படப்பிடிப்பின்போது உடன் நடித்த ஹீரோவை காதலித்து உல்லாசமாக இருந்த கேரள நடிகை போலீஸ் துணையுடன் அவரை மணந்தார். தஞ்சை பாத்திமா நகரைச் சேர்ந்த பீட்டர் மகன் டோனி என்கிற அந்தோணி(22).
மகன் டோனி நடித்த உயிரே என்னோடு கலந்துவிடு என்ற படத்தில் பீட்டர் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அந்த படத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அமுலு என்ற மீனாட்சி(19) கதாநாயகியாக நடித்திருந்தார். அவர் மலையாளத்தில் 2 படங்களில் நடித்துள்ளார்.
இந்த படப்பிடிப்பின்போது ஹீரோவும், ஹிரோயினும் நிஜத்தில் காதலிக்க ஆரம்பித்தனர். தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அதன் விளைவாக மீனாட்சி கர்ப்பமானார். உடனே டோனியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
அதற்கு டோனியின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனாட்சி தஞ்சை மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். உடனே போலீசார் டோனி மற்றும் அவரது பெற்றோரை அழைத்துப் பேசினர்.
இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி தகவல் கிடைத்து மீனாட்சியின் உறவினர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து இரு வீட்டாரையும் சமாதானம் செய்த போலீசார் டோனிக்கும், மீனாட்சிக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
|
No comments:
Post a Comment