சென்னை கிண்டில் ஊழியர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஐ.டி. நிறுவன அதிகாரிகள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு கடந்த மாதச் சம்பளத்தை இதுவரை தரவில்லை எனக் கூறி, வெள்ளிக்கிழமை முதல் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அத்துடன், நிறுவன உயரதிகாரிகளான பம்மலைச் சேர்ந்த திருமாறன், ஹன்சுமான் மற்றும் முரளி ஆகியோரையும் அறையில் வைத்து பூட்டினர்.
இந்நிலையில், திருமாறனின் மனைவி ஜெயமணி ஷீலா மற்றும் அவரது பெற்றோர், திருமாறனை காணவில்லை என்பதால், இதுகுறித்து நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் சிறை பிடிக்கப்பட்ட செய்தி கேட்டு அதிர்ந்தனர்.
என்எக்ஸ்டி ஜீபோ நிறுவனத்தில் எனது கணவர் வேலைக்குச் சேர்ந்தே ஒரு மாதம் தான் ஆகிறது அவர் இன்னும் சம்பளம் பெறவில்லை என திருமாறனின் மனைவி ஜெயமணி ஷீலா கூறியுள்ளார்.
நிறுவனத்தின் முதலாளி மும்பையில் இருக்கிறார். எனது கணவரும் தொழிலாளி தான்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் விளக்கம் தர முன்வரவில்லை.
ஒரு மாத சம்பளம் தான் பாக்கி உள்ளது. அதற்காக எங்களை பூட்டி வைத்துள்ளனர். எங்களுடைய எம்டி, செவ்வாய் கிழமை பணத்தை கொடுப்பதாக கமிஷனர் ஆபிசில் டெலிகிராம் மூலம் அசூரன்ஸ் கொடுத்துள்ளார் என திருமாறன் கூறியுள்ளார்.
ஆனால், எங்களை சிறைபிடித்துள்ள ஊழியர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பணத்தை கையில் வாங்கிய பின்னர், எங்களை விடுவிப்பதாக சொல்கிறார்கள்.
நாங்கள் பல் துலக்கி 3 நாள் ஆகிறது. சாப்பிடவில்லை என்றார். உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுத்து எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
|
No comments:
Post a Comment