ஒரு பெண்ணிடம் 6 பேர் உல்லாசமாக இருக்கும் வீடியோ தாராபுரம் பகுதி இளைகளின் செல் போனில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழையகோட்டை மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷாஜகான் (வயது 21), பிரகாஷ் (25), கார்த்தி (24), அப்துல்காதர் சந்தானி (23), அமிர்அம்ஜாக் (28), மகேந்திரன் (30) மற்றும் கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் (24).
இவர்கள் 7 பேரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வது வழக்கம். இவர்கள் ஒரு பெண்ணிடம் உல்லாசமாக இருக்க நினைத்தனர். அதன்படி கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி ஒரு பெண்ணிடம் பேசி அவரை தாராபுரம் அமராவதி ஆற்றில் உள்ள பழையபாலம் அருகே அழைத்துச் சென்றனர்.
அன்று மகேந்திரன் வேலை காரணமாக வெளிïர் சென்றுவிட்டதால், அவர் செல்லவில்லை. மற்ற 6 பேரும் ஆற்றில் குளித்துக்கொண்டே அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஒவ்வொருவரும் அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருக்கும் போது, மற்றவர்கள் தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்து உள்ளனர். பின்னர் அவர்கள் 6 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.
வேலை காரணமாக வெளிïர் சென்ற மகேந்திரன் தாராபுரம் வந்ததும், தாங்கள் பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வீடியோவை அவரிடம் போட்டு காட்டினர். அந்த காட்சிகளை மகேந்திரன் தனது செல்போனில் பதிவு செய்தார்.
இந்த நிலையில், ஒரு பெண்ணிடம் 6 பேர் உல்லாசமாக இருக்கும் காட்சி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தாராபுரம் பகுதியில் உள்ள இளைஞர்களின் செல்போன்களுக்கு பரவியது. அந்த ஆபாச காட்சி ஒரு போலீஸ்காரரின் செல்போனுக்கும் வந்தது.
இது குறித்து அவர் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில், தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள ஒரு கோவில் அருகே 7 வாலிபர்கள் கூட்டமாக இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த இடத்துக்கு சென்றனர். அங்கு 7 வாலிபர்களும் ஆபாச வீடியோ காட்சியை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர்.
பின்னர் அவர்கள் 7 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்களில் 6 பேர் பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததும், மற்றொருவர் அந்த காட்சியை செல்போனில் பரவ செய்தவர் என்பதும் தெரிந்தது. அந்த 7 பேரையும் கைது செய்து தாராபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கந்தசாமி கூறியதாவது:-
தாராபுரம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றங்கரையில் ஒரு பெண்ணை விபசாரத்துக்காக பயன்படுத்தியது, அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்தது, அந்த பாலியல் காட்சிகளை மற்றவர்களுக்கு பரப்பியது ஆகிய குற்றங்களுக்காக தாராபுரத்தைச் சேர்ந்த 7 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வீடியோ காட்சி இளைஞர்கள் பலரின் செல்போனில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அதை அனைவரும் உடனடியாக அழித்து விட வேண்டும். போலீஸ் சோதனையின் போது, இது போன்ற காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
|
No comments:
Post a Comment