இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பார்மெட்டில் இருக்கும். அந்த போட்டோக்கள் அனைத்தும் ஒரே அளவாகவும் (SIZE) இருக்காது. இவ்வாறு உள்ள போட்டோக்களின் அளவை மாற்றவும், பார்மெட்டை மாற்றவும். நாம் எதாவது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை மட்டுமே நாட வேண்டும். போட்டோக்களை எடிட் செய்ய வேண்டுமென்றால் அனைவரும் கூறுவது போட்டோசாப் மென்பொருளை மட்டுமே. ஒரு போட்டோவாக இருந்தால் எளிமையாக எடிட் செய்துவிட முடியும். ஆனால் அதிகமான போட்டோக்கள் இருப்பின் அந்த போட்டோக்களை எடிட் செய்வது சற்று சிரமமான விஜயம் ஆகும். அவ்வாறு அதிகமாக உள்ள படங்களின் அளவையும், பார்மெட்டையும் ஒரே நேரத்தில் மாற்றியமைக்க உதவும் மென்பொருள்தான் AnyPic Image Resizer ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் படத்தின் அளவையும், பார்மெட்டையும் எளிமையாக மாற்றியமைக்க முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் AnyPic Image Resizer அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். Add என்னும் சுட்டியை அழுத்தி படங்களை தேர்வு செய்து கொள்ளவும். பின் எந்த பைல் பார்மெட்டில் படங்கள் வேண்டும் என்பதை தேர்வு செய்து கொண்டு, படத்தின் அளவை குறிப்பிடவும்.
எது மாதிரியான பார்மெட்டில் படம் வேண்டுமோ அதனை குறிப்பிட்டு கொள்ளவும். பின் கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் படமானது சேமிக்கப்பட்டுவிடும். ஆன்ராய்ட் மொபைல் சாதனத்துக்கு ஏற்ற மாதிரியாகவும், ஈ-மெயிலுக்கு ஏற்றது போலவும். பேஸ்புக் மற்றும் ஐபேட்,ஐபோன் சாதனங்களுக்கு ஏற்ற மாதிரியாகவும், படத்தினை மாற்றிக்கொள்ள முடியும். BMP, JPG(JPEG), PNG, TGA, TIFF, PSD, GIF போன்ற பைல் பார்மெட்களில் படத்தினை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
|
No comments:
Post a Comment