Showing posts with label FIREFOX. Show all posts
Showing posts with label FIREFOX. Show all posts

Monday, July 4, 2011

வந்து விட்டது.பயர் பாக்ஸ் 5

பயர்பாக்ஸ் பதிப்பு 3, 2008 ஆம் ஆண்டில் வெளியானது. ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு முன் தான் பயர்பாக்ஸ் 4ன் சோதனைத் தொகுப்பு வெளியாகிப் பின்னர் முழுமையான தொகுப்பும் உடனடியாகக் கிடைத்தது. இப்போது பயர்பாக்ஸ் 5 வந்துள்ளது. இது ஏறத்தாழ, பயர்பாக்ஸ் பதிப்பு 4ல் உள்ள பாதுகாப்பு பிரச்னைகளுக்கான தீர்வுகளுடன் அமைக்கப்பட்ட பிரவுசராக உள்ளது. எனவே பயர்பாக்ஸ் பதிப்பு 4ல் குறை காண்பவர்கள், அதற்குத் தீர்வாக பேட்ச் அப் பைல் எதனையும் எதிர்பார்க்காமல், பதிப்பு 5னை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
மொஸில்லா தான் அறிவித்த படியே, பயர்பாக்ஸ் பதிப்பு 5னை சென்ற ஜூன் 21 அன்று வெளியிட்டது. பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த ஒரு தொகுப்பும், ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் பயன்படுத்த ஒரு தொகுப்புமாய், இரண்டு பிரவுசர்கள் வெளியாகியுள்ளன. பயர்பாக்ஸ் பதிப்பு 4 வெளியாகி சில நாட்களிலேயே இது வெளியாகியுள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. விண்டோஸ். மேக் சிஸ்டம், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் போன் என அனைத்து வகை கம்ப்யூட்டர் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் பயர்பாக்ஸ் 5 வெளியாகியுள்ளது. 

முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரவுசரரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகவே பயர்பாக்ஸ் வடிவமைப்பும் வெளியிடுவதும் இருந்து வந்தன. இப்போது கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசருடன் மொஸில்லா போட்டியிட வேண்டியுள்ளது. எனவே கூகுள் போலவே, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய பிரவுசர் வெளியிடுவதை வழக்கமாக மொஸில்லா கொண்டுள்ளது.
இன்டர்நெட் உலகம் மிக வேகமாக மாற்றங்களை அடைந்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்க, புதிய மாற்றங்களுடன் பிரவுசர்களை மக்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என, 5 ஆம் பதிப்பினை வெளியிடுகையில், மொஸில்லா தலைமை நிர்வாகி கேரி கொவாக்ஸ் குறிப்பிட்டார்.

இந்த தொகுப்பில் உள்ள புதிய அம்சங்கள்:

1.சி.எஸ்.எஸ். அனிமேஷன்களை எளிதாக இயக்கலாம். இதனால் இணைய ஆப்ஜெக்ட்களை திரையைச் சுற்றி அமைக்கலாம். இதனால் டைனமிக் என்ற முறையில் இயங்கும் இணைய தளங்களை எளிதாகப் பார்க்கலாம்.

2. இணையத்தில் உலா வருகையில், நம்மைப் பின்பற்றாமல் பிரவுசர் இயங்க வேண்டும். விளம்பரம் மற்றும் பிற சுயநல வேலைகளுக்கு நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களை, நாம் செல்லும் இணைய தளங்களை அறியும் வகையில் இயக்கங்கள் அமைந்திடும். இதனை இந்த பிரவுசர் தடுக்கிறது. ஆண்ட்ராய்ட் போனுக்கான பிரவுசர் தொகுப்பிலும் இந்த தடுப்பு வசதி தரப்பட்டுள்ளது.

3. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில், இரு பரிமாணப்படங்களைத் தரும் கேன்வாஸ் (Canvas) தொழில் நுட்பம் இந்த பிரவுசரில் தரப்பட்டுள்ளது. 
4. ஆட் ஆன் பில்டர் (Addon Builder) என்ற ஒரு வசதி இதில் இணைக்கப் பட்டுள்ளது. இது இன்னும் சோதனை முயற்சியிலேயே உள்ளதாகக் கூறப் படுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் எக்ஸ்டன்ஷன் எழுதுவதனை இது எளிதாக்கும்.
5.பிரவுசர் இயக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 இணைய தளங்களை ஒரே நேரத்தில் இதில் திறந்து வைத்து இயக்கினாலும், குறைந்த அளவிலான ராம் மெமரியையே இது பயன்படுத்துகிறது.

6. இதில் ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் வேகம் மற்றும் முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தனியாக அடையாளம் கண்டு நாம் அறிய முடியாது. ஆனால் பெரிய அளவில், அனைத்து வகை செயல்பாடு களிலும் விரும்பத்தக்க மாற்றங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சென்ற பதிப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்திடும் வகையில் உருவாக்கப்பட்டவையே.

7. இது ஒரு வேகமான, பாதுகாப்பான மற்றும் திறன் மிக்கது என பிரவுசர் களுக்கான சோதனைகளில் தெரிய வந்துள்ளது. தேவையற்ற விளம்பரங் களை இதில் இணைந்துள்ள ஆட் பிளாக்கர் என்னும் விளம்பரத் தடுப்பு புரோகிராம் தடுக்கிறது.

8. ஒரே விண்டோவில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைத் திறந்து இயக்கலாம். பாதுகாப்பினை முன்னிட்டு, கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் களைத் தடுப் பதற்காக, ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை இந்த பிரவுசர் அனுமதிப்பதில்லை.
ஓப்பன் சோர்ஸ் பிரவுசர்களைத் தந்து வரும் மொஸில்லா, தன் பதிப்பு 4ஐ முற்றிலுமாக பெரிய அளவில் மாற்றி அமைத்திருந்தது. அந்த பிரவுசர் 20 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டது என மொஸில்லா அறிவித்திருந்தது. இனி தொடர்ந்து, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து பிரவுசர்கள் வந்தாலும், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட இணைய தளங்கள், புதியனவற்றில் இயங்கு வதற்குத் தடை இருக்காது. பயர்பாக்ஸ் 4 அடிக்கடி கிராஷ் ஆவதாகப் பலர் புகார் அளித்திருந்தனர். பதிப்பு 5 அதனைச் சரி செய்துள்ளது. அது மட்டுமின்றி, மொஸில்லா நிறுவனம், இனி பயர்பாக்ஸ் 4 பிரச்னைகளுக்குத் தீர்வளிக்காது. தன் வாடிக்கையாளர்களுக்கு இதனைக் கூறி, பயர்பாக்ஸ் பதிப்பு 5னை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துமாறு மொஸில்லா கூறியுள்ளது. இதுவரை பயன்படுத்தி வந்த ஆட் ஆன் எக்ஸ்டன்ஸன் புரோகிராம்கள், பதிப்பு 5லும் இணைந்து செயல்படும்.

வர இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 6,7,8, 9, 10 ஆகியவையும் முக்கியமானவை யாகவே இருக்கும். இருப்பினும் இந்த பயர்பாக்ஸ் பதிப்பு 5 மட்டுமே, ஆரவாரத்துடன் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்து பிரவுசர்கள் வர இருப்பதால், இணையதள வடிவமைப் பாளர்களும் ஒரு எதிர்பார்ப்பில் இருப்பார் கள். மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள் என மொஸில்லா தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் அடுத்த பதிப்பினை எதிர்பார்க்கலாம்.

Sunday, June 26, 2011

பயர்பாக்ஸ்-சின் புதிய எக்ஸ்டென்ஷன் புரோகிராம்கள்

பயர்பாக்ஸ் ஒரு ஓப்பன் சோர்ஸ் பிரவுசர் என்பதால், பலரும் அதன் இயக்க வடிவமைப்பு குறியீடுகளைப் பெற்று, கூடுதல் பயன்பாட்டிற்கென ஆயிரக்கணக்கில் எக்ஸ்டென்ஷன் புரோகிராம்களைத் தந்துள்ளனர். இவை அனைத்தும் இணையத்தில் இலவசமாகவே கிடைப் பதால், பலரும் இவற்றை டவுண்லோட் செய்கின்றனர்; இன்ஸ்டால் செய்கின்றனர்.
ஆனால் முழுமையாகப் பயன்படுத்து கிறார்களா, என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் கிடைக்கும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் களில் நமக்கு அவசியமாய்த் தேவைப்படுபவை எவை என்று பலரும் அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான். இங்கு பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பற்றி விளக்கக் குறிப்புகளைப் பார்க்கலாம். இவற்றைத் தேர்ந்தெடுக்கையில், செயலாற்றத்தில் விரைவு, செயல் திறன் அதிகரித்து நேரத்தைக் குறைத்திடும் வசதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

1.எவர்நோட் (Evernote): இன்டர்நெட்டில் தளங்களில் உலா வருகையில், இதன் மீது ஒரு சிறிய குறிப்பினை எழுதி வைத்து, பின்னர் நேரம் கிடைக்கும்போது பார்த்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் வரும். எப்படி தளங்களில் உள்ள இணையப் பக்கங்களில் எழுதி வைப்பது? அப்படியே எழுதி வைத்தாலும், மீண்டும் அதனைப் பார்க்கையில், அப்படியே இருக்குமா? என்ற சந்தேகமும் கேள்விக் குறியும் வரலாம். அப்படி ஒரு வசதியைத் தான் Evernote என்னும் எக்ஸ்டன்ஷன் தருகிறது. எந்த ஓர் இணைய தளத்திலும் இதனைப் பயன்படுத்தி குறிப்புகளை எழுதி வைக்கலாம். மீண்டும் அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், அக்குறிப்புகள் அங்கேயே இருக்கும். தளங்களை மொபைல் போன் வழியாகப் பார்வையிட்டாலும் அவை கிடைக்கும். தள முகவரிhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/evernotewebclipper
2. கிரீஸ் மங்க்கி (Greasemonkey): இந்த எக்ஸ்டென்ஷனைப் பயன்படுத்தி, இணையத் தேடலுக்கு வசதி தரும் குறியீடுகளை எழுதிக்கொள்ளலாம். தேடல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளை உருவாக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, டூல்பாரில் மியூசிக் கட்டுப்படுத்தும் பட்டன்களை உருவாக்கலாம். ஒருமுறை இதனை டவுண்லோட் செய்தவுடன், அதிகமான எண்ணிக்கையில் ஸ்கிரிப்ட் கள் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜிமெயில் ஸ்டார்ட்டர் ஸ்கிரிப்ட் (Gmail Starter Script) என்னும் ஸ்கிரிப்ட், ஜிமெயில் தளத்தினை, ஒரு பெட்டிக்குள் வைத்துப் பார்க்காமல், திரை முழுவதும் பார்க்க வசதி செய்து தருகிறது. தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/search/?q=Greasemonkey&cat=all&x=8&y =17

3.எக்ஸ்மார்க்ஸ் (Xmarks): டெஸ்க்டாப், ஐபோன், லேப்டாப், டேப்ளட் பி.சி. என அனைத்துவகை சாதனங்களிலும் இன்டர் நெட் உலா வருகிறீர்களா! அப்படியானால், நீங்கள் குறித்து வைத்த தளங்களின் புக்மார்க்குகளை, எப்படி அனைத்து கம்ப்யூட்டர்களிலும் எளிதாகப் பெற முடியும்? இந்த வகையில் உங்களுக்கு உதவுவதுதான் இந்த எக்ஸ்மார்க்ஸ் எக்ஸ்டென்ஷன். புக்மார்க் மட்டுமின்றி உங்கள் பாஸ்வேர்ட் களையும் அனைத்திற்குமாக ஒருங்கிணைத்துத் தரும் வேலையினை இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் மேற்கொள்கிறது. வெவ்வேறு பிரவுசர்களுக்கிடையேயும் இவற்றை இணைத்து, ஒருங்கிணைத்துத் தரும். தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ addon/xmarkssync/ 

4. ஸ்பீட் டயல் (Speed Dial): நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில தளங்களைக் கட்டாயம் தினந்தோறும் பார்த்து பயன்படுத்துபவர்களா? அப்படியானால், அந்த தளங்களை, சொடுக்குப் போட்ட நேரத்தில் உங்களுக்குத் தருவது ஸ்பீட் டயல் எக்ஸ்டன்ஷன். இந்த எக்ஸ்டன்ஷன் அந்த தளங்களை எல்லாம் ஒரு டேப்பில் அமைத்துத் தருகிறது. சிறிய படங்களாக அவற்றின் முகப்பு தோற்றத்தினையும் காட்டுகிறது. இவை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்யப்படுவதும் இதன் சிறப்பு. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q= Speed+Dial&cat=all&x=25&y=10

5. ரீட் இட் லேட்டர் (Read It Later): விரைவாக உங்கள் விமானம் அல்லது ட்ரெயினில் ஏறிப் பயணம் செய்திடப் புறப்படுகிறீர்கள். அப்போது பார்க்கும் இணையத்தில் உள்ள கட்டுரை மற்றும் தளம் உங்களுக்கு சேவ்செய்யப்பட்டு பின்னர் படிக்கக் கிடைக்க வேண்டும் என்று எண்ணு கிறீர்களா? அங்கே உங்களுக்கு இந்த ரீட் இட் லேட்டர் என்ற எக்ஸ்டன்ஷன் உதவும். ஒரே ஒரு கிளிக்கில், பெரிய கட்டுரையாக இருந்தாலும், நீளமான தளமாக இருந்தாலும் அவற்றை, இந்த எக்ஸ்டன்ஷன் காப்பி செய்து பின்னர் படிக்கத்தருகிறது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/ ?q=Read+It+Later&cat=all&x=20&y=14

6. ஈஸி யு-ட்யூப் வீடியோ டவுண்லோடர் (Easy You Tube Video Downloader): வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், யு-ட்யூப் வீடியோ தொடர்ந்து ஸ்ட்ரீம் ஆகாது. எனவே யு-ட்யூப் போன்ற வீடியோ தளங்கள் நம் எதிர்பார்ப்பு களுக்கேற்ப கிடைக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு உதவிக்கு வருவது இந்த ஈஸி யுட்யூப் வீடியோ டவுண்லோடர். யுட்யூப் தளத்திலிருந்து ப்ளாஷ் படங்களை உடனடியாக டவுண்லோட் செய்து, பின்னர் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பார்க்க உதவி செய்கிறது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q =Easy+You+Tube+ Video+Downloader&cat= all&x=16&y=20

7. ஆசம் ஸ்கிரீன் ஷாட் (Awesome Screenshot): ஓர் இணைய தளம் முழுவதுமாக ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டுமா? ஆசம் ஸ்கிரீன் ஷாட் எக்ஸ்டன்ஷனைப் பயன்படுத்தலாம். திரையில் தெரிவது மட்டுமின்றி, அப்போது காட்டப்படாத பக்கம் முழுவதும் சேவ் செய்து இந்த எக்ஸ்டன்ஷன் தரும். இதனை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். அந்த தளங்களின் மீது குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்தலாம். தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/ search/?q=Awesome+Screenshot&cat=all&x =2 3&y=10

8. அட் பிளாக் ப்ளஸ் (Ad Block Plus): பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் களில் இது மிகவும் பிரபலமான ஒன்று. திடீரென எழுந்தும், ஊர்ந்து வந்தும், விரிந்து வந்தும் நம் இணைய பயணத்தில் எரிச்சல் ஊட்டும் விளம்பரங்களை இந்த எக்ஸ்டன்ஷன் தடுக்கிறது. இதனை இறக்கிப் பதிந்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது மிக எளிது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ search/?q=Ad+Blok +Plus&cat=al l&x=23&y=17

மேலே சொல்லப்பட்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் மட்டுமின்றி, மேலும் சிலவும் நமக்கு பயன்தருவதாக இருக்கலாம். இருப்பினும் பொதுவாக, பெரும்பாலோர் விரும்பும் வசதிகளின் அடிப்படையில் இவை தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் தளத்தில் (https://addons.mozilla. org/enUS/firefox) இவற்றைப் பெறலாம். இந்த தளம் சென்று, அதில் காட்டப்படும் தேடல் கட்டத்தில், தேவையானதை டைப் செய்து, பின்னர் கிடைக்கும் மெனுவில் இருந்து தேர்ந்தெடுத்து, பின்னர் அந்த தளம் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

Thursday, December 16, 2010

FIREFOX BROWSER - இல்உள்ள PASSWORD - ஐ REMOVE செய்வது எப்படி?

        நெருப்புநரி உளவியின் மூலமாக வலைப்பக்கங்களை பார்வையிடுகிறோம். இவ்வாறு நாம் வலை பக்கங்களை பாரவையிடும் போது பல தளங்கள் பயனர் கணக்கு இருந்தால் மட்டுமே தனது சேவையினை பயன்படுத்த அனுமதிக்கும். இவ்வாறான சூழ்நிலையில் நாம் பல பயனர் கணக்குகளை பயன்படுத்தி வருகிறோம். நெருப்புநரி உளவியினை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நமது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை சேமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. சாதாரணமாக சொந்த கணினி வைத்திருந்தால் பராவயில்லை ஆனால் அலுவலகத்திலோ அல்லது ப்ரவுசிங் சென்டரிலோ இணையதளத்தினை பார்வையிடும் போது தவறுதலாக Bank அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்ட் நமக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலே கணினியில் பதியப்பட்டுவிடும் இது போன்ற சூழ்நிலையில் நாம் சாதரமாக History யை மட்டும் கிளியர் செய்தால் போதாது, எனவே இதுபோன்ற பதியப்பட்ட பாஸ்வேர்டினையும் அகற்ற வேண்டும்.

இதற்கு Tools > Options என்பதை தேர்வு செய்யவும். தோன்றும் சாளர பெட்டியில் Security என்னும் டேப்பினை தேர்வு செய்யவும். அதில் Saved Passwords என்னும் பொத்தானை அழுத்தவும்.



இப்போது நெருப்புநரி உளவியில் பதியப்பட்ட கடவுச்சொற்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். அவற்றை தேர்வு செய்து கொண்டு Remove All என்னும் பொத்தானை அழுத்தவும் இப்போது நெருப்புநரி உளவியில் பதியப்பட்ட கடவுச்சொல்லானது நீக்கப்பட்டுவிடும், இனி நீங்கள் எந்தவித பயமும்  இன்றி இணையதளத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உலாவர முடியும்.

Monday, December 13, 2010

FireFox: பிற மொழி தளங்களை தாய்மொழியில் படிக்க பயனுள்ள பன்மொழி நீட்சி!


                                   "யாதும் ஊரே; யாவரும் கேளீர்;"                                                                      புறநானூறு - கணியன் பூங்குன்றனார்

நம்மில் பெரும்பாலோனோர் தங்களது தாய்மொழியும் அத்துடன் ஆங்கிலம் மட்டுமே எழுதப்படிக்க தெரிந்துள்ளோம். ஆனால் ஒரு சில மொழிகளை மற்றவர்கள் பேசும் பொழுது நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இன்றைய இணைய உலகில் பல மொழிகளிலும் தரமான வலைப்பக்கங்கள் விரவிக் கிடக்கின்றன. நமது தாய்மொழி  அல்லது நம்மால் படிக்க தெரிந்த மொழி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நம்மால் வலைப்பக்கங்களில் படிக்க முடிகிறது. 


ஆனால் பெரும்பாலான ஆங்கிலம் தவிர்த்த வலைப்பக்கங்கள் Transliteration முறையிலேயே குறிப்பிட்ட மொழிகளில் உருவாக்கப்படுகின்றன. இப்படியாக உள்ள பல பயனுள்ள வேற்றுமொழி (மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு...) வலைப்பக்கங்களை எளிதாக படிக்க நெருப்பு நரி உலாவிக்கான ஒரு பயனுள்ள நீட்சி உங்களுக்காக.. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 

இந்த நீட்சி உங்களுக்கு எப்படி உதவப் போகிறது என்பதை பார்க்கலாம். உதாரணமாக உங்களுக்கு மலையாள மொழியின் வார்த்தைகளுக்கான பொருள் உங்களுக்கு தெரியும். மற்றவர்கள் அம்மொழியில் பேசும் பொழுது உங்களால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் மலையாளம் படிக்க வராது என்று வைத்துக் கொள்வோம். மலையாளத்தில் உள்ள வலைப்பக்கத்தை Transliteration முறையில் தமிழில் மாற்றிக்கொண்டால் அதை எளிதாக படித்துக் கொள்ள இயலும். இதைத்தான் இந்த NHM IndicTransliterator நீட்சி செய்கிறது. 



இந்த நீட்சி தற்பொழுது Tamil, Telugu, Hindi, Kannada, Malayalam, Diacritic, Roman ஆகிய 7 மொழிகளில் சிறப்பாக வேலை செய்கிறது. இந்த நீட்சியை கீழே உள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கி உங்கள் நெருப்புநரி உலாவியில் நிறுவிக்கொள்ளும் பொழுது, வரும் பிழைச்செய்தியில் Add to FireFox பொத்தானை க்ளிக் செய்து நிறுவிய பிறகு உலாவியை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும்.


இந்த நீட்சிக்கான விளக்கத்தை மலையாள வலைபக்கத்தில் இயக்கி பார்க்கலாம் (பிற மொழிகளில் எதுவும் சரியாக தெரியாது.. ஹி.. ஹி! ) நான் இதை சோதித்துப் பார்க்க www.mangalam.com என்ற மலையாள பத்திரிக்கையின் வலைபக்கத்தை திறந்துள்ளேன்.


இந்த பக்கத்தில் ஏதாவது டெக்ஸ்டின் மீது மவுசின் வலது பட்டனை க்ளிக் செய்து, திறக்கும் Context menu வில், NHM Transliterator -> Malayalam to -> Tamil என்பதை க்ளிக் செய்யுங்கள்.



அவ்வளவுதான் இனி ஒரு சில நொடிகளில் மொழிமாற்றத்தை திரையில் காணலாம்.



இதே போன்று பிறமொழி தளங்களிலும் செய்து பயன் பெறலாம்.


சரி இந்த வழியில் நமது தமிழ் வலைப்பூக்களை பிறமொழியில் கண்டால் எப்படி இருக்கும்.. முயற்சித்துப் பாருங்கள்.

FIREFOX பயன்படுத்துபவர்கள் இதுவரை அறிந்திடாத பயன்கள் மற்றும் SHORTCUT கீஸ்

http://www.pocket-lint.com/images/firefox.gif

FIREFOX பயன்படுத்தும் பலர் இந்த சேவையை அறிந்திடாமல் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். சரி இபோது ஒவ்வொன்றாக பார்ப்போம்.



☼ நமது வீட்டில் சிறுவர்கள் நமக்கு தெரியாமல் ADULT இணையத்தளங்களை பார்த்துக்கொண்டு இருப்பார்கள் நம்மை பார்த்தவுடன் மூடிவிட்டு வேறு ஒரு தளத்தை ஓபன் செய்து பார்ப்பது போல் நடிப்பார்கள் அதனை கண்டுபிடிக்க CTRL+SHIFT+T அழுத்தினால் இதற்க்கு முன் பயன்படுத்திய தளம் தானாக ஓபன் ஆகிவிடும். இது உங்களுக்கும் தேவைப்படும் தவறுதலாக ஒருத்தலத்தை மூடிவிட்டால் இதை பயன்படுத்தலாம்.


☼ ஒருவேளை ஒரே டேபிள்(TAB ) பயன்படுத்தி இருந்தால் SHIFT + SCROLL DOWN


☼ நாம் வெளியூர் சென்றிருந்தால் சென்ற நாட்கள் முழுவ்வதும் என்ன தளத்தை பயன்ப்படுத்தினார்கள் என்று பார்க்க CTRL+H அழுத்தி பிரௌசரில் பதிவாகிவுள்ள தளங்களின் முகவரியை பார்க்கலாம்.


☼ புக்மார்க் செய்ய CTRL+D


☼ FULLSCREEN பார்க்க F11


☼ நாம் இணையத்தளத்தில் படிக்கும்போது ஒவ்வொரு வரியாக படிக்க ALT+SCROLL DOWN செய்யவும்


☼ படிக்கும்போது கண்ணாடி போட்டு படிப்பவர்கள் CTRL + + அழுத்தவும்.



☼ PRINT செய்ய CTRL+P


☼ படிக்கும்போது ஒவ்வொரு PAGE ஆக படிக்க PAGE DOWN அல்லது SPACEBAR


☼ கடைசி பக்கத்தை படிக்க END அழுத்தவும்


☼ முதல் பக்கத்தை படிக்க HOME அழுத்தவும்.


☼ எடுத்த எடுப்பில் அட்ரஸ் பாருக்கு செல்ல CTRL+L


☼ லிங்குகள் நியூ TAB ல் ஓபன் ஆக லிங்க் மீது வைத்து ஸ்க்ரோல்(MIDDLE CLICK) கிளிக் செய்யவும்(இதுவரை அறிந்திடாத ஒன்று)


☼ அட்ரஸ் இன்னொரு TAB ல் ஓபன் ஆக ALT+ENTER.


☼ அடுத்த TAB க்கு போக CTRL+TAB



☼ புதிதாக TAB ஓபன் செய்ய CTRL+T


☼ ஒவ்வொரு TAB ஆக மூட CTRL+W


☼ ப்ரௌசறை(BROWSER ) CLOSE செய்ய ALT+F4 அல்லது CTRL+SHIFT+F4


ஆர்வக்கோளாரில் கடைசி டிபஸ்ஸை பயன்படுத்திடாதிர்கள் ஒட்டு போட்டு அடுத்தவங்களையும் படிக்கவைங்க.


இன்னும் பல டிப்ஸ் அடுத்த பதிவில் தொடரும்.