Monday, December 5, 2011

அஜீத் சில தகவல்கள்!

* உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்! 

* சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!

* ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!

* ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!
* தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!

* 'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!

கணவரை தண்ணியடிக்க சொல்லுங்கள்

கணவரின் குறட்டை தொல்லை தாங்க முடியவில்லையா? கொஞ்சம் தண்ணியடிக்க சொல்லுங்கள் சரியாகிவிடும் !


படுக்கையில் கணவன் விடும் குறட்டையால் இரவில் தூங்காது விழி பிதுங்கி நிற்கும் மனைவிமாருக்கு இனி நிம்மதி தான்,அதிக குண்டாக இருப்பதாலும், நீரிழிவு போன்ற வியாதிகளாலும் குறட்டை வருவதாக சொல்லப்படுகிறது, குறட்டையால் விவாகரத்து வரை போன தம்பதிகளையும் இந்த உலகம் கண்டிருக்கிறது, இவற்றுக்கெல்லாம் தீர்வாக வந்திருக்கிறது இந்த அற்ககோல்,இரவு படுக்கைக்கு முன்னர் கொஞ்சமாக அற்ககோல் அருந்தினால் தசைகளின் இறுக்கத்தை போக்கி இயல்பான நித்திரையை அது தரும்! அளவுக்கு மீறினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, அற்ககோல் ஒரு விதத்தில் நல்ல மருந்து! எதற்கும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள் , குறட்டைக்கு குட் பாய்

தொலைத்தொடர்பு அமைச்சரின் 'இன்டர்நெட் அறிவு': இணையவாசிகளிடம் சிக்கிய சிபல்!

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபலின் சமூக வலைத்தளங்கள் குறித்த தொழில்நுட்ப அறிவை முன்வைத்து, அவரை இணையவாசிகள் கண்டித்தும், கிண்டல் செய்தும் தங்கள் பதிவுகளைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களை இழிவுபடுத்தும் வகையிலான பதிவுகளை கண்காணித்து, அவற்றைத் தணிக்கை செய்ய வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் வலியுறுத்தியதே இந்திய இணையவாசிகளின் எரிச்சலுக்கு காரணம். 

தன்னைச் சந்தித்த கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் மற்றும் யாஹூ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கபில் சிபல் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். 

நாட்டிலுள்ள மதத் தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போன்ற தலைவர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் பதிவு செய்யும் கருத்துகள், படங்கள், போட்டூன்கள் போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது என்பதே அவரது கோரிக்கை. 

குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பதிவுகளை, அவை வெளியாவதற்கு முன்பு தணிக்கை செய்ய வேண்டும் என்றும், அவற்றில் மோசமான கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் அவர் விவரித்திருக்கிறார். 

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் இந்தக் கோரிக்கையைக் கண்டு திணறிப் போன கூகுள், ஃபேஸ்புக் முதலிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், குறிப்பிட்ட சில பதிவுகளை நீக்குமாறு புகார் அளித்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததாக தெரிகிறது. 

இந்தியாவில் தற்பொது சுமார் 10 கோடி இணையவாசிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 2.8 கோடி பேர் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றனர். இவர்களது கோடிக்கணக்கான பதிவுகளை எப்படி தணிக்கை செய்ய முடியும் மில்லியன் டாலர் கேள்வி. 

இதுபோன்ற சாத்தியப்படாத ஒரு கோரிக்கையை முன்வைத்த அமைச்சர் கபில் சிபலை ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் நொடிக்கு 50 கருத்துகளைக் கொட்டி வருகின்றனர். இதற்காக பயன்படுத்தப்படும் #IdiotKapilSibal என்ற டேக் தான் இப்போது டிவிட்டர் டிரெண்டில் டாப்!

இந்தியர்களின் கறுப்புப்பணம் பற்றிய விபரங்களை வெளியிட அசாஞ்ச் முடிவு!!


வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பண விபரங்களை அடுத்த வருடம் வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய தகவல்கள் அவர்களின் வங்கிக் கணக்குகளுடன் எதிர்வருகிற 2012 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ மாநாடு மூலம் லண்டனில் இருந்து கலந்து கொண்ட அசாஞ்ச் கூறியதாவது, மத்திய புலனாய்வுத் துறை மின்னஞ்சல்களில் இருந்து சீன உளவுத் துறை தகவல்களைத் திருடியதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.

இந்தியாவின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளை மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஒட்டுக் கேட்டு வருகின்றன. அதனால் இந்தியா பாதுகாப்பான தகவல் தொடர்பைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அசாஞ்ச் தெரிவித்தார்.

படப்பிடிப்பின்போது உடன் நடித்த ஹீரோவை காதலித்து உல்லாசமாக இருந்த நடிகை கர்ப்பம்

படப்பிடிப்பின்போது உடன் நடித்த ஹீரோவை காதலித்து உல்லாசமாக இருந்த கேரள நடிகை போலீஸ் துணையுடன் அவரை மணந்தார். தஞ்சை பாத்திமா நகரைச் சேர்ந்த பீட்டர் மகன் டோனி என்கிற அந்தோணி(22).

மகன் டோனி நடித்த உயிரே என்னோடு கலந்துவிடு என்ற படத்தில் பீட்டர் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அந்த படத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அமுலு என்ற மீனாட்சி(19) கதாநாயகியாக நடித்திருந்தார். அவர் மலையாளத்தில் 2 படங்களில் நடித்துள்ளார்.

இந்த படப்பிடிப்பின்போது ஹீரோவும், ஹிரோயினும் நிஜத்தில் காதலிக்க ஆரம்பித்தனர். தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அதன் விளைவாக மீனாட்சி கர்ப்பமானார். உடனே டோனியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு டோனியின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனாட்சி தஞ்சை மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். உடனே போலீசார் டோனி மற்றும் அவரது பெற்றோரை அழைத்துப் பேசினர்.

இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி தகவல் கிடைத்து மீனாட்சியின் உறவினர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து இரு வீட்டாரையும் சமாதானம் செய்த போலீசார் டோனிக்கும், மீனாட்சிக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

இவர் தான் ரஜினிகாந்த்......தமிழக மக்களின் சூப்பர் ஸ்டார்..

பரட்டை தலை, கண்ணாடியை சுழற்றுவது, திரையில் புகை பிடிப்பது போன்ற வித்தைகளால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.....
ஒரு கட்டத்தில் தமிழ் திரை உலகின் முதல் இடத்தை பிடித்தார்....இவர் திரையில் தோன்றினாலே போதும்...ஆர்பரித்தான் தமிழன்....இவரின் பூர்வீகத்தை மறந்தான்...தனக்கான அவதார புருஷனானாக நம்ப ஆரம்பித்தான்......இதை பயன்படுத்தி கோடிகளை கு...வித்தார் ரஜினி......

இவர் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஏதேனும் அரசியல் stunt அடிப்பார்....அதாவது தன் பேச்சு அல்லது நடவடிக்கை...தான் வெகு விரைவில் அரசியலுக்கு வர போவதுபோல் இருக்கும்படி பார்த்து கொள்வதில் கில்லாடி......இவருடைய படத்தின் விளம்பரத்துக்கு அவரது அரசியல் stunt கள் பேருதவி புரிந்தன....தன் படத்தில்,, சில இடங்களில் அது போன்ற வசனங்களை வைத்து ஏமாற்றுவதில் இவர் கில்லாடி....

போதும் போதும் என்ற வரைக்கும் தமிழனிடம் சம்பாதித்து விட்டு .... சமீபத்தில் வெளியான குசேலன் படத்தில், "டைரக்டர் சொன்னால் நான் வசனம் பேசுவேன், அதுதான் என் வேலை".....என்று பளிச்சென போட்டு உடைத்தார்... அப்போது தான் முக்கால்வாசி தமிழனுக்கு பித்து தெளிந்தது......தெரிந்தது இவரின் உண்மை முகம்.......வடை போச்சே என்றே நிலைக்கே சென்றான் தமிழன்........
அடுத்து அரசியல்.....இவர் அரசியலுக்கு வந்ததே ஒரு கேலிகூத்து தான்.......

தன்னை நம்பி பைத்தியம் போல் தெரிகிறதே சில தமிழ் கூட்டம்.......சரி அந்த இனம் கஷ்ட படுவதை பார்த்து அரசியலில் மூக்கை நுழைத்தார் என்று நீங்கள் என்னுகுரீர்களா ??? அது தான் இல்லை....

ஜெயா அம்மையார் முதல்வராய் இருந்த போது....அவர் வருகையின் போது சென்னைவாசிகள் வேகாத வெயிலில் நிருதபடுவது வழக்கம்...அப்படி தான் இவருடைய காரும் நிறுத்தப்பட....அதுக்காக கோபபட்டு அரசியலுக்கு வந்த சூரபுலிதான் இவர்.....

ஏதேனும் பொது நிகழ்வுகளில், ஏதோ பெரிய சிந்தனைவாதிபோல் போஸ் குடுப்பார்......தமிழனும் தலைவர் ஏதோ சொல்ல போகிறார் என்று பெரிய எதிர்பார்போடு காத்து கிடப்பான்.....கடைசியில் இவரும் பேசுவார்.....ஆனால் என்ன பேசினார் என்பது அவருக்கும் புரியாது கேட்டு கொண்டிருந்த அவரது ரசிகனுக்கும் புரியாது என்பது தனிக்கதை........

இவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்னை...அதற்காக வேண்டி 1008 தமிழன் பழனி போய் மொட்டை போட்டு விட்டு வந்தது உச்சகட்ட கேவலம்......இந்த நிகழ்வை கண்டு மற்றும் கேள்விப்பட்டு, அடுத்த சமுதாயம் அடித்த கிண்டல் கேலியை கண்டு இன மான உணர்வுள்ள அத்தனை தமிழனும் வெட்கி தலை குனிந்தான்......

இவ்ளோ பெரிய அந்தஸ்து மற்றும் வாழ்வளித்த இந்த தமிழ் இனம் அழியும் போது....ஒரு சிறு கண்டனத்தை கூட மனிதாபமான ரீதியில் கூட இந்த மனிதர் தெரிவிக்கவில்லை என்பது தான் உச்சகட்ட அவலம்.....அணை பிரச்னையில் கூட இவர் நமக்காக வாய் திறக்க மாட்டார் என்பது தான் நிதர்சனமான உண்மை.......

இந்த பதிவை படித்து விட்டு சில நண்பர்கள் கேட்கும் கேள்விகள்..

1 . நடிகரை நடிகராக பார்க்கலாமே ???
அப்படிதான் நாங்கள் பார்த்தோம்....அவர் தான் TMC + DMK வுக்கு வாகு கேட்டு அரசியலில் நுழைந்தார்....தன படத்தில் அரசியலுக்கு வருவது போல் வசனம் அமைவதாக பார்த்து சம்பாதித்தார்....

2 . ரஜினி பேசி அரசியல் செய்வதை விட பேசாமல் இருபது மேல்?
அப்படியே ஆரம்ப காலம் முதல் இருந்து இருக்கலாமே..

இப்படி முடியுமா உங்களால் ?

போட்டோ சாப் எனும் மென்பொருள் மூலமாக பல கிராபிக் வேலைகளை செய்ய உதவுகிறது. இவ்வாறு புகைப்படத்துறையில் போட்டோசாப் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் இந்த போட்டோ சாப் மூலம் ஒரு கலைஞர் ஓவியத்தை வரைந்து பார்ப்பவர்களை வியக்கவைத்திருக்கிறார். வெறும் கோடுகளால் ஆரம்பித்து முப்பரிமாணத்தில் ஒரு பெண்ணின் தோற்றத்தை வரைந்து வியக்கை வைத்துள்ளார் அந்நபர். இவரின் திறமையை நீங்களும் பாருங்கள்…





தல ரசிகர்களுக்கு தலப்பாக்கட்டு பிரியாணி !


அஜீத்தை ' பில்லா ' படத்தில் மிகவும் ஸ்டைலாக காட்டியவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். மீண்டும் இக்கூட்டணி இணைய இருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் அஜீத்தை இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்தன்.

மீண்டும் இக்கூட்டணி இணைந்து இருப்பது இப்போதே மிகந்த எதிர்ப்பார்ப்பு இருக்கும் நிலையில், விஷ்ணுவர்தனிடம் ஒரு மினி பேட்டி!

பஞ்சா படத்தினை அஜீத்தை வைத்து ரீமேக் பண்ண இருக்கிறீர்களா ?

கண்டிப்பாக இல்லை. அஜீத் நடிக்க நான் இயக்க இருக்கும் படத்திற்கு இப்போது தான் கதை எழுதி வருகிறேன். பஞ்சா படத்தினை தமிழ் ரீமேக் செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை. தமிழில் 'குறி' என்னும் பெயரில் அப்படம் வெளிவரும்.

மீண்டும் அஜீத்துடன் இணைவது குறித்து ?

மிகந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். கண்டிப்பாக அப்படம் 'பில்லா'வை மிஞ்ச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அஜீத்தை எந்த மாதிரி காட்ட இருக்கிறீர்கள்?

இன்னும் படத்தின் கதையை நான் எழுதியே முடிக்கவில்லை. அதற்குள் கேட்டால் நான் எப்படி சொல்வது. கண்டிப்பாக அஜீத் ரசிகர்களுக்கு தீனி போடும் விதத்தில் இந்த படம் இருக்கும்.

நீரவ் ஷாவை அறிமுகப்படுத்தியவர் நீங்கள். அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் ?

(சிரித்தபடியே) சந்தோஷமாக தான் பார்க்கிறேன். எனது படத்திற்கு கால்ஷீட் கேட்டால் கூட தேதிகள் இல்லை என்று கூறுகிறார். அவ்வளவு பிஸி. (சிரிக்கிறார் ) திறமையான கலைஞர் என்பதால், பிஸியாக இருக்கிறார். 

யுவன் - விஷ்ணுவர்தன் கூட்டணி என்றால் பாடல்கள் சூப்பர் ஹிட். அதற்கு என்ன காரணம் ?

யுவன் எனக்கு என்று ஸ்பெஷலாக பாடல்கள் செய்வது இல்லை. என்னவென்றால் நான் அவரது இசையில் தலையிடுவது இல்லை. அது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

தர்ம அடி வாங்கும் தமிழனுக்கு!



தர்ம அடி வாங்கும் தமிழனுக்கு!


முன்பே அடிவாங்கிய உன் உறவு தமிழன் எழுதுவது !


சுத்தி சுத்தி தமிழன பார்த்து எல்லா மாநிலத்திலும் ஏன் அடிகிறங்க? 


மனசு கேக்கமா ஆத்தா சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதுனேன் ! பதிலு என்ன வந்துருக்குனு பாருங்க !!!


“என்ன இருந்தாலும் ஒரு இந்தியன் இன்னொரு சக இந்தியன குத்தம் சொல்றது நல்லாவா இருக்கு?” ( சோனியா )

... சோனியா ஜி !
இதுக்கொண்ணும் கொறச்சலில்லை… இந்த இந்தியன்… செவ்விந்தியன்கறதெல்லாம் ஆகஸ்ட் 15க்கும், ஜனவரி 26க்கும் மட்டும்தான் செல்லுபடியாகும்.
மத்த நாளெல்லாம் நம்ம
தமிழனுக “பம்பாய் இந்தியன்” கிட்டயோ….”கர்நாடக இந்தியன்” கிட்டயோ…, கேரளா இந்தியன் கிட்டயோ ,
தர்ம அடி வாங்க வேண்டீதுதான். “
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ மண்ணின் மைந்தர்களை குனிய வச்சு ஆப்பு அடிக்கும் !!!
மத்தவங்களுக்கெல்லாம் தமிழ்நாடு தெறந்த வீடு…
ஆனா..நம்மாளுகளுக்கு மட்டும்தான் சங்கு !!
நீ ஒன்னும் வருத்த படதே ! தமிழா நாம தான் இப்ப யார் தமிழன்கறதுலயே சண்டை போடுறேமே !!!
அதனாலே அடிபட்டவனை தமிழன் இல்லைன்னு சொல்லிருவோம் !
அதுல சில பேரு தமிழன்னு சொன்னா
அது வேற யாரோன்னு நெனச்சுகிட்டு இருக்கான்.
மொத்தத்துல…
உலகம் முழுக்க உதைபட்ட ஒரே இனம் எங்க இனம்தான்னு
நாம ‘நெஞ்ச நிமித்தி’ சொல்லலாம்?
’தமிழ்நாட்டுல தமிழனே மைனாரிட்டி…
தமிழனுக்கு ‘வாங்க’ மட்டுமில்ல.
‘குடுக்கவும்’ தெரியும்னு காட்டுனாப் போதும்.
அதுதான் பிரச்சனைகளுக்கான ஒரே முடிவு...
நான் எழுதுனது உனக்கு வலிசுதுன நீ தமிழன் தான் !!!
இப்படிக்கு .. நொந்து போன தமிழன்

திரையை விலக்கி...! எச்.ஐ.வியோடு வாழும் பெண்ணின் உணர்வுகளின் உடைப்பு!!(படங்கள் இணைப்பு)


முதலில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் இருந்தது. உலகிலுள்ள எல்லா ஆண்கள் மீதும் இனம் புரியாத கோபம் வந்தது. இந்தக் கோபத்தில் என்னால் முடிந்தவரைக்கும் ஆண்களுக்கு எய்ட்ஸை பரப்பவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. ஆனாலும் அந்த எண்ணம் மாற்றம் அடைந்து, குடும்பத்தோடு தற்கொலை செய்யத் தீர்மானித்தேன்.

எய்ட்ஸ்' என்ற உடனேயே இனம் புரியாத அச்சம் எல்லோரிடத்தும் ஏற்பட்டு விடும். போருக்குப் பின்னான சூழலில் எய்ட்ஸ் நோயின் பரவுகை வேகம் நமது பிரதேசத்தில் ஏறுமுகம் கண்டுள்ளது. உலகிலேயே மிக மோசமான குற்றத்தை செய்தவர்கள் போலவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை நோக்குவதே அனேகரது இயல்பாக இருக்கிறது. சமூகத்தின் நச்சுப்பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக எந்தவொரு எய்ட்ஸ் நோயாளியும் தன்முகத்தை வெளிப்படுத்த விரும்புவதில்லை 
நோயாளியின் நலனுக்காக மருத்துவ வட்டாரங்களும் அவர்களை வெளிப்படுத்த முனைவதில்லை. ஆனாலும் துணிச்சலோடு அந்த இரும்புத் திரையை விலக்கிக்கொண்டு எய்ட்ஸ்க்கு எதிராக விழிப்புணர்வு செய்து வருகின்றார் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி தமிழ் (வயது 35) என்கின்ற எச்.ஐ.வியோடு வாழும்பெண். எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுக்காக சுகவாழ்வுக்கான பயணம், வட்டுக்கோட்டை அபிவிருத்தி நிறுவனம், சேவாலங்கா, அலையன்ஸ் அபிவிருத்தி நிலையம் மற்றும் பிராந்திய சுகாதார திணைக்களம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கு கடந்த வாரம் வந்திருந்த எச்.ஐ.வியுடன் வாழும் பெண்ணை உதயன் வாசகர்களுக்காக நேர்கண்டோம். இந்த உரையாடலின்போது, " ஹோப் நிதியத்தைச் சேர்ந்த மருத்துவர் அசோக்குமார் பிரபாத்தும் கலந்து கொண்டார்.

கேள்வி: நீங்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட விடயம் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது?

தமிழ்: எனது திருமணம் காதல் திருமணம். இரு வீட்டாரின் பெற்றோரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் எங்கள் திருமணம் நடந்தது. இதனால் கணவரின் பெற்றோரும், எனது பெற்றோரும் எங்களோடு உறவு கொண்டாடுவதில்லை. இருந்த போதிலும் மகிழ்வாகவே இருந்தோம். எங்கள் மகிழ்வின் அடையாளமாக சந்தோஷி என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தோம். இரண்டாவது குழந்தையும் பிறந்தது. அந்த ஆனந்தத்தில் திளைத்திருக்கையில் தலையில் இடி விழுந்தது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 45 நாள்களில் திடீரென இறந்துபோனது. எங்களுக்கு அதிர்ச்சி. ஆனால் அதன் பின்னர் குழந்தை இறந்தமைக்கான காரணத்தை அறிய முற்பட்டபோதுதான் 1998 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நானும் என் கணவரும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டதை அறிந்துகொண்டோம். என் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்த தொடர்புதான் எங்கள் இருவருக்கும் எய்ட்ஸை பரிசளித்து விட்டது.



கேள்வி: உங்களுக்கு எய்ட்ஸ் என்று அறிந்துகொண்ட அந்த கணத்தில் உங்கள் மனோநிலை எப்படி இருந்தது?

தமிழ்: முதலில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் இருந்தது. உலகிலுள்ள எல்லா ஆண்கள் மீதும் இனம் புரியாத கோபம் வந்தது. எந்தப் பாவமும் செய்யாத எனக்கு கணவரின் தவறால் உயிர் கொல்லும் நோய் ஏற்பட்டு விட்டதே என்ற எண்ணத்தின் வெளிப்பாடே அது.இந்தக் கோபத்தில் என்னால் முடிந்தவரைக்கும் ஆண்களுக்கு எய்ட்ஸை பரப்பவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. ஆனாலும் அந்த எண்ணம் மாற்றம் அடைந்து, குடும்பத்தோடு தற்கொலை செய்யத் தீர்மானித்தேன். ஆனால் என் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொல்ல ஒரு தாயாக எனது மனச்சாட்சி இடங்கொடுக்கவில்லை. எங்களது குழந்தைக்காகவேனும் வாழமுடிவெடுத்தோம். ஆனால் அதன் பின்னர் நாங்கள் கொடுத்த விலை மிகப் பெரியது. அதுவரை சந்தித்திராத அவமானங்களையும், புறக்கணிப்பையும், கஷ்டத்தையும் நாங்கள் தாங்கவேண்டி இருந்தது.

கேள்வி: எத்தகைய புறக்கணிப்புக்கள், அவமானங்கள் உங்களை நோக்கி எய்யப்பட்டன?

தமிழ்: எங்களது உறவினர்கள் எல்லோருமே தீண்டத்தகாதவர்கள் போல் எம்மை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். தண்ணீர் எடுக்கும் பொதுக் குழாயைப் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த என்னுடைய மூத்த பிள்ளையை எங்களுக்கு எய்ட்ஸ் என்பதால், எந்தக் காரணமும் சொல்லாமல் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இதற்கிடையில் எனது கணவரும் இறந்து விட்டார். எனவே தொடர்ந்தும் ஊரில் இருந்தால் நான் மட்டுமல்லாது எனது குழந்தையும் இத்தகைய பாதிப்புக்களை சந்திக்கவேண்டி இருக்கும் எனவே குழந்தையின் எதிர்காலத்துக்காக எங்களைப்பற்றி அறிந்திராத நகரத்துக்கு குடி வந்தேன். எச்.ஐ.வி தொடர்பாக விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபடும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. எனது கணவர் எச்.ஐ.வி யால்தான் இறந்தார் என்ற உண்மையை மறைத்து அவர் மஞ்சள் காமாலை நோயால்தான் மரணித்தார் என்று சொல்லி மகளை வேறு ஒரு பாடசாலையில் சேர்த்தேன். சென்றாண்டுவரை அதனை எல்லோரும் நம்பினர். எனினும் கடந்த வருட இறுதியில் தொலைக்காட்சியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்டதால் இப்போது எல்லோருக்கும் உண்மை தெரிந்துவிட்டது. எனினும் நான் பயந்ததுபோல் மகளை பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தவில்லை. முன்னர் இருந்ததைவிட மக்களிடம் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டதே இதற்கு காரணம் என நினைக்கிறேன்.

கேள்வி: நீங்கள் எச்.ஐ.வியோடு வாழ்வது உங்கள் மகளுக்கு எப்போது தெரியப்படுத்தினீர்கள்? அவளுக்கும் உங்களுக்கு இடையிலான உறவு நிலை பற்றி....

தமிழ்: சிறு வயதில் அவளுக்கு எச்.ஐ.வியை விளங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லை. இதனால் "அப்பாவைப்போல நானும் விரைவில் இறந்து விடுவேன். அதனால் உன்னுடைய வேலைகளை நீயே செய்யப்பழகிக்கொள்ள வேண்டும்" என்று கூறுவேன். மனதைக் கல்லாக்கிக்கொண்டு ஒரு தாய் பிள்ளைக்கு செய்யவேண்டிய பல வேலை களை தவிர்த்து, அதனை அவளே கற்றுச் செய்யும் படி வளர்த்தேன். எனினும் அவள் உலக விடயங்களை புரிந்துகொள்ளக் கூடிய நிலைக்கு வந்தவுடன் நான் எச்.ஐ.வி யுடன் வாழ்பவள் என்ற உண்மையை சொன்னேன். அவள் அதை பாரதூரமான விடயமாக நோக்கவில்லை . எனினும் மனதுக்குள் ஒரு கவலை அவளுக்கு இருக்கத்தான் செய்யும். நான் எப்போதும் தன்னை விட்டு பிரியக் கூடும் என்ற நினைப்பு அவளை வாட்டுகிறது. இப்போது அவள் ஒரு தாய்போல் என்னைப் பராமரிக்கிறாள்.

கேள்வி: நீங்கள் பணி புரியும் எய்ட்ஸ் உடன் வாழ்வோர் கூட்டமைப்பில் எத்தனைபேர் பயனாளிகளாக இருக்கிறார்கள்? உங்கள் நிறுவனத்தின் செயற்பாடுகள் எத்தகையன? 

தமிழ்: ஏறக்குறைய 2500 இற்கும் மேற்பட்டோர் எங்கள் அமைப்பின் மூலம் பயன் பெற்று வருகின்றார்கள். இவர்களில் 22 பேர் இலங்கை அகதிகள் என்பது முக்கியமான விடயம். இந்த அமைப்பை ராமபாண்டியன் என்பவர் 13 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கினார். 

அவரும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான். சமூகம் அவரை ஒதுக்கி, எய்ட்ஸ் நோயாளி என்று காறி உமிழ்ந்தது. எந்தவொரு ஆதரவான கரமும் அவரைத் தூக்கி விடவில்லை. எனவே தன்னைப்போல சமூகத்தின் இருளில் புதைந்து கிடக்கும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோருக்காக அவர் எச்.ஐ.வியோடு வாழ்பவர்களின் கூட்டமைப்பை உருவாக்கினார். எச்.ஐ.வி. என்ற கொடிய எதிரியை நம்பிக்கையோடு எதிர்கொள்வது எப்படி என்பதை எங்கள் நிறுவனம் பயிற்றுவிக்கிறது. அந்தப் பயிற்சிகளின் விளைவாக எச்.ஐ.வியோடு வாழ்பவர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. இந்த நம்பிக்கை அவர்களின் ஆயுளையும் அதிகரிக்கிறது. உதாரணமாக எனக்கு எச்.ஐ.வி தொற்று உண்டாகி 11 வருடங்களாகியும் சிகிச்சை எதுவும் பெறாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எங்கள் அமைப்பின் பயிற்சிகளே காரணம். அத்துடன் எச்.ஐ.வியோடு வாழ்பவர்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகள் தொடர்பாகவும் விளக்கமளித்து வருகின்றோம். குடும்பம் ஒன்றை அமைத்துக்கொள்ளல், குழந்தையொன்றை பெற்றுக்கொள்ளல், தமக்குரிய சிகிச்சைகளை பெறுதல் என்பன அவர்களுக்குரிய உரிமைகளாகும். இது பலருக்கு தெரியாமலே இருக்கிறது. எய்ட்ஸ் தொடர்பான சரியான விவரங்கள் பலருக்கு இன்னமும் தெரியாமல் இருக்கிறது. 

கேள்வி: எச்.ஐ.வியோடு வாழ்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படாதா? 

அசோக்குமார்: இல்லை. முன்னர் அப்படித்தான் நம்பப்பட்டது. எனினும் நவீன மருத்துவ முறைகள் மூலம் எச்.ஐ. வி யோடு வாழும் தம்பதியருக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லாத குழந்தைகளைப் பிரசவிக்கும் வழி ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு தாய் மூலமாகவே எச்.ஐ.வி தொற்று ஏற்படுகிறது. பால் ஊட்டுதல், தொப்புள் கொடி மூலமான பரிமாற்றம், பிரசவத்தின் போதான இரத்தப் பரிமாற்றம் எனும் மூன்று காரணிகளே தாயிடமிருந்து சேய்க்கு எச்.ஐ.வி யை கொண்டு செல்கின்றன. இம் மூன்று காரணிகளையும் தடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை கிடைக்கிறது. 

ஆனால் இதற்கு அதிதீவிரமான மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவை. குறிப்பாக சாதாரணமாக ஆணுறையைப் பயன்படுத்தியே உடலுறவில் ஈடுபடும் இவர்கள் மருத்துவர்கள் நிர்ணயிக்கும் தினங்களில் மாத்திரமே இயல்பான உடலுறவை மேற்கொண்டு கருவை உருவாக்கலாம். அதிநவீன சிகிச்சைகள் மூலம் எச்.ஐ.வியின் வீரியம் குறைக்கப்பட்ட தினம் ஒன்றில்தான் கருவை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் ஏறக்குறைய இது ஒரு கூட்டு முயற்சி மூலமே சாத்தியமாகும்.

எனினும் உலக சுகாதார நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் "ஸீரோ எய்ட்ஸ்'' என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த உள்ளது. இதன் மூலம் எந்தவொரு எய்ட்ஸ் மரணமோ அல்லது எய்ட்ஸ் பரம்பலோ ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவுள்ளன. எய்ட்ஸ் இரத்தப் பரிமாற்றம் நிகழ்கின்ற சந்தர்ப்பங்கள் மூலமே அதிகம் பரவுகிறது. அதிலும் தவறான பாலியல் தொடர்புகளே எச்.ஐ.வி தொற்றுக்கு பிரதான களத்தை அமைக்கிறது. எனவே திருமணத்துக்கு முன்னர் பாலியல் தொடர்பில் ஈடுபடுதல், திருமணத்துக்குப் பின்னர் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் உண்மைத் தன்மையோடு செயற்படல் என்பவற்றின் மூலம் எய்ட்ஸ் பரம்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். இவ்விரண்டையும் சரியாக நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் தமது துணை தவிர்ந்த வேறு நபர்களுடன் உடலுறவு கொள்பவர்கள் ஆணுறையை பயன்படுத்த வேண்டும். அதுவே தற்போது எய்ட்ஸைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எங்களுக்குள்ள ஒரேஒரு ஆயுதம். 

கேள்வி: எச்.ஐ.வி தொற்றுள்ள ஆணும், எந்தவித பாதிப்புமில்லாத பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ முடியுமா?

அசோக்குமார்: உண்மையில் அது எச்.ஐ.வி பரவுகைக்கு வழிவகுக்கும்என்பதால் இதனை நாங்கள் ஆதரிப்பதில் லை. எனினும் குறித்த பெண் தன்னுடைய துணைக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரிந்தும் திருமணம் செய்யச் சம்மதித்தால் அதைத் தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.


தமிழ்: இவ்வாறான ஒரு சம்பவத்தை நான் கையாண்டிருக்கின்றேன். அவர்கள் இருவரும் காதலர்கள். எனினும் காதலிக்கத் தொடங்கிய பின்னர்தான் அந்த இளைஞனுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிந்தது. எனவே அவளை வேறு திருமணம் செய்யச்சொல்லி அவன் வற்புறுத்தினான்.
எனினும் அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்கவில்லை இறுதியில் அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வியால் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கி அவளின் முடிவை மாற்றுமாறு நான் உளவள ஆலோசனை வழங்கினேன். அதற்கும் சம்மதிக்காமல் இறுதியில் அந்த இளைஞனையே அந்தப் பெண் திருமணம் செய்தாள். கடவுள் கிருபையால் இதுவரைக்கும் அவளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படவில்லை. கூடவே ஆரோக்கியமான குழந்தை ஒன்றும் அவர்களுக்கு இருக்கிறது. எனினும் இத்தகைய திருமணங்கள் எப்போதுமே எச்.ஐ.வியின் பரவுகைக்கு வழிகோலுவதற்கான சந்தர்ப்பங்களையே கொண்டிருக்கின்றன. 


கேள்வி: எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதன் மூலம் அது பிறருக்கு பரவும் சாத்தியங்களுக்கான கதவுகளைத் திறக்கச்செய்யாதா?

அசோக்குமார்: உண்மையில் நோயாளிகளை இந்த சமூகம் தன்னுடைய கொடூரப் பார்வையாலேயே கொன்றுவிடும் என்பதால்தான் எச். ஐ. வியால் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் ரகசியமாகப் பேணப்படுகின்றன.எனினும் அவர்கள் (எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர்) தாங்களாகவே தங்களை எச்.ஐ.வியோடு வாழ்பவர்கள் என்று வெளிப்படுத்தும் அளவுக்கு உளரீதியான வழிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் ஒவ்வொரு எய்ட்ஸ் நோயாளரும் தம்மைப் பகிரங்கப்படுத்துவதோடு அது தொடர்ந்தும் பரவாமல் இருக்கச் செய்வதற்கான விழிப்புணர்வுக் கருவிகளாகவும் செயற்படுவார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் எய்ட்ஸ் இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்.

நன்றி 
உதயன் பத்திரிக்கை.....

கல்லறையிலிருந்து கருவறைக்கு மமூத் யானை நிகழப்போகும் நிதர்சனம்


உலகில் கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘மமூத்’ என்ற மிகப்பெரிய உருவமுள்ள யானைகள் அதிக அளவில் இருந்தன. அவை உடலில் ரோமங்களுடன் நீண்ட பெரிய சுருண்ட தந்தங்களை கொண்டவை. அந்த யானை இனம் படிப்படியாக அழிந்தது.

தற்போது ரஷ்யாவின் சைபீரியா வனப்பகுதியில் மட்டும் இந்த வகை யானைகள், மிக குறைந்த அளவில் உள்ளன. அழியும் விளிம்பில் உள்ள இந்த யானை இனத்தை மீண்டும் பெருக செய்ய ஏற்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

எனவே அவற்றை ‘குளோனிங்’ முறையில் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கான ஆராய்ச்சியில் ரஷியாவின் சக்கா குடியரசு மமூத் அருங்காட்சியகமும், ஜப்பான் கின்கி பல்கலைக் கழகமும் ஈடுபட்டுள்ளன.
ஏற்கனவே, பாதுகாக்கப்பட்டு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மமூத் யானையின் தொடை எலும்பு மஜ்ஜை (போன்மேரேர்) பகுதியில் இருந்து எடுக்கப்படும் செல்களின் மூலம் ‘குளோனிங்’ முறையில் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த முயற்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே இன்னும் 5 ஆண்டுகளில் குளோனிங் ‘மமூத்’ யானைகள் உருவாகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்



Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழிமுறை


நம் எல்லோருக்கும் கூகிள் எர்த் பற்றி தெரியும். ஆனால் எல்லோருக்கும் கூகிள் எர்த் இல் குறித்த ஒரு இடத்தில் அந்த இடத்திற்கான புகைப்படங்களை எவ்வாறு இடுவது என்று தெரியாது.


அது எப்படி செய்வது என்பதை இங்கு நாம் கற்போம்.

1. முதலில் இங்கு அழுத்தி panoramio இணையப்பக்கத்திற்கு சென்று உங்கள் google கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள்

2.பின் upload Your Photos என்பதை அழுத்தவும்

3. பின் வரும் பக்கத்ததில் select photo என்பதில் choose file என்பதனை அழுத்தி உங்கள் புகைப்படத்தினை கொடுத்து Upload என்பதனை அழுத்தவும்.


4.அதனை அடுத்துவரும் பக்கத்தில் உள்ள Map this Photo என்பதனை அழுத்தவும்.

5.அடுத்துவரும் சாளரத்தில் நீங்கள் புகைப்படம் இடவிரும்பும் இடத்தின் பெயரை கொடுத்து பின் search என்பதனை அழுத்துக.



6.பின் கீழ் காணப்படும் சிவப்பு நிற குறியினை நீங்கள் புகைப்படம் இட விரும்பும் சரியாக இடத்தினை தேர்வு செய்து save pisition என்பதனை அழுத்தவும்

7.பின் title, tags, comment என்பதில் சரியான விபரங்களை கொடுத்து save செய்யவும்



8. அடுத்து நீங்கள் பதிவு செய்த படத்தின் மீது அழுத்தவும்

9.அழுத்திவரும் பக்கத்தில் உள்ள Submit to the (___) contest(max.5 photos) என்பதனை அழுத்தவும்.


10. அடுத்து உங்கள் photoக்கான பிரிவை கொடுத்து Accept என்பதை அழுத்தவும்





உங்கள் புகைப்படம் Google earth ல் பரிசீலிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் வரை காத்திருக்கவும்

பேஸ்புக்கில் நண்பர்களின் புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய


பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இந்த பேஸ்புக் தளம் மூலம் நம் நண்பர்களின் வட்டம் பெருகிக்கொண்டே போகிறது. நண்பர்கள் அவர்கள் கணக்கில் அவர்களுக்கு பிடித்தமான போட்டோக்களை போட்டு இருப்பார்கள். அந்த போட்டோக்களை காணவேண்டும் என்றால் ஒவ்வொரு கணக்கில் சென்று பார்க்க வேண்டும். உங்கள் நண்பர்கள் லிஸ்டில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும். இது நடக்கிற காரியம் இல்லை. ஆகவே உங்கள் பேஸ்புக் நண்பர்களின் ஒட்டுமொத்த புகைப்படங்களை எப்படி ஒரே இடத்தில டவுன்லோட் செய்வது என காண்போம்.

இதற்கு முதலில் இந்த லிங்கில் க்ளிக் செய்து அந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Login with Facebook என்ற பட்டனை அழுத்தவும். 


அந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow என்பதை க்ளிக் செய்யவும். 


அவ்வளவு தான் பேஸ்புக் நண்பர்களின் புகைப்படங்களை அந்த தளம் காண்பிக்க தொடங்கும். சற்று காத்திருக்கவும். 
லோடிங் ஆகி முடிந்ததும் உங்களுடைய பேஸ்புக் நண்பர்களின் ஒட்டுமொத்த போட்டோக்களும் அந்த தலத்தில் காணப்படும். 
உங்களுக்கு வேண்டிய நண்பரை க்ளிக் செய்து அவருடைய போட்டோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

\

இது போன்று ஒவ்வொரு நண்பர்கள் பெயரையும் க்ளிக் செய்தால் அவர்களின் போட்டோக்கள் தெரியும். 
அந்த போட்டோக்களை டவுன்லோட் செய்ய அந்த குறிப்பிட்ட போட்டோ மீது இருக்கும் அம்புக்குறியை க்ளிக் செய்தால் அந்த போட்டோ உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம். 
மற்றும் அந்த குறிப்பிட்ட நண்பரின் ஒட்டுமொத்த போட்டோக்களையும் ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் அதற்க்கு அருகே உள்ள download என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 



இதில் நீங்கள் விரும்பிய வசதியை தேர்வு செய்து கொண்டு போட்டோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
இதில் உள்ள இன்னொரு வசதி நீங்கள் போட்டோக்களை டவுன்லோட் செய்யும் போது PDF ஆக மாற்றி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

    பூமி சுழலுவதைப் போன்ற அபூர்வ காட்சிகள் வெளியீடு (வீடியோ இணைப்பு)


    சர்வதேச விண்வெளி மையம் வடக்கு அமெரிக்காவை குறி வைத்து எடுத்த புகைப்படத்தில் மெய்மறக்கச் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பூமி சுழலுவதைப் போன்ற காட்சியும் அதில் ஒன்றாகும். சுழற்சியானது நொடிக்கு 225 மைல்களுக்கு மேல் இருக்கிறது.

    இதுகுறித்து நாசா கூறுகையில், புகைப்படக் கருவியை வடக்கு நோக்கி வைத்து எடுத்த போது ஆச்சர்யமான வட துருவமானது மினுமினுவென்று மின்னுவதை வீடியோவில் காணலாம் என்றார். விண்வெளி மையமானது மத்திய வடக்கு அமெரிக்காவை நோக்கி படம் எடுத்த போது மேகங்களால் சூழ்ந்த பெனிசுலாவின் மெக்சிகனும் காணப்பட்டது. சிகாகோவும், தெற்கு முனையில் உள்ள லேக் மெக்சிகனும் பில்லியன் ஒளியால் ஒளிர்ந்து கொண்டிருந்ததை வீடியோவில் காணலாம்.

    மின்னலும், புயல்காற்றும் மேகங்கிடையே பளீச் சென்று இருந்ததும் வீடியோவில் காணமுடிகிறது. இதே மாதிரி காட்சியானது அட்லாண்டா, ஜார்ஜியா மீது எடுத்த போதும் கிடைத்ததாக ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
    வீடியோவின் முடிவில் ப்ளோரிடா பெனிசுலாவைக் காண முடிந்தது. மேலும் பாஹாமஸ் முழுவதும் நீரின் நிழலால் சூழப்பட்டிருந்ததையும் காணலாம். சர்வதேச விண்வெளி ஆய்வு மையமானது 100 பில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது. 16 நாடுகள் இணைந்து இதனை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பத்து வருடங்களுக்கு மேலாக நடக்கும் இப்பணியானது இந்த வருடம் முடிவடைந்து விடும். விண்வெளி மையத்தில் ஐந்து படுக்கை வசதி கொண்ட வீடுகளும், நிறைய ஆய்வு மையங்களும், தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. இதனைச் சென்றடைய 1.5 பில்லியன் மைல்களுக்கு மேல் பயணம் செய்ய வேண்டும். அதாவது 8 முறை சூரியனுக்கு சென்று வருவதற்கு ஈடாகும்.

    Google Map இல் ஒரு தந்திரம் (Trick)!


    ஒரு இணையப் பக்கம் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட பிரச்சனையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    முதலில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதையும் பிரச்சனை என்ன என்பதையும் சொல்கிறேன். நான் ஒரு தொடா்பு கொள்ளல் பக்கம் (Contact Us) ஒன்றை செய்து கொண்டிருந்தேன். ஒரு படிவம் (Form), முகவரி, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை இணைத்து ஒரு பக்கம் தயார் செய்தேன். இறுதியாக Google Map இல் முகவரியைக் காட்டுமாறு செய்து அதற்கான நிரலையும் (Coding) எடுத்தேன். நிரலை இணைத்த பின் தான் பிரச்சனை விளங்கியது.

    மேலுள்ள படத்தில் உள்ளவாறு “Last Updated by…..” என்பது வருவது தான் பிரச்சனை.

    சரி இதற்கு தீா்வு என்ன என்று தேடிய போது கிடைத்ததை உங்களில் யாருக்கேனும் உதவலாம் என்று பதிவு செய்கிறேன்.

    உங்களுக்கு Google Map ஐ பயன்படுத்தி வரைபடம்(Map) உருவாக்கத் தெரியுமெனில் நீங்கள் கீழுள்ள பெட்டிச் செய்தியை தவிர்க்கலாம்.


    முதலில் சுருக்கமாக Google Map இல் ஒரு முகவரியை குறிப்பது எவ்வாறு என்று காண்போம். (Creating a Map) 
    முதலில் http://maps.google.com/ ஐ உங்கள் இணைய உலாவியில் திறந்து கொள்ளுங்கள். 
    Sign in என்ற இணைப்பை கிளிக் செய்து உள் நுழையுங்கள். (உங்களிடம் கூகிள் கணக்கு இருக்கவேண்டும்.) 
    இடது பக்க பகுதியில் My Maps என்பதை கிளிக் செய்யுங்கள்

    Create my map என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள். (மேலுள்ள படம் பார்க்க) 
    ஒரு தலைப்பு(title) மற்றும் அதைப்பற்றிய சிறு விளக்கம்(Description) இறுதியாக Public அல்லது Unlisted என்பதை தெரிவு செய்யுங்கள். 

    வலது பக்கத்தில் காணப்படும் Add a placemark என்பதை தெரிவு செய்து வரைபடத்தில் (Map) எந்த இடத்தை குறிக்க விரும்புகிறீா்களோ அதில் கிளிக் செய்யுங்கள்.

    பின் அதற்கு வேண்டிய தலைப்புக் கொடுத்து Description என்ற பகுதியில் முகவரியை அல்லது சிறு விளக்கத்தைக் கொடுத்து OK பொத்தானை அழுத்தி சேமியுங்கள். 
    கடைசியாக இடது பக்கத்தில் உள்ள Done என்ற பொத்தானை அழுத்துங்கள். 
    இப்போது நீங்கள் ஒரு வரைபடத்தை தயார் செய்து விட்டீா்கள் 
    தயார் செய்த படத்தை உங்கள் இணையப் பக்கத்தில் இணைக்க Link என்பதை கிளிக் செய்து Paste HTML to embed in website என்பதற்கு கீழ் உள்ள நிரலை பிரதி செய்து தேவையான இடத்தில் ஒட்டி விடுங்கள்.



    சரி இப்போது “Last Updated by…..” என்பதை எப்படி இல்லாமல் செய்வது என்று காண்போம். 
    நீங்கள் உருவாக்கிய வரைபடத்தில் (Map) இருக்கிறீா்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் திறந்து கொள்ளுங்கள். (My Maps ஐ கிளிக் செய்து வரைபடத்தை திறக்கவும்) 
    View in Google Earth என்பதை வலது கிளிக் செய்து கொள்ளுங்கள். Copy link address என்பதை கிளிக் செய்து இணைப்பை பிரதி எடுத்துக் கொள்ளுங்கள். 
    புதிய ஒரு tab இல் http://maps.google.com/ பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். 
    திறந்தபின் அதன் தேடல் பெட்டியில் (Search Box) நீங்கள் பிரதிசெய்ததை ஒட்டி Search Maps என்ற பொத்தானை அழுத்தி தேடுங்கள். 
    நீங்கள் உருவாக்கிய வரைபடம் திறந்து கொள்ளும். இப்போது மேலே படி நிலை 10 (Step 10) இல் காட்டிவாறு வரைபடத்திற்கான நிரலை பிரதி செய்து உங்கள் இணையப் பக்கத்தில் ஒட்டி விடுங்கள். அவ்வளவு தான்.





    ஆக இந்தப் பதிவில் Google Map இல் ஒரு வரைபடத்தை எப்படி உருவாக்குவது என்றும் உருவாக்கிய வரைபடத்தில்“Last Updated by…” என்பதை இல்லாமல் செய்வது எப்படி என்றும் கண்டோம்.

    ஏதேனும் விதத்தில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவி இருந்தால் ஒரு வார்த்தை அல்லது ஒரு வாக்குப் போடுங்கள்.

    ஒரு பெண்ணிடம் 6 பேர் உல்லாசம் - செல் போனில் பரவும் வீடியோ!!

    ஒரு பெண்ணிடம் 6 பேர் உல்லாசமாக இருக்கும் வீடியோ தாராபுரம் பகுதி இளைகளின் செல் போனில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழையகோட்டை மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷாஜகான் (வயது 21), பிரகாஷ் (25), கார்த்தி (24), அப்துல்காதர் சந்தானி (23), அமிர்அம்ஜாக் (28), மகேந்திரன் (30) மற்றும் கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் (24).

    இவர்கள் 7 பேரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வது வழக்கம். இவர்கள் ஒரு பெண்ணிடம் உல்லாசமாக இருக்க நினைத்தனர். அதன்படி கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி ஒரு பெண்ணிடம் பேசி அவரை தாராபுரம் அமராவதி ஆற்றில் உள்ள பழையபாலம் அருகே அழைத்துச் சென்றனர்.
    அன்று மகேந்திரன் வேலை காரணமாக வெளிïர் சென்றுவிட்டதால், அவர் செல்லவில்லை. மற்ற 6 பேரும் ஆற்றில் குளித்துக்கொண்டே அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    ஒவ்வொருவரும் அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருக்கும் போது, மற்றவர்கள் தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்து உள்ளனர். பின்னர் அவர்கள் 6 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.

    வேலை காரணமாக வெளிïர் சென்ற மகேந்திரன் தாராபுரம் வந்ததும், தாங்கள் பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வீடியோவை அவரிடம் போட்டு காட்டினர். அந்த காட்சிகளை மகேந்திரன் தனது செல்போனில் பதிவு செய்தார்.

    இந்த நிலையில், ஒரு பெண்ணிடம் 6 பேர் உல்லாசமாக இருக்கும் காட்சி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தாராபுரம் பகுதியில் உள்ள இளைஞர்களின் செல்போன்களுக்கு பரவியது. அந்த ஆபாச காட்சி ஒரு போலீஸ்காரரின் செல்போனுக்கும் வந்தது.

    இது குறித்து அவர் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகவல் தெரிவித்தார்.

    இந்த நிலையில், தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள ஒரு கோவில் அருகே 7 வாலிபர்கள் கூட்டமாக இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த இடத்துக்கு சென்றனர். அங்கு 7 வாலிபர்களும் ஆபாச வீடியோ காட்சியை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர்.

    பின்னர் அவர்கள் 7 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்களில் 6 பேர் பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததும், மற்றொருவர் அந்த காட்சியை செல்போனில் பரவ செய்தவர் என்பதும் தெரிந்தது. அந்த 7 பேரையும் கைது செய்து தாராபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கந்தசாமி கூறியதாவது:-

    தாராபுரம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றங்கரையில் ஒரு பெண்ணை விபசாரத்துக்காக பயன்படுத்தியது, அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்தது, அந்த பாலியல் காட்சிகளை மற்றவர்களுக்கு பரப்பியது ஆகிய குற்றங்களுக்காக தாராபுரத்தைச் சேர்ந்த 7 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த வீடியோ காட்சி இளைஞர்கள் பலரின் செல்போனில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அதை அனைவரும் உடனடியாக அழித்து விட வேண்டும். போலீஸ் சோதனையின் போது, இது போன்ற காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    காதலால் ஏற்பட்ட மோதலால் சக மாணவனை குத்திக் கொன்ற மாணவன் கைது!!


    சேலம் மாவட்டம் தம்பம்பட்டி அரச மேல் நிலைப் பாடசாலையில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயதுடைய மாணவர்கள் இருவர் அதே ஊரில் உள்ள மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளனர்.

    சமீப காலமாக அந்த மாணவி எனக்குத் தான் என்று இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு காதலித்ததில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை பாடசாலை முடிந்து திரும்பிக்கொண்டிருக்கும் வழியில் உடையார்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பாக இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது.

    அப்போதுஇ கார்த்திக் என்ற மாணவணுடன் அவரது நண்பர்கள் சிலர் இருந்துள்ளனர். இந்த நேரத்தில் தனி ஆளாக இருந்த பிரசாந்த்தைஇ கார்த்திக் ராஜா நண்பர்கள் பிடித்துக்கொள்ளஇ கார்த்திக் ராஜா மாரியம்மன் கோயிலில் நடப்பட்டிருந்த வேலினால் பிரசாந்த்தை குத்தியுள்ளனார்.
    தலையிலும், வயிற்றிலும் காயம் பட்ட பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் கிடைத்த சம்பவ இடத்திற்கு வந்த தம்பம்பட்டி பொலிஸார்இ நேற்று இரவு கார்த்திக் ராஜாவை கைது செய்துள்ளனர்.இந்தக் கொலைக்கு துணையாக இருந்த கார்த்திக் ராஜா நண்பர்கள் 4 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

    இவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

    காதல் விவகாரத்தில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் குத்திக் கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்திருப்பது அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    தமது பிள்ளைகளுக்குப் பெயர் வைக்க Googleஐப் பயன்படுத்தும் பெற்றோர்கள்



    பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குப் பெயரிட Googleஇனைப் பயன்படுத்துகின்றார்கள். இது உலகெங்கிலும் பரவலாக அதிகரித்து வருகின்றது.

    தேடுதல் விளைவுகள் Googleஇல் அதிகம் கிடைக்கின்ற காரணத்தினால் இவர்கள் Googleஇல் பெயர்களை தேடுவதில் ஆர்வமாயுள்ளனர்.

    இதில் தமது பிள்ளைகளின் பெயர் மற்றவர்களைவிடவும் சிறந்ததாக இருக்கவேண்டும் எனப் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.

    பெற்றோர் ஒரு பெயரை நினைத்துக்கொண்டு கூகிளில் தேடிப்பார்ப்பார்கள்.

    அதில் அது தெரிவு செய்யப்பட்டுவிட்டது என்றோ அல்லது இப்பெயர் ஏற்கனவே உள்ளன என்றோ கூறப்படலாம்.
    அமெரிக்கர்களில் 64 வீதமானோர் தமது பிள்ளைகளின் பெயர்களைத் தீர்மானிக்க கூகிளில் தேடிப்பார்த்து உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க பெற்றோர்களுக்கான இணையத்தளம் ஒன்று கூறுகின்றது.

    தாய் வீட்டிற்குச் சென்ற மனைவிஅழைத்தும் வராததால் ஆத்திரத்தில் மூக்கைக் கடித்த கணவன்!


    தாய் வீட்டிலிருந்து வர மறுத்த, மனைவியின் உதட்டையும், மூக்கையும் கடித்துக் காயப்படுத்திய கணவனை உத்தரகண்ட் மாநில போலீசார் தேடி வருகின்றனர்.

    உத்தரகண்ட் மாநிலம், டேராடூனின் ஷீதலா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜு. இவரின் மனைவி பிங்கி,25. தாய் வீட்டுக்குச் சென்ற பிங்கியை, தங்கள் வீட்டுக்கு வரும் படி ராஜு அழைத்தார். பிங்கி வர மறுத்தார்.

    இதனால் கோபமடைந்த ராஜு, பிங்கியின் மூக்கையும், உதட்டையும் கடித்துக் குதறினார். வலி பொறுக்க முடியாமல் பிங்கி அலறியதைக் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
    அதற்குள், ராஜு தப்பி ஓடி விட்டார். டூன் மருத்துவமனையில், பிங்கி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய, டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். தப்பி ஓடிய ராஜு மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    இன்னும் என்ன பாடுபடுத்தப் போறாங்களோ இந்த கொலைவெறி பாடலை…


    தனுஷ் பாடி வெளிவந்த இந்த கொலைவெறி பாடல் இப்பொழுது பல்வேறு குரல்களில் வெளியாகியுள்ளது. அதில் இந்த வாலும் ஒண்டு. பாருங்க… அத தமிழ்ள வேற பாடியிருக்கிறானுங்க…







    கூகுளில் வர இருக்கும் புதிய அழகான மாற்றம் – Google Bar New Look (வீடியோ இணைப்பு)



    கூகுள் நிறுவனத்தின் இணையதளங்களில் அடிக்கடி மாற்றங்கள் செய்து மக்கள் உபயோகத்திற்காக வெளியிடுகிறது. கூகுளின் தளங்களுக்கு சென்றால் Google Bar இருப்பதை பார்த்து இருப்போம். இந்த பாரில் Google Plus, Gmail, Calenders, Documents என கூகுள் சேவைகளின் Link இருக்கும். வாசகர்களும் சுலபமாக மற்ற சேவைகளுக்கு செல்ல பயனுள்ளதாக உள்ளது. இந்த google Bar கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது Google தளம் இந்த Google Bar தோற்றத்தை மாற்ற இருக்கிறது. Horizontal ஆகா தெரிந்த கூகுள் பார் Vertical ஆகா மாற்றப்படுகிறது. பார்ப்பதற்கும் புதிய தோற்றம் அழகாக உள்ளது.



    கீழே வீடியோவை பாருங்கள்.

    £2.5million நஷ்டத்தை ஏற்படுத்திய 13 சொகுசு கார்களின் தொடரான கோர விபத்து!


    இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இதுவும் முக்கியமானது, ஜப்பான் நகரின் அதிவேக வீதியொன்றில் ஒன்றல்ல இரண்டல்ல பதின்மூன்று சொகுசு கார்கள் ஒன்றுடன் ஓன்று மோதி தொடரான விபத்தை சந்தித்துள்ளன,


    அனைத்துகார்களும் மிகவும் சேதமடைந்துள்ளன, வேகத்திற்கு பெயர்போன இந்த கார்கள் பெயருக்கேற்ப அதி உச்ச வேகத்தில் ஒன்றுடன் ஓன்று போட்டி போட்டுவந்தன, 8 Ferraris, 3 Mercedes, a Lamborghini, a Skyline மற்றும் Toyota Prius உள்ளடங்கலான இந்த வரிசையில் பிழையான வரிசையில் புகுந்த Toyota Prius இனால் பின் வந்த அனைத்து கார்களும் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகின!

    எனினும் Toyota Prius இற்கு பின்வந்த ferrari யின் 60 வயது ஓட்டுனர் முறையாக சிக்னல் செய்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம், இதன் பின்னர் இந்த வீதியின் பாவனை நிறுத்தப்பட்டு கார்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சேதம் மோசமாக இருந்தாலும் யாருக்கு உயிர்ச்சேதம் ஏற்படவில்லை