வீட்டிலிருந்தபடி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? ஒரு முன்னோட்டம் என்ற பதிவில் இணையத்தில் பணம் ஈட்டும் வழிகளை பற்றி எழுதி இருந்தேன். அதில் குறிப்பாக மென்பொருள் வேலைகள் செய்யவதன் மூலம் பணமீட்டுவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ”வீட்டிலிருந்த படி மென்பொருள் வேலைகள் செய்ய?” என்று இந்த பதிவின் தலைப்பு இருந்தாலும், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களும் இத்தகைய வேலைகளை செய்யலாம். இதற்கு மென்பொருட்களை பற்றிய அறிவு இருந்தால் போதும்.
நீங்கள் குறிப்பிட்ட ஒரு மென்பொருள் பயன்படுத்தி வேலைகள் செய்வதில் திறமைசாலியாக இருப்பின் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். உதாரணத்திற்கு
Adobe photoshop, Flash, Dreamweaver, Wordpress, php, java, .net, html, 3D max போன்ற எதாவது ஒரு மென்பொருள் வேலைகள் செய்வதில் நீங்கள் வல்லவர்களாக இருந்தால் போதும், இதில் சிறந்து விளங்க முடியும்.சரி, இந்த வேலைகளை எப்படி பெறுவது என்பதை பார்ப்போம், வீட்டிலிருந்த படி மென்பொருள் வேலைகள் செய்ய நினைப்பவர்களுக்காகவே (freelance job seekers) நிறைய இணையதளங்கள் உள்ளன. இதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதில் வேலைகளை கொடுப்பவர்களும், வேலைகளை வேண்டுபவரும் கலந்தே இருப்பார்கள். நிரந்தர பணியாளர்கள் தேவையல்லாமல் இருக்கும் மென்பொருள் வேலைகளை வைத்திருப்பவர்கள், இந்த இணையதளங்களில் வேலைகள் குறித்த விளக்கங்களும் அதற்கு அவர்களின் budget டும், வேலை முடிக்க கால அவகசமும் கொடுத்திருப்பார்கள். குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட budget ல் முடிக்க முடியும் என நீங்கள் நினைத்தால், உங்களின் நிலையை நீங்கள் அவர்களுக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு தான் இந்த இணைய தளங்கள் வேலை செய்கின்றன.
அப்படியேனில், இத்தகைய இணைய தளங்களை நடத்துபவர்களுக்கு என்ன லாபம்? என நீங்கள் நினைக்கலாம். வேலையை கொடுப்பவர்கள் மற்றும் வேலை பெற விருப்புபவர்கள் இருவரும் இந்த இணைய தளங்களில் தங்களுக்கான கணக்குகளை உருவாக்க சிறிது கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு வேலைக்கும் நீங்கள் ஈட்டும் பணத்திற்கு ஒரு கமிஷன் தரவேண்டி இருக்கும். ஆனால் நீங்கள் திறமையானவரெனில் இது உங்களுக்கு ஒன்றும் பெரிதல்ல, இதை விட நீங்கள் பன்மடங்கு அதிகம் பணமீட்ட முடியும். அதனால் இந்த கட்டணங்களை பற்றி நீங்கள் கவலை பட தேவையில்லை. இருப்பினும் நிறைய வேலைகள் பதிவு செய்யப்படும் இனையதளத்தில் இனைவது மிக அவசியம். இத்தகைய freelance இணையதளங்களின் பட்டியல் விரைவில் பதிவிடுகிறேன்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் செய்யும் வேலைகளுக்கான பணத்தை உங்களது இணைய கணக்கிற்கு வந்துவிடும், அங்கிருந்து paypal லிற்க்கோ அல்லது உங்கள் Bank acccount ற்க்கோ சுலபமாக நீங்கள் பெறலாம்.
முதலில் இத்தகைய முறையில் வேலைகளை பெறுவது கடினம் தான் ஆனால் சில வேலைகளை நீங்கள் முடித்துபின் உங்களுக்கு இவை சுலபமாகி விடும்.
வீட்டிலிருந்த படி மென்பொருள் வேலைகள் செய்யவதில் எற்படும் சிக்கல் மற்றும் உங்களது சந்தேகங்களை கீழே comment செய்யவும்
|
>>>>>> http://www.smallstuffs.com <<<<<<
ReplyDeleteநான் தற்செயலாக இந்த Websiteற்கு சென்றேன்.
"இனையதளத்தில் சம்பாதிப்பது எப்படி" என்று இங்கு சென்று PDFஐ படிக்கவும். மிக மிக உபயோகமான தகவல்கள்.
http://www.smallstuffs.com