சூரியஒளி மூலம் ஒரே நேரத்தில் 4 செல்போன்களை ரீசார்ஜ் செய்யும் புதிய கருவியை சென்னையை சேர்ந்தவர் வடிவமைத்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் நந்தகுமார் (64). பியூசி வரை சென்னையில் படித்தவர். ரேடியோ மற்றும் டி.வி டெக்னாலஜி 2 வருட படிப்பையும் முடித்திருந்தார். தனியார் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணியாற்றினார்.
இதை தொடர்ந்து மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக டி.வி டெக்னிக் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் சூரியஒளி மூலம் செல்போன்களை ரீசார்ஜ் செய்யும் புதிய கருவியை வடிவமைத்துள்ளார். Ôமொபைல் ரீசார்ஜ்Õ என்ற இந்த கருவி மூலம் ஒரே நேரத்தில் 4 செல்போன் களை ரீசார்ஜ் செய்ய முடியும்.
முழுமையாக ரீசார்ஜ் ஆக 2 மணிநேர சூரியஒளி போதும். அனைத்து வகையான செல்போன்களை ரீசார்ஜ் செய்ய முடியும்.
இதுகுறித்து டி.எஸ்.நந்தகுமார் கூறுகையில்,
‘‘சூரியஒளி மூலம் செல்போன் களை ரீசார்ஜ் செய்யும் கருவியை வடிவமைக்க 3 மாதமாக முயற்சி மேற்கொண்டேன். ரூ.1500 முதலீடு செய்துள்ளேன்.
மின்சாரத்தை சேமிக்க இது ஒரு நல்ல வழி. இந்த கருவியை கண்காட்சிகளில் வைத்து விளக்க உள்ளேன். ஒரு கருவி ரூ.180க்கு விற்க முடிவு செய்துள்ளேன் அடுத்தகட்டமாக சூரியஒளியை பயன்படுத்தி, குறைந்த செலவில் வீடுகளுக்கு மின்விளக்கு தர முயற்சி செய்கிறேன்’’ என்றார்.
|
No comments:
Post a Comment