அதோ, இதோ என்று வெகுகாலம் எதிர்பார்த்திருந்த நோக்கியா இ7 மொபைல் சென்ற மார்ச் 14 அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. பல்வேறு காரணங் களுக்காக, இதன் அறிமுகம் இந்தியாவில் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வந்தது.
இதன் எடை 176 கிராம். இதன் பரிமாணம் 123.7 x 62.4 x 13.6 மிமீ. AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 4 அங்குல அகலத்தில் 360 x 640 ரெசல்யூசனில் தரப்பட்டுள்ளது. இது ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாத கொரில்லா டிஸ்பிளே கிளாஸ் உள்ளது. நோக்கியா கிளியர் பிளாக் டிஸ்பிளே கிடைக்கிறது. ஐந்து அலைவரிசைகளில் இயங்கும் 3ஜி போன் இது. குவெர்ட்டி கீ போர்டு, மல்ட்டி டச் இன்புட், வைப்ரேஷன், லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஜாக், அளவற்ற எண்ணிக்கையில் முகவரிகள், போட்டோ கால், அதிக பட்ச 30 நாட்கள் அழைப்புகளின் பதிவு, 16 ஜிபி ஸ்டோரேஜ், 256 எம்பி ராம், ஒரு ஜிபி ரோம், நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ், எட்ஜ், வை-பி, 3ஜி, A2DP இணைந்த புளுடூத் ஆகியன தரப்பட்டுள்ளன.
இதன் கேமரா 8 எம்பி திறன் கொண்டது. 3264 x 2448 பிக்ஸெல்களில் போட்டோ பதிவு செய்கிறது. நொடிக்கு 25 பிரேம்களில் வீடியோ ரெகார்டிங் செயல்பாடு கிடைக்கிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய அனைத்து வசதிகளும் உள்ளன. ஆர்.டி.எஸ். கொண்ட ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இயங்குகிறது. ஓவி மேப்ஸ் 3, ஏ-ஜி.பி.எஸ். சப்போர்ட் கிடைக்கிறது. டிஜிட்டல் கேம்பஸ், டிவி அவுட்புட், வாய்ஸ் மெமோ, பிரிடெக்டிவ் டெக்ஸ்ட், வீடியோ போட்டோ எடிட்டர், வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட், பி.டி.எப். எடிட்டர் ஆகியவையும் உள்ளன. 2ஜி / 3ஜி பயன்பாட்டினைப் பொறுத்து, 5 முதல் 9 மணி நேரத்திற்கும் மேலாக பேச மின்சக்தி தரும் 1200 திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 400 மணி நேரத்திற்கும் மேலாக பேட்டரி சார்ஜ் தீராமல் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.29,999 என அறிவிக்கப் பட்டுள்ளது.
டேப்ளட் பிசிக்கள் அனைத்தும் அதிரடியாக விலை குறைக்கப்படும் இந்த நேரத்தில், நோக்கியாவின் இந்த விலை, இ7 மொபைலை விற்பனைச் சந்தையில் தள்ளிவிடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
|
No comments:
Post a Comment