'அழகு என்பது ஒவ்வொரு உயிரிக்குள்ளும் இருக்கும் இயற்கை. எல்லா மனிதர்களிடத்திலும் ஏதோ ஒருவித அழகு இருக்கத்தான் செய்கிறது. அதை உணரும் மனப்பாங்கு பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்கிற இடத்தில்தான், மேக்கப் இவர்களுக்கு அவசியம் என்ற நிலை ஏற்படுகிறது. ஒரு வாடிக்கையாளரைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பவர்... வாடிக்கையாளர் தன்னைக் கவனிக்கும்படி இருப்பதற்குக் காரணம் தவறான சமூகப் புரிதலே. பெரியார் சொன்னதுபோல், 'ஆணோ பெண்ணோ ரம்மியமாக இருக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்பதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன்'' என்று பதிலை உதிர்த்தார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி.
''இப்படி மேக்கப் போட்டு, மற்றவர்களை கவர்வதன் மூலமாக, பெண் இன்னும் அடிமையாக இருக்கிறாள் என்பதைத்தானே திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறோம். அழகு என்பது நம்மில் இருக்கும் விஷயம். அதை எந்த விலை பொருளாலும் அதிகரிக்கவோ, அதீதமாக உணர வைக்கவோ முடியாது. இந்த உண்மையை இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் உறுதியாக.
சட்டென்று தீர்ப்பு சொல்லக்கூடிய பட்டிமன்றமா இது?
|
|
No comments:
Post a Comment