சீனப்பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்தின் போது 2.1 கிலோமீட்டர் நீளமுள்ள திருமண உடையை அணிந்துகொண்டார். வியாழக்கிழமை நடந்த இந்த சாதனை கின்னஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது. மணப்பெண்ணான லின் ரோங்க் அணிந்திருந்த 2,162 மீட்டர் நீள திருமண உடையைப் பிரிக்க 3 மணி நேரமும் 200 விருந்தாளிகளின் உதவியும் தேவைப்பட்டது. இந்த திருமண உடையை அங்கங்கே குத்தப்பட்டிருந்த ரோஜாக்களின் எண்ணிக்கை மட்டும் 9,999. இதுவும் கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது.
ரயில் போன்ற இந்த திருமண உடை உருவாகக் காரணம் மணமகன் ஜாவோ பெங். ரயில்வே ஊழியரான இவருக்கு, டீச்சரான லின் ரோங்கை திருமணம் செய்யத்தோன்றியதும், அளவற்ற காதலை காட்டும் முனைப்பிலும், கின்னஸ் சாதனை செய்யும் ஆர்வத்திலும் ஏற்பட்டதுதான் இந்த நீண்ட திருமண உடை ஆசை.
இந்த உடையை லின் ரோங்க் எப்படி மடித்து, எங்கே வைப்பார் என்பதுதான் காத்திருக்கும் இன்னொரு சாதனை. ஆனால் இந்த நீண்ட உடை ஆசை கொஞ்சம் காஸ்ட்லி சமாச்சாரம். உலகின் நீளமான மணமகள் உடையை நெய்ய ரூ.3லட்சம் செலவானது. “என்னத்தான புது மனைவியை அசத்தனும்னு அவன் ஆசைப்பட்டாலும், இது தேவையில்லாத தண்டச்செலவு” என்று அங்கலாய்க்கிறார் பெங்கின் தாயார். சீன மாமியார், மருமகள் லடாய் சேலையில் துவங்கியாச்சு!
|
No comments:
Post a Comment