இணையத்தை பயன்படுத்தும் அனைவருமே நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக்கொள்வோம். அந்த வகையில் தகவல்களை ஆன்லைன் மூலமாக பறிமாறிக்கொள்ள பல்வேறு தளங்கள் உள்ளன. அவை அனைத்தும் குறைந்த அளவுடைய பைல்களை மட்டுமே பறிமாறிக்கொள்ள அனுமதிக்கும் ஆனால் இந்த தளத்தின் மூலம் 20ஜிபி வரை தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும். நாம் இந்த தளத்தில் ஒரு நாளைக்கு 20ஜிபி வரை வேண்டுமானலும் தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு பைலுடைய அளவானது 200 எம்.பி வரை மட்டுமே இருக்க வேண்டும். அதிக அளவுடைய தவல்களை பறிமாறிக்கொள்ள வேண்டுமெனில் நாம் ஏதாவது ஒரு மெமரி டிவைஸ் துணையுடன் மட்டுமே தகவல்களை பறிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு நம் அருகாமையில் உள்ள நண்பர்களிடம் தகவல்களை எளிமையாக பறிமாறிக்கொள்ள முடியும். ஆனால் வெளியூர்களில் பார்க்க முடியாத தூரத்தில் உள்ள நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ தகவல்களை பறிமாற்றம் செய்ய வேண்டுமெனில் அது இணையத்தின் உதவியுடன் மட்டுமே மிக விரைவாக முடியும்.
தளத்தின் முகவரிக்கான சுட்டி
இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை தொடங்கி கொள்ளவும். பின் File Manager என்பதை கிளிக் செய்து புதியதாக Create Folder என்னும் பட்டியை அழுத்தி ஒரு போல்டரை உருவாக்கி கொள்ளவும். வேண்டுமெனில் பாஸ்வேர்ட் உருவாக்கி கொள்ள முடியும். பின் Upload என்னும் பட்டியை அழுத்தி வேண்டிய பைலை பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
நீங்கள் விரும்பினால் தளத்தில் இருந்தவாறே பல பைல்களை ஒருகிணைத்து Compress பைலாக உருவாக்க முடியும். இதற்கு பைல்களை தேர்வு செய்துகொண்டு More Actions என்னும் தேர்வு மெனுவை கிளிக் செய்து Compress File என்பதை கிளிக் செய்து பைலை சேமித்துக்கொள்ள முடியும்.
இந்த தளத்தில் நீங்கள் தகவல்களை சேமித்து வைப்பதுடன், நண்பர்களுக்கு பைலுடைய லிங்கினை அனுப்பி தகவலை பறிமாறிக்கொள்ள முடியும். இந்த தளத்தின் மற்றொரு வசதி என்னவெனில் MP3 பிளேயர் மற்றும் Flash பிளேயர் வசதி உள்ளது. இந்த வசதியின் மூலம் தளத்தில் இருந்தவாறே பாடலை கேட்க முடியும்.
|
No comments:
Post a Comment