தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பாகவே "டெஸ்டிங்' என்ற பெயரில் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் பால், பஸ் விலை உயர்த்தப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மின்சார கட்டணத்தை உயர்த்தவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் மின்சார கட்டணமும் உயருகிறது. இதற்கிடையில் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளில் நேற்று மின்சார கட்டணத்தை செலுத்த சென்றவர்களுக்கு நேற்று "திடீர்' அதிர்ச்சி காத்திருந்தது.
மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பாக நேற்று "டெஸ்டிங்' என்ற பெயரில் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் கேட்ட போது சரியாக பதில்களை தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்தனர். மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பாக "டெஸ்டிங்' என்ற பெயரில் கட்டணம் வசூலித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
|
No comments:
Post a Comment