பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு காசநோய் என்று வெளியான செய்தியை அவரது மாமனார் அமிதாப் பச்சன் மறுத்துள்ளார். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயக்கும் - அமிதாப் பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை இல்லை. 37 வயதிலும் 20 வயது இளம்பெண்ணைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை இல்லாதது குறித்து மும்பை பத்திரிகையொன்றில் செய்தி வெளியானது. அதில், ஐஸ்வர்யாவுக்கு டியூபர்குளோஸிஸ் (டி.பி.) எனப்படும் காச நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால்தான் தாய்மைப் பேறு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும் அந்த செய்தி கூறியது.
இச்செய்திக்கு ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்தியை பார்த்து நான் கடும் கோபமடைந்துள்ளேன். அதில் உள்ள ஒரு வரி கூட உண்மையானதில்லை. அத்தனையும் பொய். நான் எனது குடும்பத்தின் தலைவர். ஐஸ்வர்யா ராய் பற்றி யாரேனும் அவதூறாக பேசினால் எனது இறுதி மூச்சு வரை அதை எதிர்த்து நான் போராடுவேன். எனது வீட்டில் உள்ள ஆண்களைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசி விட்டுப் போங்கள். என்னைப் பற்றிப் பேசுங்கள், எனது மகனைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் எனது வீட்டுப் பெண்கள் பற்றி யாராவது தவறாகப் பேசினால் அதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன், என்று அமிதாப் தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.
|
No comments:
Post a Comment