|
Saturday, January 1, 2011
கூகுளில் பைல் அப்லோடிங் நிறுத்தம்
கூகுள் குரூப்ஸ் தளத்தில், ஒருவர் தங்கள் பைல்களை அப்லோட் செய்து, அதற்கான லிங்க் கொடுத்து மற்றவர்கள் விரும்பும்போது பார்த்து, பகிர்ந்து கொள்ளும் வசதி கிடைத்து வந்தது. இந்த வசதி தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்த அறிவிப்பு கூகுளின் http://groupsannouncements. blogspot.com/2010/09/noticeaboutpagesandfiles.html?hl=enGB என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இந்த வசதியினைத் தொடர்ந்து பெற விரும்புபவர்கள், கூகுள் தந்துள்ள Google Docs மற்றும் Google Sites என்ற இரண்டு தளங்கள் தரும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். Google Sites தளத்தில், பக்கங்களை உருவாக்கிப் பதிந்து, அந்தப் பக்கங்கள் பதியப்பட்டுள்ள இணையப் பக்கத்தினை, குழு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இணையப் பக்கங்களில் உள்ள கோப்புகளை இணைத்து சேமித்து, மற்றவர்கள் பார்க்க வழி தரலாம். இந்த கோப்புகளை மற்றவர்கள் டவுண்லோட் செய்திடும் வகையில் வைக்கவேண்டும் எனில் Google Docs பயன்படுத்தலாம். இதன் மூலம் தனிநபருக்கோ, அல்லது குழுவினருக்கோ, பைல்களைப் பார்ப்பதற்கு அல்லது எடிட் செய்வதற்கான அனுமதியைத் தரலாம். ஏற்கனவே கூகுள் குரூப்களில் உள்ள பைல்களை இப்போதும் பார்க்கலாம்; டவுண்லோட் செய்திடலாம். ஆனால் பிப்ரவரி மாதத்திற்குப் பின்னர் இதனையும் கூகுள் தடை செய்கிறது. இவற்றை அப்லோட் செய்தவர்கள், மொத்தமாக இவற்றை டவுண்லோட் செய்து, Google Sites அல்லது Google Docs தளங்களில் பதிந்து, லிங்க்குகளை நண்பர்களுக்கு அறிவிக்கலாம். இதற்காகவே கூகுள் குரூப்ஸ் பக்கத்தில் “Download all pages” மற்றும் “Download all files” ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு கூகுள் தன் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Labels:
கூகிள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment