ஒரு போட்டோ என்பது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது நிபுணர்களின் கருத்தாகும். ஆகையால் நாம் போட்டோவில் போதும் போது வாசகர்கள் அதை எளிதாக புரிந்து கொள்கிறார்கள். அப்படி நாம் உபயோகிக்கும் போட்டோவை நம் தளத்தில் மற்றவர்கள் காப்பி செய்யாமல் தடுக்க அந்த போட்டோக்களின் மீது நம் தளத்தின் பெயரையோ அல்லது நம்முடைய பெயரையோ வாட்டர் மார்க்காக போடுவோம். அப்படி வாட்டர்மார்காக எப்படி நம்முடைய போட்டோவையே போடுவது என கீழே பார்ப்போம். இந்த வேலையை சிறப்பாக நமக்கு செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
இந்த மென்பொருள் பயன்படுதுவதர்க்கு மிகவும் எளிதாக உள்ளது. குழைந்தைகள் கூட இந்த மென்பொருளை உபயோக படுத்தும் அளவிற்கு எளிதாக உள்ளது.
இந்த மென்பொருளில் வாட்டர் மார்க்காக போட்டோக்களையும், எழுத்துக்களையும் நம் விருப்பம் போல் போட்டு கொள்ளலாம்.
போட்டோவின் அளவுகளையும், அடர்த்தியையும் நம் விருப்பம் போல் மாற்றி கொள்ளலாம்.
வாட்டர்மார்க்கை போட்டோவில் எந்த இடத்தில் தேவைஎன்றாலும் நகர்த்தி வைத்து கொள்ளலாம்.
இது முழுக்க முழுக்க சிறிய அளவே உடைய ஒரு இலவச மென்பொருளாகும்.
உபயோகிக்கும் முறை:
டவுன்லோட் பட்டனை அழுத்தி முதில் மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். முதலில் அந்த விண்டோவில் உள்ள Open பட்டனை அழுத்தி நீங்கள் வாட்டர்மார்க் போட விரும்பும் படத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
pinnar நீங்கள் வாட்டர்மார்க்காக போட்டோவை போட ninaithaal Add Image Watermark என்ற பட்டனை அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இது போல விண்டோ வந்ததும் மேலே அம்புக்குறியிட்டு காட்டபட்டிருக்கும் காலி இடத்தில் க்ளிக் செய்து நீங்கள் வாட்டர்மார்க்காக வைக்க வேண்டிய படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பின்பு அங்கு உள்ள வசதிகளுக்கு ஏற்ப உங்கள் போட்டோவின் அளவையும், அடர்த்தியையும்(Opacity) வைத்து கொண்டு OK க்ளிக் செய்தால் உங்கள் படத்தின் மீது வாட்டர்மார்க்காக நீங்கள் தேர்வு செய்த போட்டோ வந்திருக்கும்.
அந்த படத்தில் உள்ள வாட்டர்மார்க்கின் மீது க்ளிக் செய்து அதை உங்கள் விருப்பம்போல் நகர்த்தி கொள்ளலாம்.
இதே போல நீங்கள் வாட்டர் மார்க்காக வெறும் எழுத்துக்களையும் போட்டு கொள்ளலாம்.
வாட்டர் மார்க் செய்து முடித்ததும் File க்ளிக் செய்து Save as என்பதை அழுத்தி படத்தை சேமித்து கொள்ளுங்கள்.
|
Ungal Blogger mikavum payanulathaka ullathu...valthukal... But oru sinna request ovoru click kukum Add Open akuvathal ungal ovoru page um parkum pothu distrub aaka irukirathu..... matrum ungalukku nan tamilnirupar ill vote poodukiren.... nanri
ReplyDeletenantri nanbare
ReplyDelete