Monday, December 5, 2011

தாய் வீட்டிற்குச் சென்ற மனைவிஅழைத்தும் வராததால் ஆத்திரத்தில் மூக்கைக் கடித்த கணவன்!


தாய் வீட்டிலிருந்து வர மறுத்த, மனைவியின் உதட்டையும், மூக்கையும் கடித்துக் காயப்படுத்திய கணவனை உத்தரகண்ட் மாநில போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனின் ஷீதலா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜு. இவரின் மனைவி பிங்கி,25. தாய் வீட்டுக்குச் சென்ற பிங்கியை, தங்கள் வீட்டுக்கு வரும் படி ராஜு அழைத்தார். பிங்கி வர மறுத்தார்.

இதனால் கோபமடைந்த ராஜு, பிங்கியின் மூக்கையும், உதட்டையும் கடித்துக் குதறினார். வலி பொறுக்க முடியாமல் பிங்கி அலறியதைக் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
அதற்குள், ராஜு தப்பி ஓடி விட்டார். டூன் மருத்துவமனையில், பிங்கி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய, டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். தப்பி ஓடிய ராஜு மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment