குரங்குகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்த யுவதியொருவரின் ஆடைக்குள் விழுந்த உணவை எடுக்க முயன்ற குரங்குகள் அவ்யுவதியின் ஆடையை களைந்த சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்த காட்சியை அவரின் சகாக்கள் படம்பிடித்து பேஸ்புக்கில் வெளியிட்டதால் இப்போது அந்த யுவதி பிரபலமானவராகிவிட்டார். தாய்வானைச் சேர்ந்த செய்மெய்ன் சென் என்ற 22 வயதுடைய மாணவியே இவ்வாறு பிரபல்யமடைந்துள்ளார்
. இவர் பாலி தீவில் தனது நண்பர்கள் சகிதம் சுற்றுலா மேற்கொண்டபோது உபுட் எனும் வனவிலங்குப் பூங்காவில் வாழும் குட்டை வால் குரங்களுக்கு உணவூட்டியுள்ளார்.
அப்போது அவர் அணிந்திருந்த சட்டைக்குள் உணவுத் துண்டொன்று விழுந்தது. அதை குரங்குகள் எடுக்க முயன்றபோது, செய்மெய்ன் சென்னின் ஆடை கலைந்தது. செயாமெய்ன் சங்கடத்துக்குள்ளான நிலையில் அதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டார்
. அப்போது அவரின் நண்பர்கள் இக்காட்சிகளை முயற்சி செய்து தத்ருபமாக படம்பிடித்துள்ளார். செய்மனினன் புகைப்படத்துடன் கூடிய செய்தி பின்னர் செய்மெய்னின் சொந்த நாடான தாய்வானின் ஊடகங்களிலும் முதலிடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில் நான் விடுமுறையை கொண்டாடும்போது அப்புகைப்படம் பிடிக்கப்பட்டது. ஆனால் நான் தாய்வானுக்கு திரும்பிச் செல்லும்போது அநேகமானவர்கள் பேஸ்புக்கில் எனது நண்பர்களாக்குவதற்கு முயன்றிருந்தனர் எனத் தெரிவித்தார். அதேவேளைஇக்குரங்குகள் அப்பாவிகள் அல்ல, பிரகாசமான வர்ணத்தில் நீச்சலுடை அணிந்திருந்தால் இக்குரங்குகள் ஈர்க்கப்படும் என அப்பூங்காவின் உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தனர்; என அவர் கூறியுள்ளார். |
|
No comments:
Post a Comment