெரிய அளவிலான ஒரு டாகுமெண்ட் முடித்த பின்னர், பாராக்களை இடம் மாற்றி வைக்க வேண்டியுள்ளது. ஒன்பதுக்கும் மேற்பட்ட பாராக்களைப் பல இடங்களில் மாற்றி வைத்திட வேண்டும் என்கிற சூழ்நிலையில், வேலையில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படுகிறது. இதற்கு வேர்ட் தொகுப்பில் ஏதேனும் வழி உள்ளதா?
-கே. ஏகாம்பரம், திருவள்ளூர்.
பதில்: இதற்கு வேர்ட் தொகுப்பில் தனியே எந்த டூலும் இல்லை. ஆனால் அதன் டூல் ஒன்றை, நம் முயற்சியுடன் இணைத்தால், நீங்கள் குறிப்பிடும் பணியினை மேற்கொள்ளலாம். முதலில் எந்த பாரா எந்த இடத்தில் வர வேண்டும் என்பதனைத் தீர்க்கமாக, தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது முதல் பாரா 9-ஆவது இடத்தில், மூன்றாவது பாரா முதல் இடத்தில் என அனைத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது முதல் இடத்தில் வர வேண்டிய பாராவின் தொடக்கத்தில், அது முதல் இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ எங்கு இருந்தாலும், 1 என எண் இடவும். இப்படியே ஒவ்வொரு பாராவிற்கும் எண்களை இடவும். 
பின்னர், Table மெனு செல்லவும். இங்கு Sort என்னும் கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். Sort Text என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Sort By என்பதில் Paragraphs என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதுதான் அங்கு டிபால்ட் ஆக இருக்கும். பின்னர், அருகில் மேலிருந்து கீழாகவா அல்லது கீழிருந்து மேலாகவா என்ற வகையில் Ascending /Descending என இரண்டு பிரிவு இருக்கும். இதில் உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்தால், வேர்ட் அதன் பாராக்களை, எண்களின் அடிப்படையில் வகைப் படுத்தி வரிசைப்படுத்தித் தரும். பின்னர், எண்களை நீக்கிவிட்டு டெக்ஸ்ட்டை அமைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: ஒரு வெப்சைட் பாதுகாப்பானதா என்று எந்த எந்த வழிகளில் அறியலாம்?
-டி. திரவியம், விருதுநகர்.
பதில்: எந்த வகையில் பாதுகாப்பானது என்று எதிர்பார்க்கிறீர்கள்? அதன் முகவரியில் http:// என்று வழக்கமாக இருக்கும் இடத்தில் https:// என்று இருந்தால் அது பாதுகாப்பானது. இதன் உறுதியான, பாதுகாப்பான நிலையில் நம்பிக்கை வைத்து தகவல்களைத் தரலாம். இன்னொரு வழியும் உள்ளது.http://www.google.com/safebrowsing/diagnostic?site=“ ” என டைப் செய்து மேற்கோள் குறிகளுக்கிடையே அந்தக் குறியீடுகள் இல்லாமல், அந்த தளத்தின் முகவரி கொடுத்து, பிரவுசரின் அட்ரஸ் பாரில்
அமைத்து என்டர் தரவும். அந்த தளம் குறித்த தகவல்கள், அதன் தன்மை குறித்த விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கடந்த 60 அல்லது 90 நாட்களில், அந்த தளத்தினை கூகுள் நிறுவனம் சென்று வந்தது எனவும், எந்த வித கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் தொகுப்பினை அது பரவவிடவில்லை எனவும் சான்றிதழ் கிடைக்கும். மோசமான தளமாக இருந்தால், அதன் தன்மை குறித்து தகவல் இருக்கும். அருகே தினமலர் இணைய தளம் குறித்து கேட்டதற்குக் கிடைத்த பதிலைப் பார்க்கலாம். 

கேள்வி: ஸ்டார்ட் அழுத்தி ஆல் புரோகிராம்ஸ் பட்டியலில் தேடி நாம் திறக்க விரும்பும் அப்ளிகேஷன்களைத் திறக்க முடிகிறது. ஆனால் அதிகமான எண்ணிக் கையில் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், இவை வரிசையாக அகரவரிசைப்படி இல்லை என்பதால், சிரமமாகிறது. இதனை எப்படித் தடுக்கலாம்?
-சி. குமாரசாமி, சிவகாசி.
பதில்: இதனைத் தடுக்க முடியாது. உங்கள் தேவைப்படி இந்த புரோகிராம் களின் பெயர்களை அகரவரிசைப்படி மாற்றி அமைக்கலாம். புதிய புரோகிராம்களை நாம் இன்ஸ்டால் செய்வதால் அவை லிஸ்ட்டின் பின்புறம் ஒட்டிக் கொள்கின்றன. நம் தேடும் பணி இதனால் கடினமாகிறது. அவற்றையும் அகர வரிசைப்படி அடுக்கினால் வேலை எளிதாகும்.இதனைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் அல்லவா? அதற்கு பட்டியலிடப்பட்டுள்ள புரோகிராம்களில் ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Sort by Names என்பதில் ஒரு முறை கிளிக் செய்திடவும். அனைத்து புரோகிராம்களும் அகரவரிசைப்படுத்தப்படும். பின் உங்கள் வேலையும் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். 

கேள்வி: இன்டர்நெட் சைட்டில் உள்ள படங்கள் அல்லது செய்திகளை மொத்தமாக ஒரு போல்டரில் அமைக்க, அடிக்கடி புதிய போல்டரை அமைக்கிறேன். இதற்கு ரைட் கிளிக் மெனு அழுத்தி நியூ கிளிக் செய்து பின் போல்டர் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. வேறு ஏதேனும் வழிகள் உள்ளதா?
-டி. பாண்டியன், மதுரை.
பதில் :ஒரு போல்டரில் இருக்கையில் புதிய போல்டர் ஒன்றை உருவாக்க விரும்புகிறீர்களா? வலது கிளிக் செய்து new / folder என்பதை எல்லாம் ஒவ்வொன் றாகக் கிளிக் செய்திட வேண்டியதில்லை. நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பினைப் பயன்படுத்துபவராக இருப்பதால், ஆல்ட் (Alt ) கீயை அழுத்திக் கொண்டு பின் F, W, F என்ற கீகளை வரிசையாக அழுத்துங்கள். புதிய போல்டர் உரு வாகும். உருவான பின்னர், விருப்பமான பெயரை அதற்கு அளிக்கலாம். 

கேள்வி: கம்ப்யூட்டரின் ரெப்ரெஷ் ரேட் என்பது சிபியுவின் இயக்கமா அல்லது ஹார்ட் டிஸ்க்கிலிருந்து தகவல் பெறும் செயல்பாடா?
-எஸ். சிவகைலாஷ், பொள்ளாச்சி.
பதில்: நல்ல வேளை கேட்டீர்கள். இரண்டும் இல்லை சிவகைலாஷ், ஐ ஆம் சாரி. 
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை ரெப்ரெஷ் ரேட் என்பது மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட் தான். இதில் நமக்குக் காட்சியாகக் கிடைக்கும் டிஸ்பிளே ஒரு நொடியில் எத்தனை முறை ஒளியூட்டப்படுகிறது (Illuminating) என்பதனையே ரெப்ரெஷ் ரேட் குறிக்கிறது. இது பிரேம் ரேட் (Frame Rate) என்பது போல் இருக்கிறது என்று நீங்கள் எண்ணினாலும், இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டிய தில்லை. பிரேம் ரேட் என்பது ஒரு டிஸ்பிளே ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு எத்தனை முறை மாறுகிறது என்பதைக் குறிக்கிறது. ஆனால் ரெப்ரெஷ் ரேட் என்பது அந்த பிரேம்களில் காட்சிகள் எத்தனை முறை ஒரு நொடியில் ஒளியூட்டப்படுகின்றன என்பதனைக் குறிப்பதாகும். 
உங்கள் மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட்டினை எப்படிக் கண்டறிவது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து Properties என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அடுத்து Settings டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் கிடைக்கும் Advanced பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் புதிய விண்டோவில் Monitor என்னும் டேப்பினை கிளிக் செய்திடவும். பின் Monitor settings என்னும் ஏரியாவில் உங்கள் மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட்டினைக் காணலாம். அதில் ஒரு கீழ் விரியும் மெனுவிற்கான பட்டி தெரியும். இதில் உள்ள அம்புக் குறியினை அழுத்தினால் பல ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவரும். 60,70, 72, 75 மற்றும் 85 என இவை தரப்பட்டிருக்கும். இவற்றின் அலகு Hertz ஆகும். பெரிய 17 அல்லது 19 அங்குல மானிட்டர் என்றால் ரெப்ரெஷ் ரேட் 85 ஆகக் கொள்ளலாம். மானிட்டர் அளவு குறைய குறைய இதனையும் குறைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: ரொம்ப நாளா கம்ப்யூட்டரில் வாண வேடிக்கை ஒன்றும் காட்டவில்லையே. ஏதேனும் ஒரு வேடிக்கைக் காட்சிக்கான தளம் அல்லது டிப்ஸ் தாருங்களேன்.
-என். சுப்புலஷ்மி, மதுரை.
பதில்: வழக்கமான கேள்வியாக இல்லாமல், இந்த மாதிரி வேண்டுகோள் விடுப்பதுவும் நன்றாகவே உள்ளது. சரி, இதோ ஒரு வேடிக்கை.
ஜஸ்ட் ரிலாக்ஸ் செய்திட ஒரு குறிப்பு தருகிறேன். கீழே உள்ள வரியினை அப்படியே எழுத்துப் பிசகாமல் பிரவுசரில் டைப் செய்திடவும். 
javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i—) {for (j = n; j > 0; j—){self.moveBy(1,i);self.moveBy (i,0);self.moveBy(0,i);self.moveBy(i,0); } } }} Shw(6) 
பின் மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு என்டர் அழுத்துங்கள். உங்கள் மானிட்டர் திரை உள்ளுக்குள்ளாகவே நடுங்கி ஓர் ஓரமாகச் செல்வதனைக் காணலாம். பிரவுசரின் விண்டோ தான் அவ்வாறு செல்லும். இந்த வரியில் டி = 35 என்று இருக்கிறதல்லவா? அந்த மதிப்பை இன்னும் சற்று அதிகப்படுத்துங்கள். நடுக்கமும் அதிகமாகும். 
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இதனை இயக்கிப் பார்க்க உங்கள் பிரவுசர் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டியதில்லை. ஆப் லைனில் கூட இதனை மேற்கொள்ளலாம்.
தேங்க்ஸ் சகோதரி, சுப்புலஷ்மி.

கேள்வி: கீ போர்டில் உள்ள எண்ட் கீயின் பயன் என்ன? இது அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவது இல்லையே?
-என். கே. ஸ்ரீனிவாசன், திருப்பூர்.
பதில்: நல்லா கேட்டீங்க ஸ்ரீனிவாசன். கீ போர்டில் அனைத்து கீகளுக்கும் பயன்பாடு உண்டு. என்ட் கீ பலவகையான செயல்பாடு களை மேற்கொள்வதற்குப் பயன்படுகிறது. அது நீங்கள் பயன்படுத்தும் புரோகிரா மினைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக நீங்கள் இணைய இணைப்பில் ஓர் இணைய தளத்தினைப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள். அதில் உள்ள கேள்வி பதில் பகுதியைத் தேர்ந்தெடுத்தால் அதில் பெரிய பட்டியல் இருக்கும்போல் தெரிகிறது. இந்த பட்டியல் எங்கு தான் முடியும் என்று பார்க்க விருப்பம். நீங்கள் உங்கள் என்டர் கீயை தொடர்ந்து அழுத்த வேண்டியதில்லை. இப்போது End கீயை அழுத்தினால் நீங்கள் அந்த பக்கத்தின் கீழ்ப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். வேர்ட் தொகுப்பில் ஒரு டெக்ஸ்ட்டைப் படித்துக் கொண்டிருந்தால் இந்த கீயை அழுத்தினால் அது அந்த வரியின் இறுதிக்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். இதனை கண்ட்ரோல் (Ctrl) கீயுடன் அழுத்தினால் டாகுமெண்ட்டின் இறுதிப் பகுதிக்கே அழைத்துச் செல்லும். இந்த கீ எங்கு இருக்கிறது எனச் சிலர் கேட்கலாம். எழுத்து மற்றும் எண்களுக்கான கீ பேட்களுக்கு இடையே உள்ள கீகளைப் பார்க்கவும். இதில் Home கீக்குக் கீழாக இதனைக் காணலாம். அதாவது Delete key மற்றும் Page Down கீகளுக்கு இடையே இது தரப்பட்டுள்ளது. 


ஷார்ட்கட் கீகளை உருவாக்கலாம்


கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ் கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்தது. பல செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால் மவுஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று நோக்கி தேவையான இடத்தில் அமைத்து கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம்தான். இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்கு அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட்கட்கள் தான். ஷார்ட்கட் என்பது இரண்டு கீகள் இணைந்த ஒரு கட்டளை ஆகும். 
கீ போர்டு ஷார்ட்கட் என்பதில் குறைந்தது இரண்டு கீகள் இருக்கும். முதல் கீ (Modifier Key) மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு இருக்கும் செயல்பாட்டினை மாற்றி அமைக்கும் கீ. ஆல்ட், ஷிப்ட், கண்ட்ரோல் (Alt, Shift, Ctrl) கீகள் இத்தகைய கீகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்துடன் எழுத்து அல்லது எண்களுக்கான கீகள் இணைந்து செயல்பட்டு ஷார்ட் கட் கீ
தொகுப்பினைத் தருகின்றன. இந்த தொகுப்பினைப் பயன்படுத்துகையில் கம்ப்யூட்டரில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
பல ஷார்ட்கட் கீகள் உலகெங்கும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பொதுவானதாக இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக கண்ட்ரோல் + சி (Ctrl + C) காப்பி செய்வதற்கும், கண்ட்ரோல் + வி (Ctrl+V) பேஸ்ட் செய்வதற்கும் கண்ட்ரோல் + எஸ் (Ctrl+S) சேவ் செய்வதற்கும் அனைத்து நாடுகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ளன. சில புரோகிராம்களில் இவை வேறு படலாம். 
இந்த ஷார்ட்கட் கீகள் அனைத்தையும் ஒருவர் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் நாம் அடிக்கடி மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கான ஷார்ட்கட் கீகள் நாம் முயற்சி எடுக்காமலேயே நம் நினைவில் அமைந்து விடுகின்றன. ஒவ்வொரு கட்டளைக்குமான ஷார்ட்கட் கீயினை அந்த மெனுவில் கட்டளைச் சொல்லில் அடிக்கோடு இழுக்கப் பட்ட எழுத்தே ஷார்ட்கட் கீயில் பயன்படுத்தப்படும். 
இன்னொரு வழியும் உள்ளது. எடுத்துக் காட்டு மூலம் விளக்குகிறேன். ஸ்டார்ட் (Start) பயன்படுத்தி கிடைக்கும் மெனுவில் ஆல் புரோகிராம்ஸ் (All Progrmas) – அக்சஸரீஸ் (Accessories) – அட்ரஸ் புக் (Address Book) தேடிக் கண்டுபிடியுங்கள். இதை இயக்க லெப்ட் கிளிக் தருவீர்கள் அல்லவா? இப்போது ரைட் கிளிக் செய்திடுங்கள். விரியும் மெனுவில் கீழாக உள்ள பிரிவான புராபர்ட்டீஸ் (Properties) என்பதில் கிளிக் செய்திடுங்கள். புராபர்ட்டீஸ் டயாலக் பாக்ஸில் ஷார்ட்கட் கீ (Shortcut key) என ஒரு பாக்ஸ் இருக்கும். இந்த பாக்ஸில் நன் (None) என இருக்கும். இதில் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று பின் ஷிப்ட் (Shift) அழுத்தினால் அதில் கண்ட்ரோல்+ ஆல்ட் (Ctrl+Alt) கிடைக்கும். அதாவது அட்ரஸ் புக் புரோகிராம் திறப்பதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்பில் மாடிபையர் கீகள் இந்த இரண்டும் ஆகும். இனி அதனுடன் அ அழுத்துங்கள். பின் அப்ளை (Apply) அழுத்தி வெளியேறுங்கள். நீங்கள் இப்போது ஒரு ஷார்ட்கட் கீயினை உருவாக்கி விட்டீர்கள். இனி அட்ரஸ் புக் திறக்க கண்ட்ரோல் + ஆல்ட் + ஏ (Ctrl+Alt+A) அழுத்தினால் போதும். 
இந்த கீ தொகுப்பு ஏற்கனவே அமைக்கப்படாத புரோகிராம்கள் அனைத்திலும் இந்த ஷார்ட்கட் கீ செயல்படும். எடுத்துக்காட்டாக பேஜ் மேக்கர், வேர்ட், எக்ஸெல் போன்ற தொகுப்புகளில் இந்த ஷார்ட்கட் கீ யை அழுத்தினால் அட்ரஸ் புக் திறக்கப்படும். ஏனென்றால் இந்த கீ தொகுப்பினை வேறு எந்த கட்டளைக்கும் அந்த புரோகிராம்கள் பயன்படுத்த வில்லை. ஆனால் இந்த ஷார்ட்கட் கீ தொகுப்பினை ஒரு புரோகிராம் பயன்படுத்தி இருந்தால் இது அத்தொகுப்பில் எடுபடாது.
வேர்ட் தொகுப்பில் ஒரு ஷார்ட்கட் கீயினை ஏற்கனவே உள்ளதற்குப் பதிலாக அமைக்கும் விதம் குறித்துப் பார்க்கலாம். வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள சொற்களை எண்ணிச் சொல்ல தரப்பட்டுள்ள ஷார்ட்கட் கீ தொகுப்பு Alt+T+W. இதனை மிக எளிமையாக மாற்றவும் எப்படி ஷார்ட்கட் கீ தொகுப்பு உருவாக்கலாம் என்பதற்கும் கீழே குறிப்புகள் தரப்படுகின்றன. இதனை Alt+U ஆக மாற்றும் வழிகளைக் காணலாம்.
டூல்ஸ் மெனுவில் கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸ் திறந்தவுடன் கிடைக்கும் விண்டோவில் கமாண்ட்ஸ் (Commands) என்னும் டேபிள் கிளிக் செய்திடவும். இந்த பாக்ஸின் அடிப்பாகத்தில் கீ போர்டு (Keyboard) என்னும் பட்டன் கீழாகக் காணப்படும். அதனைக் கிளிக் செய்திடவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் பெட்டியில் டூல்ஸ் (Tools) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது பக்கம் கமாண்ட்ஸ் (Commands) கட்டத்தில் ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால் டூல்ஸ் வேர்ட் கவுண்ட் (Tools Word Count) என்று ஒரு கட்டளை இருக்கும். கீழாக பிரஸ்நியூ ஷார்ட்கட் கீ (Press New Shortcut key) என்பதில் கிளிக் செய்து பின் Alt கீயையும் க் கீயையும் டைப் செய்திடவும். அருகே இருக்கும் அசைன் (Assign) பட்டனில் கிளிக் செய்து பின் ஓகேயில் என்டர் தட்டி அனைத்து பாக்ஸ்களையும் மூடுங்கள். இனி சொற்கள் எண்ணுவதற்கு Alt + U ஷார்ட் கட் கீகளாக அமையும். 
இது போல ஏற்கனவே இருக்கும் செயல்பாடுகளுக்கு ஷார்ட்கட் கீகளை நமக்கு எளிதாகவும் நாம் விரும்பும் வகையிலும் அமைக்க முடியும். 
பொதுவாகக் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் இந்த ஷார்ட் கட் கீகளை அறிந்து வைத்திருப்பது நல்லது. இவற்றைத் தெரிந்து கொள்ளும்போதுதான் நாம் வீணாக எவ்வளவு நேரத்தைச் செலவு செய்திருக்கிறோம் என்பதனை உணர்வோம். எடுத்துக்காட்டாக சில நேரங்களில் தெரியாமல் கேப்ஸ் லாக் (Caps Lock) அழுத்தி விட்டு அவசரமாக மானிட்டரைப் பார்க்காமல் ஏதேனும் நூல் அல்லது ஏட்டினைப் பார்த்து டைப் செய்கையில் THERE EXIST A DIFFERENT SOLUTION WHICH MANY OF US DO NOT KNOW என அனைத்தையும் பெரிய எழுத்தில் டைப் செய்திருப்போம். பின் தவறை உணர்ந்து மீண்டும் டைப் செய்வோம். அப்போது தெரியாது இதனைச் சரி செய்திடும் வழி ஷிப்ட் + எப் 3 கீயில் (Shift + F3) தரப்பட்டிருப்பது. சரி செய்திட வேண்டிய சொற்களைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட் + எப்3 கீயை அழுத்தினால் இந்த சொற்கள் இரு வேறு சரியான வழிகள் தரும். அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம். ஏற்கனவே சேவ் ஆன ஒரு பைலை வேறு ஒரு பெயரில் சேவ் செய்திட பைல் மெனு கிளிக் செய்து பின் சேவ் அஸ் என்ற பிரிவைக் கிளிக் செய்து வரும் டயலாக் பாக்ஸில் வேறு ஒரு பெயர் தருவோம். ஆனால் இதனை F12 கீ அழுத்தி செயல்படுத்தலாம். 
ஷார்ட்கட் கீகள் நம் வழக்கமான பணியை விரைவாக முடிக்க உதவும் திறவுகோல்களாகும். எப்போது மெனு கட்டளைகளைச் செயல்படுத்தினாலும் அதனைச் சற்று உற்று நோக்குங்கள். நீங்கள் இந்த கட்டளைகளுக்காக கர்சரைக் கொண்டு சென்றாலே அதன் ஷார்ட் கட் கீ என்ன? என்று காட்டப்படும். அடிக்கடி பயன்படுத்தும் மெனு கட்டளைகளுக்கான ஷார்ட்கட் கீகளை நினைவில் வைத்து எளிதாகப் பயன் படுத்தி விரைவாகச் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.