Tuesday, December 13, 2011

‘SCARLET-X’ - கேமெராவில் புது புரட்சி



டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்

Canon நிறுவனத்தின் ‘EOS C300’ அறிவிக்கப்பட்ட அதே நாள் அதன் தற்போதைய போட்டி ஆளராக கருதப்படும்RED ONE நிறுவனத்தின் அடுத்த கேமரா அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்புதிய கேமராவிற்கு ‘Scarlet-X’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

“The future is dependent on those who push… not those who react,”
- Jim Jannard, founder of RED Digital Cinema.

RED ONE கேமராவின் அறிமுகமே ஒரு புதிய புரட்சியாக அப்போது பார்க்கப்பட்டது. அக்கேமரா ஆகஸ்டு 2007-இல் நடைமுறைக்கு வந்தபோது அதன் தொழில்நுட்பம் எல்லோரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. சிறிய வடிவில் இருந்த அக்கேமராவின் தரம்(4K) பிரமிப்பைக் கொடுத்தது. ஃபிலிமையே(Film) மையமாக கொண்டிருந்த திரையுலகம் டிஜிட்டலை நோக்கி தன் கவணத்தை திருப்பியது. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன.

முதல் காரணம், இச்சிறிய கேமராவில் கிடைத்த 4K விடியோ தரம். அதுநாள் வரை ஒரு விடியோ கேமராவினால் இத்தகைய தரத்தை கொடுக்க முடியும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஒருவேளை ‘ரெட் ஒன்’ அப்போது வெளியாகி இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் வேறொரு கேமராவில் அது சாத்தியமாகி இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாலும் ரெட் ஒன் அதை காலத்தே முந்தியது.

இரண்டாவது காரணம், இத்தகைய தரம் வாய்ந்த கேமரா யாரும் எதிர்பாராதவிதத்தில் குறைந்த விலையில் கிடைத்தது. ஒப்பீட்டளவில் அதுநாள் வரை சந்தையில் இருந்த கேமராக்களைவிட ரெட் ஒன்னின் விலை மிக குறைவானதாக இருந்ததும், அக்கேமரா மிகுந்த வரவேற்பைப் பெறக் காரணமாகியது. குறைந்த விலையில் தேவையான தரம் என்பதே டிஜிட்டலை (ரெட் ஒன்) நோக்கி திரைத்துறையை திரும்பிப் பார்க்க வைத்தது.

அதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் திரைப்படம் என்னும் கருத்தோட்டம் வலுவடைந்தது. ரெட் ஒன் அதன் சமகால போட்டியாளர்களைத் தாண்டி தன் கேமராவைப் பிரபலமாகியது. தொடர்ந்து அது தன் திறனை 4K -விலிருந்து 5K என மேம்படுத்திக்கொண்டிருந்த அதே வேளையில் யாரும் எதிர்ப்பாராத திசையிலிருந்து ஒரு வில்லன் அதற்கு முளைத்தான்.

அந்த வில்லனுக்கு 'Canon EOS 5D Mark II' என்றுப் பெயர். ஆமாம் 5D ரெட் ஒன்னுக்கு வில்லனாக அமைந்தது இத்துறையில் நிகழ்ந்த இன்ப ஆச்சியங்களில் ஒன்று. உண்மையில் 5D ஒன்றும் ரெட் ஒன்னின் தரத்திற்கு இணையானது அல்ல, என்றாலும் 5D மிகுந்த வரவேற்பைப் பெற்றது. காரணம் அதன் விலை மற்றும் உருவமைப்பு. விலையே மிக மிக குறைவு(ரூ.ஒன்னறை லட்சம்) உருவமும் மிகச் சிறியது. ரெட் ஒன்னை விடச் சிறியது.

5D-இன் வளர்ச்சியும் அதற்கு பதிலடியாய் ரெட் ஒன் தன் நிறுவனத்தின் சார்பில் ‘Epic’ மற்றும்‘Scarlet’ கேமராக்களை கொண்டுவந்ததும், இப்போட்டியை சமாளிக்க ‘ARRI’ தன் ‘Alexa’-வை களத்தில் இறக்கியதும் நாம் அறிந்ததுதான். அதேச் சமயம் Sony, Panavision, Thomson Grass Valley, Panasonic போன்ற மற்ற கேமரா நிறுவனங்களும் தன் புதிய கேமராக்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தன என்பது உண்மையானாலும், போட்டி என்பது இம்மூன்று கேமராக்களிடையேதான் நிகழ்ந்தது. இந்தியாவில்/தமிழ்நாட்டில் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் இம்மூன்று கேமராக்கள் மட்டுதான் சமபலம் வாய்ந்தவைகளாக களத்தில் இருக்கின்றன.

Canon நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்தது, Red One வட அமெரிக்க நிறுவனம், ARRI-யோ ஜெர்மன் நாட்டுத் தயாரிப்பு. இதுவும் இம்மூன்று நிறுவனங்களுக்கிடையே போட்டி உருவாக காரணமாயிற்று. தனக்கான வாடிக்கையாளர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க மூன்று நிறுவனங்களுமே பெரும் முயற்சிகளை மேற்கொண்டன.

அதுநாள் வரை கேனான் நிறுவனம், புகைப்படத்துறையில்தான் செல்வாக்கு பெற்றிருந்தது. திடீரென்று திரைத்துறைக்குள்ளும் நிகழ்ந்த அதன் பிரவேசம் யாருக்கு அதிர்ச்சி கொடுத்ததோ இல்லையோ, ரெட் ஒன்னுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனாலயே அதனுடைய நேரடி எதிரியாக கேனானை கொள்ள வேண்டியதாயிற்று. அதேவேலை ரெட் ஒன்னின் சந்தையைத்தான் கேனான் பிடிக்க வேண்டியதாகவும் இருந்தது.

இந்நிலையில்தான் கேனான் தன் ‘EOS C300’ கேமராவை இம்மாதம் (3,நவம்பர்/2011) அறிவித்தது நாம் அறிவோம். அதே நாளில் ரெட் ஒன் நிறுவனமும் தன் புதிய கேமரா ‘Scarlet-X’ அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இவ்விரண்டு நிறுவனங்களின் போட்டி சூடுபிடித்திருக்கிறது.

இம்முறை ரெட் ஒன் பல சவால்களை கேனானுக்கு முன் வைத்திருக்கிறது. ‘Scarlet-X’ கேமரா 5K தரம் கொண்ட 'Still Image'-களைக் எடுக்கும் தரம் கொண்டது. 4K தரத்தில் விடியோவை பதிவுசெய்யும். ஆனால் கேனான் ‘EOS C300’ அப்படி அல்ல 4K தரத்திற்கு ஈடானது என்று சொல்லப்பட்டாலும் அது வெறும் 1080p விடியோவைத்தான் கொடுக்கும்.


Lens Mount-ஐப் பொருத்தமட்டில் ‘EF’ மற்றும் ‘PL’ ஆகிய இரண்டு Mount-லும் ‘Scarlet-X’ கிடைக்கிறது.

புகைப்படத்துறையிலிருந்து திரைத்துறைக்குள் கேனான் நுழைந்ததுப் போல், ரெட் ஒன் திரைத்துறையிலிருந்து புகைப்படத்துறைக்குள் நுழைந்திருக்கிறது. ‘Scarlet-X’ கேமராவைப் பயன்படுத்தி 5K REDCODE RAW-வில் புகைப்படங்களை எடுக்க முடியும் என்ற வசதியை அளித்ததின் மூலம் கேனானின் அடிமடியில் ரெட் ஒன் கைவைத்திருக்கிறது. பழிக்குப்பழி. நீ என் சந்தையை பிடித்தால் நான் உன் சந்தையைப் பிடிப்பேன். எப்பூடி!?

DSLR என்றால் என்ன என்று கேள்விப்பட்டிரிப்பீர்கள்!. DSMC என்றால் என்ன என்றுத் தெரியுமா? 
இப்போது புதியதாக உயிர்த்தெழுந்திருக்கும் தொழில்நுட்பத்தின் செல்லப் பெயர் அது.

DSLR-ஐக் கேள்விப்படாதவர்களுக்கு Digital-SLR(single lens reflector) என்பதின் சுருக்கம் அது.

DSMC என்பது Digital Still & Motion Camera என்பதின் சுருக்கம். அதாவது ஒரே கேமராவில் டிஜிட்டல் புகைப்படம் மற்றும் திரைப்படத்திற்கு தகுதியான விடியோ எடுக்கும் தொழில்நுட்பத்தைக் குறிப்பது.

‘Scarlet-X’ ஒரு DSMC வகைக் கேமரா. இக்கேமராவைப் பயன்படுத்தி தொழில்முறை புகைப்படக்காரர்கள்(Professional photographers) புகைப்படங்களை மிகுந்த தரத்தோடு எடுக்க முடியும். கேனானின் பேட்டைக்குள் ரெட் ஒன் நுழையும் முயற்சி இது.

மேலும் மிக முக்கியமான ஒரு கேடயத்தை ரெட் ஒன் நிறுவனம் கேனானுக்கு முன் பிடித்திருக்கிறது. அது விலை.

கேனானின் ‘EOS C300’($20,000) விட ரெட் ஒன்னின் ‘Scarlet-X’($9,750) விலை குறைவு. குறைந்த விலை என்பது கேடயமாகப் பயன்படும் அதே நேரம், கேனானின் மீது ஏவப்படும் பலமான ஆயுதமாகவும் மாறிவிட வாய்ப்புகள் இருக்கிறது!. பொருத்திருந்து பார்ப்போம்.

‘Scarlet-X’ கேமராவிற்கு தேவையான துணைப்பாகங்கள் ரெட் ஒன்னின் முந்தயக் கேமராவான Epic-இன் பாகங்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் பலம்.


“ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பார்கள், அதுபோல இங்கே இரண்டு நிறுவனங்கள் ரெண்டுபட்டு, ஆளாலுக்கு தான் பிஸ்தா என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் கூத்தாடிக்கு இல்லை.. இல்லை சினிமாக்காரர்களுக்கு கொண்டாட்டம். இந்த கொண்டாட்டம் எதுவரை போகிறது என்றுப் பார்ப்போம்.

No comments:

Post a Comment