Friday, April 8, 2011

சுவாசிக்க கூடிய அதிசய எந்திர மனிதன்


அமெரிக்காவில் அதிசய ரோபோ(எந்திர மனிதன்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு மனிதனைப் போன்று வாய், மூக்கு உள்ளன.
இந்த ரோபோவானது சுவாசிக்கவும் செய்கிறது. அப்படி மூச்சு விடும்போது அதன் மார்பு விரிந்து சுருங்குகிறது. `மேன்னி’ என்ற இந்த ரோபோவுக்கு மனிதனைப் போலவே தோல் இருக்கிறது. வியர்வை ஏற்படும் வகையிலும் அமைத்திருக்கிறார்கள். இதன் உடல் வெப்பநிலையைக் கண்டறிய முடியும். இந்த ரோபோ நடக்கிறது, குனிகிறது. கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்காருகிறது.
தரையில் இதனால் உட்கார முடியும். தரையில் தவழ்ந்து செல்லவும் முடியும். எந்திர மனிதன் என்ற சொல் இதற்கு முழுக்க முழுக்கப் பொருந்தும். அமெரிக்காவில் உள்ள பாட்டலே ஆய்வுக்கூடம் என்ற நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.
அசல் மனிதனைப் போல இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதால் இதற்கு `மேன்னி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். 20 லட்சம் டாலர் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் மேன்னி ரோபோ, அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டதாகும். அமெரிக்காவின் யுடா மாநிலத்தில் உள்ள ஆயுத சோதனைக்களத்துக்கு மேன்னி கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சோதனைத் தளம், ஆபத்தான வேதியியல், உயிரியல் ஆயுதங்களைச் சோதிப்பதற்குப் பயன்படுத்தப்படுவது. அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு உடையைத் தயாரிக்க அந்நாட்டு ராணுவத் தலைமையகம் விரும்புகிறது. அதற்கான பரிசோதனைகளுக்கு இந்த ரோபோ பயன்படுத்தப்படும்.

No comments:

Post a Comment