Thursday, March 24, 2011

'சவுண்ட்' செக்ஸ்- லண்டன் பெண் கைது!


கணவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டபோது பெரும் சத்தம் எழுப்பி அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு செய்ததாக லண்டனைச் சேர்ந்த 49 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்து ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவருக்கு என்ன தண்டனை தருவது என்பது குறித்து கோர்ட் விரைவில் முடிவு செய்யவுள்ளதாம்.

சத்தம் போட்டு செக்ஸ் வைத்து சிக்குவது இப்பெண்ணுக்கு இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை மாட்டி சிறைக்குச் சென்று வந்தவர்.

அவரது பெயர் கரோலின் கார்ட்ரைட். கடந்த ஆண்டு சத்தம் போட்டபடி செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட்டதால் இவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் இவருக்கு செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்ட்டது. தனது வீட்டில் மட்டுமல்ல, இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் எங்குமே இவர் செக்ஸ் உறவில் ஈடுபடக் கூடாது என்று அதிரடியாக தடை போட்டு விட்டனர்.

பின்னர் அவர் ஜாமீன் பெற்று ஹாஸ்டலுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நீதிமன்றம் பிறப்பித்த மூன்று தடை உத்தரவை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதை ஜனவரி மாதம் ஒத்துக் கொண்டார் கரோலின். இதையடுத்து எட்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 12 மாத செக்ஸ் தடை, 12 மாத கண்காணிப்பு என கிடுக்கிப் பிடி போட்டது கோர்ட்.

இந்த நிலையில்தான் மீண்டும் சத்த செக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கரோலின்.

இதையடுத்து மீண்டும் கரோலின் கைது செய்யப்பட்டார். நீதிபதி முன்பு நிறுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி தற்போது கரோலினை ஒரு மகளிர் விடுதிக்கு அனுப்பி வைத்து விட்டார். கணவரை சந்திக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் கரோலினுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும்.

இதுகுறித்து கரோலின் கூறுகையில், இது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. முதல் சம்பவத்திற்குப் பின்னர் நான் படுக்கை அறையில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விட்டேன். கீழ் அறையில் உள்ள சமையல் அறைப் பகுதிக்கு எனது படுக்கையை இடம் மாற்றி விட்டேன்.

அங்கு என்ன செய்தாலும் வெளியில் சத்தமே கேட்காது. மேலும் சம்பவ நாளன்று நான் வெறும் பத்து நிமிடம் மட்டுமே செக்ஸ் உறவில் ஈடுபட்டேன். முன்பெல்லாம் நான் குறைந்தது 2 மணி நேரமாவது செக்ஸ் வைத்துக் கொள்வேன். ஆனால் பிரச்சினை ஏற்பட்டதால் கட்டுக்கோப்புடன் நடந்து வருகிறேன்.

இந்த நிலையில் வெறும் பத்து நிமிட உறவால் அக்கம் பக்கத்தினருக்குத் தொல்லையாகி விட்டது என்றால் எப்படி. இது நியாயமே இல்லை என்று குமுறுகிறார் கரோலின்.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாகே கரோலின் வைத்துக் கொள்ளும் சத்தம் மிகுந்த செக்ஸ் செயல்பாடுகளால் பெரும் தொல்லையாக இருப்பதாக அக்கம்பக்கத்தினர் குறை கூறுகிறார்கள்.

நாட்டில் வேறு யாருமே செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில்லையா. ஆனால் கரோலின் மட்டும் தேவையில்லாமல் கத்துவார், சிரிப்பார், கூக்குரலிடுவார். இது மிகவும் அருவருப்பாக உள்ளது என்கிறார்கள் அவர்கள்.

தொடர் வழக்குகளால் தனது திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதாக புலம்புகிறார் கரோலின்.

No comments:

Post a Comment