Showing posts with label தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts

Tuesday, July 12, 2011

கையசைத்தால் பேசலாம் வருகிறது புதிய தொழில் நுட்பம்

எதிர் காலத்தில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியுமாம். இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர் வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இன்னும் சில ஆண்டுகளில் கை, கால்களில் முறிவுகள் ஏற்பட்டால் இலகுவில் கண்டறிந்து விட முடியும் எனக் கூறப்படுகிறது. கோடைகாலங்களில் இளஞ்சிறார்களும் பனிக்காலங்களில் வயது முதிர்ந்தோரும் முறிவுகளைச் சந்திப்பது மேலைத்தேய நாடுகளில் சாதாரணமாக நடைபெறுவதாகும்.


இவ்வாறான வேளைகளில் மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுப்பதற்கு அவசர அவசரமாக ஓட வேண்டிய தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் போகலாம். நாம் எங்கள் குடும்ப வைத்தியரிடமே சென்று முறிவைப் பரிசோதித்து பத்துப் போட்டுக் கொள்ளலாம்.
இப் புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது ஐ போனை ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்துப் படி குறுகிய தூரத்திருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன எனவும் எக்ஸ்ரே கருவிக்கு துணைக் கருவியாகப் இதனைப் பயன்படுத்தலாம் எனக் கூறுப்படுகிறது.

இப்புதிய கண்டு பிடிப்பானது எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது குறுந்தூர அலைகளை உள்வாங்குவதால் பரிசோதனைகளின் தரத்தை மேம்படுத்தவும் செம்மையாக்கவும் உதவுகின்றது. இது தவிர இக்குறுந்தூரஅலைவாங்கியின் தொழிநுட்பம் எக்ஸ்ரே, அல்ரா ஒலிசோதனை மற்றும் எம் ஆர் சோதனைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படலாம் என கருதப்படுகிறது.

எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது இப்புதிய கண்டுபிடிப்பானது பக்கவிளைவுகளையோ கதிர்கள் கலங்களை ஊடுருவி நோய்களை ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளைக் கொண்டிருக்காவிட்டாலும் எக்ஸ்ரே படப்பிடிப்பின் போது பெறப்படும் துல்லியமான படங்களை வழங்காது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள நிலைமையில் ராடர்கள் நீண்ட தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கி சமிக்கைகளை வெளிப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்படுகின்றன. இதன் மூலம் எல்லைக் காவலாளிகள் தமது எல்லைகளுக்குள் அந்நிய கப்பல்கள்இ விமானங்கள் நுழைகின்றனவா எனக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப் புதிய வரவான குறுந்தூர ராடரானது இது வரை கடினமாக இருந்த குறுகிய தூரத்தில் ஏற்படும் ஒலி அதிர்வுகளை, சமிக்கைகளை கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதில் உதவலாம் என நம்பப் படுகிறது.

ஒரு ராடர் சமிக்கை ஒளி அலையின் வேகத்துடன் அசைகிறது. அதாவது 300,000 கிலோ மீற்றர் செக்கனுக்கு எனும் வேகத்தில். தற்போதைய தொலை தூர ராடர் மிகச் சரியாக அளக்க கூடிய தூரம் சில சென்ரி மீற்றர்கள், ஆனால் இப்புதிய கண்டு பிடிப்பான குறுந்தூர ராடரானது ஒரு மில்லி மீற்றரைக் கூட துல்லியமாக அளவிடக்கூடியது.

இக் குறுந்தூர ராடர் தனியே மருத்துவ துறையில் மட்டுமல்லாது கட்டிடங்களின் சேதங்கள், கட்டிடங்களை உறுதியாக பேணுவதற்கு உள்ளே வைத்துக் கட்டப்படும் உலோக்கம்பிகள்இ மின் கடத்தும் வயர்கள் போன்றவற்றைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தலாம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ”கருணையால் ” புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளைக் கண்டறியவும் இக் குறுந்தூர ராடர் உதவ முடியும்.

இது மட்டுமல்லாது இத் தொழிநுட்பத்தை தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்த முற்படும் போது தற்போது தொடுகை மூலம் இயக்கப்படும் கைத்தொலைபேசிகள் எதிர்காலத்தில் கையை காற்றில் வீசுவதன் மூலம் இயங்கச் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றனவாம்.

Monday, July 11, 2011

ஆண்கள் பேசும் குரலை பெண்கள் பேசுவது போல் மாற்ற

ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போலவும், ஒரு பெண் பேசும்

 

குரலை நேரடியாக ஆண் பேசும் குரலாகவும் மாற்றம் செய்ய ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.

ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும். ஆனால் கைத்தொலைபேசிகளில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன. ஆனால் கணணியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கி நம் கணணியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும்.
உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்து விட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man, Tiny Folks, Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் Tiny Folks என்பது கேலிசித்திர கதாபாத்திரம் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் அரட்டையில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம்.

உண்மையிலே அவர் இது போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக் கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.இங்கே கிளிக் செய்யவும்

Sunday, July 10, 2011

கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்!

‘இந்த சாவியை எங்க வெச்சித் தொலைச்சேன்னே தெரியல…’ சாவியை தொலைத்துவிட்டு அல்லது வைத்த இடத்தை மறந்துவிட்டு அவஸ்தை படுபவர்கள் பலர். வாழ்க்கையில் பல நேரங்களில் டென்ஷனை அதிகரிக்கச் செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று. பைக், வீடு, பீரோ என ஏதாவது ஒரு சாவி மிஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.

 
இப்படிப்பட்டவர்களின் பீபியை குறைக்க இன்றைய விஞ்ஞான உலகம் கண்டுபிடித்துள்ள புதுமை சாதனம் ஸ்மார்ட் செல்போன். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள்: இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்பாடு இன்றியமையாததாக ஆகிவிட்டது. இதன் பலனை முழுமையாக அனுபவிக்கும் வகையில் தினம் தினம் புதுப்புது வசதிகளுடன் செல்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. எல்லாவற்றுக்கும் செல்போனையே பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. அந்த வரிசையில் அறிமுகமாக இருப்பதுதான் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள். இதில் சாவி வசதியும் செய்யப்பட்டுள்ளது.


வீடு, அலுவலக பூட்டுகளை மட்டுமின்றி கேரேஜ்கள், கார் கதவுகளையும் இதன் மூலம் எளிதாக திறக்கலாம். இந்த முறையில் பூட்டை திறப்பது எப்படி… கதவுக்கு அருகில் ஒரு சிறிய எலக்ரானிக் பேட் பொருத்தப்படும். ஸ்மார்ட் போனில் இதன் கட்டுப்பாடு இருக்கும். ரிமோட் கன்ட்ரோல் முறையில் இதை ஆபரேட் செய்து குறிப்பிட்ட பகுதியை எளிதாக திறக்கவும், பூட்டவும் முடியும். சுவிஸ் ராணுவத்தில் இந்த முறையில் செய்யப்படும் எலக்ட்ரானிக் கத்திகள்தான் பயன்பாட்டில் உள்ளன. போனில் இருந்து அனுப்பப்படும் ரிமோட் சமிக்ஞைகள், வயர்லெஸ் ரேடியோ சிக்னல்கள் மூலமாக இன்டர்நெட் மற்றும் கன்வர்ட்டர்கள் உதவியுடன் திறக்க வேண்டிய பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பேடுக்கு செல்லும். சரியான சமிக்ஞையை ஏற்று நொடிப்பொழுதில் கதவு திறக்கும். ரிமோட் வசதியுடன் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் போன்கள், ஏராளமானவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது. பூட்டு தயாரிக்கும் பிரபல நிறுவனமும் செல்போன் நிறுவனமும் இணைந்து அறிமுகப்படுத்த உள்ள இந்த ஸ்மார்ட் போன், விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறதிப் பேர்வழிகள், சாவியைபோல, செல்போனையும் தொலைத்துவிட்டால் அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது.

Wednesday, July 6, 2011

ரைஸ் குக்கரிலும் மொபைல் ரீசார்ஜ் பண்ணலாம்

ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்துள்ள ‘குக்கர் சார்ஜர்’ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 
ஜப்பானின் ஒசாகா நகரை சேர்ந்த நிறுவனம் டி.இ.எஸ். நியூஎனர்ஜி. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வருகிறது. இதன் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு ‘தெர்மோ எலக்ட்ரிக் குக்பாட் சார்ஜர்’. பெயர்தான் மலைக்க வைக்கிறது.

ஆனால் இது டீ, வெந்நீர் போடுவது போன்ற சாதாரண பாத்திரம்தான். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்றவைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் வெளிவரும் நீராவி, பிரத்யேக அறைக்குள் செல்கிறது. அதில் இருக்கும் சிறிய ரக டர்பைன் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்உற்பத்தி தொடங்கியதும் சிறிய லைட் எரிகிறது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள யுஎஸ்பி போர்ட்டை செல்போனில் சொருகினால் சார்ஜ் ஏறத் தொடங்குகிறது.செல்போன் மட்டுமின்றி ஜிபிஎஸ் கருவிகள், எம்பி3 பிளேயரையும் இதன் மூலம் சார்ஜ் செய்ய முடியும். உணவையும் சூடாக்கிக் கொள்ள முடியும். இதன் விலை ரூ.13 ஆயிரம். தற்போது ஜப்பானில் பல வீடுகளில் இந்த வகை சார்ஜரை பார்க்க முடிகிறது. இதுபற்றி டிஇஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கசுஹிரோ புஜிடா கூறியதாவது: கடந்த மார்ச் 11-ம் தேதி ஜப்பானை உலுக்கிய பூகம்பம், சுனாமிதான் இந்த கண்டுபிடிப்புக்கு தூண்டுகோலாக இருந்தது. 
 
சுனாமி ஏற்பட்ட நேரத்தில் பல பகுதிகளில் மின்இணைப்பு முழுவதுமாக துண்டாகிவிட்டது. யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் உதவிக்கு அழைக்க முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலையை உண்டாக்கவே இதை கண்டு பிடித்துள்ளோம். ஜப்பான் மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.இவ்வாறு கசுஹிரோ கூறினார்.

Thursday, June 23, 2011

ஈ-மெயில் படித்து சொல்லும் புதிய கார்: எங்கே போகிறது தொழில்நுட்பம்?


நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கட்டங்கள் எங்கோ போய்க்கொண்டிருக்கின்றது. கற்பனையில் நினைப்பவற்றை இன்று நிஜத்திற்கு மாற்றித்தந்து கொண்டிருக்கிறது இன்றைய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும். அந்த வரிசையில் நாம் எதிர்பார்க்காத புதிய ஒரு விடயம்தான் நடந்தேறியுள்ளது. அதாவது எமக்கு வருகின்ற மின்னஞ்சல் மற்றும் Facebook and Twitter updates களை உடனுக்குடன் படித்து வாய்ஸ் மூலம் வாகன சாரதிக்கு சொல்லிவிடுகின்றது ஒரு கார். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா?? ஆம் இது எவ்வாறு சாத்தியப்படுகின்றது என்றால் குறித்த காரில் பயணிக்க முன்னர் அதில் தயார் செய்யப்பட்டுள்ள சார்ஜரில் தனது smart phones அல்லது iPads ஐ தொடுத்து விடவேண்டும்.

பின்னர் நாம் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் போது எமது பேஸ்புக் அல்லது டிவிட்டரில் புதிதாக தகவல்கள் பரிமாறப்பட்டால் எமக்கு அந்த கார் வாய்ஸ் மூலம் பரிமாற்றப்பட்ட தகவலை படித்து சொல்கின்றது. அதைப்போலவே எமக்கு மின்னஞ்சல் வருகின்ற போதும் அவற்றை அப்படியே படித்து சொல்லிவிடுகின்றது. இக்கார் “இணையத்தளக்கார்” என அழைக்கப்படுகிறது. அண்மையில் ஜெனீபாவில் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் இந்த இலத்திரனியல் இணையக்கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஏராளமானவர்கள் இத்தொழில்நுட்பத்தை பாராட்டிச் சென்றுள்ளனர். இது மாத்திரமின்றி இக்காருக்குள் Wi-Fi transmitter தொழில்நுட்பமும் காணப்படுகின்றமையால் லாப்டெப்பையும் இலகுவாக பயன்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.

Sunday, May 1, 2011

தண்ணீர் வீணாவதை தடுக்க புதிய தொழில்நுட்பம்

தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன. கவனமின்மையால் பல திட்டங்களில் குடிநீர் இழப்பு அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் 10 முதல் 15 சதவீத குடிநீர் வீணாவதாக தெரியவந்துள்ளது.

குடிநீர் வீணாகிறதா என கண்காணிக்கும் அதிநவீன கண்காணிப்பு வசதி 10-க்கும் குறைவான திட்டங்களில் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தில் முதன்முறையாக கோவை பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தில் ரூ.20 லட்சத்தில் டெலி மெட்ரி என்ற கண்காணிப்பு வசதி கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 3 குடிநீர் திட்டங்களில் இந்த வசதி செய்யப்பட்டது.

நீர் இழப்பை கட்டுப்படுத்த கண்காணிப்பு வசதியை அதிகரிக்க நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டமிட்டது. குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி 4 குடிநீர் திட்டங்களுக்கு ரூ.7 கோடியில் புதிய பணிகளுக்கான உத்தரவை பிறப்பித்தார்.

 இதன்மூலம் குடிநீர் சப்ளையை கண்காணிக்க ஸ்கேடா (குடிநீர் சப்ளையை மேற்பார்வை செய்தல், விவரம் சேகரித்தல், தகவல் சேமித்தல்) என்ற திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ரூ.1.5 கோடி ரூபாய் செலவில் ஸ்கேடா மற்றும் டெலி மெட்ரி திட்டத்துக்கான பணிகள் ஓரிரு மாதத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முத்தூர் காங்கயம், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஆகிய இடங்களை தொடர்ந்து மற்ற குடிநீர் திட்டங்களிலும் ஸ்கேடா மற்றும் டெலி மெட்ரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஸ்கேடாவும், டெலி மெட்ரியும் ஏறக்குறைய ஒரே மாதிரியான தொழில்நுட்பம். நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குடிநீர் பிரதான குழாயில் சப்ளையாகும் குடிநீரை ஸ்கேடா கருவி 24 மணி நேரமும் கண்காணிக்கும். சப்ளையாகும் குடிநீர் அளவு, குறைகிற மற்றும் அதிகரிக்கிற அளவு ஆகியவற்றை குடிநீர் வடிகால் வாரிய அலுவலக கண்காணிப்பு மானிட்டரில் கண்டறியலாம்.

குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ, உடைப்பு ஏற்பட்டு நீர் கசிந்தாலோ குழாயின் குடிநீர் அழுத்தம் மூலமாக அதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஸ்கேடா பயன்பாட்டுக்கு வந்தால் குடிநீர் இழப்பு 90 சதவீதம் வரை தடுக்கப்படும்.

Friday, April 29, 2011

1G, 2G, 3G,4G என்றால் என்ன?


இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.


1G Network: 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.
 


2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.
 


2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
 


3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.  


 4G NETWORK 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors): 
  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2. குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)
4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV

1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
Video Calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:
((([ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]

2.கட்டமைப்பு (Network)

2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, Web Browsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice over IP என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.
4G Core Network
குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).

3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
  1. மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
  2. அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
  3. நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
  4. குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங்களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டுகளில் எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!
தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தேடி எழுதுவதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு...:((( [நன்றி-லக்கிலுக்]. ஏதோ.... ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்:)

தனி மனித சுதந்திரத்திற்கு தடை போடும் புதிய தொழில்நுட்பம்: ஐபோனின் அடுத்த பரிணாமம்.



வெளியே சென்று சிறிது நேரம் தாமதம் ஆனாலே ஏன் இவ்வளவு தாமதம்? எங்கு சென்றீர்கள்? என்று ஆயிரம் கேள்விகள் கேட்கப்படும்.சொன்னால் தானே பிரச்சனை ஆகிவிடுமே. அதனால் "ஓபீசில் ஓவர் டைம்" என்று சமாளிப்பவர்கள் உண்டு. ஆனால் ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்கள் இப்படி சொல்ல முடியாது.
காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டது முதல் மாலையில் வீடு வந்து சேர்கிற வரையில் எங்கெங்கு போனோம் என்பதை ஐபோனில் உள்ள "டிராக்கர்" வசதி தெரிவித்து விடும்.இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பேசுவது, எஸ்.எம்.எஸ் மட்டுமின்றி கமெரா, மீடியா பிளேயர் மற்றும் 3ஜி இணைப்புகள், ஜிபிஎஸ் வசதி, இமெயில், இணையம் உள்பட பல்வேறு வசதிகள் கொண்டவை ஸ்மார்ட்போன்கள்.
உலக அளவில் இதில் முன்னணியில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன். இதில் ஜிபிஎஸ் உதவியுடன் செயல்படும் "டிராக்கர்" என்ற மென்பொருள் உள்ளது. ஐபோன் எந்த இடத்தில் இருக்கிறது என்பது இதன் உதவியுடன் தொடர்ந்து பதிவாகும்.எத்தனை மணிக்கு எந்த இடத்தில் ஐபோன் இருந்தது என்பது நமது கணணியில் நிமிட வாரியாக தானாக பதிவாகிவிடும். ஏறக்குறைய டைரி போல இதை பயன்படுத்த முடியும். இந்த வசதி வேண்டாம் என்று மறுக்க முடியாது.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்களது இருப்பிடம் பற்றிய அனைத்து தகவல்களும் கணணியில் சேகரமாகிக் கொண்டே இருக்கும். வேண்டாத நண்பர்களோ, வெறுப்பில் இருக்கும் மனைவியோ இதன் மூலம் உங்களை உளவு பார்க்க முடியும்.தனிப்பட்ட வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் இந்த வசதியை ஐபோன் ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

Wednesday, April 27, 2011

குறட்டை விடுவதை தவிர்க்கும் புதிய கருவி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம். குறட்டை அவரவர்களுக்கு தகுந்தபடி இருக்கும்.

உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்ல வேண்டி வரும்.

இந்த நிலையை போக்க பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது தற்கால விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி என்று கருதப்படுகிறது.

லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தீப்பெட்டி போன்று ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது. அப்போது இதயத்திலிருந்து வெளியேறும் காற்று எந்த தடையும் இன்றி வெளியேறுகிறது.

இதனால் குறட்டை நின்று போகும். இதில் பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் மூலம் நாம் படுக்கைக்கு செல்லும் போது ஓன் செய்தும், எழுந்திருக்கும் போது ஓப் செய்தும் வைத்துக் கொள்ளலாம். இந்த சாதனம் தற்போது பரிசோதனையில் இருந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால் தூக்கம் கெட்டு தவிக்கும் மக்கள் பயன் பெறுவர்.

இருமல் இருப்பதை தொலைபேசியின் மூலம் கண்டறியலாம்: ஆய்வாளர்களின் புதிய சாதனை







சளி அல்லது வறட்சி ஏற்படுவதை தொலைபேசி மூலம் கண்டறியும் மென்பொருள் கருவியை ஜேர்மனியை சேர்ந்த பிரான்கோபர் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த புதிய கருவி மூலம் ஒரு நபருக்கு ஏற்பட்டுள்ள இருமல் குறித்த விவரங்களை அறியலாம் என கூறப்பட்டாலும், மருத்துவ சமூகத்தினர் இதன் சேவை குறித்து ஐயம் எழுப்பியுள்ளனர்.

ஜேர்மனியின் ஓல்டன்பர்க் நகரில் உள்ள ஆய்வாளர்கள் இக்கருவியை கண்டுபிடித்துள்ளனர். ஜேர்மனியில் முதல் தானியங்கி இருமல் கண்டறியும் சேவையாக இந்த புது கண்டுபிடிப்பு உள்ளது. ஆய்வாளர் கோட்சும், அவரது குழுவினரும் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வை தொடர்ந்து இந்த புதிய மென்பொருள் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.


இதற்காக மக்கள் கூட்டம் நிறைந்த ஹம்பர்க் மற்றும் ஓல்டன்பர்க் வீதிகளில் சென்றவர்களின் மாதிரிகளை பதிவு செய்திருந்தார். இந்த புதிய மென்பொருள் கருவி மூலம் 80 சதவீத முடிவுகள் சரியானவையாக உள்ளன என்று கோட்ஸ் தெரிவித்தார். தினமும் 200 அழைப்புகள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Friday, April 8, 2011

ஏனைய தொழிநுட்ப செய்தி உடல் வெப்பத்தைப் பயன்படுத்தி சக்தியை உற்பத்தி செய்ய முடியும்



மனிதர்களின் உடல் வெப்பத்தைப் பயன்படுத்தி சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நிறுவனங்களின் சக்தி வளப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு புதிய தொழில்நுடபம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்களின் உடல் வெப்ப நிலையை பயன்படுத்தி சுவீடன் நிறுவனமொன்று சக்தியை உற்பத்தி செய்துள்ளது.
உடல் வெப்பநிலை வீண் விரயமாக்கப்படுவதாகவும், இந்த சக்தியைப் பயன்படுத்தி கட்டங்களில் கதகதப்பை ஏற்படுத்த முடியும் எனறும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்டொக்கொம் மத்திய ரயில் நிலையப் பயணிகளின் உடல் வெப்ப நிலையைப் பயன்படுத்தி அருகில் உள்ள கட்டடமொன்றின் வெப்ப நிலையை அதிகரிக்கும் முயற்சி வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உடலின் வெப்பநிலையை வெப்பக்கடத்திகள் மூலம் ஈர்த்து அருகில் உள்ள கட்டடம் வெப்பமாக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த முறைமையினால் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படாது எனவும், எரிபொருள் செலவினை 25 வீதத்தினால் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எச்சரிக்கை: எலக்ட்ரானிக் பிக் பாக்கெட்



கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொண்டு பெருமையுடன் ஸ்விப் பண்ணும் ஆசாமிகள் இனி தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டும்.
அந்த எளிய முறைக்கும் ஆப்பு தயாராகி விட்டது. உங்களின் கிரெடிட் கார்டுகளை கண்களால் காணாமல், கைகளால் கூட எடுக்காமல் அதனை அப்படியே ஸ்கேன் செய்து காப்பி அடிக்கும் நவீன சாதனங்களும் வந்துவிட்டன.
கிரெடிட் கார்டு என்றில்லாமல்,பாஸ்போர்ட் போன்ற அதி முக்கியமான தகவல்களையும் இம்முறையில் எளிதாக திருடலாம்.

நண்பர்களை மரபணு தான் தேர்வு செய்யும்:


தனக்கு உரிய நண்பர் யாராக இருக்க வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதே போன்று ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவரது மரபணு தான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள் தங்களுக்கு ஏற்ற நண்பன் யார் என்பதை தீர்மானிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இளம் வயதில் எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும், இந்த மரபணுக்கள் தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர் தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுவாசிக்க கூடிய அதிசய எந்திர மனிதன்


அமெரிக்காவில் அதிசய ரோபோ(எந்திர மனிதன்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு மனிதனைப் போன்று வாய், மூக்கு உள்ளன.
இந்த ரோபோவானது சுவாசிக்கவும் செய்கிறது. அப்படி மூச்சு விடும்போது அதன் மார்பு விரிந்து சுருங்குகிறது. `மேன்னி’ என்ற இந்த ரோபோவுக்கு மனிதனைப் போலவே தோல் இருக்கிறது. வியர்வை ஏற்படும் வகையிலும் அமைத்திருக்கிறார்கள். இதன் உடல் வெப்பநிலையைக் கண்டறிய முடியும். இந்த ரோபோ நடக்கிறது, குனிகிறது. கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்காருகிறது.
தரையில் இதனால் உட்கார முடியும். தரையில் தவழ்ந்து செல்லவும் முடியும். எந்திர மனிதன் என்ற சொல் இதற்கு முழுக்க முழுக்கப் பொருந்தும். அமெரிக்காவில் உள்ள பாட்டலே ஆய்வுக்கூடம் என்ற நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.
அசல் மனிதனைப் போல இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதால் இதற்கு `மேன்னி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். 20 லட்சம் டாலர் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் மேன்னி ரோபோ, அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டதாகும். அமெரிக்காவின் யுடா மாநிலத்தில் உள்ள ஆயுத சோதனைக்களத்துக்கு மேன்னி கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சோதனைத் தளம், ஆபத்தான வேதியியல், உயிரியல் ஆயுதங்களைச் சோதிப்பதற்குப் பயன்படுத்தப்படுவது. அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு உடையைத் தயாரிக்க அந்நாட்டு ராணுவத் தலைமையகம் விரும்புகிறது. அதற்கான பரிசோதனைகளுக்கு இந்த ரோபோ பயன்படுத்தப்படும்.

ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை.



அப்போஃபிஸ்’ என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள்.
இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார்.
சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமனாகவிருக்குமென நாசா தெரிவித்துள்ளது.
எனினும் இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 இற்கு 1 என்ற நிகழ்தகவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் நாம் எத்தகையதொரு சந்தர்ப்பத்திற்கும் முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நமது பென்டிரைவில் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன: எச்சரிக்கை.


மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல் பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை எப்படி திருடுகின்றனர். இதை எவ்வாறு தடுப்பது.
மெமரி கார்டு, பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம். Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது 0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும்.
இதில் சேமிக்கப்படும் எந்த தகவலும் அழிவதே இல்லை. எப்போது வேண்டுமானாலும் அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை.
ஆரம்ப காலத்தில் நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற முடியும். நம் மெமரி கார்டு அல்லது பென்டிரைவ் களை ரிப்பேர் செய்ய கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணணியில் இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் அவர்களிடம் இருக்கும்.
மென்பொருள் துணை கொண்டு அந்த கணணியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும் இதற்கான எந்த அறிவிப்பும் அந்த கணணியின் திரையில் தெரியாது. கணணி பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.
வைரஸை நீக்க சில நிமிடங்கள் ஆகும் என்று சொல்வர். என்ன தான் நாம் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக Recover செய்து கொடுக்க பல மென்பொருள் உள்ளது. நாம் திரையை பார்த்து கொண்டு தான் இருப்போம்.
ஆனாலும் நம் மெமரி கார்டின் ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்று வரை உள்ள அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும். உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வைரஸை நீக்கலாம்.
வைரஸ் பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க வேண்டுமானால் Start பொத்தானை RightClick செய்து Explore  என்பதை சொடுக்கி வரும் திரையில் இடது பக்கத்தில் Memory Card க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய கோப்புகளை காப்பி செய்து நம் கணணியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி செய்து முடித்த பின் Memory Card ஐ Format செய்து பயன்படுத்தலாம்.