1. இந்தியனுடைய அம்மா ஷார்ட் ஹேர் வைத்திருப்பார்.
2. இந்தியனுடைய அப்பா நிச்சயம் டாக்டர் அல்லது எஞ்சினியராக் இருப்பார்.
3. 12 வயதுக்கு கிழே உள்ளவர்களுக்கு அரை டிக்கெட் என்கிற இடங்களில் எல்லாம் 15 வயதாகிய தன் பிள்ளைகளுக்கு 12 வயதுதான் என்று சொல்லி வாகுவதம் செய்து டிக்கெட் எடுக்க முயற்சி செய்வார்.
4. கணக்கில் இந்தியபையன் கேட்கும் சிறிய சந்தேகத்திற்கு பெற்றோர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக லெக்சர் கொடுத்து கொண்டிருப்பார்கள்.
5. இந்தியனுடைய வீட்டில் 20 lb அரிசி பேக் இருக்கும்.
6. இந்தியனுடைய வீட்டில் குறைந்தது 2 ஜப்பான் தாயாரிப்பு கார்கள் இருக்கும்.
7. படிக்கும் காலேஜ் காம்பஸுக்கு இந்திய பையனை பார்க்க ஏதாவது பெண்வந்தால் பார்க்கும் மற்றவர்கள் கேட்பார்கள் அது உன் அம்மாவா அல்லது சகோதரியா என்று?
8. இந்தியனுடைய அப்பா அல்லது தாத்தாவின் காதில் ஹேர் இருக்கும் அதை எப்போதும் கட் செய்யமாட்டார்கள்.
9. இந்தியனுடைய பிள்ளைகள் முன்னாள் பெற்றோர்கள் ஒரு போதும் கட்டி அனைக்க மாட்டார்கள் அல்லது முத்தம் தரமாட்டார்கள்.
10. இந்தியனுடைய வீட்டில் உள்ள எல்லா சாப்ட்வெரும் ஒரிஜனல் காப்பி கிடையாது.
11. இந்திய பையண் நண்பர்களின் பெற்றோர்களை அங்கிள் & ஆண்ட்டி என்றுதான் கூப்பிட வேண்டும்.
12. இந்தியனுடைய வீட்டில் அகர்பத்தி ஸ்மல் அடிக்கும்
13. இந்திய குடும்பம் விலை உயர்ந்த ஹோட்டலில் சாப்பிடும் போது குடிக்க ஐஸ் இல்லாத வாட்டர் மட்டும் ஆர்டர் செய்வார்கள் சாப்பாட்டின் முடிவில் டெஸர்ட் ஆர்டர் செய்யமாட்டார்கள்.
14. இந்திய பையன்கள் ஏதாவது எலக்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கி கேட்டால் இந்த வயதில் தாங்கள் காலுக்கு கூட ஷு இல்லாமல் இருந்ததை பெற்றோர்கள் சொல்லிக் காண்பித்து கொண்டிருபார்கள்..
15. இந்தியர்கள் ஆன் லைன் கூப்பனை பார்த்தால் குறைந்தது 10 கூப்பன்களையாவது ப்ரிண்ட் செய்து குடும்பத்தோடு கடை க்யூவில் ஒருவர் மாறி ஒருவராக நின்று பொருட்களை வாங்கி கொண்டிருப்பார்கள். குடும்பத்திற்கு ஓன்று என்று சொன்னாலும் தனித்தனியாக நின்று வேறு குடும்ப ஆள் மாதிரி ஆக்ட் செய்து வாங்குவார்கள்.
16. ஏதோ கிப்ட் கொடுப்பது போல் நண்பர் அனைவருக்கும் அந்த கூப்பனை இமெயிலில் பார்வெட் செய்வார்கள்.
17. சம்மர் தொடங்கியதும் இந்தியனுடைய பெற்றோர்கள் அரை டிரெஸ் போட்டு முதல் ஒரு மாதம் மட்டும் வாக்கிங் போவார்கள்.அதுதான் அவர்கள் ஆண்டு முழுவதும் செய்யும் உடற்பயிற்சி ஆகும்
18. இந்தியனுடைய வீட்டு பார்ட்டிகளில் சமோசா, நாந் ,மலாய் குப்தா, தயிர் சாதம்,குலோப் சாமுன் போன்றவை கண்டிப்பாக இருக்கும். நோ ட்ரிங்க்ஸ். நோ மியூஸிக் அல்லது டான்ஸ், ஆளூக்கு ஆள் கத்திக் கொண்டிருபார்கள், குறைந்தது 2 ஆண்ட்டிகளாவது பிள்ளை உண்டாகி வயிற்றை தள்ளிக் கொண்டிருபார்கள்.
19. கோடைகாலத்தில் பீச்சில் இருந்து எல்லோரும் ஈவினிங் வீடு திரும்பும் போதுதான் இந்தியர்கள் அங்கு செல்வார்கள். கையில் லெமன் ரைஸ் மற்றும் சிப்ஸ் இருக்கும். Download As PDF
|
No comments:
Post a Comment