Showing posts with label கூகிள். Show all posts
Showing posts with label கூகிள். Show all posts

Saturday, May 14, 2011

GOOGLE இலவசமாக தருகிறது 100 டாலர். பலனடையுங்கள்

ஒவ்வொரு நாளும் தனக்கே உரிய பாணியில் புதிது புதிதாக களமிறங்குவதில் கூகுளுக்கு இணை கூகுளே. அந்த வரிசையில் 1௦௦ டாலர் பரிசாக தருகிறது. 
இணையதளத்துக்குள் செல்ல சுட்டி தரப்பட்டுள்ளது. 

அங்கே அதர் ப்ரொடக்ட் என்று இருக்கும். அதை கிளிக் பண்ணி உள்ளே செல்லவும். உள்ளே சென்று paart


Friday, April 29, 2011

வேலை வாய்ப்புக்கான கூகுல்



வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது. ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்த தளம் வடிவமைப்பில் எளிமையாக பயன்படுத்துவதற்கு அதைவிட எளிமையாக அமைந்துள்ளது.

இந்தியர்கள் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பை சுலபமாக தேடிக்கொள்ளலாம்.
ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு தளங்களை விட இந்த தளத்தில் அப்படி என்ன விஷேசம் என்று கேடக் தோன்றலாம்.முதலில் ஜாப்சர்ச் மற்றுமொரு வேலைவாய்ப்பு தளம் இல்லை. உண்மையில் இது வேலைவாய்ப்பு தள்மே இல்லை. வேலை வாய்ப்புக்கான தேடிய்ந்திரம்.

அதாவது மற்ற வேலைவாய்ப்பு தளங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை தேடுவதறகான தேடியந்திரம். வேலை வாய்ப்புக்கான் கூகுல் என்றும் சொல்லலாம்.கூகுல் எப்படி இணையத்தில் உள்ள எண்ணற்ற தளங்களில் தேடி தேவையான தகவல்களை தருகிறதோ அதோ போல இந்த தளம் வேலை வாய்ப்பு தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளில் இருந்து தேடி தருகிறது.

மேலும் மற்ற வேலை வாய்ப்பு தளங்களை போல இதில் பயோடேட்டவை எல்லாம் சமர்பிக்க வேண்டியதில்லை.

எந்த துறையில் வேலை தேவையோ அந்த துறையை கூறிப்பிட்டு தேடிப்பார்த்தால் வேலைகள் பட்டியலிடப்படுகினறன.கூகுலில் வரும் முடிவுகளை போலவே வரிசையாக வேலை வாய்ப்புகள் இடம்பெறுகின்றன.

அதன் பிறகு முடிவுகளை பல்வேறு வகைகளில் மாற்றியமைத்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்புகள் ,ஒரு வாரம் முன வெளியானவை என்றும் சுருக்கி கொள்ளலாம்.

வேலைக்கான பதவியின் தன்மை குறித்தும் தேடலை அமைத்து கொள்ளலாம்.அதே போல எந்த நகரில் வேலை தேவை என்றும் குறிப்பிட்டு தேடலாம். வீட்டிலிருந்து எவ்வலவு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கூட் அகுறிப்பிடும் வசதி இருக்கிறது.

முழு நேரமா,பகுதி நேரமா என்றும் குறிப்பிட்டு தேடலாம்.கல்வித்த்குதியின் அடிப்படையிலும் தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.

மேலும் மேம்பட்ட தேடல் வசதியை பயன்படுத்தி எந்த வகையான வேலை எந்த கம்பெனியில் எந்த அம்சங்களோடு வேண்டும் என்றும் தேட முடியும்.

எந்த வேலை தேவை என்பதில் குழப்பம் இருந்தால் இந்த தளத்தில் பிரபலாமாக உள்ள தேடல் பதங்களை கிளிக் செய்து இப்போது வேலை வாய்ப்பு சந்தையில் என்ன டிரென்ட் என்றும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

சரியான வேலை வாய்ப்புக்காக பல்வேறு தளங்களுக்கு சென்று அல்லாடாமல் ஒரே தளத்தில் அழகாக வேலை வாய்ப்பை தேடலாம் என்பதோடு உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இந்தியர்களுக்கு மட்டும் அல்ல இந்தியாவில் குடிபெயர இருப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில்  பணியாற்றி விட்டு தாயகம் திரும்பும் எண்ணம் கொண்டவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி;    http://www.jobsearch.in

Sunday, April 24, 2011

ஏப்ரல் முதலாம் திகதி, கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

ஏப்ரல் முதலாம் திகதி, முட்டாள்கள் தினமாக யாரும் அறிவர். கூகிள் தனது பங்கிற்கு முட்டாள் தினத்தில் பல சுவாரஸ்யமான விடயங்களை தன் பங்கிற்கு செய்து மக்களின் கவனத்தை உலகளவில் ஈர்த்துக் கொள்ள 2000 ஆம் ஆண்டிலிருந்து மறப்பதேயில்லை. இன்று ஏப்ரல் முதலாம் திகதி, கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

ஒவ்வொரு வருடமும் முட்டாள் தின பல நகைச்சுவைகளை உருவாக்குவதில் கூகிளுக்கு நிகர் கூகிள் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, இந்த நகைச்சுவைகளை உருவாக்குவதில் வெறுமனே Google.com இணையத்தளம் பங்கு கொள்ளாது, பிராந்தியங்களுக்குப் பொறுப்பான Google.co.uk, Google.com.au போன்ற பல நாடுகளுக்குப் பொறுப்பான தளங்களும் தன் பங்கிற்கு மிகச் சுவாரஸ்யமான விடயங்களை வழங்க தயாராகியிருக்கும்.

இதோ விரிகிறது இந்த ஆண்டின் கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

உயிர் எழுத்துக்களுக்குப் பஞ்சமான ஜிமெயில் தளம்.

இன்றைய ஜிமெயில் தளத்தில் காணப்பட்ட சொற்களில் ஆங்கில உயிர் எழுத்துக்கள் எதுவும் காணப்படவில்லை.



விலங்கின் மொழியை மொழிபெயர்க்கும் கையடக்கத் தொலைபேசி செய்நிரல்.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்குடன் கூகிள் விலங்குகளின் மொழிகளை மொழிபெயர்த்து மனிதர்களுக்குச் சொல்லக்கூடிய கையடக்கத் தொலைபேசி செய்நிரலொன்றை தயாரித்துள்ளது.



அந்தச் செய்நிரல் எப்படி இயங்குகின்றதென்பதைச் சொல்லுகின்ற வகையில் காணொளியொன்றையும் கூகிள் அந்தத் தளத்தில் இணைத்திருந்தது.

புத்தகங்களை முப்பரிமாணத்தில் வாசிக்கலாம்

Google Books தமது இணையத்தளத்தில் காணப்படும் புத்தகங்களை முப்பரிமாண முறையில் (3D) வாசிக்கக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.



முப்பரிமாண முறையில் பாதையில் பயணம் செய்யலாம்

Google Street View என்பது பலராலும் விரும்பப்படுகின்ற ஒரு சேவையாகும். ஒரு இடத்தில் அமைவைத் துள்ளியமாகக் காட்டக்கூடிய தகவை இந்தத்தளம் கொண்டுள்ளது. இன்று அந்தத் தளத்தில் காணப்படும் படங்களை முப்பரிமாண முறையில் பார்க்கக் கூடிய வாய்ப்பை கூகிள் ஏற்படுத்தித் தந்திருந்தது.



YouTube செலவீனங்களைக் குறைக்க உதவுங்கள்

இன்றைய தினம் காணொளி பகிர்வுத் தளமான YouTube இன் இலட்சணையை (Logo) கூகிள் மாற்றம் செய்திருந்தது.



இதற்கான காரணத்தையும் அது தெளிவுற அதன் வலைப்பதிவில்குறிப்பிட்டிருந்தது. வீடியோக்களை textP என்ற நிலையில் பார்க்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.



இந்த text-only mode இன் மூலம் காணொளிகளை காண்பதால், செக்கனுக்கு ஒரு டொலரை YouTube சேமித்துக் கொள்ள உதவுவதாக கூகிள் கூறுகின்றது.



எல்லாவற்றையும் சேமிக்கும் Google Docs சேமிப்பகம்

ஆம். எல்லாவற்றையும் உங்கள் திறப்பு, வீட்டிலுள்ள பொருட்களைக் கூட சேமித்து வைக்கக்கூடிய கூகிள் டொக்ஸ் கட்டமைப்பு கூகிள் இன்றுஅறிமுகம் செய்து வைத்தது.



தேடலிற்கான நேரம் செக்கனில் இல்லை

கூகிளில் ஒரு தேடலை மேற்கொள்ளும் போது, தேடலிற்காக எடுத்துக் கொண்ட நேரத்தை வழமையாக செக்கனிலேயே தெரிவிக்கும். இன்று அவ்வாறில்லை. பல அளவீடுகளை இதனைத் தெரிவிக்கும் பொருட்டு பயன்படுத்திக் கொண்டது.



கூகிள் தனது தளத்தில் பயன்படுத்திய சில அளவீடுகள் பின்வருமாறு.

1.21 gigawatts
11.90 parsecs
0.30 centibeats
0.32 centons
0.33e+43 Planck times
0.97 times the velocity of an unladen swallow
0.17 microfortnights
at warp 8.96
0.07 nanocenturies
0.03 femtogalactic years
72.10 jiffies
0.41 microweeks
23.00 skidoo
1.56e-15 epochs
2.00 shakes of a lamb’s tail
3.49 hertz

இவ்வாறாக பல சுவாரஸ்யங்களை கூகிள், இன்றைய தினத்தில் அரங்கேற்றியது.

Tuesday, April 12, 2011

தேடு பொறிகளில் கூகிளை முந்திக்கொண்டு மற்றொரு SEARCH ENGINE

ஐரிஷ் மொழியில் இதடிடூ என்ற சொல்லுக்கு அறிவு என்று பெயர். அறிவு வளர்ச்சியின் அடிப்படையே தேடல் தான். எனவே தேடலுக்குத் துணை புரியும் இந்த தளத்திற்கு இது சரியான பெயராகவே தோன்றுகிறது. நாம் தேடும் சொல்லுக்குத் தளங்களைத் தேடாமல், இருக்கின்ற கோடிக்கணக்கான தளங்களைத் தேடி வகைப்படுத்திக் கொண்டு அந்த தகவல் கட்டமைப்பிலிருந்து தளப்பட்டியலைத் தருகிறது கூல் தளம். கூகுள் தளத்தைக் காட்டிலும் மூன்று பங்கும், மைக்ரோசாப்ட் தளத்தைக் காட்டிலும் பத்து பங்கும் கூடுதலாக தளங்களைத் தேடி தகவல்களை எளிதான முறையில் புதிய பார்மட்களில் தருகிறோம் என இந்த தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது..


மற்ற சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மூன்று பங்கு அதிகமான எண்ணிக்கையில் இணைய தளங்களைத் தேடி தகவல்களைத் தருகிறோம்' என்ற அறிவிப்புடன் கூல் ( Cuil.com ) என்ற பெயரில் சர்ச் இஞ்சின் தளம் ஒன்று அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது. இதனை உருவாக்கி வழங்கி வருபவர்கள் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் (கணவன் மனைவியான) டாம் மற்றும் அன்னா . அலுவலகத் தலைமையிடம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. டாம் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் ஆராய்ச்சி யாளராகப் பணியாற்றியவர்.

அன்னா பேட்டர்சன் கூகுள் அலுவலகத்தில் முதன்மை கட்டமைப்பாளராக பணியாற்றியவர். கூல் நிறுவனத்தில் அலுவலர்கள் 30 பேர். கூகுள் தளத்துடன் போட்டியிடும் அளவிற்கு சிறப்பாகத் தளத்தை வடிவமைத்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளில் இன்டர்நெட் வளர்ச்சி பெற்ற அளவிற்கு அதில் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சின் என்னும் தேடல் தளங்கள் வளர்ச்சி அடையவில்லை. கூகுள் தளம் ஒன்றுதான் புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பல்வேறு வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தித் தந்து வருகிறது. தற்போது அதனை முந்தும் வகையில் கூல் தளம் வந்துள்ளது.
18 ஆயிரத்து 600 கோடி தளங்களை ஆய்வு செய்து அவற்றில் மோசமானவற்றையும் டூப்ளிகேட் தளங்களையும் விலக்கிவிட்டு 12 ஆயிரம் கோடி இணைய தளங்களை வகைப்படுத்தி பட்டியலிட்டு வைத்து தேடல் சொற்களுக்கேற்ப அவற்றைத் தருகிறது. தேடுதல் சொற்களுக்கான இத் தளம் தரும் பட்டியல் அடுக்கே மிக நன்றாக வேறுபாட்டுடன் இருக்கிறது. தளத்திலிருந்து சில வாக்கியங்கள், தளம் சார்ந்த போட் டோ என தளம் குறித்த அடிப்படைத் தகவல்கள் தரப்படுவதால் அதனைக் கிளிக் செய்து பின் அடடா இது தேவையில்லையே என்று ஏமாற வேண்டியதில்லை.

தளங்கள் அதில் தரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஒரு பத்திரிக்கையில் லே அவுட் போல காட்டப்படுகின்றன. அடையாளம் கண்டுகொள்ள முக்கிய வாக்கியங்கள் மற்றும் போட்டோக்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன. மற்ற தேடல் தளங்கள் அந்த தளங்களை எத்தனை பேர் பார்த்திருக்கின்றனர் என்ற ஹிட் ரேட் படி வரிசைப்படுத்தி பட்டியலிடுகின்றன. ஆனால் கூல் அவற்றில் தரப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. கூல் தளத்தினைப் பயன்படுத்துபவர் குறித்த எந்த பெர்சனல் தகவல்களையும் இத்தளம் கேட்டுப் பெறுவதில்லை. பயன்படுத்துபவர் பிரைவசியில் தலையிடுவதே இல்லை.

தேடலுக்கான சொல்லை டைப் செய்கையில் பிற தளங்களில், நாம் ஏற்கனவே டைப் செய்த சொற்களை மட்டும் நினைவில் வைத்து பட்டியல் காட்டப்படும். ஆனால் கூல் தளத்தில், ஆன் லைன் டிக்ஷனரியில் கிடைப்பது போல, ஏற்கனவே கோடிக்கணக்கான தளங்களை ஆய்வு செய்து அமைக்கபட்ட பட்டியலிலிருந்து சார்ந்த சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் முழுமையான சொல்லை நாம் டைப் செய்திட வேண்டிய தில்லை.

காட்டப்படும் பட்டியலில் அந்த தளத்தில் அதற்கான ஐகான் இருந்தால் அந்த ஐகான் காட்டப்படுகிறது. இதனால் நமக்கு வேண்டிய தளங்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது. தேடலைக் கூர்மைப்படுத்தி நமக்கு வேண்டியதை நோக்கி நம்மைச் செலுத்தும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேடலை மேற்கொண்டபின் வலது பக்கம் ஒரு பேனல் தரப்படுகிறது. அதில் ‘Explore By Category’ என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது.

நம் தேடலுடன் தொடர்புள்ள மற்ற பொருள் குறித்த பட்டியல் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்து முன்னேறுவதன் மூலம் தேடல் பொருளின் சரியான தகவல் தரும் தளத்திற்கு நாம் எடுத்துச் செல்லப்படுவோம். மேலும் இந்த வகையில் கர்சரைக் கொண்டு சென்றவுடன் சார்ந்த சொற்களுக்கான சரியான பொருள் பாப் அப் விண்டோவில் தரப்படுகிறது. இதைக் கொண்டு நாம் அந்த தளம் வேண்டுமா? அது நம் தேடலுடன் தொடர்புடையதா என்று முடிவெடுக்கலாம்.

கூல் தளத்தில் தேடல் மேற்கொள்கையில் தேடல் சொல்லுடன் தொடர்புடைய வெவ்வேறு பொருள்களுக்கு தனித்தனி டேப்கள் தரப்படுகின்றன. இவற்றின் மூலம் நமக்குத் தேவையான தளத்தினைத் தேர்ந்தெடுத்துச் செல்லலாம். சேப் சர்ச் (Safe search) என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது தொடக்கத்திலேயே இயங்குகிறது. இதனால் பாலியியல் மற்றும் சிறுவர்கள் காணக் கூடாத தளங்கள் வடிகட்டப்பட்டு பட்டியலிடப்படுகின்றன. அனைத்து தளங்களும் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வசதியை ஆப் செய்துவிட்டு தேடலாம்.

புதிய தேடுதல் தளம் – கூல்: ஐரிஷ் மொழியில் கூல் என்றால் அறிவு மற்றும் சால்மன் (வஞ்சிர மீன்) என்ற மீனையும் குறிக்கும். பழங்கால கதை ஒன்று அயர்லாந்து நாட்டில் இன்றும் வழங்குகிறது. சால்மன் மீன் ஒன்று ஒன்பது ஹேஸல்களை (பாதாம் பருப்பு கொட்டை போன்றது) மொத்தமாகத் தின்று விட்டு அறிவுக் குளத்தில் வீழ்ந்து விட்டது. அதன் மூலம் உலகின் அறிவு அனைத்தும் அந்த மீனுக்கு வந்துவிட்டது. இந்த மீனை பிடித்து முதலில் சாப்பிடுபவருக்கு மட்டும் உலக அறிவு வந்துவிடும் என்பது ஐதீகம்.

ஐரிஷ் நாட்டின் பிரபல கவிஞர் ஒருவர் இந்த மீனை எப்படியும் பிடித்துச் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாய்ன் என்ற ஆற்றில் பல ஆண்டுகள் மீன் பிடித்தாராம். இறுதியில் தன் முயற்சியில் வெற்றி பெற்று அந்த அறிவு மீனைப் பிடித்தார். அதைத் தன் சிஷ்யனான "பின்கூல்' என்பவனிடம் கொடுத்து மீனை வறுத்துக் கொடு; ஆனால் ஒரு பிட் கூடச் சாப்பிடக் கூடாது என்று மிரட்டிவிட்டு குளிக்கச் சென்றார்.

பின்கூல் தன் தலைவரின் ஆணைக்கேற்ப பொறுமையாக மீனை பொன் நிறத்திற்கு வறுக்கத் தொடங்கினான். சாப்பிட ஆசை இருந்தாலும் தலைவரின் எச்சரிக்கையால் அடக்கிக் கொண்டான். வறுவல் முடியும் தறுவாயில் வறுத்த மீனை கைகளில் எடுக்கும் போது கட்டைவிரலில் சூடு பட்டு பொறுக்க முடியாமல் உடனே சூடு தணிக்க விரலை வாயில் வைத்து சூப்பினான். விரலை அழுத்தி எடுத்ததால் விரலோடு வந்த மீனின் இறைச்சி வாயினுள் சென்றது. அதனால் அவனுக்கு உலக அறிவு வந்ததாக இன்றும் அயர்லாந்தில் கதை உண்டு.

(நம் நாட்டிலும் விரல் சூப்பும் பிள்ளைகளை அறிவு அதிகம் என்று சொல்வது இதனால்தானோ) ஐரிஷ் நாட்டு கதைகளில் எல்லாம் இந்த பின்கூல் ஒரு ஹீரோவாக இன்றும் வர்ணிக்கப்படுகிறார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டால் உடனே விரலை வாயில் வைத்து அதற்கான விடையைத் தந்துவிடுவதாக அனைத்து கதைகளும் சொல்கின்றன. கூல் தள நிறுவனர் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி அதே பாய்ன் என்ற ஆற்றில் அடிக்கடி மீன் பிடிப்பாராம். அதனாலேயே இந்த பெயரைத் தான் உருவாக்கிய தளத்திற்கு டாம் வழங்கியுள்ளார்.

Thursday, April 7, 2011

கூகுள் குரோம் பிரவுசர் 10

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர், பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால், மற்றவற்றை நாட மாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது நிலவுகிறது. இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.
முதல் அம்சமாக, மீண்டும் அதன் வேகத்தைக் கூறலாம். முதல் முதலாக வந்த குரோம் பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாக இருப்பதாக, இதனைச் சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. Crankshaft JavaScript இதற்குத் துணை செய்கிறது. குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொண்ட போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1,184 மில்லி விநாடிகளில் இணையப் பக்கத்தினை இறக்கிக் காட்டியது. அதே சோதனையை மற்றவற்றில் நடத்திய போது, பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லி செகன்ட்ஸ், ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ், பயர்பாக்ஸ் (பதிப்பு 4 பீட்ட 12) – 388 மில்லி செகண்ட்ஸ், புதிய குரோம் (பதிப்பு 10)321 மில்லி செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.


இந்த பதிப்பில், குரோம் பிரவுசரின் செட்டிங்ஸ் அனைத்தும் டேப்களில் தரப்பட்டுள்ளன. இதனால், இவற்றைக் கையாள்வது எளிதாகிறது. செட்டிங்ஸ் மாற்ற, வலது மேல் மூலையில் உள்ள பைப் ரென்ச் ஐகானில் கிளிக் செய்தால், முன்பு போல் ஒரு பாப் அப் விண்டோ பெறப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, செட்டிங்ஸ் டேப்கள் நிறைந்த புதிய பக்கம் திறக்கப்படுகிறது. இதனால், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கம் நம் கட்டுப்பாட்டிலிருந்து மறைவதில்லை. செட்டிங்ஸ் எப்படி, எங்கு உள்ளது என்று உடனடியாகத் தெரியவில்லை என்றால், அதற்கென ஒரு தேடல் வசதியும் தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக cookies குறித்து ஒரு செட்டிங்ஸ் மாற்ற வேண்டும் என எண்னினால், சர்ச் பாக்ஸில் cookies என டைப் செய்து என்டர் தட்ட, குக்கீஸ் குறித்த அனைத்து செட்டிங்குகளும் தனியே ஒரு டேப்பில் காட்டப்படும்.
இந்த குரோம் பிரவுசரில் உள்ள புக்மார்க்குகளை, உங்களின் எந்த கம்ப்யூட்டரிலும் இணைத்துச் செயல் படுத்தலாம். லினக்ஸ், மேக் ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் என எந்தக் கம்ப்யூட்டரிலும் இவை இணைந்து செயல்படும். இதுவரை எக்ஸ்மார்க்ஸ் (Xmarks fromwww.xmarks.com) என்னும் ஆட் ஆன் புரோகிராம்தான் இவ்வாறு புக்மார்க்ஸ் மற்றும் பாஸ்வேர்ட்களை அனைத்து வகை இயக்கத்திற்கும் ஏற்ற வகையில் இணைத்து செயல்படும் வகையில் தந்து வந்தது. அந்த செயல்பாடு திறன், இப்போது குரோம் பிரவுசரில் தரப்பட்டுள்ளது. ஒரு நாளில் பலவகைக் கம்ப்யூட்டர்களில், பல கம்ப்யூட்டர் களில் மற்றும் லேப் டாப்களில் பணிபுரிவோருக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளது.
பொதுவாக கூகுள் தன் சாதனங்களில், பாதுகாப்பினை மிக அருமையாக பலப்படுத்தும். இந்த பிரவுசரில் பிளாஷ் பிளேயர் இணைந்து தரப்படுகிறது. பொதுவாக பிளாஷ் பயன்பாடு மூலம் தான், மால்வேர் மற்றும் வைரஸ்கள் ஊடுருவி பெர்சனல் கம்ப்யூட்டரைக் கெடுக்கின்றன. இதனை மனதில் கொண்டு, கூகுள் தன் சேண்ட் பாக்ஸ் (Sandbox) பாதுகாப்பினை, பிளாஷ் பிளேயருள்ளாக அமைத்துள்ளது. எனவே ஏதேனும் வைரஸ் இந்த வழியைப் பின்பற்றினால், அது இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டு, கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கப்படுகிறது. விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில், இந்த சாண்ட் பாக்ஸ் தடுப்பை யாரேனும் உடைக்க முடியும் என்று காட்டினால், அவர்களுக்கு 20 ஆயிரம் டாலர் தருவதாக கூகுள் தன்னம்பிக்கையுடன் அறிவித்துள்ளது.
மேலும் குரோம் பிரவுசர், ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ள தால், பாதுகாப்பில் ஏதேனும் சிக்கல் தென்பட்டால், யார் வேண்டு மானாலும் அதற்கு தீர்வு காணலாம்.
இந்த பிரவுசர் எச்.264 (ஏ.264) வீடியோ பார்மட்டினை சப்போர்ட் செய்வதில்லை என்று பலர் குற்றம் சாட்டி உள்ளனர். பொதுவாகவே, எந்த ஒரு வீடீயோ பார்மட்டிற்கும் பிளாஷ் பிளேயர் ஈடு கொடுப்பதால்,இதனைப் பற்றி கூகுள் அக்கறை கொள்ளவில்லை. மேலும் பாதுகாப்பு மற்றும் வேகம் ஆகிய இரண்டினைத்தான் பொதுவாக அனை வரும் எதிர்பார்க்கின்றனர் என்பதால், இது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை.குரோம் பிரவுசரை இலவசமாகhttp://www.google.com/ chrome என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tuesday, April 5, 2011

கூகுளுக்குத் தமிழ் தெரியாது.



google tamil
ஆன்மிகம், ஆன்மீகம்.
சன்னதி, சன்னிதி.
கருப்பு, கறுப்பு
- இது போன்ற சொற்களில் எது சரி என்ற குழப்பம் வருகையில் பலரும் கூகுளில் இச்சொற்களைத் தேடி, கூடுதல் முடிவுகளைக் கொண்ட சொற்களைச் சரியெனத் தேர்கிறார்கள்.
ஆனால், இந்த வழிமுறை எப்போதும் சரியாக இருக்கத் தேவை இல்லை.
எடுத்துக்காட்டுக்கு,
முயற்சிக்கிறேன் என்று எழுதுவது தவறு. கூகுள் தேடலில் இதற்கு 15,900 முடிவுகள் கிடைக்கின்றன.
முயல்கிறேன் என்று எழுதுவது சரி. ஆனால், கூகுள் தேடலில் இதற்கு 9,300 முடிவுகள் தான் கிடைக்கின்றன.
இணையத்தில் எழுதும் அனைவரும் தமிழை, அதன் இலக்கணத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லர். எனவே, கூகுள் காட்டும் முடிவுகளை வைத்து ஒரு சொல் எவ்வாறு எல்லாம் எழுதப்படுகிறது, இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது என்று அறியலாமே ஒழிய எது சரியான சொல் என்று முடிவு செய்ய இயலாது. அதிகம் புழங்கும் சொற்கள் சரியானவையாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் 100% இப்படிச் சொல்ல இயலாது.
சென்ற பத்தியில் “இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது” என்பதில் “
இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம்
” என்பதை அடிக்கோடிட்டு மனதில் இருத்திக் கொள்ளுங்கள். ஒருங்குறியில் இல்லாத பல தமிழ் இணையத்தளங்களை கூகுள் திரட்டுவதில்லை. இன்னும் படிமங்களாகவே கூட தமிழ் எழுத்துக்களைக் காட்டும் வழக்கமும் இருக்கிறது. இவை போக, கூகுளால் அணுகித் திரட்டப்படாத பல தமிழ் இணையத்தளங்களும் இருக்கலாம். திரட்டப்பட்ட பக்கங்களில் இருந்து கூட எல்லா பக்கங்களையும் தேடல் வினவல்களுக்கு கூகுள் பயன்படுத்துவதில்லை. முக்கியமில்லாத பக்கங்கள், ஒரே போல் உள்ள பக்கங்களைத் தவிர்த்து விடுகிறது. இணையத்தில் உள்ள தமிழ் ஒலிப்பதிவுகளில் உள்ள பேச்சுக்களைப் புரிந்து கூகுளால் எழுத்துப்பெயர்க்க முடியாது.
கூகுள் முடிவுகளில் ஒரு சொல் அதிகம் தென்படுகிறது என்பதற்காகத் தமிழ் அச்சு ஊடகங்கள், நூல்கள், மக்கள் பேச்சு வழக்கிலும் அச்சொல் கூடுதலாகப் புழங்குகிறது என்று முடிவுக்கு வர இயலாது. இணையத்தில் முழுமையாக உள்ளடக்கங்களை ஒருங்குறியில் ஏற்றும் தமிழ் அச்சு ஊடகங்கள் குறைவே. தமிழ் மக்களின் வட்டாரப் பேச்சு வழக்குகளோ இன்னும் அச்சு வடிவிலேயே கூட முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மை மக்களின் பேச்சு வழக்கைக் கொச்சையாகக் கருதும் ஆதிக்கப் போக்கு அச்சு ஊடகங்கள் தத்தம் எழுத்து மொழித் தேர்வில் பக்கச் சாய்வுடன் செயல்படும் என்றும் உணரலாம். பேச்சு மொழி வேறாகவும், உரைநடை எழுத்து மொழி வேறாகவும் இருக்கும் தமிழில் இது முக்கியமான விசயமாகும். தமிழைப் பொருத்த வரை எழுத்து மொழி மட்டுமே தமிழின் அதிகாரப்பூர்வ ஆவணம் கிடையாது. கற்றறிந்த தமிழறிஞர்களே தெரியாமல் திணறும் பல கலைச்சொற்கள் மக்கள் வாழ்வில் இலகுவாகப் புழங்குகின்றன. எனவே பேச்சு மொழியின் திறத்தையும் தரத்தையும் குறைத்து மதிப்பிடலாகாது.
தற்போது நன்கு படித்து, கணினி, இணைய அணுக்கம், எழுதுவதற்கான ஓய்வு நேரம், ஆர்வம் கூடியவர்களே தமிழ் இணையத்தில் எழுதுகிறார்கள். மொத்த தமிழ் மக்கள் தொகையில் ஒரு வீதம் கூட இருக்க மாட்டார்கள். இந்த ஒரு வீதத்திற்குக் குறைவான மக்களின் சமூக, பொருளாதார, வாழ்வியல், வயது, கல்வி, தொழில் பின்புலங்களிலும் கூடுதல் ஒற்றுமைகளைக் காணலாம். கணிசமானவர்கள் மென்பொருள் துறையில் இருப்பவர்கள். இளைஞர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள். பெண்கள் தொகை குறைவு. இவர்களின் எழுத்துகளிலும் தனித்துவமான, பாசாங்கில்லாத, வட்டார வழக்குகளைக் காண்பது அரிது. ஏற்கனவே வெகுமக்கள் ஊடகங்கள் பின்பற்றும் மொழி நடையை அறிந்தோ அறியாமலோ பின்பற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, பெரும்பான்மை தமிழ் மக்களின் பேச்சு, எழுத்து வழக்குகள் உள்ளது உள்ளபடி ஒலி, எழுத்து வடிவில் பதியப்பட்டு ஆயத்தக்க நிலைக்கு வரும் வரை, இந்த சொற்பத் தமிழ் இணைய மக்கள் தொகையை ஒட்டு மொத்த உலகத் தமிழ் மக்கள் தொகையின் சார்பாகப் பார்க்க இயலாது.
மேற்கண்ட சிந்தனைகள் யாவும் தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்த ஒரு சுவையான உரையாடலை அடுத்து எழுந்தவை.
இராமனுசன் என்ற பெயரைக் காட்டிலும் இராமானுஜன் / இராமானுஜம் / ராமானுஜம் என்ற பெயரே இணையத்தில் அதிகம் தென்படுவதால் அவையே சரி என்ற வாதம் ஒருவரால் முன்வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா என்ற பெயரைக் காட்டிலும் சிறீலங்கா என்ற பெயரே இணையத்தில் அதிகம் தென்படுவதால் ஸ்ரீ என்ற எழுத்தை ஒழித்து சிறீ, சிரீ என்றே எழுதத் தொடங்குவோமா என்று எதிர்வாதம் வைத்தால் சரியாக இருக்குமோ

Thursday, March 24, 2011

ஆன்லைன் கூகுள்குரோம் பெயின்ட்


கூகுள் நிறுவனம் புதிதுபுதிதாய் சேவைகளை வழங்கி வருகிறது அந்த வகையில் கூகுள் நிறுவனம் கூகுள் பெயின் என்ற மற்றுமொரு சேவையினையும் வழங்கி வருகிறது, இதன் மூலம் நாம் ஆன்லைனில் இருந்தப்படியே நம்முடைய எழுத்து மற்றும் கலர் போன்றவற்றில் புதிதாக மாற்றங்களை செய்ய முடியும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த  சேவை பயனுள்ளதாய் இருக்கும். இந்த சேவையின் மூலம் கூகுள் நிறுவனம் சின்னஞ்சிறு குழந்தைகளை கூட தன்பக்கம் இழுத்து வருகிறது, அது மட்டுமல்லாமல் இந்த கூரோம் பெயின் வசதியானது முக்கியமான தருணங்களில் கைகொடுக்க கூடும். இந்த தளத்தில் நாம் சாதரணமாக மைக்ரோசாப்ட் பெயின்ட்டில் நாம் என்னென்ன வேலைகளை செய்ய முடியுமோ அதை விட ஒருசில கூடுதல் வேலைகளையும் இந்த குரோம் பெயின்ட் மூலம் செய்ய முடியும்.

தளத்திற்கான சுட்டி 


இந்த வசதியானது, மிகவும் சிறப்பானது ஆகும், இதன் மூலம் ஏறகனவே கூறியது போல டெக்ஸ்ட் மற்றும் கலர் போன்றவற்றை இதில் மாற்றம் செய்ய முடியும். ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள், இதனுடைய சிறப்பம்சங்களை பெற முடியும்.

கூகுள் குரோம் உலவியினை கொண்டு Youtube வீடியோவினை தரவிறக்கம் செய்ய


Youtube தளத்தில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய நாம் இதுவரை பல வழிகளை மேற்கொண்டோம் தற்போது Youtube தளத்தில் உள்ள விடியோக்களை கூகுள்குரோம் உலவியினை கொண்டு தரவிறக்கம் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம். Youtube தளம் என்பது வீடியோவினை நண்பர்களிட்மோ அல்லது இணைய நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ளும் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை யார் வேண்டுமானலும் பார்க்கலாம், வேண்டுமானால் தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த Youtube தளமானது கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பலவழிமுறைகள் உள்ளன.

கூகுள்குரோம் உலவியினை கொண்டு  Youtube தளத்தில் இருக்கும் விடியோவினை தரவிறக்கம் செய்ய முதலில் Youtube தளத்தில் டவுண்லோட் பட்டனை சேர்க்க வேண்டும். அதற்கு ஒரு ஸ்கிரிப்டை கூகுள்குரோம் உலவியில் இணைக்க வேண்டும். 

ஸ்கிரிப்டை இணைப்பதற்கான சுட்டி


ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்ய சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Install என்ற பொத்தானை அழுத்தவும். பின் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும், அதிலும் Install என்பதை கிளிக் செய்யவும். தற்போது ஸ்கிரிப்ட் கூகுள் குரோம் உலவியில் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.


அடுத்து நீங்கள் கூகுள் குரோம் உலவியில் Youtube விடியோவை காணும் போது வீடியோவின் அடிப்பகுதியில் டவுண்லோட் பட்டன் இணைக்கப்பட்டிருப்பதை காண முடியும். இந்த பட்டனை பயன்படுத்தி வீடியோவை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.


இந்த வசதியின் மூலமாக Youtube தளத்தில் இருக்கும் வீடியோவை எளிமையாக டவுண்லோட் செய்து கொள்ள முடியும். இந்த டவுண்லோட் ஆப்ஷன் மூலாமாக  பல்வேறு வீடியோ பைல் பார்மெட்டுக்களில் டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.


இவற்றில் குறிப்பிட்டுள்ள வீடியோ பைல் பார்மெட்டுக்களில் இருந்து வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இப்படியும் Youtube தளத்தில் உள்ள வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

கூகுள் குரோம் உலவியில் காப்பி பேஸ்ட் செய்ய ஒரு நீட்சி


இணையத்தில் உலா வரும் போது ஒருசில குறிப்பிட்ட தகவல்களை சேமித்து கொள்ள பயனாளர்கள் விரும்புவர். முக்கியமாக எழுத்துக்களையே அதிகமாக காப்பி செய்து தனியொரு டாக்குமெண்டாக சேமித்து வருவோம். இவ்வாறு ஒவ்வொரு முறையும் எழுத்துக்களை காப்பி செய்து தனியொரு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்து வருவோம். பெரிய கோப்பாக இருந்தால் பரவாயில்லை சின்னஞ்சிறு சொற்றொடர்களை கூட இதுபோன்றே காப்பி செய்து பேஸ்ட் செய்வோம். இதனால் கால விரயம் மட்டுமே ஆகும். ஒரு சில நேரங்களில் ஒரு பகுதி சொற்றொடர்களை காப்பி செய்து விடுவோம் ஆனால் பேஸ்ட் செய்ய மறந்து விடுவோம், இல்லையெனில் இன்னொரு சொற்றொடர்களை காப்பி செய்திடுவோம் இதனால் நாம் அதற்கு முன் காப்பி செய்த சொற்றொடரானது நீக்கப்பட்டிருக்கும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் இதற்கான வசதி இல்லை, ஆனால் இணைய உலவியான கூகுள் குரோமில் இது சாத்தியம். இந்த உலவியில் Pastey என்னும் நீட்சியின் உதவியுடன் இதுபோன்ற காப்பி,பேஸ்ட் செயல்களை மிக எளிமை செய்ய முடியும். அதற்கு முன் காப்பி, பேஸ்ட் என்ற வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகள் ஆகும். இதற்கான தமிழ் அர்த்தங்கள் காப்பி - நகலெடுத்தல், பேஸ்ட் - ஒட்டுதல் , கட் - நகர்த்துதல், இந்த வார்த்தைகளை பயன்படுத்தினால் வாசர்களுக்கு சற்று தடுமாற்றம் ஏற்படும் என்பதால் இந்த பதிவில் காப்பி, பேஸ்ட் என்ற வாத்தையினையே பயன்படுத்தி உள்ளேன். 

நீட்சியை தரவிறக்க சுட்டி


கூகுள் குரோம் உலவியில் நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் அட்ரஸ்பாரின் பக்கத்தில் ஒரு Pastey ஐகான் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும். அதை ஒப்பன் செய்தும் பேஸ்ட் செய்து கொள்ள முடியும். இல்லையெனில் எந்தெந்த சொற்றொடர்களை தனியே சேமிக்க வேண்டுமோ அந்த சொற்றொடர்களை தேர்வு செய்து கொண்டு, சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Copy selected to Pastey என்பதை அழுத்தியும் சொற்றொடர்களை சேமித்துக்கொள்ள முடியும்.



காப்பி செய்த சொற்றொடர்களை பேஸ்ட் செய்ய வேண்டுமெனில் Pastey ஐகானை அழுத்தி வேண்டிய இடத்தில் பேஸ்ட் செய்து கொள்ள முடியும். இந்த நீட்சியானது இணையத்தில் தகவல்களை  தேடி அலைந்து சேகரிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வலைப்பக்கத்தில் காப்பி செய்த சொற்றொடர்களை மற்ற இடங்களிலும் பேஸ்ட் செய்து கொள்ள முடியும்.

Thursday, March 10, 2011

கூகுளின் இணைய அகராதி


கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை மிகவும் பயனுள்ள  சேவை.

இச் சேவையை பயன்படுத்த www.google.com/dictionary என்ற முகவரிக்கு சென்று English — Tamil தேர்ந்தெடுத்து ஆங்கில சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை அறிந்து கொள்ளலாம்.





கூகிள் ஆங்கிலம் தமிழ் அகராதி
கூகிள் தமிழ் – ஆங்கில அகராதி
கூகிள் தமிழ் - ஆங்கில அகராதி

Tuesday, March 8, 2011

கூகுள் தரும் உடனடி தகவல்



ஒரு நாடு குறித்த பல தகவல்கள் நமக்கு அடிக்கடி தேவையாய் இருக்கும். குறிப்பாக நாம் ஒரு நாட்டைப் பற்றிய சிறு அறிக்கை அல்லது தகவல் தொகுப்பினைத் தயாரிக்க பல வகையான தகவல்கள் தேவைப்படும். எடுத்துக் காட்டாக, அதன் ஜனத்தொகை, ஆண்டு பொருளாதார வளர்ச்சி, அது உலக மேப்பில் எங்குள்ளது போன்ற கேள்விகளுக்கு நமக்கு விடையாகப் பலவகை தகவல்கள் தேவைப்படுகின்றன. 

இவற்றைப் பெற, நாம் ஏதேனும் சர்ச் இஞ்சின் சென்று, நாட்டின் பெயரைக் கொடுத்துப் பின்னர் கிடைக்கும் தளமுகவரிகளைக் கிளிக் செய்து தகவல்களைத் தேடிப் பெறுவோம். 
ஆனால், இப்போது கூகுள் சர்ச் இஞ்சின் இந்த தகவல்களை மிகவும் எளிமையாவும் வேகமாகவும் பெறும் வகையில் இயங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஜெர்மனியின் ஜனத்தொகை என்னவென்று அறிய என சர்ச் இஞ்சின் கட்டத்தில் population Germany என்று கொடுத்தால் போதும். ஒரு நாட்டின் தேசிய கீதம் அறிய நாட்டின் பெயருடன் anthem என்றும், தலைநகர் அறிய capital city என்றும், தேசியக் கொடி குறித்துத் தெரிந்து கொள்ள flag என்றும் கொடுத்தால் போதும். எவ்வளவு எளிது பார்த்தீர்களா !! 


Thursday, March 3, 2011

இனி அனைவரும் பயன்படுத்தலாம். கூகிளின் மற்றுமொரு தயாரிப்பு Google cloud connect


கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும் Google Docs இற்கும் இடையில் கூகிள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி அதனை குறிப்பிட்ட பாவனையாளர்களிற்கு மாத்திரம் வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியானது இனி அனைத்து கூகிள் பாவனையாளர்களாலும் உபயோகப்படுத்தும் வகையில்வெளிவந்துள்ளது.
இந்த Google cloud connect இனை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் எமது கூகிள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோ சொப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும் போது அவற்றை நேரடியாக எமது கூகிள் டொக்ஸ் கணக்கில் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
google doc save
விண்டோஸ் இயங்கு தளத்திற்கு மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு நிறுவிய பின்னர் Microsoft office இல் ஏதாவது ஒரு மென்பொருளினை திறந்து Sign in என்பதை க்ளிக் செய்து கூகிள் கணக்கினை லாகின் செய்வதன் மூலம் எமது ஆவணங்களினை கூகிள் டொக்ஸ் இல் சேமித்துக் கொள்ள முடியும்.
google doc
இந்த புதிய சேவையினை பயன்படுத்தி உங்கள் ஆவணங்களினை இணையத்தில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கும் எப்போதும் ஆவணங்களினை பயன்படுத்தும் வசதியினை பெற்றுக்கொள்ளுங்கள்.

கூகிளில் தெரியும் புதிய tool bar தனது சோஷியல் லேயருக்கான வெள்ளோட்டமா???


கூகிள் கணக்குகளினை இன்று புதிய வடிவிலான tool bar ஒன்று அலங்கரித்துவருவதை அவதானித்தீர்களா?? இது கூகிளின் புதிய சோஷியல் லேயரினை பரீட்சிக்கும் முயற்சியாக இருக்கலாமோ??
google top barகூகிள் நிறுவனமானது பல பில்லியன் டொலர்கள் செலவில் ஒரு புதிய சோஷியல் தயாரிப்பு ஒன்றினை வடிவமத்து வருவதாகவும் அதற்கு முதலில் கூகிள் மீ என்று பெயர்வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இறுதியாக வெளியான செய்திகளின் படிகூகிள் +1 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

gmail bug: ஜிமெயில் திருத்தும் பணியில் கூகிள்


நேற்று உங்களில் யாருக்காவது ஜிமெயிலினை திறந்து கொள்ள முடியாமல் போனதா? அப்படி பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அது உங்களுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. ஜிமெயில் பாவனையாளர்களில் 0.02% க்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது. அதாவது 40000 பேருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.

Google-gMail-

அவ்வாறு பிரச்சினை ஏற்பட்ட பாவனையாளர்களின் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் மிகவிரைவில் இந்த பிரச்சினையை தீர்த்துவைக்க கூகிள் பொறியியலாளர்கள் முயற்சி மேற்கொண்டுவருவதாகவும் கூகிள் தெரிவித்துள்ள0
து.
இந்த பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? தாங்கள் புதிதாக அப்டேட் செய்த மென்பொருள் ஒன்றே இந்த பிரச்சினையை தோற்றுவித்ததாகவும் பாவனையாளர்களின் அனைத்து மின்னஞ்ஞல்களும் பாதுகாப்பாக பெக்கப் டேப் களில் இருப்பதாகவும் கூகிள் அறிவித்துள்ளது.
இவ்வாறு குழப்பங்கள் ஏற்படும் போது பாவிப்பதற்காக பாவனையாளர்களின் அனைத்து தரவுகளும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதி எடுக்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாக கூகிள் அறிவித்துள்ளது. எனவே நீங்கள் பயப்படமால் இருக்குமாறு கூகிள் வேண்டிக் கொள்கிறது.

Wednesday, March 2, 2011

இனி குழந்தைகளையும் கூகுளில் தைரியமாக மேய விடலாம்


கூகுளில் தேடினால் கிடைக்காதது எதுவுமே இல்லை என அனைவரும் அறிந்ததே.  இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அதைவிட இரு மடங்கு கெட்ட விஷயங்களும் உள்ளன. ஆகையால் கூகுளில் கெட்ட விஷயங்களை தேடினாலும் லட்சகணக்கில் ஆபாச இணையதளங்கள் வரும் இதனால் நம் பிள்ளைகளின் கவனங்கள் சிதற வாய்ப்பு உள்ளது. ஆகவே கூகுள் தேடலில் இந்த ஆபாச இணையதளங்கள் வருவதை எப்படி தடுப்பது என காண்போம்.
  • முதலில் இந்த லிங்கில் Google க்ளிக் செய்து கூகுள் Settings பகுதிக்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Safe Search Filtering பகுதிக்கு செல்லவும்.
  • அங்கு உள்ள Lock Safe Search என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  •  அதை க்ளிக் செய்தவுடன் உங்களின் ஜிமெயில் Id, Password கேட்கும் அதை கொடுத்து Sign In கொடுத்தால் உங்களுக்கு அடுத்த விண்டோ வரும் அதில் இருக்கும் Lock Safe Search என்ற பட்டனை அழுத்தவும்.
  • அங்கு அவ்வளவு தான் கூகுள் தேடலில் ஆபாச இணையதளங்கள் தடுக்கப்பட்டு விடும். 
  • நீங்கள் திரும்பவும் இந்த Safe Search Lock நீக்க நினைத்தால் அதே செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று Unlock என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் USER ID, PASSWORD கொடுத்தால் திரும்பவும் இந்த லாக் நீங்கிவிடும்.
  • மேலும் உதவிக்கு கூகுள் வழங்கும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.




குரோம் நீட்சி - Personal Block List



குறிப்பிட்ட சில நமக்கு தேவையில்லாத தளங்கள் கூகுள் தேடலில் வருவதை தடை செய்யலாம். இந்த நீட்சியை முதலில் உங்களின் உலவியில் நிறுவிடவும் இப்பொழுது கூகுளில் தேயில்லாத தளத்தின் பெயரை கொடுத்து வரும் முடிவில் தற்போது புதியதாக எல்லா முடிவுகளுக்கு கீழேயும் Block என்று ஒரு புதிய வசதி இருக்கும் அதில் க்ளிக் செய்து அந்த தளங்களை நீக்கி விடலாம்.



கூகுளில் கேட்டது ஜிமெயிலில் கிடைக்கும்


  • இதற்க்கு முதலில் இந்த தளத்திற்கு Google Alert  செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல பக்கம் வரும் அதில் உங்களுக்கு தேவையான தேர்வு செய்து கீழே உள்ள Google Alert என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அவ்வளவு தான் உங்களுடைய கோரிக்கை ஏற்க்கபட்டது . இனி நீங்கள் கொடுத்த தலைப்பிற்கு ஏற்ற பதிவுகள் வெளிவந்தவுடனே அந்த தகவல் உங்கள் மெயிலுக்கு நீங்கள் கொடுத்த கால இடைவெளிக்கு ஏற்ப உங்களை தேடி வரும். 

Saturday, January 1, 2011

கூகுளில் பைல் அப்லோடிங் நிறுத்தம்

கூகுள் குரூப்ஸ் தளத்தில், ஒருவர் தங்கள் பைல்களை அப்லோட் செய்து, அதற்கான லிங்க் கொடுத்து மற்றவர்கள் விரும்பும்போது பார்த்து, பகிர்ந்து கொள்ளும் வசதி கிடைத்து வந்தது. இந்த வசதி தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்த அறிவிப்பு கூகுளின் http://groupsannouncements. blogspot.com/2010/09/noticeaboutpagesandfiles.html?hl=enGB என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இந்த வசதியினைத் தொடர்ந்து பெற விரும்புபவர்கள், கூகுள் தந்துள்ள Google Docs மற்றும் Google Sites என்ற இரண்டு தளங்கள் தரும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். Google Sites தளத்தில், பக்கங்களை உருவாக்கிப் பதிந்து, அந்தப் பக்கங்கள் பதியப்பட்டுள்ள இணையப் பக்கத்தினை, குழு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இணையப் பக்கங்களில் உள்ள கோப்புகளை இணைத்து சேமித்து, மற்றவர்கள் பார்க்க வழி தரலாம். இந்த கோப்புகளை மற்றவர்கள் டவுண்லோட் செய்திடும் வகையில் வைக்கவேண்டும் எனில் Google Docs பயன்படுத்தலாம். இதன் மூலம் தனிநபருக்கோ, அல்லது குழுவினருக்கோ, பைல்களைப் பார்ப்பதற்கு அல்லது எடிட் செய்வதற்கான அனுமதியைத் தரலாம். ஏற்கனவே கூகுள் குரூப்களில் உள்ள பைல்களை இப்போதும் பார்க்கலாம்; டவுண்லோட் செய்திடலாம். ஆனால் பிப்ரவரி மாதத்திற்குப் பின்னர் இதனையும் கூகுள் தடை செய்கிறது. இவற்றை அப்லோட் செய்தவர்கள், மொத்தமாக இவற்றை டவுண்லோட் செய்து, Google Sites அல்லது Google Docs தளங்களில் பதிந்து, லிங்க்குகளை நண்பர்களுக்கு அறிவிக்கலாம். இதற்காகவே கூகுள் குரூப்ஸ் பக்கத்தில் “Download all pages” மற்றும் “Download all files” ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு கூகுள் தன் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Thursday, December 30, 2010

கூகிள் வாய்ஸ் அறிமுகம்

மிகவும் உபயோகமான பல்வேறு சேவைகளை இணையத்தில் வழங்கி வரும் கூகுளின் மற்றுமொரு சேவைதான் கூகிள் வாய்ஸ் (Google Voice).அது குறித்து ஓரளவுக்கு அறிமுகம் கொடுக்கும் வண்ணமே இந்த இடுகை.  உங்களிடம் உள்ள தொலைபேசிகளை ஒருங்கிணைத்து பல சிறந்த வசதிகளை இந்த சேவை வழங்குகிறது. 

ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ஜிமெயில் போன்றதொரு சேவைதான். மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியை குரல் வழி அனுப்ப முடியும். உங்களிடம் உள்ள பல தொலை பேசிகளுக்கு ஒரே எண்ணை கூகிள் வாய்ஸ் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த சேவையில் உண்டு. 

செய்திகளை உங்கள் குரல்வழி பதிவு செய்து மெயிலாக அனுப்பலாம். அனுப்பபடுகிற வாய்ஸ் மெயில்களை கேட்கலாம். தரவிறக்கலாம். வாய்ஸ் மெயில்கள் எழுத்துகளாக transcript செய்யப்பட்டு அவற்றை மெயில் போன்று வாசித்து கொள்ளவும் முடியும். இவை உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ்சாக வந்து சேரும்படியும் அமைத்து கொள்ளலாம்.


இதனை உபயோகிக்கும் போது உங்களுக்கென்று தனியே போன் நம்பர் போன்று கூகிள் வாய்ஸ் எண் பெற்று கொள்ள முடியும். இதனை உங்கள் தொலைபேசி, மொபைல் போன்களுடன் தொடர்பு படுத்தி கொள்ள முடியும்.உதாரணத்திற்கு உங்களை தொடர்பு கொள்வதற்கு வீட்டு தொலைபேசி, அலுவலக தொலைபேசி, மொபைல் என்று மூன்று எண்கள் இருப்பதாக கொள்வோம். இந்த மூன்று எண்ணையும் உங்கள் கூகிள் எண்ணுடன் தொடர்புபடுத்தி கொள்ள முடியும்.

உங்களை அழைப்பவர் உங்கள் கூகிள் எண்ணுக்கு அழைக்கும் போது உங்களுக்கு உள்ள மூன்று போன்களிலும் ரிங் அடிக்கும். அல்லது உங்கள் கூகிள் எண்ணில் தொடர்பு கொண்டால்  காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை உங்கள் அலுவலக போனில் அழைப்பு (Ring) வரும்படியும், மற்ற நேரங்கள் உங்கள் வீட்டு போனில் தொடர்பு (Ring) கொள்ளும்படியும் உங்கள் கூகிள் எண்ணில் செட்டப் செய்து கொள்ளலாம்.

உங்கள் நண்பர்கள் அழைக்கும் போது மட்டும் மொபைல் எண்ணில் அழைப்பு வரும்படி அமைத்து கொள்ளலாம். வேண்டாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை நிரந்தரமாக தடை செய்துகொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் மூன்று போன்களில் எந்த போன் வழியாகவும் கூகிள் வாய்ஸ் மூலம் மற்றவர்களை அழைத்து கொள்ள முடியும்.

நாம் எப்போதும் ஒரே தொலைபேசி எண்ணை வைத்திருப்போம் என்று உறுதியாக கூற முடியாது. தொலைபேசி நிறுவனங்கள் சலுகையுடன் சிறப்பான சேவை வழங்கும் போது அடிக்கடி எண்ணை மாற்றி மற்றொரு சேவைக்கு மாறி கொண்டிருப்போம். இதனால் நமக்கு நிரந்தர தொடர்பு எண் என்பது இயலாத விஷயம். இதற்கும் ஒரு தீர்வு கூகிள் வாய்ஸ் எண்.

நீங்கள் ஆயுளுக்கும் நிரந்தர எண்ணாக கூகிள் வாய்ஸ் எண்ணை வைத்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் தொலைபேசி எங்களை மற்றும் போது அவற்றை கூகிள் வாய்சில் மாற்றினால் போதுமானது. உங்கள் கூகிள் வாய்ஸ் எண்ணுக்கு அழைக்கும் அழைப்புகள் உங்கள் கொடுத்துள்ள புதிய தொலை பேசி எண்ணுக்கு தானாக மாற்றி விடப்படும்.

கூகிள் வாய்ஸ் மூலம் உலகமெங்கும் தொலைபேசிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து கொள்ள முடியும். உங்கள் கூகிள் எண் மூலம் இலவச எஸ்எம்எஸ் அனுப்ப, பெற முடியும். தொலைபேசி பேச்சுக்களை பதிவு (Record) செய்து ஆன்லைனில் சேமித்து கொள்ள முடியும்.

தொலைபேசிகளில் உங்களை அணுக முடியாதபோது 'I am Mr.X .. Please leave your message' என்று அழைப்பவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி பொதுவாக அமைத்து கொள்ள முடியும். ஆனால் கூகிள் வாய்ஸ் மூலம் ஒவ்வொரு அழைப்பாளருக்கும் ஏற்றபடி தனிப்பட்ட செய்தியை தெரிவிக்கும்படி உங்களால் அமைத்து கொள்ள முடியும்.

கூகிள் வாய்சை உங்கள் கணினி மூலமும், இணைய இணைப்பு உள்ள மொபைல் போன் மூலமும் உபயோகித்து கொள்ள முடியும். கூகிள் வாய்ஸ் வசதிகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த வீடியோக்களை பாருங்கள்.


தற்சமயம் கூகிள் வாய்ஸ் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்பட வில்லை. சிறப்பு அழைப்பு (Invite) மூலமாகவே நீங்கள் அதனை சோதித்து கொள்ள முடியும். அதுவும் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இப்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. கூகிள் வாய்ஸ் அழைப்பு (Invite) பெற இந்த சுட்டிக்கு செல்லவும்.