Sunday, May 1, 2011

ச்ச்ச்ச்சீ......

ஆண்மை குறைவு ஏற்படும் ஆண்கள் தங்கள் விரைப்பு தன்மையை அதிகரித்து உடலுறவில் அதிக பலன் பெற பல வழிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது உலகம் முழுவதும் அதிக விற்பனை ஆகி வரும் மாத்திரை 'வயகரா', விலை அதிகமான இந்த மாத்திரை அதிகமாக விற்பனை ஆகிவருகிறது. ஆண்களை போலவே வேலைக்கு செல்லும் பெண்களும் தங்கள் வேலை பளு, மன உளைச்சல் போன்ற காரணங்களால் உடலுறவில் நாட்டம் குறைவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. ஆனால் இவர்களுக்கும் 'வயகரா' போன்ற அதிக விலையுள்ள மாத்திரை உட்கொண்டு பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக, அதற்கு இனையான இயற்கை வழிமுறைகளே உள்ளது. 

அமெரிக்காவில் பிரபல பாலுணர்வு வல்லுனரான அமி ரெய்லே (Amy Reiley) சமீபத்தில் ' தி லவ் டையட்' ( the Love Diet) என்ற புத்தகத்தில், பெண்கள் தங்கள் பாலுணர்வை அதிகரிக்க வழிமுறைகள் எழுதியுள்ளார்.
அதில் பெண்கள் தங்கள் பாலுணர்வை அதிகரிக்க செய்ய சில உணவுமுறைகள் உதவும் என குறிப்பிட்டுள்ளார். 

அவரின் கூற்றுப்படி கடல் உணவுகள் பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்க செய்ய உதவும் உணவு வகைகள் ஆகும். முக்கியமாக மெடிடேரனியன் முசெல் (Mediterranean Mussels) எனப்படும் ஒருவகை கடல் சிப்பி பெண்களுக்கு அதிக பாலுணர்வை தூண்டுவதாக அவர் அப்புத்தக்கதில் குறிபிட்டுள்ளார். மேலும் பெரும்சீரகம் (fennel) மற்றும் சிவரிக்கீரை (celery) ஆகியவையும் பாலுணர்வை தூண்டுவதாக அவர் குறிபிட்டுள்ளார்.

காபி அருந்துவதும் பெண்களுக்கு இந்த விஷயத்தில் உதவும். இதில் உள்ள உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (antioxidants) இளமையாகவும், உணர்வுகளை தூண்டவும் உதவுவதாக அவர் குரிப்புட்டுள்ளார்.

No comments:

Post a Comment