Sunday, March 27, 2011

Blogspot வலைப்பூக்களுக்கு இந்தியாவில் சிக்கல்!


சமீபத்தில் வரும் தகவல்கள் கூறுவது என்னவென்றால், Blogspot.com ல் உருவாக்கப்பட்ட வலைப்பூக்களை (Blogs)இந்தியாவில் காண இயலவில்லை என்பது தான். இதை அறிந்ததும் நான் தொடர்ந்து வாசிக்கும் சில Blogspot வலைப்பூக்களை பார்க்க முயற்சித்தேன் எனக்கும் இந்த வலைப்பூக்களை இணையத்தில் கிடைக்கப்பெறவில்லை.
ஆனால் blogspot.com, blogger.com போன்ற முக்கிய பக்கங்களை பார்க்க முடிகிறது. அதில் உருவாக்கப்பட்டுள்ள வலைப்பூக்களின் துணை இணைய (Sub Domains) முகவரிகளை தான் காண முடியவில்லை.
இது தொடர்பான சில விவரங்களை சேகரிக்க முற்ப்பட்டேன் ஆனால் சரியான காரணங்கள் கிடைக்க பெறவில்லை.
இது தொழில் நூட்ப கோளாறா? அல்லது அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்த தணிக்கை முயற்சியா? ( 2006 ல் அரசாங்கம் ISPகளை சில ப்ளாக் சேவையை தடை செய்ய கோரியதை போல்) என்பது தெரியவில்லை.
இதை பற்றிய IBN செய்தி இணையத்தில் காண, இங்கே கிளிக் செய்யவும்
இருப்பினும் நீங்கள் இந்தியாவில் இருப்பின், உங்களது அல்லது உங்களக்கு விருப்பமான Blogspot வலைப்பூக்களை தற்காலிகமாக பார்க்க, வலைப்பூ பக்கங்களுக்கான முகவரிக்கு பின்னால், .nyud.net என்று சேர்த்து கொள்ளவும். அதாவது www.blogname.blogspot.com என்பது உங்கள் ப்ளாக் முகவரி என்றால், www.blogname.blogspot.com.nyud.net என்று சேர்த்து முயற்சி செய்து பாருங்கள்.
உங்களால் Blogspot வலைப்பூக்களை காண முடிகிறதா? என கீழே comment செய்யவும்.
புதுபிக்கப்பட்ட செய்தி : தொடர்ந்து வரும் செய்திகள் அடிப்படையில், ஏர்டெல் பயனாளர்களால் தான் blogspot ப்ளாக்களை பார்க்க இயலவில்லை என்று தெரிவிக்கின்றனர். மற்றவர்களை பற்றி தெரியவில்லை

No comments:

Post a Comment