நாம் கொஞ்சம் கூட கற்பனை செய்து பார்க்காத பல விடயங்கள் இன்று கண்டுபிடிப்புக்களாக வெளிவந்துகொண்டிருக்கிறது. சைக்கிளுக்கு சக்கரம் இரண்டு என்ற வரைமுறையை மீறி ஒரு சக்கரத்தில் சைக்கிள் வந்துவிட்டது. வெறுமனே ஒரு சக்கரத்தில் சைக்கிளா என கற்பனை பண்ணி பார்க்கும் போது எமக்குள் பல கேள்விகள் எழும். ஆம் இருக்கை எங்கு? பெடல் எங்கு என்று? அந்த கேள்விகளுக்கு பதில் படத்தை பார்த்தே விளங்கிக்கொண்டிருப்பீர்கள். இந்த சைக்கிள் பிரித்தானியாவை சேர்ந்த Ben Wilson என்பவரால் வடிவமைக்கப்ப
ட்டுள்ளது.சக்கரத்துக்குள்ளையே அமைந்துள்ளது இதன் இருக்கை. இந்த சைக்கின் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் காணப்படுகிறது. எது எப்படியோ இந்த சைக்கிளில் இருந்து சவாரி செய்வத அவ்வளவு சௌகரிமானதாக இல்லை என்கின்றனர் விடயம் அறிந்தவர்கள்.
|
No comments:
Post a Comment