Tuesday, December 13, 2011

கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி


டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால், ஆத்திரமடைந்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி, கள்ளக் காதலன் ஆகிய இருவரையும், போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாண்டியன் (32). அவருக்கு, மனைவி வெண்ணிலா (27), மகள்கள் பிரியா (11), கலைவாணி (9), தர்ஷினி (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

புத்திரகவுண்டன்பாளையம் வாரச்சந்தை அருகில் உள்ள நீரோடையில், ரத்தக் காயங்களுடன், பாண்டியன் இறந்து கிடந்தார். தகவலறிந்த ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், பாண்டியனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாண்டியனின் மனைவி வெண்ணிலாவுக்கும், உறவினர் பாலா (எ) பாலமுருகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் தனிமையில் இருப்பதை நேரில் பார்த்த பாண்டியன், மனைவியை தட்டிக் கேட்டுள்ளார். அதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய மனைவி திட்டமிட்டுள்ளார். பின், கள்ளக்காதலன் பாலமுருகனுடன் சென்று, பாண்டியன் மீது கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்து, ஓடையில் வீசியது தெரியவந்தது.

ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெண்ணிலா, கள்ளக் காதலன் பாலமுருகன் (30) இருவரையும் கைது செய்தனர். பின், ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment