ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக, தனது வாழ்நாளில் சராசரியாக ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான்,’ என, வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான மூக்கு கண்ணாடி நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் ஒரு “குஷி’யான ஆய்வை மேற்கொண்டது. பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் எவ்வளவு நேரத்தை செலவிடுகின்றனர் என்ற தலைப்பின் கீழ், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பிரிட்டன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:
ஆண்கள், பெண்களை ரசிப்பது உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான ஒரு நிகழ்வு. இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. கடிகாரத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, இதை யாரும் கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருப்பது இல்லை.” பார்த்தல், ரசித்தல்’ என்ற ஒரு சில மகிழ்ச்சியான நிமிடங்களோடு, பலரும் இதை மறந்து விட்டு, அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவர்.
இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஒரு ஆண், தினமும் 43 நிமிடங்களை பெண்களை பார்த்து ரசிப்பதற்காகவே செலவிடுவது தெரியவந்தது. இந்த 43 நிமிடங்களில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அந்த ஆண் பார்த்து ரசிக்கிறான்.
ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக சராசரியாக தனது வாழ்நாளில் ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான். அப்படியானல், பெண்கள், ஆண்களை பார்ப்பது இல்லையா, ரசிப்பது இல்லையா என்ற கேள்வி எழும். அதுவும் நடக்கிறது. ஒரு பெண், ஆண்களை பார்ப்பதற்காக தினமும் 20 நிமிடத்தை செலவிடுகிறார். அதேபோல், ஒரு பெண், ஆண்களை பார்த்து ரசிப்பதற்காக, சராசரியாக தனது வாழ்நாளில் ஆறு மாத காலத்தை செலவிடுகிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பெண்களில் 16 சதவீதம் பேர், ஆண்கள் தங்களை பார்ப்பது ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், 20 சதவீதம் பேர், இதனால் குழப்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment