கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ் கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்தது. பல செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால் மவுஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று நோக்கி தேவையான இடத்தில் அமைத்து கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம்தான். இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்கு அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட்கட்கள் தான். ஷார்ட்கட் என்பது இரண்டு கீகள் இணைந்த ஒரு கட்டளை ஆகும்.
கீ போர்டு ஷார்ட்கட் என்பதில் குறைந்தது இரண்டு கீகள் இருக்கும். முதல் கீ (Modifier Key) மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு இருக்கும் செயல்பாட்டினை மாற்றி அமைக்கும் கீ. ஆல்ட், ஷிப்ட், கண்ட்ரோல் (Alt, Shift, Ctrl) கீகள் இத்தகைய கீகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்துடன் எழுத்து அல்லது எண்களுக்கான கீகள் இணைந்து செயல்பட்டு ஷார்ட் கட் கீ
தொகுப்பினைத் தருகின்றன. இந்த தொகுப்பினைப் பயன்படுத்துகையில் கம்ப்யூட்டரில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கீ போர்டு ஷார்ட்கட் என்பதில் குறைந்தது இரண்டு கீகள் இருக்கும். முதல் கீ (Modifier Key) மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு இருக்கும் செயல்பாட்டினை மாற்றி அமைக்கும் கீ. ஆல்ட், ஷிப்ட், கண்ட்ரோல் (Alt, Shift, Ctrl) கீகள் இத்தகைய கீகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்துடன் எழுத்து அல்லது எண்களுக்கான கீகள் இணைந்து செயல்பட்டு ஷார்ட் கட் கீ
பல ஷார்ட்கட் கீகள் உலகெங்கும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பொதுவானதாக இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக கண்ட்ரோல் + சி (Ctrl + C) காப்பி செய்வதற்கும், கண்ட்ரோல் + வி (Ctrl+V) பேஸ்ட் செய்வதற்கும் கண்ட்ரோல் + எஸ் (Ctrl+S) சேவ் செய்வதற்கும் அனைத்து நாடுகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ளன. சில புரோகிராம்களில் இவை வேறு படலாம்.
இந்த ஷார்ட்கட் கீகள் அனைத்தையும் ஒருவர் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் நாம் அடிக்கடி மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கான ஷார்ட்கட் கீகள் நாம் முயற்சி எடுக்காமலேயே நம் நினைவில் அமைந்து விடுகின்றன. ஒவ்வொரு கட்டளைக்குமான ஷார்ட்கட் கீயினை அந்த மெனுவில் கட்டளைச் சொல்லில் அடிக்கோடு இழுக்கப் பட்ட எழுத்தே ஷார்ட்கட் கீயில் பயன்படுத்தப்படும்.
இன்னொரு வழியும் உள்ளது. எடுத்துக் காட்டு மூலம் விளக்குகிறேன். ஸ்டார்ட் (Start) பயன்படுத்தி கிடைக்கும் மெனுவில் ஆல் புரோகிராம்ஸ் (All Progrmas) – அக்சஸரீஸ் (Accessories) – அட்ரஸ் புக் (Address Book) தேடிக் கண்டுபிடியுங்கள். இதை இயக்க லெப்ட் கிளிக் தருவீர்கள் அல்லவா? இப்போது ரைட் கிளிக் செய்திடுங்கள். விரியும் மெனுவில் கீழாக உள்ள பிரிவான புராபர்ட்டீஸ் (Properties) என்பதில் கிளிக் செய்திடுங்கள். புராபர்ட்டீஸ் டயாலக் பாக்ஸில் ஷார்ட்கட் கீ (Shortcut key) என ஒரு பாக்ஸ் இருக்கும். இந்த பாக்ஸில் நன் (None) என இருக்கும். இதில் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று பின் ஷிப்ட் (Shift) அழுத்தினால் அதில் கண்ட்ரோல்+ ஆல்ட் (Ctrl+Alt) கிடைக்கும். அதாவது அட்ரஸ் புக் புரோகிராம் திறப்பதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்பில் மாடிபையர் கீகள் இந்த இரண்டும் ஆகும். இனி அதனுடன் அ அழுத்துங்கள். பின் அப்ளை (Apply) அழுத்தி வெளியேறுங்கள். நீங்கள் இப்போது ஒரு ஷார்ட்கட் கீயினை உருவாக்கி விட்டீர்கள். இனி அட்ரஸ் புக் திறக்க கண்ட்ரோல் + ஆல்ட் + ஏ (Ctrl+Alt+A) அழுத்தினால் போதும்.
இந்த கீ தொகுப்பு ஏற்கனவே அமைக்கப்படாத புரோகிராம்கள் அனைத்திலும் இந்த ஷார்ட்கட் கீ செயல்படும். எடுத்துக்காட்டாக பேஜ் மேக்கர், வேர்ட், எக்ஸெல் போன்ற தொகுப்புகளில் இந்த ஷார்ட்கட் கீ யை அழுத்தினால் அட்ரஸ் புக் திறக்கப்படும். ஏனென்றால் இந்த கீ தொகுப்பினை வேறு எந்த கட்டளைக்கும் அந்த புரோகிராம்கள் பயன்படுத்த வில்லை. ஆனால் இந்த ஷார்ட்கட் கீ தொகுப்பினை ஒரு புரோகிராம் பயன்படுத்தி இருந்தால் இது அத்தொகுப்பில் எடுபடாது.
வேர்ட் தொகுப்பில் ஒரு ஷார்ட்கட் கீயினை ஏற்கனவே உள்ளதற்குப் பதிலாக அமைக்கும் விதம் குறித்துப் பார்க்கலாம். வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள சொற்களை எண்ணிச் சொல்ல தரப்பட்டுள்ள ஷார்ட்கட் கீ தொகுப்பு Alt+T+W. இதனை மிக எளிமையாக மாற்றவும் எப்படி ஷார்ட்கட் கீ தொகுப்பு உருவாக்கலாம் என்பதற்கும் கீழே குறிப்புகள் தரப்படுகின்றன. இதனை Alt+U ஆக மாற்றும் வழிகளைக் காணலாம்.
டூல்ஸ் மெனுவில் கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸ் திறந்தவுடன் கிடைக்கும் விண்டோவில் கமாண்ட்ஸ் (Commands) என்னும் டேபிள் கிளிக் செய்திடவும். இந்த பாக்ஸின் அடிப்பாகத்தில் கீ போர்டு (Keyboard) என்னும் பட்டன் கீழாகக் காணப்படும். அதனைக் கிளிக் செய்திடவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் பெட்டியில் டூல்ஸ் (Tools) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது பக்கம் கமாண்ட்ஸ் (Commands) கட்டத்தில் ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால் டூல்ஸ் வேர்ட் கவுண்ட் (Tools Word Count) என்று ஒரு கட்டளை இருக்கும். கீழாக பிரஸ்நியூ ஷார்ட்கட் கீ (Press New Shortcut key) என்பதில் கிளிக் செய்து பின் Alt கீயையும் க் கீயையும் டைப் செய்திடவும். அருகே இருக்கும் அசைன் (Assign) பட்டனில் கிளிக் செய்து பின் ஓகேயில் என்டர் தட்டி அனைத்து பாக்ஸ்களையும் மூடுங்கள். இனி சொற்கள் எண்ணுவதற்கு Alt + U ஷார்ட் கட் கீகளாக அமையும்.
இது போல ஏற்கனவே இருக்கும் செயல்பாடுகளுக்கு ஷார்ட்கட் கீகளை நமக்கு எளிதாகவும் நாம் விரும்பும் வகையிலும் அமைக்க முடியும்.
பொதுவாகக் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் இந்த ஷார்ட் கட் கீகளை அறிந்து வைத்திருப்பது நல்லது. இவற்றைத் தெரிந்து கொள்ளும்போதுதான் நாம் வீணாக எவ்வளவு நேரத்தைச் செலவு செய்திருக்கிறோம் என்பதனை உணர்வோம். எடுத்துக்காட்டாக சில நேரங்களில் தெரியாமல் கேப்ஸ் லாக் (Caps Lock) அழுத்தி விட்டு அவசரமாக மானிட்டரைப் பார்க்காமல் ஏதேனும் நூல் அல்லது ஏட்டினைப் பார்த்து டைப் செய்கையில் THERE EXIST A DIFFERENT SOLUTION WHICH MANY OF US DO NOT KNOW என அனைத்தையும் பெரிய எழுத்தில் டைப் செய்திருப்போம். பின் தவறை உணர்ந்து மீண்டும் டைப் செய்வோம். அப்போது தெரியாது இதனைச் சரி செய்திடும் வழி ஷிப்ட் + எப் 3 கீயில் (Shift + F3) தரப்பட்டிருப்பது. சரி செய்திட வேண்டிய சொற்களைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட் + எப்3 கீயை அழுத்தினால் இந்த சொற்கள் இரு வேறு சரியான வழிகள் தரும். அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம். ஏற்கனவே சேவ் ஆன ஒரு பைலை வேறு ஒரு பெயரில் சேவ் செய்திட பைல் மெனு கிளிக் செய்து பின் சேவ் அஸ் என்ற பிரிவைக் கிளிக் செய்து வரும் டயலாக் பாக்ஸில் வேறு ஒரு பெயர் தருவோம். ஆனால் இதனை F12 கீ அழுத்தி செயல்படுத்தலாம்.
ஷார்ட்கட் கீகள் நம் வழக்கமான பணியை விரைவாக முடிக்க உதவும் திறவுகோல்களாகும். எப்போது மெனு கட்டளைகளைச் செயல்படுத்தினாலும் அதனைச் சற்று உற்று நோக்குங்கள். நீங்கள் இந்த கட்டளைகளுக்காக கர்சரைக் கொண்டு சென்றாலே அதன் ஷார்ட் கட் கீ என்ன? என்று காட்டப்படும். அடிக்கடி பயன்படுத்தும் மெனு கட்டளைகளுக்கான ஷார்ட்கட் கீகளை நினைவில் வைத்து எளிதாகப் பயன் படுத்தி விரைவாகச் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
|
No comments:
Post a Comment