மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 வயது குழந்தையின் நாக்கை அறுத்து, உடம்பெல்லாம் சிகரெட்டால் சூடு போட்டுள்ளார் ஒரு கொடூரமான தந்தை. குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளை விட்டுவிட்டு முதல் மனைவி பிரிந்து சென்றதால் மனைவி மீதுள்ள கோபத்தை குழந்தை மீது காட்டியுள்ளார் அந்நபர். இந் நபர் 35வயதான பூமிநாதன். சாராய வியாபாரி. இவரது மனைவி 28 வயதான சங்கீதா. இவர்களுக்கு பூமிகா(4), புவனேஸ்வரி (2), சந்தோஷ் (1) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா 7 மாதங்களுக்கு முன்பு சங்கீதா தாயாருடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பூமிநாதனிடம் வளர்ந்தன. இதற்கிடையில் பூமிநாதன், சத்யா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று குழந்தை புவனேஸ்வரியை பூமிநாதன் சிகரெட்டால் உடம்பு முழுவதும் சூடு வைத்து அடித்துள்ளார். இதில் குழந்தைக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மேலும் பிளேடால் குழந்தையின் நாக்கை அறுத்தார். இதையறிந்த குழந்தையின் தாய் சங்கீதா குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தை புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த குற்றவாளியை தேடிவருகின்றனர்.
|
No comments:
Post a Comment