Sunday, May 1, 2011

இனி மொபைலிலும் பேங்க் பணபரிவர்த்தனை செய்யலாம்.

           ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு வங்கிக்குச் செல்லாமலேயே மொபைல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நவீன முறை வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இதற்காக சுமார் 85 இலட்சம் மொபைல் மணி ஐடண்டிபையர் (MMID) என்ற மொபைல் போனில் நிறுவிக்கொள்ளும் மென்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

          தேசிய செலுத்துகை கழக (NPCI) நிர்வாக உயரதிகாரி A.P.ஹோடா இது குறித்து கூறுகையில், "வங்கிகளுக்கு இடையேயான மொபைல் பணப்பரிவர்த்தனை சேவையில் இதுவரை 18 பெரிய வங்கிகள் இணைந்துள்ளதோடு, அதற்கான மென்பொருளைத் தனது பதிவு செய்த வாடிக்கையாளார்களுக்கு வழங்கியுள்ளன.
       
மொபைல் மணி ஐடெண்டிபையர் என்பது மொபைல் எண்ணுடன் தொடர்புடைய வங்கிக்கணக்கு எண்ணாகும். மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை செய்யும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக்கிளை மற்றும் வங்கி எண்ணை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அவர்களின் பிரச்சினைக்கு இம்முறை தீர்வளிக்கிறது. தங்களின் மொபைல் எண்ணையும் MMID எண்ணையும் பணம் செலுத்துபவரிடம் எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றி வழங்கலாம்.
MMID என்பது மொபைல் எண்ணுடன் தொடர்புள்ள தனிப்பட்ட ஏழு இலக்க எண்ணாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்குத் தனித்தனி MMID ஐ ஒரே மொபைல் எண்ணுக்குப் பெறமுடியும் என்பதால் அத்தகைய வாடிக்கையாளர்களுக்கும் இது பயனுள்ள பரிவர்த்தனை முறையாகும்.

கடந்த ஏப்ரல்-24 வரை 85 இலட்சம் MMID எண்களை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளன. கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகளின் மூன்றரைக்கோடி வங்கிக்கணக்குகளைக் கருத்தில்கொண்டால் மொபைல் பணப்பரிவர்த்தனை முறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. 24 மணிநேரமும் இயங்கும் இம்முறையின் மூலம் பணம் செலுத்துபவரும் பெறுபவரும் உடனடியாக குறுந்தகவல் (SMS) மூலம் பணப்பரிவர்த்தனைக்கான தகவல் பெறமுடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்." என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment