Thursday, March 24, 2011

ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெ.வுக்கு ரூ. 51 கோடி மதிப்பிலான சொத்துக்கள்

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனக்கு ரூ. 51 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


வேட்பு மனு தாக்கலின்போது வேட்பு மனுவுடன் சேர்த்து ஜெயலலிதா இணைத்துள்ள சொத்துக் கணக்கு விவரம் தெரிய வந்துள்ளது.

அதன்படி ஜெயலலிதாவின் சொத்து விவரம்:

மொத்த சொத்து மதிப்பு ரூ. 51 கோடி.

அசையும் சொத்துக்கள் - ரூ. 13,3,27,979.
அசையா சொத்துக்கள் - ரூ. 38,37,40,000
ரொக்கக் கையிருப்பு - ரூ. 25,000

கடந்த முறை ஜெயலலிதா தனது மொத்த சொத்தாக கணக்கில் காட்டியிருந்ததை விட இந்த முறை 2 மடங்கு சொத்துக்கள் அதிகரித்துள்ளன.

No comments:

Post a Comment