Showing posts with label இண்டர்நெட். Show all posts
Showing posts with label இண்டர்நெட். Show all posts

Saturday, July 9, 2011

இனி டாட் காம் தேவையிலை. டாட் உங்கள் பெயர்

காம் (டாட் காம்) என்பதக்குப் பதில் .கோக், .இன்டியா, .மாருதி என இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.


சிங்கப்பூரில் இன்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் இணையத்தில் அடுத்தகட்டமாக பெயர் புரட்சி ஏற்படவுள்ளது.

இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். இப்போது உலகின் பெரும்பாலான இணையத்தளங்கள் .com, .net, .org ஆகிய துணை வார்த்தைகளுடன் தான் முடிகின்றன.

இனிமேல் எந்த வார்த்தையையும் துணைப் பெயராக வைத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, போர்ட் கார் நிறுவனம் தனது பியஸ்டா கார் குறித்த இணையத்தளத்தின் பெயரை டாட் போர்ட் (.ford) என்ற துணைப் பெயருடன் வைத்துக் கொள்ளலாம்.இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படும் என்றாலும், குழப்பத்துக்கும் பஞ்சமிருக்காது. .காம் என்ற சிம்பிளான பெயரில் தங்களது இணையத்தளம், துணைத் தளங்களை எல்லாம் எளிதாக பதிவு செய்த நிறுவனங்கள் இனிமேல் தங்களது நிறுவனத்தின் பெயரில் ஏராளமான டொமைன்களை பதிவு செய்ய வேண்டிய நிலை வரலாம்.

இதற்கான செலவும் அதிகமாகும். அதே போல நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து, டொமைனை பிளாக் செய்து வைத்துக் கொண்டு, அதை மூச்சு முட்டும் விலைக்கு விற்க முயலும் ஆசாமிகளிடம் நிறுவனங்கள் சிக்கித் தவிப்பதும் அதிகரிக்கும்.

முகவரிகளுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்கள்

உலாவியில் ஒரு இணையத்தளத்தின் முகவரியைத் தட்டிவிட்டதும், அத்தளத்தின் பக்கங்கள் கணினித்திரையை நிரப்பும் அந்த நொடியில் தொழில்நுட்பங்கள் நடத்தும் அதிரடித் திருப்பங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் நிறைந்த ஈஸ்ட்மென் வண்ண திரைக்காவியத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

இணையதள முகவரி என்பது பயனாளர்களின் வசதிக்காக மட்டுமே. உலாவியில் உள்ளிட்ட பிறகு, அது வலையிணைப்பு முகவர் எண்களாக (IP address) மாற்றப்பட்டே அதன் பக்கங்கள் பெறப்படுகின்றன. கிட்டத்தட்ட செல்பேசிகளின் தொலைபேசிப் புத்தகம் (phone books) போல, எண்களை நினைவில் நிறுத்தும் சிரமத்தை தவிர்த்துக் கொடுக்கும் எளிய வழிமுறை. இவ்விடத்தில் வலையிணைப்பு முகவர் எண்களின் கட்டமைப்பை நினைவில் கொள்க (xxx.xxx.xxx.xxx). மிக எளிதாகத் தோன்றினாலும், இதற்குப்பின் எவ்வளவு தொழிநுட்ப வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன,



 எத்தனை பேரின் மெனக்கெடல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே இப்பதிவு. நாம் செல்லும் தளத்தின் முகவர் எண் என்பது தளத்தின் வழங்கியைக் குறிக்கும் (web server), அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது?. அதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, நமக்கு நாமே திட்டத்தின் படி start->run->cmd என்ற இடத்திற்கு சென்று ping என்ற கட்டளையுடன் தளத்தின் முகவரியை உள்ளிடவும். (பார்க்க படம்).

இரண்டு, பாரம்பரிய வழக்கப்படி நமது விருப்பத்தை நிறைவு செய்யும் பொருட்டு தளங்களின் முகவர் எண்ணைக் கண்டுபிடிக்கும் வசதியை ஏராளமான தளங்கள் இலவசமாக அளிக்கின்றன. சமயத்தில் முகவர் எண்ணுடன் அதன் இருப்பிடத்தையும் சேர்த்து வழங்குவது கூடுதல் சிறப்பு. உ.தா.http://www.selfseo.com/find_ip_address_of_a_website.php . மூன்று, தளத்தை நடத்துபவரை தொடர்பு கொண்டு கேட்பதன் மூலம் கிடைக்க வாய்ப்பிருப்பதால் முயற்சித்துப் பார்க்கலாம் :).இணையம் என்னும் கடலில் கோடிக்கணக்கான தளங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான புதிய இணையத்தளங்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. பல நூறு பெயர்கள் செயலிழக்கின்றன. இவற்றுக்கான முகவர் எண்களை யார் பராமரிக்கிறார்கள், எப்படி பழையன கழிதலையும், புதியன புகுதலையும் அவற்றிற்கேற்ப பிரதிபலிக்கிறார்கள் என்ற ஆச்சர்யம் தோன்றுவது இயல்பே.

 
இணைய தள முகவரிகளைப் பதிவு செய்பவர்கள் (domain name registrars), இணைய தள முகவரிகளையும் அவற்றுக்கான முகவர் எண்களை நிர்வகிக்கும் இணையத் தகவல் மையங்கள் (network information centers - nic), இணைய முகவரிகளையும், அவற்றுக்கான முகவர் எண்களையும் சேமித்து வைத்து தேவைக்கேற்ப பயனளார்களுக்கு இணைய பக்கங்களை வழங்கத் துணை புரியும் இணைய முகவரி வழங்கிகள் (domain name system servers - dns servers), மைய வழங்கிகள் மற்றும் இவையனைத்தையும் கட்டி மேய்க்கும் ICANN (internet corporation for assigned names and numbers) இவர்களனைவரின் கூட்டு முயற்சியில் தான் நாம் முதுகுக்கு ஏதுவான நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வசதியாக உலாவியில் முகவரியைக் கொடுத்து விட்டு இணையப் பக்கங்களைப் பெறுகிறோம்.

மேற்சொன்ன குழுவினர்களின் தலையாய வேலையே, நாள்தோறும் புத்தம் புதிதாக மலரும் இணையத்தளங்கள் மற்றும் அவற்றின் முகவர் எண்களை உலகமெங்கும் உள்ள இணைய முகவரி வழங்கிகளுக்குப் பரப்புவதும் (dns propogation), ஒரு பெயரில் ஒன்றிற்கு மேற்பட்ட இணையதள முகவரிகள் பதியப்படாமல் பார்த்துக் கொள்வதும் தான். இரண்டில் ஒன்று சொதப்பினாலும் மொத்தமும் அலங்கோலமாக வாய்ப்புகள் அதிகம். ஒரு புதிய இணையதளம் ஆரம்பித்து அது உலகம் முழுவதும் பார்வைக்குக் கிடைக்க அதிக பட்சம் மூன்று நாட்களாகலாம் :). அது பார்வையிடப்படும் பயனாளரின் இணைப்பில் உள்ள் இணைய முகவரி வழங்கிகளின் செயல்பாட்டைப் பொருத்தது.


கணினியில் இணையதளத்தைப் பார்வையிடும் முன் நாம் உள்ளிடும் இணையதள முகவரி முதலில் வலையிணைப்பு முகவர் எண்ணாக மாற்றப்பட்டு, அதன் பின் அந்த முகவர் எண்ணுக்குரிய வழங்கியிலிருந்து தேவையான பக்கங்களைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதையும், அவ்வாறு தள முகவரிகள், முகவர் எண்ணாக மாற்றம் பெறுவதை ping கட்டளை மூலம் காணப் பெற்றதையும், கடந்த இரண்டு நாட்களாக ஆழமான ஆன்மீகத்தில் மூழ்கித் திளைத்து மறந்திருக்க வாய்ப்பிருப்பதால் அவற்றை நினைவுறுத்தித் தொடரப்படுகிறது :).

முதலில் தள முகவரிகள் எவ்வாறு முகவர் எண்ணாக மாற்றம் பெறுகிறது?, யார் மாற்றுகிறார்கள்?. இந்த வேலையைச் செய்வது இணைய முகவரி வழங்கிகள் (DNS servers). ஒரு தளத்தின் முகவரியை உலாவியில் உள்ளிட்டதும், உலாவி செய்யும் முதல் வேலை இணைய முகவரி வழங்கிகளைத் தொடர்பு கொண்டு, தேவைப்படும் தளத்தின் முகவர் எண்ணைப் பெற்று, அதனை நோக்கிப் பயணிப்பது தான். இந்த இணைய முகவரி வழங்கிகளில் இந்த நிமிடத்தில் செய்ல்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை தளங்களின் விபரங்களும் இருக்காது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் என்ன நடக்கும்?. வகுப்பறையில் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் போது பேனா மை தீர்ந்து விட்டாலோ அல்லது பேனாவே இல்லாமல் இருந்தாலோ முன்னால் அமர்ந்திருப்பவரிடம் கேட்டுப் பார்ப்போம், அவரிடம் இல்லையென்றால் அவருக்கு முன்னாடி இருப்பவரிடம், அங்கும் இல்லையென்றால் அதுக்கும் முன்னாடி.. இப்படியே சலசலப்பைக் கிளப்பி தொல்லை தாங்க முடியாமல் கடைசியில் பேராசிரியரே 'என்னப்பா வேணும், பேனாவா.. இந்தா' என்று கொடுத்துதவும் சம்பவங்களைக் கடந்திருப்பீர்கள் அல்லது பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அப்படியொரு சங்கிலித்தொடரமைப்பில் தான் இந்த வழங்கிகள் செயல்படுகின்றன.

கேட்கப்படும் தளத்தின் முகவர் எண் விவரங்கள் வழங்கியில் இல்லாத பட்சத்தில் அது மைய வழங்கியிடம் தொடர்பு கொள்ளும், அதிலும் இல்லையென்றால் கேட்கப்படும் இணைய முகவரியின் அதிகாரப்பூர்வ வழங்கியிடம் கேட்கப்படும். அங்கும் இல்லையென்றால் அப்படியொரு தளமே இல்லையென்று உலாவி கணினித் திரையில் புன்னகைக்கும். இவற்றில் மைய வழங்கிகள் பிரதேச அளவில் பல நிலைகளில் உள்ளன. உலக அளவில்ARIN (Canada, United States, some islands of the Pacific) ·RIPE NCC (Europe, parts of Asia) · APNIC (Asia, Pacific region) ·LACNIC (Latin America and the Caribbean) · AfriNIC (Africa) ஆகிய அமைப்புகள் முக்கிய மைய வழங்கிகளாக செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கும் மேலாக இணைய முகவரியின் தலைப்பகுதிக்கேற்ப அதிகாரப்பூர்வ வழங்கிகளும் (authoritative servers) செயல்படுகின்றன. அவைதான் கேட்கப்படும் இணையதளம் இருக்கிறதா, இல்லையா என்ற உறுதியான மற்றும் இறுதியானத் தகவலைத் தருகின்றன.



தள முகவரிகளின் தலைப்பகுதியைப் (top level domains) பொருத்து முகவரிகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன. உ.தா. .com, .org, .net, .biz, .edu etc.... பின்னாளில் இணைய தளங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிய பின் மேலாண்மை வசிதிக்காகப் பல புதிய வகைத் தலைப்பகுதிகள் ICANN அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டது, உ.தா .in,.univ,.uk,.au,.us etc. இது போன்ற ஒவ்வொரு வகைக்கும் ஒரு அதிகாரப்பூர்வ வழங்கி உள்ளது. இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பினை ICANN (internet corporation for assigned names and numbers) சர்வேதச அமைப்பின் கண்காணிப்பின் கீழ் பல நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உ.தா. .com, .org, .net ஆகிய வகைத் தலைப்பகுதியைக் கொண்ட இணையதளங்களுக்கான அதிகாரப்பூர்வ வழங்கியை Network Solutions Inc. என்ற நிறுவனம் நிர்வகிக்கிறது. ஒரு இணையதள முகவரி புதிதாகப் பதிவு செய்யப்படுகிறது என்றால் அதன் தலைப்பகுதி (.com/.net..etc) வகைக்குரிய அதிகாரப்பூர்வ வழங்கியில் அந்த தள முகவரி அந்த தளத்தினுடைய வழங்கியின் முகவர் எண் தகவலோடு சேர்க்கப்பட்டு விடும், எனவே எந்த ஒரு தலைப்பகுதி வகைக்கும் அந்த நொடிவரை செயல்பாட்டில் இருக்கும் அனைத்து தளங்களின் முகவரிகளும் இந்த அதிகாரப் பூர்வ வழங்கிகளில் இருக்கும். ஒவ்வொரு வகைக்கும் ஒரு அதிகாரப்பூர்வ வழங்கி இருப்பதால் தான் ஒரே முகவரியில் இரு தளங்கள் இருக்க சாத்தியப்படுவதில்லை. அதே நேரம் www.example.com மற்றும் www.example.org ஆகிய இரண்டும் வெவ்வேறு வகை என்பதால் இரண்டும் தனித்தனியாக செயல்படுவது சாத்தியமே. அது போன்ற குழப்பங்களை சமாளிக்கவே பெரிய நிறுவனங்கள் தங்கள் தளங்களின் முகவரியை அனைத்து தலைப்பகுதிகளுக்கும் பதிவு செய்து விடுகின்றன. (உ.தா. microsoft.com, microsoft.net, microsoft.org..)


தன்னிடம் தளமுகவரி குறித்த விவரங்கள் இல்லாத நிலையில் இணைய முகவரி வழங்கிகள் எப்படி மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து கேட்டுப்பெறுகிறது என்பது குறித்துப் பார்த்தோம். ஒரு முறை இப்படி பயணித்துப் பெறும் தகவல்களை தற்காலிகமாக இணைய முகவரி வழங்கி தனது நினைவகத்தில் சேமித்து கொள்ளும் (caching). அதுபோக எல்லா இணைய முகவரி வழங்கிகளும் தங்கள் மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து மொத்தமாக அனைத்துத் தகவல்களையும் குறிப்பிட்டக் கால இடைவெளியில் தனது நினைவகத்தில் புதுப்பித்துச் சேமித்துக் கொள்ளும். பயனாளர்களுக்குத் தேவையான தகவல்களை ஒவ்வொரு முறையும் மேல்நிலை வழங்கிகளுக்குச் சென்று தகவல் பெறாமல் தானே வழங்குவதன் மூலம் குறுகிய நேரத்தில் தேவையைப் பூர்த்தி செய்யவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது மேல்நிலை வழங்கிகளில் இருந்து தகவல்களைத் திரட்டிப் புதுப்பித்துக் கொள்வதால் முடிந்தவரை இணையத்தின் தற்கால நிலையினைப் பிரதிபலிக்கவுமே இந்த ஏற்பாடு. அந்த கால இடைவெளியில் உருவாக்கப்படும் புதிய இணையத் தளங்களையோ அல்லது ஒரு வழங்கியிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றப்படும் தளங்களையோ பார்வையிட முற்படும் போது சிரமங்கள் நேருவது உண்டு.

இதில் முதல் நிலை இணைய முகவரி வழங்கிகள் மிகவும் முக்கியம். அவற்றின் செயல்பாட்டுத் திறன், தகவல்களை மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து புதுப்பித்து கொள்ளும் கால இடைவெளி ( பொதுவாக 24 முதல் 72 மணி நேரம் வரை), எந்த அளவிற்கு மேற்கொண்டு பயணிக்காமல் தளத்திற்குரிய முகவர் எண்ணைத் தரமுடிகிறது ஆகியவை பயனாளரின் இணைய அனுபவம் விரைவானதாகவும், சொகுசாகவும் அமைவதற்கு மிக முக்கியம்.


இணையதள முகவரிகளை அவற்றிற்குரிய வலையமைப்பு முகவர் எண்களாக மாற்றித்தரும் முகவரி வழங்கிகள் மற்றும் அவை எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து ஓரளவு புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இப்பகுதியில் ஒவ்வொரு பயனாளரும் தங்களின் முகவரி வழங்கிகள் குறித்தான விவரங்களை அறிந்து கொள்வது பற்றியும், ஒவ்வொரு முறையும் இணைய தளங்களைப் பார்வையிடும் போது எங்கெங்கு பயனாளரின் வேண்டுகோள் பயணிக்கின்றன என்பது குறித்தும், இன்னபிற தகவல்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.


உங்கள் கணினியில் start->run->cmd என்ற இடத்திற்கு சென்று ipconfig/all என்ற கட்டளையினை வழங்கினால் உங்கள் வலையமைப்புத் தொடர்பு குறித்த ஜாதகத்தினைப் பெற்று கிரக நிலை குறித்து அறிந்து கொண்டு மகிழலாம். (பார்க்க படம்). அவற்றுள் DNS servers என்ற தலைப்பில் உங்களின் முதல் நிலை இணைய முகவரி வழங்கியின் வலையிணைப்பு முகவர் எண்ணைக் காணலாம். அனேக முகவரி வழங்கிகள் உங்களுக்கான இணையத்தொடர்பு வழங்கும் நிறுவனங்களாலேயே நிர்வக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையினைப் பொருத்து வழங்கிகளின் எண்ணிக்கை இருக்கும். துரிதமான சேவையின் பொருட்டு சுழல்முறையில் வேண்டுகோள்கள் வழங்கிகளுக்கிடையே பிரித்தளிக்கப்படும்.


அதேபோல் ஒரு இணையதள முகவரியினை உலாவியில் உள்ளிடும் போது உங்கள் வேண்டுகோள் எங்கெங்கெல்லாம் பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ள start->cmd->run என்ற இடத்திற்கு சென்று tracert www.siteaddress.com என்ற கட்டளையினை வழங்கினால் காணப்பெறலாம். (பார்க்க படம்).

வதவதவென தளங்கள் வைத்திருக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் சொந்தமாகவே முகவரி வழங்கிகளை வைத்து நிர்வகிப்பதுண்டு, உ.தா. Microsoft. வழங்கிகளின் கட்டமைப்புகள் குறித்தான தெளிவான புரிதல் இருந்தாலோ அல்லது தினமும் பொழுதுபோகாமல் வெகுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பிருந்தாலோ சொந்தமாக முகவரி வழங்கிகள் வைத்து விளையாடலாம் :). அதே போல தடையில்லா இணைய இணைப்பும், மின்சார வசதியும் கொண்ட கணினிகளை 24 மணி நேரமும் இயக்கும் வரங்களைப் பெற்ற அதிர்ஷடசாலிகள் தங்கள் கணினியிலேயே தங்கள் இணையதளத்தை சேமித்து இணையத்தில் வலம் வரச் செய்யலாம் (self -webhosting). இது போன்ற சூழல்களில் வழங்கிகளாக கட்டமைக்கப்படும் கணினிகளின் செயல்திறன் மிக முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஒரே நேரத்தில் கூட்டம் கும்முவதால் சில நேரங்களில் உங்கள் இணையத்தளம் முக்கிமுனகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. சச்சின் 200 ஓட்டங்கள் பெற்றதில் www.cricinfo.com தளத்தின் இணைய வழங்கி சச்சினை விட அதிகமாக சோர்வடைந்து மயங்கியது சமீபத்திய உதாரணம். அது போன்ற சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழும் வாய்ப்பிருக்கும் தளங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணைய வழங்கிகளை நிர்வகித்து வருகையாளர்களைச் சுழல் முறையில் வழங்கிகளிடையே பிரித்தனுப்புவது வழக்கம். அது போல அவற்றுள் ஏதேனும் ஒரு வழங்கி செயலிழந்தால் கூட, இணையதளம் தொடர்ந்து செயல்பட வைக்கும் பொறுப்பினை மீதமிருப்பவை கவனித்து கொள்ளும்.


மேலும் ஒரு இணையதளத்திற்கான பாதுகாப்பில் அவற்றின் முகவரி வழங்கிகள் மிகமிக முக்கியமான பங்காற்றுகின்றன. பொதுவாக முகவரி வழங்கிகளின் வலையிணைப்பு முகவர் எண்ணைத் தெரிந்து கொள்வது மிகச் சுலபம் என்பதால் எந்நேரமும் விஷமிகள் உள்ளே புகுந்து குச்சுப்புடி விளையாட வாய்ப்புண்டு, எனவே பாதுகாப்பு என்பது உண்மையாகவே கடுமையானதாக இருக்க வேண்டும், தாக்குதல் நடந்த பின் 'இனியும் பொறுக்க மாட்டோம், கடுமையாக கண்டிக்கிறோம்' என்று வீரவசனம் பேசி சமாளிக்க முடியாது. காரணம் முகவரி வழங்கியினுள் விஷமிகள் ஊடுருவினால், எந்தவொரு தளத்திற்குரிய முகவர் எண்ணிற்குப் பதிலாக அவர்களுக்குப் பிடித்ததை மாற்றி வைத்து விட்டு ஜோதியில் கலந்து விடுவார்கள். உதாரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் தளத்திற்கு இம்முறையினைப் பின்பற்றி முகமூடி மாட்டப்பட்டது, முகமூடி உபயம்: இணையப்படைக் குடும்பத்தார், ஈரான் :).

நம் கணினிகள் உறங்கினாலும் இணையம் உறங்குவதில்லை. ஒவ்வொரு நொடியும் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் யாருக்காகவோ அது ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. அந்த ஒவ்வொரு கணமும் எத்தனையோ முகவரி வழங்கிகள், இணைய வழங்கிகள் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், மொத்த வலையமைப்பின் இணைய தள முகவரிகளை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்புகள், நிறுவனங்கள் ஆகிய அனைவரும் கூட்டாகச் சேர்ந்து நிறுத்தாமல் தொடர்ந்து ஆடும் ஆட்டமே, நம்மை இணையப் பக்கங்களை விரல்சொடுக்கும் நேரத்தில் பார்த்துப் படிக்க வகை செய்கிறது

Sunday, June 26, 2011

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் பிஷ்ஷிங்

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள் இருந்ததாக இந்த தள நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இவை பெரும்பாலும் பிஷ்ஷிங் எனப்படும், வாடிக்கையாளர் கவனத்தினைத் தூண்டி விட்டு, கவிழ்த்துவிடும் செயல்முறை களாகவே இருந்து வருகின்றன.
எனவே இந்த தளங்கள் மட்டுமின்றி, வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு அறிவித்துள்ளன. வழக்கமாக, நமக்கு வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள் போன்ற எச்சரிக்கைகள் மட்டும் இப்போது சரி வராது. மேலும் பல புதிய வழிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்திய தூண்டுதல் வழி முறைகளை ஆய்வு செய்து சில வழிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.


1. நண்பர்களை எப்போதும் நம்பாதீர்கள்: பலமுறை நாம் இந்தப் பக்கங்களில் எழுதியபடி, பிரபலமான வங்கிகளின் பெயர்களில், நம் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்ட் கேட்டு வரும் இமெயில்கள் குறித்து நாம் கவனமாகவே இருக்கிறோம். இவை எப்போதும் போலியாகவே உள்ளன. இதனால் தான், பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் இன்டர்நெட் வழி கணக்கினைத் திறக்கும் முன்னரே, தங்கள் வங்கி எப்போதும் இது போன்ற தகவல்களைக் கேட்டதில்லை; கேட்கவும் மாட்டோம் என அறிவிக்கின்றனர். ஆனால் தற்போது நம்மை மாட்ட வைக்கும் இமெயில்கள், நம் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் குடும்பத் தினரிடமிருந்து வருபவையாக உள்ளன. இதனால், நாம் உடனே அவை பற்றி இரண்டாம் சிந்தனை இல்லாமல், லிங்க்குகளில் கிளிக் செய்து விடுகிறோம். அவை நம்மை மாட்ட வைக்கும் தளங்களுக்கும், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கும் வழி அமைக்கின்றன. எனவே எத்தகைய உறவு முறை உள்ளவர்களிடமிருந்து, லிங்க்குகளோடு வரும் மின்னஞ்சல் செய்திகள் குறித்து அவர்களைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னரே, அந்த அஞ்சலில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டும். 
2.நம்மை செயல்படாமல் வைத்தல்: சென்ற மே மாத இறுதியில், ஹாட்மெயில் தளத்திற்கு வந்த மின்னஞ்சல் செய்திகளில் ஒரு புதிய வழிமுறையை ஹேக்கர்கள் பின்பற்றியதாக, ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வகையில் மின்னஞ்சல் செய்திகள் தனி நபர்களைக் கவரும் வகையில் வெளியிடப்படுகின்றன. அஞ்சல்கள் முன் தோற்றப் பார்வையில் காட்டப்பட்டு, அதன் வழியிலேயே, அக்கவுண்ட் வைத்திருப்போரைக் கவிழ்த்திடும் வழிகள் தரப்பட்டிருந்தன. இதில் உள்ள ஒரு ஸ்கிரிப்ட் தானாக இயங்கி, மெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் தனி நபர் தகவல்களைத் திருடும் வழிகளை மேற்கொள்கின்றன. இத்தகைய தாக்குதல்கள் குறித்து தகவல்கள் வந்தவுடன், மைக்ரோசாப்ட் உடனே அதனைச் சரி செய்தது. இருப்பினும் பாதிப்பு பன்னாட்டளவில் அதிகமாகவே இருந்தது.

ஜிமெயில் மின்னஞ்சல் தளத்தில் புகுத்தப்பட்ட கெடுதல் வழி வேறு மாதிரியாக இருந்தன. இந்த கெடுதல் வழிகள், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஆய்வு செய்து, வைரஸ்களைக் கண்டறியும் குறிப்புகளைச் செயல் இழக்கச் செய்து, தங்கள் வேலையை முடித்துக் கொண்டன. 

3.தொடரும் நாசம்: ஒரு கம்ப்யூட்டரைத் தாக்கியவுடன், தொடர்ந்து அதனையே தாக்குவதற்கான வழிகளையும் இந்த கெடுதல் வழிகள் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், ஒருமுறை தனி நபர் தகவல்கள் கிடைத்தவுடன் அவற்றைப் பயன்படுத்தி தொடர் அழிவு வேலைகளை மேற் கொள்வது இவற்றிற்கு எளிதாகிறது.

4. புதிய அறிவுரைகள்: வழக்கமான எச்சரிக்கைகளுடன், ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் புதிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. மின் அஞ்சலில் ஏதேனும் இணைய தளத்தின் முகவரிக்கான லிங்க் தென்பட்டால், அதன் சொற்களில் உள்ள எழுத்துக்களில் மாறுதலான எழுத்துக்கள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும். இந்த தளங்கள் மைக்ரோசாப்ட், யாஹூ, கூகுள் மற்றும் பிரபலமான தளங்களின் பெயர் களோடு தள முகவரியைக் கொண்டிருக்கும். ஆனால் உற்று நோக்கினால், இவற்றின் பெயர்களோடு ஒன்றிரண்டு எழுத்துக்கள் இணைக்கப் பட்டு, கெடுதல் விளைவிக்கும் தளங்களுக்கான முகவரிகளாக இருக்கும்.

ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற பிரபல மெயில் தளங்கள் தொடக்கத்தில் காட்டப்பட்டு, அடுத்தடுத்த மெயில்களைக் காட்டாமல், அது சரியில்லை, இது சரியில்லை என்று பிழைச் செய்தி வருகிறதா? இணைய இணைப்பு இருக்கும்போதே, எந்த தளமும் கிடைக்க மறுக்கிறதா? உங்கள் டி.என்.எஸ். சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்ற பிழைச் செய்தி கிடைக்கிறதா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்ட இந்த வகை கெடுதல் விளைவிக்கும் வழிகளுக்குப் பலியாகி விட்டதென்று பொருள். 

மைக்ரோசாப்ட் மற்றும் பிற ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் தரும் அப்டேட் பேட்ச் பைல்களை இயக்கி வைக்கவும். அப்படியும் சரியாகவில்லை என்றால், நல்ல நிலையில் கம்ப்யூட்டர் இயங்கிய போது ஏற்படுத்திய ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குச் செல்லவும்.

ஆனால் இவை எல்லாம் நிரந்தரத் தீர்வாகிவிடாது. பொறுமையாக அனைத்து மின்னஞ்சல்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து, கவனமாகச் செயல் படுவதே நல்லது.

Sunday, May 1, 2011

ஆன்லைனில் 20ஜிபி வரை தகவல்களை பறிமாறிக்கொள்ள


இணையத்தை பயன்படுத்தும் அனைவருமே நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக்கொள்வோம். அந்த வகையில் தகவல்களை ஆன்லைன் மூலமாக பறிமாறிக்கொள்ள பல்வேறு தளங்கள் உள்ளன. அவை அனைத்தும் குறைந்த அளவுடைய பைல்களை மட்டுமே பறிமாறிக்கொள்ள அனுமதிக்கும் ஆனால் இந்த தளத்தின் மூலம் 20ஜிபி வரை தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும். நாம் இந்த தளத்தில் ஒரு நாளைக்கு 20ஜிபி வரை வேண்டுமானலும் தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு பைலுடைய அளவானது 200 எம்.பி வரை மட்டுமே இருக்க வேண்டும்.   அதிக அளவுடைய தவல்களை பறிமாறிக்கொள்ள வேண்டுமெனில் நாம் ஏதாவது ஒரு மெமரி டிவைஸ் துணையுடன் மட்டுமே தகவல்களை பறிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு நம் அருகாமையில் உள்ள நண்பர்களிடம் தகவல்களை எளிமையாக பறிமாறிக்கொள்ள முடியும். ஆனால் வெளியூர்களில் பார்க்க முடியாத தூரத்தில் உள்ள நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ தகவல்களை பறிமாற்றம் செய்ய வேண்டுமெனில் அது இணையத்தின் உதவியுடன் மட்டுமே மிக விரைவாக முடியும். 

தளத்தின் முகவரிக்கான சுட்டி

இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை தொடங்கி கொள்ளவும். பின் File Manager என்பதை கிளிக் செய்து புதியதாக Create Folder என்னும் பட்டியை அழுத்தி ஒரு போல்டரை உருவாக்கி கொள்ளவும். வேண்டுமெனில் பாஸ்வேர்ட் உருவாக்கி கொள்ள முடியும்.  பின் Upload என்னும் பட்டியை அழுத்தி வேண்டிய பைலை பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.


நீங்கள் விரும்பினால் தளத்தில் இருந்தவாறே பல பைல்களை ஒருகிணைத்து Compress பைலாக உருவாக்க முடியும். இதற்கு பைல்களை தேர்வு செய்துகொண்டு More Actions என்னும் தேர்வு மெனுவை கிளிக் செய்து Compress File என்பதை கிளிக் செய்து பைலை சேமித்துக்கொள்ள முடியும்.


இந்த தளத்தில் நீங்கள் தகவல்களை சேமித்து  வைப்பதுடன், நண்பர்களுக்கு பைலுடைய லிங்கினை அனுப்பி தகவலை பறிமாறிக்கொள்ள முடியும். இந்த தளத்தின் மற்றொரு வசதி என்னவெனில் MP3 பிளேயர் மற்றும் Flash பிளேயர் வசதி உள்ளது. இந்த வசதியின் மூலம் தளத்தில் இருந்தவாறே பாடலை கேட்க முடியும்.

இண்டநெட் தொடர்பில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய


இணையம் என்பது தற்போதைய நிலையில் அத்தியாவசியமான ஒன்றாகும், இந்த நிலையில் இணைய இணைப்பிலோ அல்லது இணைய சேவையிலோ பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். நம்மை அறியாமலையே இணைய  அமைப்பில்(Setting) ஏதேனும் மாற்றங்களை செய்யக்கூடும் அதுபோன்ற சூழ்நிலையில் இணைய இணைப்பு நமக்கு கிடைக்காது, அல்லது இணைய இணைப்பில் ஏதேனும் சிறு தவறுகள் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கம் மட்டும் திறக்காது, அது போன்ற நிலையில் எந்த இடத்தில் தவறு நடந்தது என கனிக்க முடியும் ஆனால் அந்த தவறினை எவ்வாறு சரிசெய்வது என்பது மட்டும் புரியாது, இதுபோன்ற கோளாருகளை சமாளிக்க ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க: சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொண்டு, அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் மென்பொருளின்  (CIntRep.exe) மீது வலதுகிளிக் செய்து Run as administrator என்பதை தேர்வு செய்யவும் தற்போது அப்ளிகேஷன் ஒப்பன் ஆகும். அதில் உங்களுடைய Problem தை தேர்வு செய்து GO பட்டனை அழுத்தவும். தற்போது சிஸ்ட்டம் ரீஸ்ட்டார்ட் ஆகும்.

தற்போது இணையத்தில் உலவுங்கள் இணையமானது சரியாக வேலை செய்யும், நெட்வொர்க் தொடர்பான எந்தஒரு சிக்கல்கள் அனைதும் தற்போது சரியாகிவிடும். இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.

போதை மருந்தை விட இன்டர்நெட் ஆபத்து

எப்போதும் கம்ப்யூட்டர் கேம், இன்டர்நெட் என்று கம்ப்யூட்டரே கதியா?சாப்பாட்டை மறந்து விட்டு கம்ப்யூட்டரில் மூழ்கி விடுகினரா எப்போதும்?கம்ப்யூட்டரில் விளையாடி விட்டு அடிக்கடி கோபப்படுகின்றனரா? இப்படியெல்லாம் உங்கள் குழந்தைகள் செய்தால், மனோதத்துவ டாக்டரை பார்க்க இது சரியான தருணம்; இனியும் தாமதிக்கக்கூடாது! 

இது குறித்து, அமெரிக்க மனோதத்துவ ஆய்வு இதழில் நிபுணர்கள் கூறியிருப்பதாவது: மது குடிப்பது, போதை மருந்து சாப்பிடுவதை விட, இன்டர்நெட், கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது மோசமானது; கம்ப்யூட்டரே கதி என்று இருப்போர் அதற்கு அடிமைப்பட்டு விடுகின்றனர்.

இப்படி இருப்பதால் அவர்களால் சரிவர சிந்திக்க முடிவதில்லை; சரியான நேரத்துக்கு சாப்பிட முடிவதில்லை; சரியான தூக்கம் இல்லை. அவர்கள் மனநிலையும் மாறுகிறது. கோபம் அதிகரிக்கிறது கம்ப்யூட்டர் கேம்கள் பெரும்பாலும் அசகாயசூரத்தனமானவை; கோபம், ஆத்திரம், பராக்கிரமம் போன்றவற்றை காட்டும் கேரக்டர்களை கொண்ட டிஜிட்டல் விளையாட்டுகள். அவற்றை விளையாடும் குழந்தைகள், மனதில் அமைதியான சுபாவம் மாறி விடுகிறது. பெற்றோர் சொல்வதை கேட்கும் பண்பு மறைகிறது. அடிக்கடி கோபப்படுவது சகஜமாகிறது. அது தான் சரி என்று நினைக்கும் அளவுக்கு மாறிவிடுகின்றனர்.

சிறுவயதில் இருந்தே, கம்ப்யூட்டருக்கு அடிமையாகி விட்டவர்கள், பெரியவர்களாகும் போது, பெரும் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். கம்ப்யூட்டருக்கு அடிமையானவர்கள், திருமணம் செய்த பின் மனைவி யுடன் சரிவர குடும்பம் நடத்த முடியாமல், படுக்கை அறையிலும் “லேப் டாப்’ கம்ப்யூட்டரே கதியாக இருக்கின்றனர்.

கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில், எவ்வளவோ அறிவுப்பூர்வமான விஷயங்கள் உள்ளன; அதே அளவுக்கு தீய விஷயங்களும் உள்ளன. ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்த ஒருவர் நாளடைவில் செக்ஸ் விஷயங் களில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். போகப்போக அவர்கள் உண்மையான நிலைக்கு வர முடியாமல் இன்டர்நெட்டில் செக்ஸ் படங்கள் பார்ப்பதில் அடிமையாகி விடுகிறார்.

இது போன்று பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம், அவர்கள் சிறுவயதில் காட்டிய கம்ப்யூட்டர் வெறித்தனம் தான். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Saturday, April 23, 2011

எவன்தான் கண்டுபிடிச்சானோ இந்த இண்டர்நெட்டை

எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர்... கம்ப்யூட்டர்...! இந்த அதிசயக் கருவியை கண்டுபிடித்த பிதாமகன் யார்?

'டிஃபரன்ஸ் இன்ஜின்' என்பதுதான் முதல் கம்ப்யூட்டர். இந்த கான்செப்டை 1786-ம் ஆண்டில் உருவாக்கியவர் ஜெ.ஹெச்.முல்லர். அதன் பிறகு, அந்த விஷயத்தையே மறந்துவிட்டார்கள். ஆனால், அதே கான்செப்டை கையிலெடுத்து, 1822-ம் ஆண்டில் கட்டமைத்தார் 'சார்லஸ் பாப்பேஜ்'. இவரைத்தான், 'கம்ப்யூட்டரின் தந்தை' என்கிறார்கள். இவர் கட்டமைத்த கம்ப்யூட்டர், கால ஓட்டத்தில் பல்வேறு நிபுணர்களின் கை வண்ணத்தால், பல பரிணாமங்களைக் கண்டு... இப்போது நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் வரை வந்து நிற்கிறது.
--------------------------------------------------------------------------------
இன்டெர்நெட்டை யார் கண்டுபிடித்தார்கள்?

உலகை ஆளும் 'இன்டெர்நெட்'டை உருவாக்கியவர் ஒரே ஒரு மனிதர் அல்ல. அது பல அறிஞர்களின் உழைப்பால் விளைந்தது, படிப்படியாக வளர்ந்து, www (world wide web) என்ற நிலையை அடைந்துள்ளது.

முதன் முதலாக 1961-ல் இதனை உருவாக்கியவர் லியோநார்டு க்ளெய்ன்ராக் (Leonard Kleinrock) என்பவர். 1962-ல் ஜெ.சி.ஆர். லிக்லிடெர் என்பவர், லியேநார்டுடன் இணைந்து புது வலைதள ஐடியாவை உருவாக்கி, ARPANET என்று பெயரிட்டார். 1968-ல் 'நெட்வொர்க் வொர்க்கிங் குரூப்' என்ற நிறுவனம் இதனை இன்னும் நெறிப்படுத்தியது. 1969-ல் 'யு.சி.எல்.ஏ.' என்ற நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான இன்டெர்நெட்டை அறிமுகப்படுத்தியது.
--------------------------------------------------------------------------------
மெயில் அனுப்புவது என்றாலே... ஒரு காலத்தில் அது 'யாஹ"' என்பதாகத்தான் இருந்தது. 1990-களில் சி.வி. எனப்படும் 'கரிகுலம் வீட்டாய்' எழுதும்போது 'யாஹ"' மெயில் ஐடி இருப்பதை கௌரவமாகக் குறிப்பிடுவார்கள். அதன் பிறகுதான் பல நிறுவனங்கள் களத்தில் இறங்கின. அத்தகைய பெருமைக்குரிய யாஹ" நிறுவனத்தை நிறுவியவர்கள்... ஜெரி யாங், டேவிட் ஃபிலோ ஆகியோர்தான்.
--------------------------------------------------------------------------------
'கூகுள்' என்ற ஸர்ச் இன்ஜினுக்குள் (Search engine) நுழைந்து, வெண்டைக்காய் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை அனைத்துத் தகவல்களையும் பெற முடிவது எப்படி? 1996-ல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து லேரி பேஜ், செர்கே பிரின் என்ற இருவர், 'ஸர்ச் இன்ஜின்' எனும் தேடு தளங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். அதில் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட பெயர், பல ஆயிரம் முறை பதிவாகியுள்ளதைக் கண்டுபிடித்தனர். அதுவரை அந்த நிறுவனம் ஒரு கம்பெனியாக முறையாக பதிவு செய்யப்படவில்லை. 1998, செப்டம்பர் 7-ம் தேதி அந்தக் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அதுதான் இன்றைக்கு உலகின் நெம்பர் ஒன் தேடுபொறி தளமாக இருக்கும் கூகுள்!
--------------------------------------------------------------------------------
'ஆர்குட்' எனப்படும் சோஷியல் நெட்வொர்க் முதலில் புழக்கத்துக்கு வந்தது... 2004 ஜனவரியில். உருவாக்கிய 'ஆர்குட்' பெயரிலேயே அது அழைக்கப்படுகிறது. ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டுக்குள் இதை அதிகம் பயன்படுத்தியவர்கள் அமெரிக்கர்கள்தான். அதன் புகழ் பரவியதும்... பிரேஸில்காரர்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இப்போது இந்தியா அந்த வரிசையில் நிற்கிறது. அமெரிக்கர்களோ... வேறு சைட்டுக்கு தாவி விட்டார்கள்.
--------------------------------------------------------------------------------
கண்ணுக்குத் தெரியாத 'செல்' தொடங்கி, காணவே முடியாத 'அண்டம்' வரை உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் பக்கம் பக்கமாக தகவல்களை நிரப்பி வைத்திருக்கும் விக்கிபீடியா... ஓர் ஆச்சரிய என்சைக்ளேபீடியா. 'ஜிம்போ' என்றழைக்கப்படும் ஜிம்மி டோனல் (Jimmy Donal) என்ற அமெரிக்கர்தான் இந்த விக்கிபீடியாவை நிறுவியவர்.
--------------------------------------------------------------------------------
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் லேட்டஸ்ட்டாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருப்பவர் பிரணவ் மிஸ்ட்ரி எனும் இந்தியர். இவர் சொல்ல ஆரம்பித்திருக்கும் 'சிக்ஸ்த் சென்ஸ்' எனும் டெக்னாலஜி... பிரமிப்பின் உச்சிக்கே செல்ல வைக்கிறது. 'மானிட்டர் தேவையில்லை, சி.பி.யு. தேவையில்லை. ஆனாலும் கம்ப்யூட்டர் உண்டு. அதுவும் உங்கள் ஒவ்வொருவரிடமும் உண்டு' என்கிறார். தீப்பெட்டி மற்றும் மேளக்காரரின் கை விரல் முனைகளில் இருக்கும் உறை ஆகியவை போல சின்னஞ்சிறு கருவிகள் ஒன்றிரண்டை வைத்துக் கொண்டே... போட்டோ எடுக்கிறார், கட் அண்ட் பேஸ்ட் செய்கிறார், புத்தகத்தில் இருப்பதை காப்பி செய்கிறார். இந்தக் கம்ப்யூட்டருக்கு.... சுவர், பேப்பர், கைகள், சட்டை, சோபா... இப்படி எல்லாமே மானிட்டர்கள்தான்!
---------------------------------------------------

இஸ்லாமியர்களுக்கு என தனி இன்டெர்நெட்






உலகம் முழுவதும் வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கு என தனி இன்டெர்நெட் விரைவில் உருவாக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
 தற்போது வேர்ல்டு வைட் வெப் என்றழைக்கப்படும் இன்டெர்நெட் மூலம் அனைத்து மக்களுக்கும், அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைத்துவருகிறது. இந்த இன்டெர்நெட்டில் அமெரிக்கா முக்கியமான பங்கை வகிக்கிறது. பெரும்பாலான சைட்டுகள் அமெரிக்காவை மையமாக கொண்டே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்டெர்நெட்டில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஈரான் அரசு இஸ்லாமிய மக்களுக்கு என தனியான இன்டெர்நெட்டை உருவாக்க உள்ளது. இந்த இன்டெர்நெட்டில் இஸ்லாமின் கொள்கைகள், சர்வதேச தகவல் பரிமாற்றத்திற்காக பார்ஸி மொழியை மேம்படுத்துவது போன்றவை உட்பட பல்வேறு தகவல்கள் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட உள்ளது என ஈரான் அரசின்பொருளாதார பிரிவை சேர்ந்த அலி அக்வமொகம்மதி தெரிவித்துள்ளார்.

Monday, April 18, 2011

ஒரு வகை சர்ச் இஞ்சின்கள் இணையத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன.

தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்களுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்திருக்கும். ஏன், அதே போல ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற தளங்களெல்லாம் தெரிந்திருக்கும். ஆனால், ஜின்னி, ஜூங்கல் அல்லது ஜாங்கில் (Jinni, Joongel அல்லது Jangle) ஆகிய தளங்களைப் பற்றி தெரியுமா? இப்போது இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் நாம் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டிய தளங்கள்.
சர்ச் இஞ்சின்கள் - நாமெல்லாம், தெரிந்து தினந்தோறும் பயன்படுத்து பவை. பரிந்துரைக்கும் இஞ்சின்கள் (Redcommendation Engines) பற்றி தெரியுமா? அப்படி ஒரு வகை சர்ச் இஞ்சின்கள் இணையத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. நாம் கொடுக்கும் தேடல் சொற்களுக்கேற்ப உள்ள தளங்களைச் சுட்டிக் காட்டும். ஆனால் இந்த பரிந்துரைக்கும் இஞ்சின்கள், சில தளங்களை நம் தேடல் தொடர்புடையதாகப் பரிந்துரைக்கும். அப்படிப்பட்ட சில தளங்களைப் பார்க்கலாம். 


1. டேஸ்ட்கிட் (Tastekid): புதிய நூல்கள், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், நூலாசிரியர்கள் ஆகியன குறித்து தெரிந்து கொள்ள ஆவலா? இந்த தளம் (http://www.tastekid.com) செல்லுங்கள். இங்கு மேலே சொல்லப்பட்ட பிரிவுகளில் புதிதாய் என்னவெல்லாம் உள்ளன என்றும் அவற்றைக் காணச் செல்ல வேண்டிய தளங்கள் குறித்தும் காட்டப்படும். இதைக் காண்கையில், நம் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு சார்ந்தவற்றிற்கும் இது போன்ற ஒரு தளம் இருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
2. ஆல்டர்னேடிவ் ட்டூ (Alternative To): ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது சேவையை மனதில் நினைத்துக் கொண்டு, இதே போல ஒன்று இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா? இந்த தளம் அது போன்ற தகவல்களைத் தருகிறது. முகவரி: http://alternativeto.net/
கூகுள் ஒன்று மட்டுமே மிக,மிக நல்ல தேடு தளம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதைப் போல, ஏன், அதைக் காட்டிலும் சிறப்பாக தகவல்களைக் காட்டும் தளங்கள் பல உள்ளன. இவற்றின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும். இதோ அவை:
1. ஜூங்கல் (Joongel): இதன் செயல்பாடு முற்றிலும் வித்தியாசமும் பயனும் கொண்டது. அனைத்து தேடல் இஞ்சின் களையும் வகைப்படுத்தி மொத்தமாக தருகிறது. அத்துடன், குறிப்பிட்ட சேவைகளை முன்னிறுத்தியும் முடிவு களைத் தருகிறது. இசை, படங்கள், சமுதாய மையங்கள், கிசுகிசு என எத்தனையோ பிரிவுகளை முதன்மைப் படுத்தித் தகவல்களைத் தருகிறது. ஒரு சர்ச் இஞ்சின் மூலம் கிடைக்கும் தகவல்களை முதலில் தருகிறது. அப்போதே, மேலும் வேறு வகை தகவல்கள் வேண்டுமாயின், எந்த தேடல் தளத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறது. செல்ல வேண்டிய தள முகவரி: http://www.joongel. com/index.php
2.ஸ்குரூகிள் (Scroogle): கூகுள் தேடுதளத்தில் தேடுகையில், குக்கீஸ் நம் கம்ப்யூட்டரில் பிற்பாடு எளிதாக இருப்பதற்காகப் பதியப்படும். அதாவது நம்முடைய பெர்சனல் விருப்பங்கள் அதில் பதிந்து வைக்கப்படும். நாம் எந்த தளத்திற்கெல்லாம் செல்கிறோம் என்ற பட்டியலும் பதிந்து வைக்கப்படும். இவை இல்லாமல் உங்கள் தேடலை மேற்கொள்ள விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது:www.scroogle.org/cgibin/scraper.htm.
3.சூப்பர் குக் (Supercook): பொதுவாக, சமையல் குறித்து தகவல் தரும் தளங்கள், சில உணவுப் பதார்த்தங்களைச் சொல்லி, அவற்றைத் தயாரிப்பது எப்படி என விலாவாரியாகத் தகவல்களைத் தரும். தேவையான சமையல் பொருட்கள், காய்கறிகள், மசாலாக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்தும், அவற்றைக் கொண்டு, பதார்த்தம் தயாரிப்பது எப்படி என்றும் விளக்கமாகத் தரப்படும். இதைப் படித்துவிட்டு, நாம் முதலில் பொருட்க ளை வாங்கச் செல்ல வேண்டும். ஒன்று இருந்தால், இன்னொன்று கிடைக்காது. கடைசியில் நம் ஆசையே போய்விடும். இந்த தளம் சற்று வித்தியாசமானது. உங்களிடம் என்ன என்ன சமையல் பொருட்கள் உள்ளன என்று பட்டியலிடுங்கள். அவற்றைக் கொண்டு, என்ன உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம் என்று விபரங்களை இந்த தளம் தருகிறது.
இந்த தளத்தின் முகவரி: http://www.supercook.com/
இனி மீடியா தளங்களைக் காணலாம். இங்கு பெரும்பாலும் பிற மொழிப் பாடல்கள், குறிப்பாக ஆங்கிலம், சார்ந்த தகவல்கள் இருந்தாலும், நம்முடைய பாடல்களைப் பதிவு செய்து கேட்க வசதி தரும் தளங்களும் உள்ளன. 
1. ஜாமென்டோ (Jamendo): ஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இசைப்பாடல்கள் இதில் உள்ளன. இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். பாடல் ஆல்பங்களும் இதில் அடக்கம். அவற்றை டவுண்லோட் செய்திடலாம்; அல்லது ஆன்லைனிலேயே கேட்கலாம். பொதுவாக உங்கள் தேடலில் கிடைக்காத பாடல்களை நாங்கள் தருகிறோம் என்று இந்த தளம் பாடல்களைத் தருகிறது. முகவரி:http://www.jamendo.com/en/ இங்கு சென்று ஏ.ஆர். ரஹ்மான் என டைப் செய்து தேடிய போது அவர் இசை அமைத்த இயந்திரன் ஆல்பப் பாடல்களை டவுண்லோட் செய்திட முடிந்தது. 
2. நட்சி (Nutsie): உங்களுடைய ஐபாடில் உள்ள பாடல்களை இணையத்திற்குக் கொண்டு சென்று, அவற்றை அங்கு வைத்தே கேட்டு ரசிக்கலாம். இது மற்றவர்களுக்கு கிடைக்காது. வேறு இணையான கம்ப்யூட்டர் மூலமும் இந்த தளம் சென்று இவற்றை ரசிக்கலாம். முகவரி:http://www.nutsie.com/main ஷேர்வேர் அல்லது பிரீவேர் எனப்படும் இலவச புரோகிராம்கள் எந்த தளங்களில் கிடக்கும் என அறிய வேண்டுமா? அதற்கென்றே சில தளங்கள் உள்ளன. ஏற்கனவே நீங்கள் அறிந்த இலவச புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்கள் தரப்பட்டுள்ளனவா? என்ற தகவல் களையும் தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் சில.
1. போர்ட்டபிள் பிரீவேர் கலக்ஷன் (Portable Freeware Collection): இலவச புரோகிராம்கள் மற்றும் அவற்றிற்கான அப்டேட் பைல்களைக் காட்டும் தளம் இது. மிகவும் பயனுள்ள தளம். இதன் முகவரி: www.portablefreeware.com/
2. கீ எக்ஸ் எல் (keyxl): ஏதேனும் ஒரு புரோகிராமினை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். இதற்கான ஷார்ட்கட் கீகள் என்ன என்ன என்று தெரிய வேண்டுமா? இந்த தளம் சென்று, நீங்கள் பெற விரும்பிய புரோகிராமின் பெயரைத் தரவும். தளங்களின் பட்டியல் உங்களுக்குக் கிடைக்கும். இந்த தளத்தின் முகவரி: http://www.keyxl.com/
மேலே சொன்னவற்றில் அடங்காத சில பயனுள்ள தளங்களும் உள்ளன. அவற்றில் முக்கிய தளங்களும் அவற்றின் பயன்களும் பார்ப்போம்.
1. சி.எல்.1.ப்பி. நெட் (cl1p.net): இணைய வெளியில் நமக்கு ஒரு கிளிப்போர்டு தரும் தளம். ஆம், நீங்கள் இணைய வெளியில் சுற்றி வருகையில், பின்னர் படித்துக் கொள்ளலாம் என்ற வகையில் டெக்ஸ்ட்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். ஒவ்வொரு முறையும், டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்த பின்னர், ஏதேனும் வேர்ட் ப்ராசசர் ஒன்றைத் திறந்து, அதில் பதிந்து பைல் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவீர்கள். இந்த தொல்லையே இல்லாமல், உங்களுக்கென ஒரு இணைய தள கிளிப் போர்டு ஒன்றை இந்த தளம் தருகிறது. என்ற பெயருடன் இணைந்த பெயரில், உங்களுக்கான தளம் ஒன்றை உருவாக்குகிறது. இதில் திறக்கப்படும் எடிட்டரில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டை பதிந்து வைக்கலாம். ஜஸ்ட், கிளிக் செய்தால் போதும், தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் அந்த தளத்தின் எடிட்டரில் பதியப்படும். பின்னர், இந்த டெக்ஸ்ட் அந்த தள முகவரியில் ஏழு நாட்கள் இருக்கும். நேரம் கிடைக்கும்போது, அந்த தளம் சென்று பார்த்துப் படிக்கலாம். அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டரில் சேவ் செய்து வைக்கலாம். இந்த தளத்தின் முகவரி: http://cl1p.net/
2. வெப் 2 கால்க் (web2calc): இந்த தளத்திற்குச் (http://web2.0calc.com) சென்றால், அருமையான ஒரு கால்குலேட்டர் கிடைக்கும். பலவித அறிவியல் கணக்குகளைச் செயல்படுத் தலாம். முழுமையான சயின்டிபிக் கால்குலேட்டர். இதே போல இன்னொரு தளமும் உள்ளது . இதிலும் ஒரு ஆன்லைன் சயின்டிபிக் கால்குலேட்டர் தரப்படுகிறது. இதன் முகவரி: http://www.ecalc.com/
3. ரெய்னி மூட் (rainymood): ஓய்வாக பொழுதை ரசிக்க வேண்டுமா! பின்னணி யில் மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த சூழ்நிலையை இந்த தளம் தருகிறது. இதன் முகவரி: http://www.rainymood.com/
4. நீங்கள் பிறந்த ஆண்டில் என்ன என்ன சம்பவங்கள் நடந்தன. நூல்கள், சினிமா, இசை எனப் பல பிரிவுகளில் தகவல் தரும் தளம். இதன் முகவரி: http://whathappenedinmybirthyear.com/
மிக மிக முன்னால் என்றால், எடுத்துக் காட்டாக, 1950 என்று அமைத்தால், அப்போது கூகுள், யாஹூ எல்லாம் இல்லை. டிவிடி இல்லை எனத் தொடங்கி, அப்போது ஆஸ்கார் அவார்ட் வாங்கிய படம், நடிகர், நடிகை என்று பட்டியல் நீள்கிறது. உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தரப்படுகின்றன. சரித்திர நிகழ்வுகளைக் காணவும் இதனைப் பயன்படுத்தலாம். 

Tuesday, April 12, 2011

தேடு பொறிகளில் கூகிளை முந்திக்கொண்டு மற்றொரு SEARCH ENGINE

ஐரிஷ் மொழியில் இதடிடூ என்ற சொல்லுக்கு அறிவு என்று பெயர். அறிவு வளர்ச்சியின் அடிப்படையே தேடல் தான். எனவே தேடலுக்குத் துணை புரியும் இந்த தளத்திற்கு இது சரியான பெயராகவே தோன்றுகிறது. நாம் தேடும் சொல்லுக்குத் தளங்களைத் தேடாமல், இருக்கின்ற கோடிக்கணக்கான தளங்களைத் தேடி வகைப்படுத்திக் கொண்டு அந்த தகவல் கட்டமைப்பிலிருந்து தளப்பட்டியலைத் தருகிறது கூல் தளம். கூகுள் தளத்தைக் காட்டிலும் மூன்று பங்கும், மைக்ரோசாப்ட் தளத்தைக் காட்டிலும் பத்து பங்கும் கூடுதலாக தளங்களைத் தேடி தகவல்களை எளிதான முறையில் புதிய பார்மட்களில் தருகிறோம் என இந்த தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது..


மற்ற சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மூன்று பங்கு அதிகமான எண்ணிக்கையில் இணைய தளங்களைத் தேடி தகவல்களைத் தருகிறோம்' என்ற அறிவிப்புடன் கூல் ( Cuil.com ) என்ற பெயரில் சர்ச் இஞ்சின் தளம் ஒன்று அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது. இதனை உருவாக்கி வழங்கி வருபவர்கள் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் (கணவன் மனைவியான) டாம் மற்றும் அன்னா . அலுவலகத் தலைமையிடம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. டாம் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் ஆராய்ச்சி யாளராகப் பணியாற்றியவர்.

அன்னா பேட்டர்சன் கூகுள் அலுவலகத்தில் முதன்மை கட்டமைப்பாளராக பணியாற்றியவர். கூல் நிறுவனத்தில் அலுவலர்கள் 30 பேர். கூகுள் தளத்துடன் போட்டியிடும் அளவிற்கு சிறப்பாகத் தளத்தை வடிவமைத்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளில் இன்டர்நெட் வளர்ச்சி பெற்ற அளவிற்கு அதில் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சின் என்னும் தேடல் தளங்கள் வளர்ச்சி அடையவில்லை. கூகுள் தளம் ஒன்றுதான் புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பல்வேறு வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தித் தந்து வருகிறது. தற்போது அதனை முந்தும் வகையில் கூல் தளம் வந்துள்ளது.
18 ஆயிரத்து 600 கோடி தளங்களை ஆய்வு செய்து அவற்றில் மோசமானவற்றையும் டூப்ளிகேட் தளங்களையும் விலக்கிவிட்டு 12 ஆயிரம் கோடி இணைய தளங்களை வகைப்படுத்தி பட்டியலிட்டு வைத்து தேடல் சொற்களுக்கேற்ப அவற்றைத் தருகிறது. தேடுதல் சொற்களுக்கான இத் தளம் தரும் பட்டியல் அடுக்கே மிக நன்றாக வேறுபாட்டுடன் இருக்கிறது. தளத்திலிருந்து சில வாக்கியங்கள், தளம் சார்ந்த போட் டோ என தளம் குறித்த அடிப்படைத் தகவல்கள் தரப்படுவதால் அதனைக் கிளிக் செய்து பின் அடடா இது தேவையில்லையே என்று ஏமாற வேண்டியதில்லை.

தளங்கள் அதில் தரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஒரு பத்திரிக்கையில் லே அவுட் போல காட்டப்படுகின்றன. அடையாளம் கண்டுகொள்ள முக்கிய வாக்கியங்கள் மற்றும் போட்டோக்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன. மற்ற தேடல் தளங்கள் அந்த தளங்களை எத்தனை பேர் பார்த்திருக்கின்றனர் என்ற ஹிட் ரேட் படி வரிசைப்படுத்தி பட்டியலிடுகின்றன. ஆனால் கூல் அவற்றில் தரப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. கூல் தளத்தினைப் பயன்படுத்துபவர் குறித்த எந்த பெர்சனல் தகவல்களையும் இத்தளம் கேட்டுப் பெறுவதில்லை. பயன்படுத்துபவர் பிரைவசியில் தலையிடுவதே இல்லை.

தேடலுக்கான சொல்லை டைப் செய்கையில் பிற தளங்களில், நாம் ஏற்கனவே டைப் செய்த சொற்களை மட்டும் நினைவில் வைத்து பட்டியல் காட்டப்படும். ஆனால் கூல் தளத்தில், ஆன் லைன் டிக்ஷனரியில் கிடைப்பது போல, ஏற்கனவே கோடிக்கணக்கான தளங்களை ஆய்வு செய்து அமைக்கபட்ட பட்டியலிலிருந்து சார்ந்த சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் முழுமையான சொல்லை நாம் டைப் செய்திட வேண்டிய தில்லை.

காட்டப்படும் பட்டியலில் அந்த தளத்தில் அதற்கான ஐகான் இருந்தால் அந்த ஐகான் காட்டப்படுகிறது. இதனால் நமக்கு வேண்டிய தளங்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது. தேடலைக் கூர்மைப்படுத்தி நமக்கு வேண்டியதை நோக்கி நம்மைச் செலுத்தும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேடலை மேற்கொண்டபின் வலது பக்கம் ஒரு பேனல் தரப்படுகிறது. அதில் ‘Explore By Category’ என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது.

நம் தேடலுடன் தொடர்புள்ள மற்ற பொருள் குறித்த பட்டியல் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்து முன்னேறுவதன் மூலம் தேடல் பொருளின் சரியான தகவல் தரும் தளத்திற்கு நாம் எடுத்துச் செல்லப்படுவோம். மேலும் இந்த வகையில் கர்சரைக் கொண்டு சென்றவுடன் சார்ந்த சொற்களுக்கான சரியான பொருள் பாப் அப் விண்டோவில் தரப்படுகிறது. இதைக் கொண்டு நாம் அந்த தளம் வேண்டுமா? அது நம் தேடலுடன் தொடர்புடையதா என்று முடிவெடுக்கலாம்.

கூல் தளத்தில் தேடல் மேற்கொள்கையில் தேடல் சொல்லுடன் தொடர்புடைய வெவ்வேறு பொருள்களுக்கு தனித்தனி டேப்கள் தரப்படுகின்றன. இவற்றின் மூலம் நமக்குத் தேவையான தளத்தினைத் தேர்ந்தெடுத்துச் செல்லலாம். சேப் சர்ச் (Safe search) என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது தொடக்கத்திலேயே இயங்குகிறது. இதனால் பாலியியல் மற்றும் சிறுவர்கள் காணக் கூடாத தளங்கள் வடிகட்டப்பட்டு பட்டியலிடப்படுகின்றன. அனைத்து தளங்களும் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வசதியை ஆப் செய்துவிட்டு தேடலாம்.

புதிய தேடுதல் தளம் – கூல்: ஐரிஷ் மொழியில் கூல் என்றால் அறிவு மற்றும் சால்மன் (வஞ்சிர மீன்) என்ற மீனையும் குறிக்கும். பழங்கால கதை ஒன்று அயர்லாந்து நாட்டில் இன்றும் வழங்குகிறது. சால்மன் மீன் ஒன்று ஒன்பது ஹேஸல்களை (பாதாம் பருப்பு கொட்டை போன்றது) மொத்தமாகத் தின்று விட்டு அறிவுக் குளத்தில் வீழ்ந்து விட்டது. அதன் மூலம் உலகின் அறிவு அனைத்தும் அந்த மீனுக்கு வந்துவிட்டது. இந்த மீனை பிடித்து முதலில் சாப்பிடுபவருக்கு மட்டும் உலக அறிவு வந்துவிடும் என்பது ஐதீகம்.

ஐரிஷ் நாட்டின் பிரபல கவிஞர் ஒருவர் இந்த மீனை எப்படியும் பிடித்துச் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாய்ன் என்ற ஆற்றில் பல ஆண்டுகள் மீன் பிடித்தாராம். இறுதியில் தன் முயற்சியில் வெற்றி பெற்று அந்த அறிவு மீனைப் பிடித்தார். அதைத் தன் சிஷ்யனான "பின்கூல்' என்பவனிடம் கொடுத்து மீனை வறுத்துக் கொடு; ஆனால் ஒரு பிட் கூடச் சாப்பிடக் கூடாது என்று மிரட்டிவிட்டு குளிக்கச் சென்றார்.

பின்கூல் தன் தலைவரின் ஆணைக்கேற்ப பொறுமையாக மீனை பொன் நிறத்திற்கு வறுக்கத் தொடங்கினான். சாப்பிட ஆசை இருந்தாலும் தலைவரின் எச்சரிக்கையால் அடக்கிக் கொண்டான். வறுவல் முடியும் தறுவாயில் வறுத்த மீனை கைகளில் எடுக்கும் போது கட்டைவிரலில் சூடு பட்டு பொறுக்க முடியாமல் உடனே சூடு தணிக்க விரலை வாயில் வைத்து சூப்பினான். விரலை அழுத்தி எடுத்ததால் விரலோடு வந்த மீனின் இறைச்சி வாயினுள் சென்றது. அதனால் அவனுக்கு உலக அறிவு வந்ததாக இன்றும் அயர்லாந்தில் கதை உண்டு.

(நம் நாட்டிலும் விரல் சூப்பும் பிள்ளைகளை அறிவு அதிகம் என்று சொல்வது இதனால்தானோ) ஐரிஷ் நாட்டு கதைகளில் எல்லாம் இந்த பின்கூல் ஒரு ஹீரோவாக இன்றும் வர்ணிக்கப்படுகிறார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டால் உடனே விரலை வாயில் வைத்து அதற்கான விடையைத் தந்துவிடுவதாக அனைத்து கதைகளும் சொல்கின்றன. கூல் தள நிறுவனர் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி அதே பாய்ன் என்ற ஆற்றில் அடிக்கடி மீன் பிடிப்பாராம். அதனாலேயே இந்த பெயரைத் தான் உருவாக்கிய தளத்திற்கு டாம் வழங்கியுள்ளார்.

Thursday, April 7, 2011

இணையத்தில் யார் அதிக நேரம்!

இணைய தளப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்திடும் காம்ஸ்கோர் நிறுவனம், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி, இணையத்தில் யார் அதிக நேரம் உலா வருபவர்கள் தெரியுமா? அமெரிக்கர்களா? பிரிட்டிஷ்காரர்களா? சீன அல்லது இந்தியக் குடிமக்களா? இவர்கள் யாரும் இல்லை. கனடா நாட்டு மக்கள் தான் அதிக நேரம் இணையத்தில் உள்ளனர். 2010 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஒவ்வொருவரும் சராசரியாக 43.5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். இது பன்னாட்டளவிலான சராசரி நேரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். இவர்களில் பெரும்பாலானவர் களின் வயது 55க்கும் மேல் என்பது இன்னொரு வியத்தகு செய்தி. 2009 ஆம் ஆண்டிலும் இதே பெருமையை கனடா தட்டிச் சென்றது. தற்போது கனடாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 2 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர்.
இதே காலத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் 35.5 மணி நேரமும், பிரிட்டிஷ் நாட்டவர் 32.3 மணி நேரமும், தென் கொரியாவினைச் சேர்ந்தவர்கள் 27.7 மணி நேரமும் இணையத்தில் இருந்துள்ளனர்.
இந்திய இணையம் குறித்து இங்கே பார்க்கலாமா!

மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வளரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இருப்பினும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து பார்க்கையில் வளர்ச்சி சற்று வேகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரமாக வளர்ந்துள்ளது. மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் நகரங்களில் பயன்படுத்துபவர்கள் 51.23 கோடி. கிராமப் புறங்களில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன.
காம் ஸ்கோர் நிறுவனத்தின் கணக்குப் படி, ஒரு நேரத்தில் சராசரியாக, 3 கோடியே 2 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றனர். இவர்களில் 72% பேர் வீடியோ படங்களை இணையத்தில் பார்க்கின்றனர். இவர்கள் சராசரியாக 58 படங்களைப் பார்க்கின்றனர். 5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். யு ட்யூப் தளத்தில் பார்க்கப்படும் இணைய வீடியோக்களில் 44.5 % இந்தியாவில் பார்க்கப்படுகின்றன. 78 கோடி தடவை இவை காணப்படுகின்றன.
பேஸ்புக் சோஷியல் தளத்தில்66 லட்சம் பேர் பதிந்துள்ளனர். இவர்கள் 3 கோடி@ய ஒரு லட்சம் வீடியோ படங்களைப் பார்த்துள்ளனர்.

Monday, March 28, 2011

வலைத்தளம் அமைக்க சிறந்த சேவை எது : ப்ளாக்கரா, வோர்ட்பிரசா


வலைத்தளம் ஆரம்பித்து எழுதி சிறிது நாளில் தனித்தளம் அமைக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள்


ஆனால் தனித்தளம் அமைக்க சிறந்த வழிமுறை எதுவென்று பலருக்கும் குழப்பம் வரலாம்

அதனால் ஒரு சிறு ஆலோசனை குறிப்பு

சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் தேவையில்லை என்றால் 3 வழிமுறைகளில் உங்கள் வலைப்பதிவை அமைக்கலாம்
  • 1. இலவசமாக .blogspot ல்
  • 2. இலவசமாக .wordpress.com ல்
  • 3. அட்சென்ஸ், கருவிபட்டை சேர்க்க பணம் செலுத்தி wordpress.com
சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் தேவையென்றால் 4 வழிமுறைகளில் உங்கள் வலைப்பதிவை அமைக்கலாம்
  • 4. இலவசமாக .blogspot ல்
  • 5. திருப்பி விடுவதற்கு பணம் செலுத்தி .wordpress.com ல்
  • 6. திருப்பி விடுவதற்கும் அட்சென்ஸ், கருவிபட்டை கூடுதல் பணம் செலுத்தி .wordpress.com ல்
  • 7. சொந்த சர்வரில் வோர்ட்பிரஸ் அல்லது வேறு மென்பொருட்களை நிறுவுதல் மூலமாக
இதில் ஒவ்வொரு வழிமுறையையும் விரிவாக பார்க்கலாம்

முதல் முறை இலவச .blogspot.com
இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. முற்றிலும் இலவசம்
  2. உங்கள் பதிவு ப்ளாக்கரின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
  3. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  4. தமிழிஷ் / இண்ட்லி உட்பட எந்த கருவிப்பட்டை சேர்க்கலாம்
  5. அட்சென்ஸ் சேர்க்கலாம்
  6. லேபிள்கள் உண்டு
  7. வார்ப்புருவை மாற்றும் சுதந்திரம் உண்டு
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. உங்கள் பெயரில் தளம் இருக்காது. blogspot.com என்றே இருக்கும்
இரண்டாவது முறை : இலவச .wordpress.com
  • உதாரணம் http://nchokkan.wordpress.com/
இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. இலவசம்
  2. உங்கள் பதிவு வோர்ட்பிரசின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
  3. லேபிள்கள் உண்டு
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. உங்கள் பெயரில் தளம் இருக்காது. wordpress.com என்றே இருக்கும்
  2. அட்சென்ஸ் சேர்க்க முடியாது
  3. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்க முடியாது
  4. தமிழிஷ் / இண்ட்லி உட்பட எந்த கருவிப்பட்டை சேர்க்க முடியாது
மூன்றாவது முறை : அட்சென்ஸ், கருவிபட்டை சேர்க்க பணம் செலுத்தி .wordpress.com 
  • உங்கள் முகவரி xyx.wordpress.com என்றே இருக்கும்
இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. உங்கள் பதிவு வோர்ட்பிரசின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
  2. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  3. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  4. அட்சென்ஸ் சேர்க்கலாம்
  5. லேபிள்கள் உண்டு
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. அட்சென்ஸ், கருவிபட்டை ஆகியவற்றை சேர்க்க வோட்பிரசுக்கு வருடத்திற்கு 45 டாலர் பணம் தர வேண்டும்
  2. உங்கள் பெயரில் தளம் இருக்காது. wordpress.com என்றே இருக்கும்
சொந்த பெயரில் தளம் வேண்டுமென்றால் நான்கும் வழிகள் உள்ளன

சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் அமைக்கும் முதல் முறை : ப்ளாக்கர் redirection உதாரணங்கள்
  • http://www.makkal-sattam.org/
  • http://www.parisalkaaran.com/
  • http://www.luckylookonline.com/
  • http://www.narsim.in/
இந்த சேவை கடந்த சில வருடங்களாக்தான் வழங்கப்படுகிறது. பல பதிவர்களுக்கு இப்படி ஒரு இலவச சேவை இருப்பதே தெரியாமல், சொந்த பெயரில் தளம் அமைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே காசு கொடுத்து தனிவழங்கியில் வோர்ட்பிரசில் பதிவு வைக்கிறார்கள் என்பது சோகக்கதை


இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. ப்ளாக்கர் சேவை முற்றிலும் இலவசம்
  2. தளம் உங்கள் பெயரில் இருக்கும்
  3. உங்கள் பதிவு ப்ளாக்கரின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
  4. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  5. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  6. அட்சென்ஸ் சேர்க்கலாம்
  7. லேபிள்கள் உண்டு
  8. வார்ப்புருவை மாற்றும் சுதந்திரம் உண்டு
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. டொமைனை புதுபிக்க வருடந்தோறும் சரியாக ஞாபகம் வைத்து பணம் செலுத்து வேண்டும்
சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் அமைக்கும் இரண்டாவது வழிமுறை : வோர்ட்பிரஸ் redirection – இதற்கு காசு தர வேண்டும் இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. தளம் உங்கள் பெயரில் இருக்கும்
  2. உங்கள் பதிவு வோர்பிரசின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. டொமைனை புதுபிக்க வருடந்தோறும் சரியாக ஞாபகம் வைத்து பணம் செலுத்து வேண்டும்
  2. திருப்பிவிடுவதற்கு (redirection) வோட்பிரசுக்கு வருடத்திற்கு 10 டாலர் பணம் தர வேண்டும் (http://www.velvetblues.com/web-development-blog/wordpress-com-vs-wordpress-org/)
  3. அட்சென்ஸ் சேர்க்க முடியாது
  4. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்க முடியாது
  5. தமிழிஷ் / இண்ட்லி உட்பட எந்த கருவிப்பட்டை சேர்க்க முடியாது
  6. வார்ப்புருவை தொகுக்கும் சுதந்திரம் கிடையாது


சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் அமைக்கும் மூன்றாவது வழிமுறை : வோர்ட்பிரஸ் redirection – மற்றும் பிற சேவைகளுக்கு பணம் செலுத்துதல் இதற்கு காசு தர வேண்டும் இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. உங்கள் பதிவு வோர்பிரசின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
  2. தளம் உங்கள் பெயரில் இருக்கும்
  3. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  4. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  5. அட்சென்ஸ் சேர்க்கலாம்
  6. லேபிள்கள் உண்டு
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. டொமைனை புதுபிக்க வருடந்தோறும் சரியாக ஞாபகம் வைத்து பணம் செலுத்து வேண்டும்
  2. திருப்பிவிடுவதற்கு (redirection) வோட்பிரசுக்கு வருடத்திற்கு 10 டாலர் பணம் தர வேண்டும் (http://www.velvetblues.com/web-development-blog/wordpress-com-vs-wordpress-org/)
  3. அட்சென்ஸ், கருவிபட்டை ஆகியவற்றை சேர்க்க வோட்பிரசுக்கு வருடத்திற்கு 45 டாலர் பணம் தர வேண்டும்
தமிழ் மண கருவிபட்டை சேர்ப்பதற்கும் காசு, redirectionக்கும் காசு என்று வோர்ட்பிரசில் எதற்கு எடுத்தாலும் காசு தான். எனவே இந்த முறையை பயன்படுத்தினால் உங்கள் பாக்கெட் பழுப்பது நிச்சயம் 



சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் அமைக்கும் நான்காவது வழிமுறை : ஒரு வழங்கியை வாடகைக்கு எடுத்து அல்லது வழங்கியில் குறிப்பிட்ட இடத்தை வாடகைக்கு எடுத்து வோர்ட்பிரஸ் அல்லது வேறு மென்பொருட்களை நிறுவுதல் இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  2. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  3. அட்சென்ஸ் சேர்க்கலாம்
  4. கூடுதல் சேவைகளை அளிக்கலாம்
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. டொமைனை புதுபிக்க வருடந்தோறும் சரியாக ஞாபகம் வைத்து பணம் செலுத்து வேண்டும்
  2. வழங்கி வாடகை எடுக்க வேண்டும். வழங்கிக்கு காசு செலவழிக்க வேண்டும். வருடந்தோறும் சரியாக புதுப்பிக்க வேண்டும். சரியான நேரத்தில் புதுப்பிக்காவிட்டால் தளம் தெரியாது
  3. உங்கள் பதிவு ஒரு வழங்கியில் மட்டுமே இருக்கிறது. அந்த வழங்கியில் ஏதாவது சரி செய்ய முடியாத கோளாறு என்றால் உங்கள் அனைத்து பதிவுகளும், மறுமொழிகளும் போயிந்தே (எனவே சொந்த தளத்தில் வோர்ட்பிரஸில் பதிவு வைத்திருப்பவர்கள், அனைத்து பதிவுகளையும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்)
  4. அதை விட பெரிய பிரச்சனை – பாதுக்காப்பு குளறுபடி.வோர்ட்பிரஸ் மென்பொருளில் இருக்கும் பாது காப்பு குளறுபடிகளை பயன்படுத்தி யாராவது ஹேக்கர் உங்கள் தளத்தில் malware சேர்த்து விட்டால் அதன் பிறகு உங்கள் தளம் தேடுபொறிகளால் தடை செய்யப்படும் அபாயம் உள்ளது
  5. சில தமிழ் எழுத்தாளர்களின் தளங்களில் நச்சு நிரலிகள் இருந்து அவை அந்த தளம் மூலம் பலருக்கும் பரவியது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் 
இணைய வல்லுனர்களை தவிர பிறருக்கு இந்த முறை சிறப்பானது அல்ல 2006 வரை சொந்த பெயரில் தளம் வைக்க ஒரே வழி தனி வழங்கியில் வோர்ட்பிரஸ் போன்ற மென்பொருட்களை நிறுவுவது தான் எனவே வேறு வழியின்றி அனைத்து தலைவலிகளையும் பொருத்துக்கொண்டு

  • பணச்செலவு, 
  • பாதுகாப்பு அச்சம், 
  • பதிவு அழிந்து போகும் வாய்ப்பு 

மூத்த பதிவர்கள் பலரும் தனித்தளத்தில் வழங்கியில் பதிவு வைத்திருந்தனர்

ஆனால் redirection வசதியை ப்ளாக்கர் இலவசமாக தரத்துவங்கிய பின்னர் டொமைன் பெயர் வைத்திருக்கும் விபரம் தெரிந்தவர்கள்

  • http://www.makkal-sattam.org/
  • http://www.parisalkaaran.com/ 
  • http://www.luckylookonline.com/
  • http://www.narsim.in/) 

அனைவரும் தங்கள் பெயரிலேயே முற்றிலும் இலவசமாக தளம் துவங்கி விட்ட்னர்.

  • பாதுகாப்பு அச்சம் இல்லை. 
  • பதிவு அழியுமோ என்ற அச்சம் இல்லை
  • கூடுதல் செலவு இல்லை
  • வார்ப்புருவை மாற்றலாம்  
  • வார்ப்புருவை திருத்தலாம்

விபரம் தெரியாதவர்கள் (அறியாமையால் செயலபடும் அவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன :) ) பணம் செலவழித்து கொண்டிருக்கிறார்கள் :) :)  இதில் அவ்வப்போது security risk வேறு


 

தொடர்ந்து வரும் இடுகையில் நாம் விவாதிக்க இருக்கும் கேள்விகள்
  1. நான் தற்சமயம் வழங்கி வாடகைக்கு எடுத்து அதற்கும் கூடுதல் பணம் செலுத்தி வோர்ட்பிரசில் உள்ளேன். நான் கூகிளுக்கு மாற முடியுமா
  2. கூகிளை விட வோர்ட்பிரசில் கூடுதல் வசதி உண்டு என்கிறார்களே. அப்படியா
  3. நான் தற்சமயம் xyz.blogspot.com என்ற தளம் வைத்துள்ளேன். இதை xyz.com என்று மாற்ற எவ்வளவு செல்வாகும், என்ன முறை
  4. ப்ளாக்கரில் யார் எதை பார்ப்பது என்று தீர்மாணிக்க முடியுமா

Thursday, March 24, 2011

இண்டநெட் தொடர்பில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய


இணையம் என்பது தற்போதைய நிலையில் அத்தியாவசியமான ஒன்றாகும், இந்த நிலையில் இணைய இணைப்பிலோ அல்லது இணைய சேவையிலோ பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். நம்மை அறியாமலையே இணைய  அமைப்பில்(Setting) ஏதேனும் மாற்றங்களை செய்யக்கூடும் அதுபோன்ற சூழ்நிலையில் இணைய இணைப்பு நமக்கு கிடைக்காது, அல்லது இணைய இணைப்பில் ஏதேனும் சிறு தவறுகள் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கம் மட்டும் திறக்காது, அது போன்ற நிலையில் எந்த இடத்தில் தவறு நடந்தது என கனிக்க முடியும் ஆனால் அந்த தவறினை எவ்வாறு சரிசெய்வது என்பது மட்டும் புரியாது, இதுபோன்ற கோளாருகளை சமாளிக்க ஒரு மென்பொருள் உள்ளது.
மென்பொருளை தரவிறக்க: சுட்டி

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொண்டு, அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் மென்பொருளின்  (CIntRep.exe) மீது வலதுகிளிக் செய்து Run as administrator என்பதை தேர்வு செய்யவும் தற்போது அப்ளிகேஷன் ஒப்பன் ஆகும். அதில் உங்களுடைய Problem தை தேர்வு செய்து GO பட்டனை அழுத்தவும். தற்போது சிஸ்ட்டம் ரீஸ்ட்டார்ட் ஆகும்.

தற்போது இணையத்தில் உலவுங்கள் இணையமானது சரியாக வேலை செய்யும், நெட்வொர்க் தொடர்பான எந்தஒரு சிக்கல்கள் அனைதும் தற்போது சரியாகிவிடும். இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.

இந்த 10 இணையத்தளங்களுடன் கொஞ்சம் கவனமாக இருங்கள்.



இந்த இடுகையில் நானுன் என்னை சார்ந்த சில நண்பர்களும் கடுமையான தலையிடிகளை எதிர்நோக்கிய சில முக்கியமான தளங்கள் பற்றி சொல்ல போகிறேன். ஒன்று இதில் அந்த தளங்களின் விதிமுறைகளை மீறினால் உங்களுக்கு தலையிடி. சில தளங்களில் இணைந்தாலே தலையிடி. எனவே வாங்கிக்கட்டுவது தப்புவது உங்கள் கைகளில் தான் உள்ளது. சிலவேளை இந்த தளங்களுடன் நீங்கள் இப்போது இணைத்தும் இருக்கலாம்.
 PayPal : என்னதான் 230 மில்லியன் பேருக்கு மேல் பயன்படுத்தினாலும், ஒரு உதவாத சேவை. PayPal ஆல் எத்தனையோ பேர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். உங்கள் கணக்கில் அதிகமான பணம் இருந்தால், உங்கள் கணக்கு விசாரணை என்று சொல்லி இடைநிறுத்தி நீங்கள் குற்றவாளி இல்லாவிட்டாலும் உங்களை குற்றவாளி ஆக்கி உங்களில் கதையை முடித்து விடுவார்கள். (PayPal Trick)
 GoDaddy : உலகின் முன்னணி Domain registrar. இதை இணையதளங்கள் சில “NoDaddy” என்ன சொல்வதுண்டு. என் அனுபவம் என்னவென்றால் எனது இரண்டு தளங்கள் காரணமின்றி நீக்கப்பட்டன. நான் அவர்களின் விதிமுறையை மீறவே இல்லை. ( ஏனைய சில மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள் . )
 Google Adsense : இது மிகவும் நல்ல நிறுவனம். ஆனால் இவர்களின் விதிமுறையை நீங்கள் இலகுவாக மீற முடியாது. மீறினாலும் சங்குதான். எப்படியும் கண்டு பிடிப்பார்கள். நீங்கள் உங்கள் தளத்தில் உள்ள விளம்பரத்தை click செய்ய சொல்லி ஒருவரை கேட்டால், அதையும் கண்டுபிடிப்பார்கள். எப்படி என்றால் நீங்கள் கேட்ட நபர் கிளிக் செய்ய அனுப்பிய நபர் உங்கள் தளத்திற்கு எப்படி வந்தார், உங்கள தளத்திற்கு வர முன் எங்கு நின்றார் என பலதும் தெரியும். சொன்னால் நம்பமாட்டீர்கள், நீங்கள் எத்தனை மணிக்கு தூங்குகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் விடலாம், ஆனால் Google இற்கு தெரியும்
.
 Dragonara : இவர்கள் DDoS தாக்குதலை தாங்ககூடிய server களை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனம். என் பிலிப்பைன் நண்பர் ஒருவரின் அனுபவம். அவரது தளம் இவர்களின் DDoS தாக்குதல் கலீல் இருந்து பாதுகாக்கப்பட server இல் இயங்கி வந்தது. (மாதம் $500+ மேல் ) . ஒரு நாள் இவர்களே தமது server மீது தாக்குதலை நடாத்தி விட்டு என் தோழரை $1200 server இற்கு மாற்றும்படி கூறினார். சரி என்று மாற்றிய பின் திரும்பவும் Database ஐ  இவர்களே  திருடி  விட்டு hack செய்யப்பட்டு  விட்டது . $2000 தந்தால் மீட்டு தருவதாக   கூறினார். சரி என்று கொடுத்தபோது , database திரும்ப கிடைத்தது. பின்பு நாங்கள் சந்தேகம் கொண்டு control panel, database ஐ கையாண்ட IP முகவரிகளை பரிசோதித்த போது, அங்கிருந்த IP யும் அவர்கள் எங்களுக்கு உதவி email அனுப்பிய IP யும் ஒன்றாக இருந்தது. (குறித்த நேரத்தில் )
 USAGC – US Green Card : இந்த விளம்பரங்களை நீங்கள் அதிகமான தளங்களில் பார்த்திருப்பீர்கள் . இங்கு register செய்தால் உங்களுக்கு Green Card கிடைக்காது . ஆயிரகணக்கான Spam mails தான் கிடைக்கும். (More Info)
 Facebook : குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும். உங்கள் புகைப்படம் ஆபாச தளங்களில் வர விருப்பமா ? உடனேயே facebook இல் upload செய்யுங்கள். யார் என்றே தெரியாதவர்களை நண்பராக சேருங்கள். ஆண்களே, Facebook இல் போலி பெண் புகைப்படங்களுடன், பல போலி முகங்கள் வலம் வருகின்றன , கவனமாக இருங்கள்.
 AVS Media : இந்த தளத்தில் இருக்கும் எந்த மென்பொருளையும் பதியாதீர்கள். பதிந்தால் கதை அவளவுதான். சந்தேகம் என்றால் AVS Flv palyer ஐ பதிந்து மீண்டும் uninstall செய்து பாருங்கள்.
 Smiley Central & Kazulah : நான் ஒன்றும் சொல்லமாடன் கீழுள்ள link ஐ பார்க்கவும். (Facemoods , hotSpotShiled உம் இந்த ரகத்தில் அடங்கும். )