கொஞ்சநாட்களாகவே தமிழ்நாட்டின் பக்கம்தான் கண்ணையும், காதையும் தீட்டிவைத்துக் கொண்டு திரிகிறார்கள் இந்தி நடிகர்கள். ரஜினியின் வீடு வரைக்கும் வந்து நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துவிட்டு போனார் ஷாருக்கான். இப்போது இவர் நடித்து வரும் டான்-2 படமும் நம்ம அஜீத் நடித்த பில்லா படத்தின் தழுவல்தானாம்.
இந்த படத்தில் ஷாருக்கானின் ஸ்டில்களை பார்த்தவர்களுக்கு இந்த ஹேர் ஸ்டைலை எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றும். ஆனால் அஜீத் ரசிகர்களுக்கு மட்டும் சட்டென்று விளங்கியிருக்கும். யெஸ்... இந்த படத்தில் ஷாருக்கானின் கெட்டப்பும், ஹேர் செட்டப்பும் பரமசிவன் படத்தில் ஒரு அஜீத் வருவாரே, அவரை போலவேதான் இருக்கும். (இந்த படத்தின் நெகட்டிவ்வையே வாங்கி குடோனில் பதுக்கலாம் அஜீத்.
அந்தளவுக்கு அவரது இமேஜை இடியாப்பம் ஆக்கிய தோற்றமல்லவா அது?)
பரமசிவன் படத்தை யதேச்சையாக கவனித்த ஷாருக், அனில்பெம் கிரேக்கர் என்ற தனது மேக்கப் மேனை அழைத்து, அப்படியே அச்சு அசலாக அந்த ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று கேட்டாராம்.
|
No comments:
Post a Comment