இனிமேல் நீ என்னில் பாதி... புயல் - வெயில் - மழை... பாலை - சோலை இவை எல்லாம் ஒன்றாக நாம் கடப்போம்!'' என்று சினிமாக் களில் தருகிற வாக்குறுதிகள் மாதிரியே, திருநெல்வேலி அருகில் இருக்கும் தோப்புவிளைகிராமத்து தேவால யத்தில் மேரிசுதாவுக்கு வாக்குறுதி அளித்தார் ரீகன். கல்யாணமாகி சென்னைக்கு அவரோடு வாழ வந்த கொஞ்ச நாளிலேயே, மிகமிக விபரீதமான வினோதமான ஒரு காமுகனுக்கு தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறோம் என்று மேரிசுதாவுக்குப் புரிந்துபோனது.தப்பான புருஷனின் பர்ஸை அவனுக்குத் தெரியா மல் துழாவினால் என்ன கிடைக்கும்? சில சமயம் பாக்கெட்டுக்குள் கைவிட்டால் என்ன கிடைக்கும்? ரீகன் தன் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க்கில் மேரிசுதா தேடிக் கண்டடைந்தது எல்லாமே அசிங்கம், அருவருப்பு, வக்கிரத்தின் உச்சம்! புகைப்படங்கள், ஆடியோ - வீடியோ பதிவுகளில் அடுத் தடுத்து பல பெண்களோடு ரீகன் இருந்த காட்சிகள் எல்லாமே 'உவ்வே' ரகம்!
தனியொரு நபர் இத்தனைப் பெண்களோடு இப்படி சல்லாபம் செய்யவும், சுற்றித்திரியவும், அவர்களோடு தான் இருந்த அந்தரங்க காட்சிகளை அடுக்கடுக்காக பதிவு செய்யவும், ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிப்போனால் அவர்களை சினிமாட்டிக் வில்லனாக மிரட்டி பதிவு செய்துகொள்ளவும் எப்படித்தான் முடிந்ததோ... என்று அதிரவைக்கும் அளவுக்கு இருந்தன மேரிசுதா நம் முன் கொண்டுவந்து கொட்டிய ஆதாரங்கள்.
பட்டப்பகலில், வெட்டவெளியில், சற்று தூரத்திலேயே சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருக்க... அந்தக் கடற்கரையில் அதிரவைக்கும் போஸில் ஒரு பெண்ணை எப்படித்தான் சம்மதிக்க வைத்து படமெடுத்தார்களோ என்று நினைக்கும்போதே நடுக்கம் கண்டது நமக்கு.
''எனக்கு முன்னால எத்தனைப் பேர் உன்னைத் தொட்டான்? ஒளிவு மறைவு இல்லாம ஒழுங்காகச் சொல்லிடு... நான் உன்னை விட்டுடறேன்!'' என்று ஆரம் பித்து, அந்தப் பெண்ணின் வாயாலேயே வரிசையாக சில ஆண்களின் பெயர்களை வாங்குகிறது அந்த 'மெஸ்மரிச' குரல்!
''இது என் புருஷன் ரீகன் குரலேதாங்க. நடுராத்திரியில் வீடியோவில் அசிங்கப் படத்தை ஓடவிட்டுட்டு, அதுல வர்றமாதிரி எல்லாம் என்னை கோ ஆபரேட் பண்ண சொல்லுவான் அந்தப்பாவி. மறுத்தால் கடுமையா அடி உதைதான். நான் ஒரு பக்கம் கதறி அழுதுக்கிட்டு இருக்கும்போதே, யாராச்சும் ஒரு பொண்ணுக்கு போன் போட்டு அவளோட தான் எப்படி எல்லாம் இருந் தேன்னு அவ வாயாலேயே படிப்படியா சொல்லச் சொல்லுவான். வேண்டாத பொண்ணுங்களை தன் வழியிலிருந்து விலக்குறதுக்கு கடுமையா மிரட்டுவான். அதையெல்லாம் செல்போன்ல எதுக்குத்தான் பதிவு செஞ்சி வெச்சிக்கிட்டானோ? ஆனா, இன்னிக்கு அவன்கிட்ட இருந்து விடுதலை வாங்க அதுதான் எனக்கு உதவப் போகுது!'' என்று சொல்லி கண்களை துடைத்துக்கொள்கிறார் மேரிசுதா.
''எனக்கும் ரீகனுக்கும் கல்யாணமான புதுசுலேயே படுக்கை அறையில் செல்போனை வெச்சு நாங்க ஒண்ணா இருக்கிறதை படம் பிடிக்க ஆரம்பிச்சான். நான் தடுத்தா, 'ப்ளீஸ் சுதா... உன்னோட ஞாபகம் வர்றப்ப பார்த்துக்கிறதுக்குத்தான்(?) இதெல்லாம்' அப்ப டின்னு கெஞ்சுவான். இருந்தாலும் அவன் அசந்திருக்கிற நேரம் பார்த்து அந்தப் படத்தை எல்லாம் நான் தேடித்தேடி அழிச்சிக்கிட்டே இருந்தேன். என்னோட மூணரை வயசு பையன் ரிக்காடோ என் வயித்துல இருந்த சமயம், பிரசவத்துக்காக தாய் வீடு போய் வந்தேன். திரும்பி வந்தப்பதான் பெட்ரூமில் புதுசா அந்த கம்ப்யூட்டர் இருந்தது. ராத்திரிப் பொழுது ஆனாலே அசிங்கப்படங்களை அதுல ஓடவிட்டு பார்க்கிறது, எதையெதையோ செல்போனில் இருந்து எடுத்து அதில் சேகரிக்கிறதுன்னு பாதிநேரம் அதே வேலையா இருப்பான்.
அடுத்தடுத்து அவனோட வக்கிரம் கூடிப்போய் வெவ்வேற பெண்களோட என் எதிரிலேயே கேவலமா பேச ஆரம்பிச்சப்பதான், ரீகனோட அம்மாக்கிட்ட விஷ யத்தைச் சொல்லி கதறி அழுதேன். 'ஆம்பிளைன்னா அப்படித்தான். களைச்சு வீட்டுக்கு வர்ற ஆம்பிளைக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறதுதான் நல்ல பொம் பளைக்கு அழகு' அப்படின்னு எகத்தாளமா அவங்கப் பேசினாங்க. வீட்டுக்குள்ள சண்டை முத்துனப்ப, 'விருப் பம் இருந்தா இரு... இல்லாட்டி தற்கொலை பண்ணி செத்துப்போ' அப்படின்னு சொல்லி ரீகன் என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டான். அவங்க அப்பாக்கிட்ட இதையெல்லாம் எடுத்துச் சொல்லவே முடியாது. ஏன்னா யாரும் இல்லாத நேரத்துல தற்செயலா தடுக்கி விழுற மாதிரி என் மேல விழுறது... 'நீ ரொம்ப அழகா இருக்கே' அப்படின்னு வயசுக்கு தகாம இளிக்கிறது... இப்படி என் மாமனாரே தனி டார்ச்சர் கொடுத்தாரு.

சொந்தமா தொழில் தொடங்கப் போறேன்னு சொல்லி, என் நகைகளை வாங்கி அடகு வெச்சான் ரீகன். மேற்கொண்டு பணத்தை எங்க வீட்டுல கேட்டு வாங்கிட்டு வரச்சொல்லி அடிச்சான். தாங்கமுடியாம காவல் நிலையத்துல புகார் கொடுத்தேன். போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து 'திருந்திடறதா' எழுதிக் கொடுத்து ஜாமீன்ல போனவன்தான் இப்ப எங்கே இருக்கான்னு தெரியலை...'' என்று ஒருமையிலேயே கணவனைப்பற்றி கொட்டி முடித்தார் மேரிசுதா.
அதற்கெல்லாம் முன்பாக வீட்டுக்கே சில பெண் களைக் கூட்டிவந்து அவர்கள் எதிரிலும் தன்னை ரீகன் அவமானப்படுத்தியதாக சொல்லும் இவர், புகுந்த வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பு அந்த கம்ப்யூட்டரில் இருந்து 'ஹார்டு டிஸ்க்'கை எப்படியோ கழற்றிக்கொண்டு வந்ததுதான் க்ளைமாக்ஸ். குவியல் குவியலாக நாம் விவரித்த காட்சிகளை எல்லாம் அதிலிருந்து எடுத்து சி.டி. போட்டு நீட்டினார் - சங்கடத்தோடு!
தான் சேகரித்த சில மொபைல் நம்பர்களை நம்மிடம் கொடுத்தவர், ''இவங்க எல்லாம் ரீகனோட மிரட்டலுக்கு ஆளான பெண்கள். பேசிப் பாருங்க!'' என்று சொன்னார். அவர்களில் சிலரை தொடர்புகொண்டு பேசி, நேரிலும் சந்தித்தோம்.
''காலேஜில் படிக்கிறப்ப என் ஃப்ரெண்டு மூலமா ரீகன் அறிமுகம். சாக்லெட், சுடிதார்னு வாங்கிக் கொடுத்து அசத்தினான். அவன்கிட்ட ஒரு தடவை பேசிட்டா, அப்புறம் விலகவே முடியாது. ஏதேதோ சொல்லி ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு ரிசார்ட்டுக்கு கூட்டிப்போனான். கடலில் குளிச்சிட்டு அறைக்குள் உடைமாற்றும் போது எல்லாத்தையும் படம் பிடிச்சிட்டான். சென்டிமென்ட்டா ஏதேதோ சொல்லி என்னை சமாதானப்படுத்தினான். அவன் பேச்சில் மயங்கி பலதடவை என்னை இழந்திருக்கிறேன். அப்பல்லாம் அவன் செல்போனில் படம் எடுக்கிற விஷயம் எனக்கு பெரிசா தெரியலை. என்னோட வேறொரு பாய் ஃப்ரெண்ட் அந்த செல்போன் காட்சிகளைப்பற்றி விவரமா சொன்னப்பத்தான் ரீகனோட விஷமம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது.
'இப்போ உன் பாய் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச விஷயம் உலகம் முழுக்க தெரியப் போகுது. இன்டர்நெட்டுல போட்டு எல்லாருக்கும் மஜா கொடுக்கலாமா?' அப்படின்னு முற்றிலும் வேறொரு முகத்தோட ரீகன் பேச ஆரம்பிச்சான். தன்னோட அக்கவுன்ட்ல பணம் போடச்சொல்லி பயங்கரமா மிரட்ட ஆரம்பிச்சான்.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. ரீகன் என்னை காதலிச்சுருக்கான் என்கிற விஷயத்தை மட்டும் அவரே கண்டுபிடிச்சிட்டார். பெருந்தன்மையோட என்னோட வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கார். ஆனா, எந்த நிமிஷமும் தன்னிடம் இருக்கிற வீடியோ, போட்டோக்களை அனுப்பி என் வாழ்க்கையை சீரழிச்சிருவானோன்னுபயமா இருக்கு'' என்று சொல்லி கதறி அழுத அந்தப் பெண்ணின் அடையாளங்கள் இங்கே மறைக்கப்படுகின்றன. மேரிசுதா கொண்டு வந்த வீடியோ காட்சிகளில் இவரோடு ரீகன் அப்பட்டமாக படுக்கை அறையில்!
இன்னொரு இளம்பெண்ணோ, ''முதலில் செல்போனில்தான் எனக்கு அறிமுகம் ஆனான். மூணு மாசம் நாகரிகமா பேசிட்டிருந்தான். ஒருநாள் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு நேரில் வரச்சொல்லி பார்த்தான். அதற்கு அப்புறம் என் அழகை வர்ணிச்சு உருகி மருகினான்!'' என்றதோடு, எப்படியெல்லாம் சென்டி மென்ட்டாக ரீகன் தன்னை வளைத்தான் என்பதை படபடப்பும் பரிதவிப்புமாக வர்ணித்தார். தன் சம்மதத்தோடே அத்துமீறி, அந்தக் காட்சிகளையும் படம் பிடித்துக் கொண்ட விவரங்களையும் சொன்னார். ''இன்னும் எனக்கு கல்யாணம் ஆகலை. என் குடும்பத் துக்கும் விஷயம் தெரியாது. தெரிஞ்சா நான் உயிரோட இருக்க முடியாது!'' என்று கதற ஆரம்பித்து விட்டார்.
ரீகன் தலைமறைவான பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரும் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசியதில்... ஸ்டாம்ப் பத்திரத்தில் ரீகனின் பெற்றோர் நீளமாக ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள் மேரிசுதாவுக்கு. திருமணத்தின்போது கொண்டுவந்த பணம், நகை ஆகியவற்றை திருப்பிக் கொடுப்பதாகவும்... குழந்தை ரிக்காடோவின் எதிர் கால பாதுகாப்புக்கு தனியாக ஒரு தொகை கொடுப்பதாகவும், அதில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், ''இந்த உறுதிமொழிப் பத்திரமே வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து ப்ளாக்மெயில் செய்துதான் எழுதி வாங்கப்பட்டது!'' என்று போலீஸில் ரீகனின் பெற்றோர் புகார் கொடுக்க... மேரிசுதாவையும் தேடுகிறது போலீஸ்.
ரீகனை நாம் போனில் தொடர்பு கொண்டபோது, ''ஹலோ... ஹல்லல்லோ... ஹல்லல்லல்லோ...'' என்றெல்லாம் செமத்தியாக லந்து அடித்தது எதிர்முனை. மறுமுறை தொடர்பு கொண்டால், ''நீங்கள் தொடர்புகொண்ட நபர் செம காண்டில் இருக்கிறார்!'' என்றது குரல். ஆடியோ பதிவுகளில் இருந்த அதே குரல்தான்! இன்னொரு முறை பக்கத்திலிருந்த பெண்ணிடம் போனைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னது. அந்தப் பெண்ணும் 'ஹலோ' சொல்லிவிட்டு கட் செய்தார்.
ரீகனின் தந்தை ஜேம்ஸை நாம் தொடர்பு கொண் டோம். ''ஜாமீன் எடுத்து எங்கள் மகனை கூட்டிவந்தோம். அப்புறம் எங்கே போனான், என்ன ஆனான் என்று தெரியாது. உங்கள் காதுக்கு வந்ததை விசாரித்து எழுதிக்கொள்ளுங்கள்!'' என்றார் அவர். ஆபாச ஆதாரங்கள்பற்றி கேட்டதற்கு, ''நான் அதில் எதையும் பார்க்கவில்லை. ஆனால், அப்படி இருப்பதாகச் சொல்லி மிரட்டித்தான் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள்!'' என்று மட்டும் சொல்லி லைனை கட் செய்தார் ஜேம்ஸ்.
இது மேரிசுதா என்ற ஒரே ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக் கிறார்கள், அவசரப்பட்டு ரீகனிடம் தங்களை இழந்து விட்ட இன்னும் பல பெண்கள்.
'பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன்வந்து புகார் செய்தபின்னரே ரீகன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்' என்று காவல்துறையினர் காரணம் காட்டிவிடாமல், விரைந்து செயல்பட்டு கணவன் - மனைவி இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தியே தீரவேண்டும்
பெண்களே அவதானம் ...... யாராக இருந்தாலும் போட்டொ,வீடியா எடுக்க அனுமதிக்காதீர்கள்..........இந்த பதிவையும் பாருங்கள்

பெண்களே! பெண்களே!உஷார்
|