Showing posts with label தூக்கம். Show all posts
Showing posts with label தூக்கம். Show all posts

Sunday, April 24, 2011

தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு


தூக்கத்தை தொலைத்து எதையெதையோ தேடி பெறுவதாகத்தான் அமைகிறது பலருக்கும் இந்த வாழ்க்கை. பணம், பதவி, புகழ் என எல்லாம் இருந்தும் என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாததாக தூக்கம் சிலருக்கு கண்களுக்கெட்டாத தூரத்திற்கு போய்விடுவதும் உண்டு. எது எப்படியோ ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தூக்கம் என்பது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. தூக்கம் முறையாக இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாக வேண்டி இருக்கும். இது தொடர்பாக, மனநல ஆரோக்கிய அமைப்பை சேர்ந்த மருத்துவர் ஆன்ட்ரூ மேக்கல்லோச் கூறும்போது, உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும் நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகள் தூக்கம் தொடர்பானவையாகவே அமைந்துவிடுகிறது என கூறினார். மேலும் இவ்வமைப்பினர் தூக்கம் குறித்து சுமார் 5,300 பேரிடம் ஆய்வு
மேற்கொண்டனர். அதில் 39 சதவீதம் பேர் மட்டுமே நல்ல முறையில் தூங்குவதாக தெரியவந்துள்ளது. எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் தெளிவான வரைமுறை இல்லை. ஐந்து மணி நேரம், எட்டு மணி நேரம் என சரியான தூக்க அளவுகளாக பல்வேறு நேரங்களைக் குறிப்பிடுகின்றனர். உண்மையில் மறு நாள் காலையில் எழுகையில் சுறுசுறுப்பாய் இருக்க முடிந்தால் அதுவே சரியான அளவு தூக்கம்.

`தூக்கத்தில் நடக்கும் வியாதி’க்குக் காரணம்!


ஒரு விந்தையான வியாதி- `சோம்னாம்புலிஸம்’ எனப்படும் தூக்கத்தில் நடக்கும் நோய். `குரோமோசோம்’ குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் `மரபணு சங்கேதக் குறியீட்டை’ அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

அந்த சர்வதேச ஆய்வுக் குழு, தூக்கத்தின்போது ஒருவரின் இதுபோன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறு கிறது. ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் குறைபாடான டி.என்.ஏ.யின் ஒரு பகுதி அடுத்த தலைமுறைக்குப் போனால் போதும். அது தூக்கத்தில் நடக்கும் வியாதியை ஏற்படுத்திவிடும். தற்போது, அந்த மரபணு சங்கேதக் குறியீட்டுப் பகுதியை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியிருக் கிறார்கள். அதன்மூலம், தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய் வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்கள். அவர்கள், பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறிவிடுவதை வழக்கமாக (!) கொண்டிருந்தாள்.
அந்தக் குடும்பத்தினரின் உமிழ்நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில், `குரோமோசோம் 20′-ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டது. அது, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த `ஜீன்’ இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தங்களின் கண்டுபிடிப்பு, தூக்கத்தில் நடக்கும் வியாதியைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

பறவைகளின் தூக்கம்!


பறவை இனத்தில் பல, வித்தியாசமான முறையில் தூங்குகின்றன. அப்படி விந்தையாகத் தூங்கும் சிற பறவைகள்…
* `வவ்வால் கிளி’ என்ற பறவை ஒரு காலால் ஏதாவது கிளையைப் பிடித்துக் கொண்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தூங்குகிறது.
* `ஸ்விப்ட்’ என்ற பறவை, பெரிய பந்து போல ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கூட்டமாகச் சேர்ந்து தூங்கும்.
* துருவப் பிரதேசங்களில் காணப்படும் ஒருவகை வாத்து, பனிக்கட்டியில் ஓட்டை செய்து அதில் படுத்துத் தூங்கிவிடுகிறது.

* நியூசிலாந்தில் உள்ள கிவி பறவை, பகல் நேரங்களில் பூமிக்கடியில் காணப்படும் விரிசல் வளைவுகளில் நுழைந்துகொண்டு தூங்கும்.
* `கிரீப்பா’ என்ற பறவை மரப்பொந்துகளில் மல்லாந்து படுத்துக் கொண்டு தூங்கு
கிறது.

* `த்ரஷ்’ என்ற பறவை குளிர்காலத்தில் தினமும் 15 மணி நேரம் தூங்கும். ஆனால் கோடை காலத்தில் இரவு இரண்டு மணிக்கே விழித்துவிடும். பின்னர் மறுநாள் இரவு 10 மணிக்குத்தான் தூங்க ஆரம்பிக்கும்.
* ஆஸ்திரேலியாவில் காணப்படும் `தவளை வாயன்’ (பிராக் மவுத்) என்ற பறவை சரியான கும்பகர்ணன். அதைக் கையில் எடுத்தாலும் தூக்கம் கலையாது.
பொதுவாகப் பறவைகள் உறங்கும்போது தமது இறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு உப்பலாக வைத்துக்கொள்ளும். அதனால் இறகுகளுக்குள் காற்றுப் புகுந்து கொண்டு அவற்றின் உடல் வெப்பம் வெளியேறி விடாமல் தடுக்கும். இதன் காரணமாகவே சில பாலூட்டிகளும் தமது உடலைப் பந்து போலச் சுருட்டிக்கொண்டு தூங்குகின்றன.

Friday, April 8, 2011

முறையாக தூங்கினால் படுசுட்டியாக இருப்பீர்கள்: ஆய்வில் தகவல்


தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடையவர்கள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது: ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத குழந்தைகளாக இருந்தபோது எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள் சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல்,​​ மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ளுதல்,​​ கணிதத்தில் புலியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன.
குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன்,​​ 11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது,​​ கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார். குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, March 27, 2011

`தூக்கத்தில் நடக்கும் வியாதி’க்குக் காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்.!

`தூக்கத்தில் நடக்கும் வியாதி’க்குக் காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்.!
ஒரு விந்தையான வியாதி- `சோம்னாம்புலிஸம்’ எனப்படும் தூக்கத்தில் நடக்கும் நோய். `குரோமோசோம்’ குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் `மரபணு சங்கேதக் குறியீட்டை’ அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அந்த சர்வதேச ஆய்வுக் குழு, தூக்கத்தின்போது ஒருவரின் இதுபோன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறு கிறது. ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அந்தக் குறைபாடான டி.என்.ஏ.யின் ஒரு பகுதி அடுத்த தலைமுறைக்குப் போனால் போதும். அது தூக்கத்தில் நடக்கும் வியாதியை ஏற்படுத்திவிடும். தற்போது, அந்த மரபணு சங்கேதக் குறியீட்டுப் பகுதியை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியிருக் கிறார்கள். அதன்மூலம், தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய் வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்கள். அவர்கள், பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறிவிடுவதை வழக்கமாக (!) கொண்டிருந்தாள்.
அந்தக் குடும்பத்தினரின் உமிழ்நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில், `குரோமோசோம் 20′-ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டது. அது, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த `ஜீன்’ இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தங்களின் கண்டுபிடிப்பு, தூக்கத்தில் நடக்கும் வியாதியைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

Sunday, March 6, 2011

தூங்கும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள்




மனிதர்கள் தூங்குவதிலும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லையேல் அது மனித உயிருக்கு பெரும் கேடு விளைவிக்கும் என அமெரிக்க இணையதளத்தில் ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் மனிதன் கடுமையாக உழைத்து நன்றாக தூங்குவது இயல்பான வாழக்கை . சிலர் தூங்குவதையே வாழ்க்கையாக கொண்டுள்ளனர், ஒரு சிலர் தூக்கம் வராமல் சிரமப்படுவர். ஒரு சிலர் நன்றாக தூங்க வேண்டும் என மது அருந்தி விட்டு ஓய்வு எடுப்பதாக சொல்லி தங்களை தாங்களே சமரசம் செய்து கொள்வர். சிலர் தூக்கம் பெரிதல்ல உழைப்பே பெரிது என்ற இலட்சிய வாழ்க்கை வாழ்பவரும் உண்டு. பலவாறான தூக்கத்திற்கு பயன்கள் என்ன ? தீமைகள் என்ன ? இவ்வாறு தூக்கத்தின் சந்தேகங்கள் பலவாறு இருக்கிறது.
தூக்கம் குறித்து யாருக்கும் உறுதியான நிலை தெரிந்தபாடில்லை. இந்நிலையில் அனைவருக்கும் உதவும் வகையில் அமெரிக்காவில் உள்ள சி.என்.என்., இணையதளத்தில் பலரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையிலும் , டாக்டர்கள் கூறும் அறிவுரைகளையும் தொகுத்து தளத்தின் முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
தூக்கத்திற்கென கலிபோர்னியாவில் உருவாக்கப்பட்டுள்ள கிளினிக் சென்டர் கோ. ஆர்டினேட்டர் டாக்டர் . டேனியல் கிரிப்க் கூறுகையில் ; பலர் வீக்எண்ட் நாளில் அதிகம் தூங்க வேண்டும் என நினைக்கின்றனர். இதன்படி தூங்கி எழுந்தவர்கள் பலர் இன்று மிகவும் அசவுகரியமாக இருப்பதாக கூறுகின்றனர். நன்றாக இருந்தது என யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கடந்த காலங்களில் டாக்டர்கள் பலர் மருத்துவ துறையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். ஆனால் இந்த தூக்க பாதிப்பை யாராலும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு யாரும் முன்விழைவதில்லை. நீண்ட நேரம் தூங்குவதால் அவரது பழக்கவழக்கமே மாறிவிடுகிறது.நீண்ட தூக்கத்திற்கு பின்னர் எழுந்ததும் தூக்க நிலையே நீடிப்பதாக உணரப்படுகிறார்கள்.
சிக்காகோ நகர்ப்புற 25 வயது இளைஞர் ஒருவர் தூக்கம் குறித்து கூறுகையில் தான் சரியான அளவு தூங்கி எழுந்தால் அந்த நாள் முழுவதும் மிகவும் சுறு, சுறுப்பாக இருக்கிறது. அதிகமாக தூங்கி எழுந்தால் அந்தநாள் முழுவதும் படு சோம்பேறியாக இருக்கிறது என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பணியில் இருக்கும் போது டே லைட் சிஸ்டம் படி வரும்போது சிலர் கூடுதலாக தூங்க வேண்டியுள்ளது. இந்நேரத்தில் 5 முறை அலாரம் அடித்தாலும் எழுந்திருக்க முடியவில்லை என்கிறார் ஒரு அமெரிக்கவாசி. இதனால் எவ்வித பலனும் கிடைப்பதில்லை. வார நாட்களில் 5 மணி நேரம் தூங்கி விட்டு வார இறுதி நாளில் 12 மணி நேரம் தூங்குவதாக சிலர் சொல்கின்றனர். இவ்வாறு 12 மணி நேரம் தூங்கியதால் நன்றாக இருந்தது என்று கூறமுடியாது என்கின்றனர் .
இது குறித்து இல்லினாய்ஸ் நகர டாக்டர் . லிசாஷிவ்ஸ் கூறுகையில்; அதாவது சிலர் தூக்க வியாதி (தூக்க போதை ) கொண்டவர்களாக இருக்கின்றனர். எந்த நேரமும் தூங்கி கொண்டே இருக்க விரும்புவர். விழித்திருந்தாலும் தூங்கும் மன நிலையில் இருப்பர். இது மிக மோசமானது எப்போது என்ன செய்வான் என்றே தெரியாது.
கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) : அளவுக்கதிகமான தூக்கம் உடல் நலத்திற்கு பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். இது ஆயுள் நாளையும் குறைத்து விடும். இது குறித்து ஆய்வாளர் மைக்கேல் பிரேயூ கூறுகையில் ; சில ஆய்வுகள் மூலம் இதுதொடர்பான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . அதாவது நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும், 10 மணிநேரம் தூங்குபவர்களும் உயிரிழக்கும் அபாயத்திற்குள்ளாவர். இதனையே பிரிட்டிஷ் ஆய்வும் தெரிவிக்கிறது. மற்றொரு ஆய்வில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு ஏனையோரை தவிர கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு ஹைபர்சோமியா என்ற நோய் ஏற்படுகிறது. நீண்டநாள் வாழ்வதும், தூக்கம் என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
குறைவான தூக்கம் எப்படி இருக்கும்: ஒருவருக்கு குறைவான தூக்கம் இருந்திருந்தால் , தூக்கத்திற்கு பின்னரும் அவர்கள் களைப்பாகவே இருப்பர். எனவே மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர்களுக்குரிய தூக்கநேரத்தை சரியாக செலவழிக்க வேண்டும். குறைவான தூக்கம் குறித்து ஒருவர் கூறுகையில் குவானிட்டி ஆப் ஸ்லீப் , குவாலிட்டி ஆப் ஸ்லீப் என்கிறார். இதுதான் அழகான தூக்கம் என்கிறார்.
90 நிமிடம் தூங்கினால் அது ஒரு நல்ல தூக்க நிலையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது ஓரு சைக்கிளாக எடுத்துக்கொள்ளப்படும் இதன்படி ஒரு மனிதர் 4 சைக்கிள் தூங்கினாலே போதுமானது. 360 நிமிடம் ( 6 மணி நேரம் ) மொத்தத்தில் 6 மணி நேரத்திற்கு குறைவில்லாமலும், 9 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மரபு வழி பண்பியல் காரணமாகவும் இந்த பிரச்னை சிலருக்கு வரலாம். தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்களும், அதிகம் தூங்குபவர்களும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம். அதிகம் தூங்காதே., குறைவாகவும் தூங்காதே ., தூங்கு ., உறக்கத்திற்கும் இருக்குது விதி

Monday, December 20, 2010

தூங்கினால் கனவு காணாமல் இருக்கவேண்டுமா? குறட்டை விட பழகிக்கொள்ளுங்கள்

 

குறட்டை விட்டுத்தூங்கினால் கனவு வராது: புதிய ஆய்வு!சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது. அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.
ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம். பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம். குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நித்திரைக்கு முன் சீஸ் cheeseசாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.
கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.
ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.
மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

Friday, December 17, 2010

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?

சின்ன வயசுல, தூக்கத்துல இருக்கும்போது நாம பண்ண சில சேட்டைகளப் (?) பத்தி, அடுத்த நாள் காலையில நம்ம குடும்பத்தாரோ/பள்ளி, கல்லூரியில கூட தங்கியிருந்த பசங்களோ சொல்லி கிண்டல் செய்யும்போது, “ஏய் நான் ஒன்னும் அப்படியெல்லாம் பண்ணல, சும்மா பொய் சொல்லாதீங்கப்பா”ன்னு சொல்றவங்ககிட்ட வாய்ச்சவடால் விட்டு சமாளிச்சிடுவோம் (?).
ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சி, தனியா நாமளே யோசிச்சுப் பார்த்துட்டு, “ஐய்யீய்ய…..நேத்து தூங்கும்போது, நாம இப்படியா செஞ்சிட்டோம்?!”னு நம்மள நாமே நொந்துக்கிட்ட அனுபவம், கிட்டத்தட்ட நம்ம எல்லாருக்குமே இருக்கும்னு நெனக்கிறேன்?! அது என்ன சேட்டைன்னு கேட்டா, பினாத்துறது, பாட்டு பாடுறது (ரெண்டு பாட்டுமேதான்?!), புறண்டு விழுந்து விடுவது, தூக்கத்துலேயே எழுந்து வெளியே நடந்து போறதுன்னு இப்படி நிறைய சொல்லலாம். (எதாவது விட்டுப் போயிருந்தா மறுமொழியில கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க?!)
மேலே சொன்ன தூங்கும்போது செய்யும் சேட்டைகள்ல, “தூக்கத்துல ஏன் சிலர் நடக்கிறாங்க”ன்னுதான் நாம இன்றைய பதிவுல  பார்க்கப்போறோம். ஆனா, மேலே நான் சொல்லாத, ஒரு சுவாரசியமான சேட்டைய, நான் சின்னவயசுல தூங்கும்போது பண்ணியிருக்கேன். அது என்னன்னு பதிவுச்செய்தியோட முடிவுல சொல்றேன். இப்போ நாம பதிவுச் செய்திக்குப் போகலாமா…..
சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி, அடிப்படையில தூக்கத்தில் எத்தனை வகை இருக்கு, தூக்கத்தில் நடப்பதுன்னா என்னங்கிற ரெண்டு முக்கியமான விஷயங்கள நாம தெரிஞ்சிக்கிறது அவசியம்னு நான் நெனக்கிறேன்.
தூக்கத்தில் எத்தனை வகை இருக்கிறது?
தூக்கம் பற்றிய ஆய்வுலகில் மொத்தம் மூன்று நிலைகள் இருக்கிறது.
1. விழிப்பு நிலை (wakefulness)
2. அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை {(non-REM (rapid eye movement)}
3. அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM sleep)- இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!
தூக்கத்தில் நடப்பது என்றால் என்ன?
தூக்கத்தில் நடப்பது அப்படீங்கிறது, “மனிதர்களின் ஒருவகையான தூண்டப்பட்ட, குழப்பமான மனநிலை”ன்னு சொல்றாரு இதுபற்றிய ஆய்வு செய்த முனைவர் விசேஷ் கபூர். அதாவது, (அறிவியல்பூர்வமா சொல்லனும்னா) தூக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் அதிவேக விழி அசைகளில்லாத தூக்க நிலை அப்படீன்னு அர்த்தம்!
சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?
உண்மையச் சொல்லனும்னா, சிலர் மட்டும் ஏன் தூக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கிறதில்லைங்கிற இந்த கேள்விக்கு இன்னும் திட்டவட்டமான/தெளிவான பதில் தெரியலைங்கிறதுதான் நிதர்சன உண்மை!  இருந்தாலும், மாங்கு மாங்கு ஆராய்ச்சி செஞ்சிட்டு, இப்படித் தெரியலைன்னு, கூச்சப்படாம உதட்டப் பிதுக்கினா இந்த உலகம் நம்மள கொஞ்சங்கூட மதிக்காதுங்கிறதுனால, (மக்களே….இதெல்லாம் மேலிருப்பானோட தற்குறிப்பேற்ற அணிதான் சரிஙகளா?!) செஞ்ச ஆய்வைப் பத்தின ஆய்வறிக்கையில திரு. விசேஷ் கபூர் என்ன சொல்லியிருக்காருன்னா…….

பொதுவா தூக்கத்தில் நடப்பதற்க்கு, குடும்ப மரபனுவியல் சம்பந்தமான காரணங்கள்கூட இருக்கலாமாம்?!  ஆனா,  பெரியவங்கள விட, குழந்தைங்கதான் பெரும்பாலும் தூக்கத்துல நடப்பாங்களாம். அதுக்கு காரணம், குழந்தைங்க தூங்கும்போது, மெதுவான அலை தூக்கம் (low-wave sleep), அதாவது “ஆழமான அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை” அப்படீங்கிற நிலையில்தான் இருப்பாங்களாம். இந்த நிலையிலதான் தூக்கத்துல நடக்கிற செயலே தொடங்குகிறது என்கிறது ஆய்வு?!
இது தவிர்த்த வேறு சில காரணங்களாக ஆய்வுகளில் சொல்லப்படுவது……
1. சரியான தூக்கமின்மை
2. ஜூரம்
3. மன உளைச்சல்
4. சில மருந்துகள் (ஊக்க மருந்துகள், sedatives, hypnotics, antipsychotics)
தூக்கத்தில் நடப்பதால் வரும் பாதிப்புகளும், தவிர்க்கும் வழிமுறைகளும்!
தூக்கத்தில நடப்பதால், விபத்துகள் ஏற்பட்டு நடப்பவருக்கும் பிறருக்கும் உடல் காயங்கள் எற்படலாம். இது தவிர, விவரிக்க முடியாத வித்தியாசமான செயல்களுடன் கூடிய தூக்கத்தில் நடப்பவர்களுக்கு, பெரிய பாதிப்புகள் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு என்பதால், அத்தகையவர்களை குணப்படுத்த வேண்டும் என்கிறார் கபூர்!
தூக்கத்தில் நடக்கும் குறைபாட்டிற்க்கான சில சிகிச்சை முறைகள:
1. ஆரோக்கியமான தூங்கும் பழக்கம். அதாவது, சரியான நேரத்தில் உறங்குவது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பது இப்படி பல
2. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவது (தூக்கத்தினால் கிடைக்கும் ஓய்வை இழக்காமல் இருக்க)
3. இரவில் மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள், அதை அறவே அருந்தாமல் இருப்பது அல்லது குறைத்துக்கொள்வது
4. இது தவிர்த்த, மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மருந்துகளும் கொடுக்கப்படுகிறது!
என்ன நண்பர்களே, ஏன் சிலர் தூக்கத்தில் நடக்கிறாங்கன்னு, இப்போ தெரிஞ்சிக்கிட்டீங்களா?
சரி, இப்போ நான் பதிவு தொடக்கத்துல சொன்ன என்னோட சுவாரசியமான சேட்டைக்கு வருவோம்…..
சின்ன வயசுல, பொதுவா தூங்கும்போது (மத்த (சில?) எல்லார்மாதிரியும், எப்பவாவது) எதையாவது பினாத்துற பழக்கம் எனக்கு இருந்ததுன்னு அம்மா சொல்லுவாங்க. இப்படித்தான் ஒரு முறை பினாத்தும்போது திடீர்னு, ஒரு முழு திருக்குறளையும், அக்ஷ்ரப் பிழையில்லாம அப்படியே சொன்னேனாம்.  என்ன குறள்னு இப்போ சரியா நியாபகம் இல்ல எனக்கு! (எத்தன பேரு இத நம்புவீங்கன்னு எனக்குத் தெரியல. ஏன்னா, நான் சொன்னேன்னு எங்கம்மா சொன்னப்போ நானே நம்பலைங்கிறதுதான் உண்மை!)
தூக்கத்தில் நடப்பது பற்றிய மற்றுமோர் ஆய்வறிக்கையை படிக்க இங்கு செல்லுங்கள்