Sunday, March 27, 2011

இந்தியாவில் அறிமுகமாகும் Dell கைபேசிகள்?!


Dell, இந்த நிறுவன மடிக்கணினிகள் மற்றும் மேசை கணினிகள் உற்பத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. விரைவில் இவர்களின் கைபேசிகள் இந்தியாவில் வர இருக்கின்றன.

டெல் நிறுவனம் முன்னனி பத்திரிக்கைகளில் மிக பெரிய அளவிலான விளம்பரங்களை கொடுத்துள்ளது. டெல் நிறுவன கைபேசிகளை விற்பதற்கு முகவர்கள் தேவை என்பதை போன்றது தான் அந்த விளம்பரம். மேலும் அவர்கள் எவ்வித கைபேசிகளை வழ
ங்க திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெளிவாக தெரியவில்லை.

பெரும்பாலும் அவை Android வகை Dell Aero மற்றும் Dell Stread போன்றவையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் windows phone 7 வகையான Dell Lighting என்ற கைபேசி உருவாக்கிக்கொண்டிருக்கின்றது எனவும் தெரிகிறது.
இந்தியாவின் கைபேசி விற்பனை என்பது மிக பெரிது ஆனால் கைபேசியின் விலையை பொறுத்தே அது அமைகிறது. Iphone களை விட பெரும்பலான இந்தியர்கள் விருப்பமாக BlackBerry யும் Nokia SmartPhone அமைந்துள்ளது. அதனால் Dell அறிமுகப்படுத்த போகும் கைபேசி மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

No comments:

Post a Comment