சேலம் மாவட்டம் தம்பம்பட்டி அரச மேல் நிலைப் பாடசாலையில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயதுடைய மாணவர்கள் இருவர் அதே ஊரில் உள்ள மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளனர்.
சமீப காலமாக அந்த மாணவி எனக்குத் தான் என்று இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு காதலித்ததில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை பாடசாலை முடிந்து திரும்பிக்கொண்டிருக்கும் வழியில் உடையார்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பாக இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது.
அப்போதுஇ கார்த்திக் என்ற மாணவணுடன் அவரது நண்பர்கள் சிலர் இருந்துள்ளனர். இந்த நேரத்தில் தனி ஆளாக இருந்த பிரசாந்த்தைஇ கார்த்திக் ராஜா நண்பர்கள் பிடித்துக்கொள்ளஇ கார்த்திக் ராஜா மாரியம்மன் கோயிலில் நடப்பட்டிருந்த வேலினால் பிரசாந்த்தை குத்தியுள்ளனார்.
தலையிலும், வயிற்றிலும் காயம் பட்ட பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் கிடைத்த சம்பவ இடத்திற்கு வந்த தம்பம்பட்டி பொலிஸார்இ நேற்று இரவு கார்த்திக் ராஜாவை கைது செய்துள்ளனர்.இந்தக் கொலைக்கு துணையாக இருந்த கார்த்திக் ராஜா நண்பர்கள் 4 பேர் தலைமறைவாகி உள்ளனர்.
இவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காதல் விவகாரத்தில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் குத்திக் கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்திருப்பது அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
|
No comments:
Post a Comment