அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் ஆட்சி மொழி அந்தஸ்தில் உள்ள முக்கிய மொழிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது 22 மொழிகள் இந்த அட்டவணையில் இடம் பெற்று உள்ளன.
இன்னும் 38 மொழிகளை 8வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய தேர்வாணையத்துக்கும் பெரிய சிக்கல் ஏற்படும்.
ரூபாய் நோட்டுகளில் தற்போது எட்டாவது அட்டவணையில் 22 மொழிகளில் 15 இடம் பெற்றுள்ளது. இனி 38 மொழிகளை சேர்த்தால் ரூபாய் நோட்டுகளில் 60 மொழிகள் எழுதப்பட வேண்டும். இதற்காக ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை மாற்ற வேண்டும். அளவும் பெரிதாகி விடும்.
இதுபோல் மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும் இந்த மொழிகள் விருப்ப அடிப்படையில் சேர்க்க வேண்டும். நேர்முகத் தேர்விலும் அனைத்து மொழிகளையும் பயன்படுத்தப்பட வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது 8வது அட்டவணையில் 14 மொழிகளே இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment