Sunday, March 27, 2011

காந்தமாய் மாறிய சிறுவனின் உடல்; இது நிஜமா??


காந்தமாய் மாறிய சிறுவனின் உடல்; இது நிஜமா??
காந்தத்துக்கு உலோகங்களை தன்பக்கம் ஈர்க்கும் திறன் உள்ளதை அறிவோம். அதுபோல் ஒரு சிறுவனுக்கு காந்த சக்தி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. எனினும், இது உண்மைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது? செர்பியாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பொக்டன். கரண்டி, ஸ்பூன், கத்தி உள்ளிட்ட உலோகங்கள் இந்த சிறுவனுடைய தோலுடன் ஒட்டிக் கொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது. இதுதவிர, உலோகம் அல்லாத, பிளாஸ்டிக் தட்டு, தட்டையான கண்ணாடி
பொருட்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவையும் ஒட்டிக் கொள்வதுதான் விசித்திரமாக உள்ளது.
இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் காந்த சக்தி இருப்பதாக பலர் கூறியுள்ளனர். அந்த பட்டியலில் இந்த சிறுவனும் சேர்ந்துள்ளான். ஆனால், இத்தகைய பொருட்கள் தோலில் ஒட்டிக் கொள்வதற்கு காந்த சக்தி காரணமல்ல. மேலும், தோல் என்பது இழுவை திறன் கொண்டது. இயல்பாகவே சிறிதளவு ஒட்டிக் கொள்ளும் திறன் உள்ளது. பிளாஸ்டிக் மற்றும் தோல் பொருட்கள் சில சமயங்களில் நமது உடலில் ஒட்டிக் கொள்வது வழக்கமானதுதான் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.உண்மையிலேயே காந்த சக்தி இருந்தால் ஒரு பொருள் ஒட்டிக் கொள்ள வரும்போது சிறுவன் சற்று பின்னால் சாய்வது தெரியும். ஆனால், இந்த வீடியோ காட்சியைப் பார்த்தபோது அப்படித் தோன்றவில்லை. காந்தத்துக்கு கண்ணாடி, ரிமோட் கன்ட்ரோல் ஆகியவற்றை ஈர்க்கும் சக்தி இல்லை. எனவே சிறுவனுக்கு காந்த சக்தி இருப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லைÕÕ என பெஞ்சமின் ரட்போர்டு என்ற நிபுணர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment