விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் சினிமா மற்றும் பத்திரிகை துறையில் பெரும் புகைச்சலைக் கிளப்பியவர் புவனேஸ்வரி.
கொஞ்சநாள் அமைதியாக இருந்த இவர் மீது இப்போது மீண்டும் புகார் கிளம்பியுள்ளது. இந்த முறை வடிவேலு பாணியில், வாடகைக்கு எடுத்த வண்டிக்கு பணமும் கொடுக்காமல், வண்டியைத் திருப்பியும் தராமல் 10 மாதங்களாக இழுத்தடிப்பதாக புகார் தரப்பட்டுள்ளது.
தியாகராய நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (40). பைனாசியர். இவருக்கு சொந்தமான ரூ. 9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகைக்கு எடுத்துள்ளார் புவனேஸ்வரி.
முதல் மாதம் மட்டும் வாடகை கொடுத்து விட்டு அதன் பிறகு 10 மாதங்களாக வாடகை பணம் தராமல் காரை திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார் அசோக்குமார்.
காரை திருப்பி தருமாறு கேட்டதற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் மனு தியாகராய நகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், நடிகை புவனேஸ்வரியை விசாரிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும் நேரில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
நடிகை புவனேஸ்வரி மீது மடிப்பாக்கம், வடபழனி, கே.கே.நகர் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் மோசடி புகார்கள் உள்ளன. எனவே அதுபற்றியும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
No comments:
Post a Comment