சர்வதேச அளவில் இணையதளம் அறிந்த அனைவரும் கூகுள் என்ற தேடுதல் தளத்தை நன்கு அறிவார்கள். இந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவிலும் இந்த நிறுவனத்திற்கு அபரிமித வளர்ச்சி உள்ளது.
இப்படி அபாரமான வளர்ச்சியைத் தொடர்ந்து கண்டு வருவதாலும், இந்த நிறுவனத்திற்கு அமெரிக்காவிற்கு அடுத்த பெரிய இருப்பிடமாக இந்தியாவே இருப்பதாலும் 70க்கும் அதிகமான பணி இடங்களை நிரப்ப கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கூகுளின் புதிய பணியிடங்கள் விளம்பரம், விற்பனை, இன்ஜினியரிங், நிதி, மனிதவளம், சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஆகிய துறை சார்ந்தவையாக இருக்கும் என்று தெரிகிறது. இதே போல் சட்டம், மார்க்கெட்டிங், புராடக்ட் மேனேஜ்மென்ட், நிர்வாகம் ஆகிய துறைகளிலும் பணி வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கூகுள் நிறுவனத்தின் இந்தப் பணி வாய்ப்புகள் ஐதராபாத், பெங்களூரு, கூர்கான், மும்பை ஆகிய இடங்களில் இருக்கும் என்றும், இவற்றில் ஐதராபாத்தில் 23 இடங்களும், பெங்களூருவில் 22 இடங்களும், கூர்கானில் 21 இடங்களும், எஞ்சிய காலியிடங்கள் மும்பையில் நிரப்பப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. கூகுள் நிறுவனத்தைப் போலவே யாகூ ஆர் அண்டு டி பிரிவும் இந்தியாவிலுள்ள பணியிடங்களை அதிகரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
No comments:
Post a Comment