பேஸ்புக் சமூக வலையமைப்பானது கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுமென ஜனவரி மாதமளவில் செய்தி வெளியாகியிருந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
தற்போது பேஸ்புக் சேவையை ‘Anonymous’ என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு தாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதியுடன் பேஸ்புக் சேவை நிறைவிற்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தற்போதே அது தொடர்பில் தகவல்கள் வெளியுலகிற்கு கசிய ஆரம்பித்துள்ளன.
‘ ஒபரேஷன் பேஸ்புக்’ என இத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக் குழு அறிவித்துள்ளது.
இது வெறும் புரளியெனக் கூறியுள்ள இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் இத்தகவலை மறுத்துள்ளன.
இருந்த போதிலும் குறித்த குழுவே கடந்த சில காலங்களாக பல முக்கிய நிறுவனங்களின் குறிப்பாக மாஸ்டர் கார்ட், பேபேல் மற்றும் அமெசொன் ஆகியவற்றின் இணையக்கட்டமைப்புகளை ஹெக்கிங் செய்திருந்தது.
பேஸ்புக் தொடர்பில் கடுமையாக சாடியுள்ள அவ்வமைப்பு ஷூக்கர் பேர்க் எமது விபரங்கள் மற்றும் தகவல்களின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
நமது தகவல்களை பேஸ்புக் அரசாங்கம் மற்றும் உளவு நிறுவங்களுக்கு விற்பனை செய்வதாகவும் அக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
பொதுவாக ‘Anonymous’ குழு ஓர் இணையக் கட்டமைப்பினைத் தாக்குவதற்கு சில தினங்களுக்கு முன்னரே இது தொடர்பிலான அறிவிப்பினை மேற்கொள்ளும்.
இந்நிலையில் தற்போது பல நாட்களுக்கு முன்னரே அக்குழு அறிவிப்பை மேற்கொண்டுள்ளது
எவ்வாறாயினும் இச் செய்தியானது பேஸ்புக் பாவனையாளர்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்துவது உறுதி.
|
No comments:
Post a Comment