8.9 ரிக்டர் பூகம்பம் காரணமாக, பூமி தனது அச்சிலிருந்து 4 இன்ச் அளவுக்கு இடம் மாறியுள்ளது. அதே போல ஜப்பானின் மத்திய தீவு 8 அடி நகர்ந்துள்ளது.
பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்வாக மேற்கிலிருந்து கிழக்காக சுழன்று வருகிறது.
இந் நிலையில் 2004ம் ஆண்டு இந்தோனேஷியா அருகே ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் 2.76 இன்ச் அளவுக்கு (7 சென்டி மீட்டர்) பூமியின் சாய்வை மாற்றியது. இதனால் பூமியின் சுற்று வேகமும் குறைந்து ஒரு நாளின் சில மைக்ரோ செகன்டுகளும் குறைந்தன. மேலும் அந்தமான் தீவுகளுக்கும் இந்திய கடலோரப் பகுதிகளுக்கும் இடையிலான தூரமும் சில அடிகள் குறைந்தது. மேலும்
இதையடுத்து கடந்த தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கமும் இதே போல பூமியின் அச்சை சில செ.மீ. மாற்றி பூமியின் சுற்று நேரத்தின் சில மைக்ரோ செகன்டுகளைக் குறைத்தது.
இப்போது ஜப்பானை உலுக்கிய பூகம்பமும் பூமியின் அச்சை 4 இன்ச் அளவுக்கு மாற்றியுள்ளதோடு, 24 மணி நேரத்தில் 1.6 மில்லி செகண்டுகளையும் குறைத்துவிட்டது.
அமெரிக்க பூகம்பவியல் கழக விஞ்ஞானி கென்னத் ஹட்நட் கூறுகையில், ஒட்டுமொத்த ஜப்பானும் பூமியின் அச்சிலிருந்து 8 அடி அளவுக்கு விலகியுள்ளது. ஜப்பான் வரலாற்றில் இது மிகப் பெரிய பூகம்பமாகும். இந்த கடும் பூகம்பத்தின் காரணமாக வெளியான மிக மிக அபரிதமான சக்தியே, கடலை கொந்தளிக்க வைத்து பெரும் சுனாமி அலைகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது. 30 அடி அளவுக்கு சுனாமி அலையின் உயரம் இருந்ததற்கும் இதுவே காரணம். குறிப்பாக மியாகி மாகாணத்தை முற்றிலும் சீரழித்துள்ளது இந்த பூகம்பம் என்றார்.
|
No comments:
Post a Comment