கைபேசி (Mobile Phone) பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விலையுயர்ந்ததோ அல்லது மலிவானதோ கைபேசி என்பது அதன் உரிமையாளருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஏன்? சிலருக்கு ஆறாம் விரல் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு கைபேசி முக்கியமானதாகியுள்ளது. கைபேசி கீழே விழுந்தாலோ, மறந்து எங்காவது வைத்து விட்டாலோ, அவ்வளவு தான் துடித்து போய்விடுவோம் அல்லவா?. அப்படி இருக்க, நீரில் விழுந்து கைபேசி செயலிலப்பது என்பது பொதுவான மற்றும் முக்கியமான ஒன்று. இங்கே நாம் எப்படி நீரில் விழுந்து நனைந்த கைபேசியைக் காப்பாற்றுவது என்பதை பார்ப்போம்.
முதலில், உங்கள் கைபேசி நீரில் விழுந்தால்
அதை எவ்வளவு சீக்கிரம் வெளியே எடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியே எடுங்கள். அவ்வாறு நிங்கள் எடுக்க தவறினால், நீர் உங்கள் கைபேசி உள்ளே உள்ள அனைத்து பாகங்களையும் அடைந்து நாசமாக்கி விடும்.இரண்டாவதாக, உங்கள் கைபேசியில் உள்ள சிறிய screw களை திறந்து உள்ளே நீர் சென்றுள்ளதா?, இல்லையா? என காண முயற்சி செய்யதீர்கள்.
அடுத்து உங்கள் கைபேசியை நீரிலிருந்து எடுத்த உடனே, கைபேசியிலிருந்து அதன் battery ஐ பிரித்து வைப்பது நன்று.பெரும்பாலும் இதை யாரும் செய்வதில்லை. இதனாலேயே நீரில் விழுந்த கைபேசிகள் செயலிலக்கின்றன. உங்கள் கைபேசியினுள் உள்ள பாகங்கள் நீரில் நனைந்திருந்தால், battery லிருந்து வரும் power அவற்றை செயலிலக்கச் செய்கின்றன. எனவே நீரில் விழுந்த கைபேசியிலிருந்து அதன் battery ஐ பிரித்து வைப்பது முக்கியமான ஒன்று.
முக்கியமாக, உங்கள் கைபேசியை நீரிலிருந்து எடுத்த ஒரு சில வினாடிகளில், அதை உலர்த்த செய்வது அவசியம். உலர்ந்த துணிகளைக் கொண்டு உங்கள் கைபேசியை உலர்த்தலாம்.
இவை அனைத்தையும் வெகு விரைவில் செய்து முடிப்பதவசியம்
|
No comments:
Post a Comment